”நான்என்ன செய்கிறேன் தெரியுமா?”
மனைவியிடம்கேட்டான்
அந்தமகா புருஷன்
புரியாமல்நின்றவளிடம்
புத்தன்நான் என்று
வீட்டைவிட்டு வெளியேறினான்
ஐம்பத்தாறுஆண்டுகளாய்
சொல்லத்துணியாத அவளிடம்
பத்திரமாய்இருக்கிறது
பதில்ஒன்று
“ஆசையைத்துறந்தவன்
அன்புக்காகஅதிகாரத்தையே
விட்டுக்கொடுத்தவன்
புத்தன்
பேராசைக்காரன்
அதிகாரத்துக்காக
எதையும்விட்டுக் கொடுப்பவன்
என்புருஷன்”
நரைமுடிகாற்றில் அலைய
வெறுமைகொண்ட கண்கள்
எங்கோநிலைத்திருக்க
தனக்குள்சொல்லிக்கொள்ள
முடிந்ததெல்லாம்ஒன்றுதான்
அது-
”நான்யசோதாதான்”
Published on January 31, 2025 06:46