Jump to ratings and reviews
Rate this book

காகித மலர்கள் [Kakitha Malargal]

Rate this book
A novel

From Uriymai Publishing house site:

வெவ்வேறு வேடங்களின் கைதிகள். அரசியல் தலைவர்கள்.mob psychology வேண்டுகிற கொச்சையான படிமங்களின் கைதிகள். அதிகாரிகள், 'நடக்கிறபடி நடக்கட்டும் நமக்கேன் வம்பு?' என்ற play safe மனப்பாங்கின் கைதிகள். அறிவு ஜீவிகள், அந்தந்த நேரத்தில் நாகரிகமான, அதிகச் செலாவணி உள்ளதாக உள்ள சில சார்புகளை அபிநயித்துக் கொண்டு சில 'தியரிகளை உச்சாடனம் செய்துகொண்டு, 'உஞ்ச விருத்தி' செய்கிற பிராமண பிம்பத்தின் கைதிகள். பெண்கள் ஆணின் 'அடிமை', 'மகிழ்வூட்டும் கருவி' அல்லது இந்தப் பிம்பங்களுக்கெதிராகப் புரட்சி செய்கிறவள்-என்கிற பிம்பங்களின் கைதிகள். இளைஞர்கள், வயதையும், 'வேடங்கள்' அணியும் திறனையும் ஒட்டியே வாய்ப்புகள் வழங்குகிற ஒரு அமைப்பில் நிரந்தரமான ஒரு insecurity இன், ஒரு alienation இன் கைதிகள். இத்தகைய பல கைதிகளையே 'காகித மலர்கள்' அறிமுகம் செய்கிறது.

368 pages, Paperback

First published January 1, 1977

13 people are currently reading
209 people want to read

About the author

Aadhavan

24 books22 followers
Also known as ஆதவன் (Tamil).

Sundaram was born in Kallidaikurichi in Tirunelveli District and obtained his education in Delhi. He worked briefly for Indian Railways. Later he joined the National Book Trust of India as an assistant editor. He married Hema in 1976. He started his literary career as a writer of stories for children in the magazine Kannan. He wrote under the pseudonym Aadhavan (lit. The Sun). His most noted work was the novel En peyar Ramaseshan (lit. My name is Ramaseshan), which was translated into Russian by Vitaliy Furnika and sold over a hundred thousand copies. In 1987, he drowned while swimming in a river at Shringeri. He was awarded the Sahitya Akademi Award for Tamil posthumously for his collection of short stories Mudalil iravu varum (lit. First comes the night)

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
44 (37%)
4 stars
58 (49%)
3 stars
12 (10%)
2 stars
3 (2%)
1 star
0 (0%)
Displaying 1 - 18 of 18 reviews
Profile Image for Balu.
20 reviews10 followers
February 1, 2021
காகித மலரின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவனான செல்லப்பா ஓரிடத்தில் காமத்தை வெல்கிறான். அப்படி ஒரு மனிதனால் காமத்தை வென்றுவிட முடியுமா என்ற கேள்வி இருப்பினும், நம்பகத்தன்மையான எழுத்தின்மூலம் ஆதவன் வென்று விடுகிறார். Climax was Keislowski level.
Author 2 books16 followers
May 4, 2023
நான் கொடுக்கும் முதல் 5 நட்சத்திர ரேட்டிங் நாவல் இது . மனித மனங்களை , அவற்றின் உணர்வினை , அதனால் விளையும் வினைகளை , எதிர்வினைகளை இத்தனை அழகாய் விவரிக்க வேறு யாராலும் முடியாது (என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து ) . ஒரு மேற்கித்திய இலக்கிய எழுத்துக்கு இணையாக , எந்தவித்ததிலும் குறையில்லாத நாவலாக தான் காகித மலர்களை நான் பார்க்கிறேன் . ஒவ்வொரு கதாபாத்திர வடிவமைப்பும் , அந்த கதாபாத்திரம் நாவலுக்கு அளிக்கும் பங்களிப்பு என்பது நிறைவாகவும் இருக்கிறது அதே சமயத்தில் நிறைவின்றியும் இருக்கிறது . பத்ரீ கதாபாத்திரத்தை பற்றி பெரிதாக அறிந்து விட்டோம் என்று நம்மால் எண்ணவும் முடியாது , மிஸ்.பத்மினி பற்றி முழுதாக தெரிந்து விட்டோம் என்றும் எண்ண முடியாது . paradox of characters என்றே இந்த நாவலின் கதாபாத்திரங்களை சொல்ல வேண்டும் . மனித இயல்பு என்பது முரண்பாடுடன் தான் இருக்கும் . அதை அப்படியே ஒரு கண்ணாடி போல் காட்டியிருப்பதில் இந்த நாவல் வெற்றியடைந்திருக்கிறது . 60களில் எழுதப்பட்ட புத்தகமாக இருந்த போதிலும் நாவலாசிரியர் ஆதவனின் எண்ண ஓட்டம் , கலாச்சார கண்ணோட்டம் , சமூக பார்வை எல்லாம் 2020 ஆண்டுக்கு ஏற்றது போல் இருக்கிறது என்பது அவருடைய தொலைநோக்கு பார்வையா அல்லது காலங்கள் பல கடந்தாலும் மனித மனங்கள் என்பது ஒன்று தான் என்பதை நம்மக்கு உணர்த்துகிறதா என்பதும் ஒரு முரண் தான் . முரண்களின் மகுடத்தை தன் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் அற்புதமாய் சூடி அழகாய் அணிவகுத்து , அழகாய் படைக்கப்பட்ட ஒரு ஒரு நவீன காவியம் தான் இந்த காகித மலர்கள் . கண்டிப்பாக இலக்கிய ஆர்வமுள்ள அனைவரும் படிக்கவேண்டிய நாவல் . இலக்கியம் பழக நினைக்க மாணாக்கள் வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய புத்தகம் .
Profile Image for Avinash Sankar.
76 reviews11 followers
January 21, 2014
முதலில் இது ஒரு பொழுது போக்கான நாவல் என்றால் அது தவறு, இது அதுபோன்ற நாவல் அல்ல. இந்நாவல் ஒரு கண்ணாடி போல மனிதனின் பல பிம்பத்தை காட்டுகிறது. இந்நாவலின் சிறப்பு மனிதன் என்றும் இயல்பாக இருப்பதில்லை, அவன் கோமாளித்தனமாக செய்யும்போதும், காதலிக்கும்போதும் இதர வேலைகள் செய்யும்போதும் ஒரு முகமூடியை அணிந்துகொள்கிறான். அவன் உதட்டில் வரும் சொல்லும், மனதில் தோன்றும் சொல்லும் என்றும் ஒன்றாக இருந்ததில்லை. அவன் எப்போதும் நடித்துக்கொண்டே இருக்கிறான். இக்கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் நம்மை நாமே ஒளிந்துகொண்டு பார்ப்பதுபோல இருக்கிறது. மொத்தத்தில் ஆதவனின் விருந்து இந்நாவல். தன்னை பற்றி அறிந்தவர்கள் இந்நாவலை படிக்கும்போது காகிதமலர்கள் வாசம் இன்னும் விசும்.
Profile Image for Muthukumar.
22 reviews1 follower
January 23, 2022
மிக ஆழமான சிந்தனைகளை பேசும் புத்தகம். புதினத்தின் கதாபாத்திரங்களின் வழியே நம்மையும், நாம் இதுவரை நம்பிக்கொண்டிருக்கும் விஷயங்களையும் கேள்விக்கு உட்படுத்திகிறார் ஆதவன். 70களில் எழுதபட்ட புத்தகம் எனினும், இன்றைய காலகட்டத்துக்கும் வெகுவாக பொருந்துகிறது. தலைமுறை தலைமுறையாக நம் சமூக சூழலும், எண்ணங்களும், கட்டிவைத்த பிம்பங்களும் என்றும் மாறாமல் இருப்பதே இந்த புத்தகத்தை படிக்கும் போது புலனாகிறது. ஒரு நல்ல வாசிப்பு அனுபவம். ஒரு நல்ல சிந்தனை அனுபவம்.
Profile Image for Sarala.
43 reviews20 followers
November 11, 2017
கண்களைக் கவர்ந்திழுக்கும் பலவிதமான வண்ணங்களில்… சிறியதும் பெரியதுமான பலவகையான வடிவங்களில்… உண்மையையேத் தோற்கடித்து விடும் பல்வேறான தோற்றங்களில்.. இதுவே எனது நிரந்தரம் என்று காண்பவரின் மதியை மயங்க வைக்கும் சாதுர்யங்களில்… என விதவிதமான விந்தைகளை எப்போதும், தன்னகத்தே தக்க வைத்திருப்பவை காகித மலர்கள். தன் இயல்பிலிருந்து சற்றும் மாறாமல் எப்போதும் மலர்ந்திருக்கும் தன்மை வாய்க்கப் பெற்றிருந்தாலும், ஆசையுடன் அதனை நெருங்கிப் பார்க்கும் சூழல் வாய்க்கும் வேளையில், பளீரென்று முகத்தில் அடிக்கும் அதன் மெய்மை, சற்றேனும் மிரட்சி கொள்ளத்தான் வைக்கிறது..

அதுபோலவே தான் மனிதர்களும் அவர்களது வாழ்க்கை முறைகளும்.. பாவனைகள், பிம்பங்கள், அக்கறைகள், வேலைகள், எண்ணங்கள், கருத்துக்கள், கொள்கைகள், அவதானிப்புகள், எதிர்பார்ப்புகள்… என எதிலும் மனிதர்களுக்கு இரட்டை முகம் தான். உள்ளும் புறமும் அவர்களால் ஒரே முகமாக நடந்து கொள்ள முடிவதில்லை. பிறருக்காகவும், தனக்காகவும், தனக்குள்ளாகவும் கூட அவன் இருகூறாகப் பிரிந்தே நிற்கிறான். இருமுகமாக இருமனமாகவே தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடுகிறான். ஆனால், அதிலும் இறுதியில் ஒரு நிலை இல்லாத ஊசலாட்டமே மிஞ்சுகிறது.

அவரைப் போல, இவரைப் போல, அதைப் போல, இதைப் போல எனப் பலவகையில் “போல” பாவிப்பதிலேயே மனித வாழ்வின் பெரும்பான்மைப் பகுதி கடந்து சென்று விடுகிறது. சிலருக்கு முடிந்து கூட போய் விடுகிறது, என்பதை வாதப் பிரதிவாதங்களுடன் கூடிய சமரசங்களையும், எடுத்தியம்புவதோடு நம்மையும் சிந்திக்கத் தூண்டுகிறது இந்தக் “ காகித மலர்கள் “….

1970-களின் பிற்பகுதியில் டெல்லியில் வாழும் ஒரு மேல் நடுத்தரவர்க்க பிராமணக் குடும்பம், அந்தக் காலகட்டத்தின் கலாச்சாரங்களுடனும், மாறி வரும் நாகரிகங்களுடனும் எவ்வாறு தத்தமது வாழ்வைக் கொண்டு செல்கின்றனர். பிணைத்துக் கொண்டா..? அல்லது அணைத்துக் கொண்டா..? அல்லது விலக்கிக் கொண்டா..? என்பதை கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் மூலமும் நிதானமாக அலசிச் செல்லும் கதைக்களம்.

டெல்லி அரசாங்கத்தில் உயரதிகாரியாக வலம் வரும் பசுபதி. அவருக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும், கூடவே தமிழ் நாடகங்களில் நடித்து வரும் மனைவி பாக்கியம். சூழலியல் சார்ந்த துறையில் ஈடுபாடும் அதனையே இலட்சியமாகவும் நினைத்துக் கொண்டிருக்கும் விசுவம், படித்து முடித்த பிறகும் அரியர்ஸ் வைத்துக் கொண்டு எதிலும் பிடிப்பற்றுத் திரியும் செல்லப்பா, படித்துக் கொண்டிருக்கும் போதே கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு செல்லத் துடிக்கும் பத்ரி, என அத்தம்பதியரின் மூன்று மகன்கள்.

ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் என்பதைத் தவிர அவர்களுக்குள் உள்ளார்ந்து எவ்வித பிணைப்பும் இல்லாதது போலவேத் தோற்றமளிக்கிறது. அவரவர் தம் வாழ்க்கை, எண்ணங்கள், நோக்கங்கள் என்ற சிந்தனை சங்கிலியில் அடுத்தவரைக் கண்ணால் பார்ப்பது கூட இரண்டாம் பட்சமாகி விடுகிறது. அது தவறென்றும் கொள்ள முடியவில்லை. ஏனெனில் ஆசிரியர் காட்சிப்படுத்தியிருக்கும் அக்காலக்கட்டத்தின் வாழ்க்கைச்சூழலும், சமூகச்சூழலும் அது இயல்பு தானே என்று நம்மையும் தோள்களைக் குலுக்கிக் கொண்டு செல்ல வைக்கிறது.

பதவியின் மீதும் அதிகாரத்தின் மீதும் உள்ள ஆசையின் காரணமாக, தக்கது - தகாதது என எவ்வித வேறுபாடுமில்லாமல் எதையும் செய்து முடித்தாலும், இறுதியில் வெறுமையான மனநிலையில், சுயமிழந்து நிற்கும் பசுபதி,

அறிவு ஜீவியாக பிறரது கண்களுக்கும், இலட்சியவாதியாக தனக்குள்ளுமாக தோற்றமளித்தாலும் இறுதியில், எந்த சராசரிக்கும் தான் விலக்கல்ல என்பதை உணரும் விசுவம்,

வெளியே எதைப் பற்றியும் கவலைப்படாத அலட்சியத்துடன் நடந்து கொள்வதும், உள்ளுக்குள்ளே எல்லாவற்றுக்கும் விசனப்பட்டு சலித்துக் கொள்வதுமாக அல்லாடினாலும், இறுதியில் ஒரு பெண்ணுடைய உறவின் மூலம் மட்டுமே வாழ்வின் மீது பற்றுக் கொள்ளும் செல்லப்பா,

அந்த காலக்கட்டத்து கல்லூரி மாணவனை எல்லா வகையிலும் பிரதிபலித்து நிற்கும் பத்ரி,
பணம், புகழ் என விருப்பங்களினால் உந்தப்பட்டு அதன் பின்னால் செல்லும் பத்ரியின் நண்பன் கணேசன்,

என ஆண் கதாபாத்திரங்களின் வழி அவர் உணர்த்தும் உணர்வுகள் வெகு யதார்த்தம். சிறிதும் பாசாங்கற்றவை. நான் சரி, நீ தப்பு என்பது மனித மனங்களின் இயல்பு என்பதை கதை முழுவதுமான உரையாடல்களிலும் நிகழ்வுகளிலும் வெகு நுட்பமாக சித்தரித்திருந்தாலும், இறுதியில் எதுதான் சரி..? என்ற கேள்வியின் மூலம் சலிப்பின் விளிம்பிற்கு கதாபாத்திரங்களைக் கொண்டு நிறுத்துகிறார்.

மிஸஸ்.பசுபதி என்றே கதை முழுவதும் பவனி வரும் பாக்கியம், அவர் மனதாலும் உடலாலும் தடுமாறும் அந்த கனம் எவ்வித அடைமொழிகளுமின்றி வெறும் பாக்கியமாக சொந்த பெயரினால் மட்டுமே அடையாளப்படுத்தப்படுகிறார்.. ஏன்..?

முதலில் அதி நவீன அல்லது அதி நாகரிக மங்கையாக கூடவே சிறிது சுய சிந்தனையுள்ள பெண்ணாக அறிமுகமாகும் பத்மினி, விசுவத்துடனான காதலிலும், அதைத் தொடர்ந்த அவனுடனான இல்லற வாழ்விலும் எவ்வித சுயமுமில்லாமல், எல்லோரையும் போல சராசரி வாழ்க்கைக்கு மட்டுமே தன்னை உட்படுத்திக் கொள்கிறாள். எனில், அவளது அந்த அடையாள அறிமுகம் எதைக் குறிக்க..?

கட்டுப்பாடான வீட்டில், அனைத்து ஒழுக்க நியதிகளுக்கும் உட்பட்டு வளர்ந்து வரும் தாரா, உணர்வுச் சூழலுக்கு ஆட்படும் போது, எவ்வித தயக்கமுமில்லாமல் அதனை வெகு இயல்பாக கடந்து தனது தேவையை அல்லது ஆசையை பூர்த்தி செய்து கொள்கிறாள். அதைக் குறித்தான எவ்வித குற்ற உணர்வும் அவளுக்கில்லை.. மாறாக யாரையோ பழிவாங்கிய உணர்வொன்றிற்கு ஆட்படுகிறாள். எனில், இங்கே எவ்வித நியதிகளுக்கும், எதன் பொருட்டும் அர்த்தமில்லை என்பதா..? அல்லது தேவையில்லை என்பதா..? அக்கதாபாத்திர சித்தரிப்பின் நோக்கம் யாது..?

இதைப் போன்ற பல கேள்விகள் பெண் கதாபாத்திரங்களின் தன்மையை பற்றிய குழப்பத்தையே விதைக்கிறது. எனினும், ஆண் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் உணர்வுகளும் வெகு நுட்பம். அத்தகைய நுட்பம், பெண் கதாபாத்திரங்களின் சித்தரிப்பில் இல்லை. இலேசாகத் தொட்டு விட்டு செல்கிறார்.

ஆற்றில் விழுந்த தெப்பத்தின் வாழ்க்கை அந்த ஆற்றின் வழியே தான் செல்லும்.. என்றாலும், ஆற்றையும் மீறிக் கொண்டு செல்லும் சக்தி வெகு சிலவற்றுக்கு சாத்தியமும் ஆகும்..” என்பதையும் எவ்வித பாவனைகளும் சமரசங்களுமின்றி உணர்த்தி செல்கிறார்.

கதாபாத்திரங்கள் அனைத்தும் ஆரம்பத்தில், இவர்களிடம் ஏதோ வித்தியாசம் இருக்கிறதோ, பார்வைகளும் கோணங்களும் சராசரிக்கும் மாறுபடுகிறதோ என்று நினைக்க வைத்து, மெல்ல மெல்ல சுவாரஸ்யம் கூட்டி., இறுதியில் சராசரிக்கு இவர்கள் எவ்விதத்திலும் குறைவில்லை என்று போட்டுத் தாக்கி விட்டு செல்கிறார்.

தொடக்கத்தில் கதை மாந்தர்களை நின்று நிதானித்து கவனித்து சிந்திக்க வைத்த ஆசிரியர் இறுதியில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திடீரென்று என்றாலும் கச்சிதமாகவே ஒரு நிலையில் நிறுத்தி வைத்து அப்படியே முடித்தும் விடுகிறார். அதற்கு மேல் கதை நீண்டிருந்தாலும் கூட, அது எவ்விதத்திலும் சுவாரஸ்யமாக இருந்திருக்காது என்ற போதிலும், என்னவோ கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்து விட்டதே என்று எழும் உணர்வையும் தவிர்க்க முடியவில்லை. அதனால் கடைசி சில பக்கங்களின் உணர்வுகளும் சட்டென்று நம்மை தாண்டிக் கொண்டு செல்ல வைக்கிறது..

1970-களில் எழுதிய கதை என்றாலும் 2017-ல் வாசிக்கும் இப்பொழுதும், இவ்வளவு நெடிய கால வித்தியாசம் சிறிதும் உரைக்கவில்லை. எனில், மனிதர்களும் மாற்றங்களும் எள்ளளவும் மாறவில்லை. காலம் மட்டுமே மாறிக் கொண்டிருக்கிறது. காகித மலர்கள் மட்டும் வாடாமல், இன்றளவும் அப்படியே, தனது விந்தைகளை தன்னகத்தே தக்கவைத்துக் கொள்வதில் அவைகளுக்கு எவ்வித பின்னடைவும் ஏற்படவில்லை. மாறாக இன்னும் அழுத்தமாக அவைகள் தம்மை பறைசாற்றிக் கொண்டு வலம் வருகின்றன என்பதை ஐயந்திரிபற அழுத்தமாக உரைத்துச் செல்கிறது… ஆதவனின் சிந்தையில் மலர்ந்த இக்காகித மலர்கள்....
Profile Image for Praveen.
14 reviews2 followers
July 30, 2019
நவீன உலகில் கவிந்திருக்கும் போலித்தன்மைகளும், அதன் ஊடே நாம் கட்டமைத்திருக்கும் கற்பிதங்களும் வாழ்க்கை குறித்த பிம்பங்களும், ஒரு தலைமுறையினரின் மனப்போகினயும் துல்லியமாக சித்தரிக்கிறது காகித மலர்கள்.
45 reviews8 followers
July 31, 2023
இந்த உலகில் எப்போதும் பல்வேறு முகமூடிகளுடன் உலவும் மனிதர்கள், ஒரே வீட்டில் வசித்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முக மூடி அணியும் மனிதர்களின் அகத்தை அலசி ஆராயும் நாவல்.

கதை 1970 இல் நடப்பது போலக் காட்டப்பட்டாலும், 2023 இல் வாசிக்கும் போது கூடக் கதையுடனும் கதை நிகழ்வுகளுடனும் இணைத்துக் கொள்ள முடிகிறது

டெல்லி அரசாங்கத்தில் உயரதிகாரியாக பணிபுரியும் பசுபதி. அவரது மனைவி பாக்யம், சுழலியலில் வேலை செய்யும் மூத்த மகன் விசுவம், விசுவத்தின் காதலி பத்மினி, அரியரில் தேற முயற்ச்சி செய்யும் செல்லப்பா, அவனது நெருங்கிய நண்பன் ரத்தினம், யாரோடு எந்த ஒட்டுதலும் இல்லாத மூன்றாவது மகன் பத்ரி, அவனுடைய நண்பன் கணேஷ், சமூகத்திலும் வீட்டிலும் இருக்கும் கட்டுப்பாடை ஒடைக்க துடிக்கும் தாரா, என்று கதையில் வரும் ஒவ்வொரு கதாப்பத்திரத்துடனும் ஏதோ ஒரு வகையில் நாம் அனைவரும் ஒத்துப் போகக் கூடும்.

இவர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உறவு, சொந்தம் , என்றாலும் ஒரு நேரம் போல் இல்லாமல் மற்ற நேரங்களில் முகமூடி அணிந்து கொண்டு தான் பந்தங்களை நீட்டி செல்கின்றனர்.
கதையை விட்டு நிஜத்தில் பார்த்தால் நாமும் அப்படி தான் ஏதோ ஒரு காரணத்திற்காக, ஏதோ ஒரு தேவைக்காக சொந்த வீட்டில் ஒரு முகமூடி மாட்டிக்கொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய நாவல்
Profile Image for Eswara.
44 reviews
November 10, 2019
சக மனிதர்களாகட்டும், உறவினர்களாகட்டும், நாம் நடத்தும் சம்பாஷனைகள் , நேரடியாக நடைபெறுவதில்லை. ஏதோ ஒரு பலனை நோக்கி, அல்லது ஒரு கருத்துருவை நோக்கியதாகவே உள்ளது.

நூலாசியர், கதைமாந்தர்களை கட்டமைப்பதாகட்டும், உரையாடல் மூலம் அவர்களின் உள்நோக்கத்தை ஆராய்வதிலாகட்டும், எல்லாம் ஒரு பிரம்மையை நோக்கியதே.

நாவல் வடிவமைகப்பட்ட விதமும், கதை விரிவதும் ஒரு உலகை திறந்த வைக்கிறது, மெல்ல மலரும் பூவினைப்போல. மலர்ந்த பூவினையும் , அதன் நறுமணத்தையும், நாம் உணரும் தருணம், நாவல் முடிந்து விடுகிறது.
Profile Image for Umesh Kesavan.
445 reviews173 followers
July 15, 2014
With no proper plot ,this novel is more an exploration of the thought processes of various interesting characters. My favorite is Chellappa whose ennui,bus trips and daydreams reminded me of myself. For a 1970s novel,there are some prescient passages on environmental degradation and decentralization of powers.
55 reviews5 followers
August 9, 2025
இந்திரா பார்த்தசாரதி தொகுத்த ஆதவன் சிறுகதைகள் படித்ததிலிருந்து, ஆதவனின் ரசிகை ஆகி விட்டேன். ஆகையால் மிகுந்த எதிர்பார்போடு இப்புத்தகத்தை ஆரம்பித்தேன்.

ஆதவனுடைய களம்- நகர்புற இளைஞர்களின் மன போராட்டங்கள், மூச்சு முட்ட வைக்கும் சூழ்நிலைகள், மயக்கும் உறவுகள், வாழ்க்கை விவாதங்கள் மற்றும் கசப்புகள் etc etc.

ஒரு உயர் மத்திய தர குடும்பத்தில் பிறந்த மூன்று சகோதரர்கள்- ஒவ்வொருவரும் வித்யாசமான கேரக்டர். இதற்கிடையே அவர்களின் நண்பர்கள், காதலிகள், மனைவி, தாய் ஆகியோரின் characterisations. எல்லோரையும் இணைக்கும் பிரிக்கும் புதிய வாழ்கை முறை.

ஆதவனின் storytelling முறையை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், அது “நுணுக்கம்”. எந்த ஒரு சிறு எண்ணதையும், செய்கையையும் ஆழமாக விவரித்து நம் கண் முன்னே காட்சியாக கொண்டு வருகிறார்.

பணம், புகழ், பதவி, வசதி இவற்றை கொண்டாடும் மனிதர்களின் போலி வாழ்கையின் compromises, எரிச்சல்கள் ஒரு பக்கம்; இல்லாதவர்கள் மற்றும் கையாலாகாதவர்கள் இருப்பவர்கள் மீது கொள்ளும் பொறாமை போட்டி இன்னொரு பக்கம். எழுபதுகளில் இருந்த மனித கீழ்நிலைகள் இன்றும் நாம் பார்ப்பதினால் இந்த கதை மனதை தொடுகிறது.

இந்த கதையில் ஆதவன் கையாண்டிருக்கும் story development முறை பரவசமாய் உள்ளது. ஒரு முடிவின் புள்ளியில் இன்னொரு ஆரம்பம்.
மேலும் ஆண், பெண் இருபாலரின் கண்ணோட்டங்களையும் எழுதியிருப்பது அருமை.

கதையின் கடைசியில் ஏதோ ஒரு அவசரம். நிகழ்ச்சிகள் fast forward ஆக போகின்றன, அதனால் முற்பகுதியில் இருந்த ஆழம் காணாமல் போய் விடுகிறது.

பத்ரி, கண்டக்டர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் முழுமை அடையாத குறை. கணேசனும் ரமணியும் இன்னும் கொஞ்சம் வந்து போயிரக்கலாமா என்ற நப்பாசை.

அடுப்பில் இரண்டு மணி நேரம் மெதுவாக கொதித்த பாயாசம், கடைசியில் முந்திரி திராட்சை போடும் சமயத்தில் அவசரமாக இறக்கி வைத்த உணர்வு.
Profile Image for Vinodh Dharani.
39 reviews4 followers
February 13, 2021
Every person in this world is deeply insecure, extremely self-critical and judgmental. This often comes out as anger towards different aspects of society. Every single act is a manifestation of their inner insecurities trying to compensate for it. Kakitha Malargal follows this thread throughout the book and some characters like Visuvam are even self-aware of it.

Aadhavan does a fantastic job of showing how everyone is just trying to fit in and feel belonged, yet at the same time, want to be different from their peers. He does away with conventional plot, instead he places a character in a setting and delves into their psyche. We only get their inner monologue, their commentary on outside world and themselves. This book is nothing but a character study and it is not a bad thing. Great read.

We are nothing but the image we assume based on the social setting. We don't know our true self and we never will.
37 reviews
April 15, 2025
Every person in this world is deeply insecure, extremely self-critical and judgmental. This often comes out as anger towards different aspects of society. Every single act is a manifestation of their inner insecurities trying to compensate for it. Kakitha Malargal follows this thread throughout the book and some characters like Visuvam are even self-aware of it.

Aadhavan does a fantastic job of showing how everyone is just trying to fit in and feel belonged, yet at the same time, want to be different from their peers. He does away with conventional plot, instead he places a character in a setting and delves into their psyche. We only get their inner monologue, their commentary on outside world and themselves. This book is nothing but a character study and it is not a bad thing. Great read.

We are nothing but the image we assume based on the social setting. We don't know our true self and we never will.
Profile Image for ABIMANYU C.
11 reviews3 followers
April 16, 2024
எவ்வித நிர்ணயிக்கப் பட்ட வரைமுறை இன்றி கதாபாத்திரங்களின் இயல்பான வாழ்க்கை மற்றும் எண்ணங்களின் கண்ணாடி...
Profile Image for Praveen (பிரவீண்) KR.
222 reviews33 followers
December 19, 2024
Check my detailed review @ https://kalaikoodam.blogspot.com/2024...

ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை ஆதவன் இதில் எனக்கு அளித்திருக்கிறார். ஆழமான கருத்துக்களைக் கொண்டாலும் என் மனதுள் ஆழமாகப் பதியவில்லை. ஒரு முறை வாசிக்கலாம்.
Profile Image for Vinoth Jeevanesan.
35 reviews3 followers
January 29, 2020
Excellent story..... Oh... It is not a story.... Its a masterpiece work.... Excellent one..?.
Displaying 1 - 18 of 18 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.