மருமக்கள் தாய மரபுரிமையில் நாடாளும் மார்த்தாண்ட வர்மா மகாராஜா; மக்கள் வழி மரபுரிமைக்காகப் போராடும் எட்டு வீட்டுப் பிள்ளைமார்; நிலவுடைமையாளர்களாக மாறும் அரசனின் அடியாட்கள்; சாய்வு நாற்காலியில் சாய்ந்து காலாட்டியபடியே பெண்கள் உட்பட தின்று முடிக்கும் நிலவுடைமை வம்சாவளியினர்; பெண்களை அடித்து நெறிப்படுத்தும் அதபு பிரம்பு எனக் குடும்ப, சமூக, வரலாற்று நிகழ்வுகளை மக்களின் மொழியில் விவரிக்கும் நாவல் இது.
Thoppil Mohamed Meeran was an Indian Nagercoil based author who wrote in Tamil.
Meeran was awarded the Highest Indian Government award for Literature, Sahitya Akademi Award in 1997 for his novel Saivu Narkali (The Reclining Chair). He also received the Tamil Nadu Kalai Ilakkiya Perumantam Award, the Ilakkiya Chintanai Award, and the T N Govt. Award. He published six novels and seven short story collection.
செவ்வியல் புதினம் என்பதற்கான பொருத்தமான உதாரணம் இந்த நாவல். முஸ்தபாக்கண்ணு, தமிழ் இலக்கியப் படைப்புகளில் எழுதப்பட்டிருக்கும் மிகச் சிறந்த கதாபாத்திரம் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்கமுடியாது.
இந்தக் கதாபாத்திரத்தை எப்படியாவது திரையில் பார்த்துவிடவேண்டும் என்ற ஆசை. காணொளியின் துவக்கத்திலும் முடிவிலும் பீத்தோவனின் 'Für Elise' இசையை விரும்பியேதான் சேர்த்திருக்கிறேன். முஸ்தபாக்கண்ணு பெண்களின்மீது அவிழ்த்துவிடும் வன்முறைக் காட்சிகளின் பிண்ணனிக்கு இதைவிட மிகப் பொருத்தமான இசை இருக்கமுடியாதெனத் தோன்றுகிறது.
தென்பத்தன் கிராமத்தில் உள்ள சவ்தா மானஸ் வீட்டில் பவுரீன் பிள்ளை பேரன் முஸ்தபாகண்ணும் அவரது மனைவி மாரியம் பீவியும், பேத்தி ஆசியாவும் அவரது கணவர் செய்தகமுதுபிள்ளையும் வாழ்ந்த கதை இது. பவுரீன் பிள்ளை, திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா மகாராஜா உயிர்க்காத்த விசுவாசியாதலால் மன்னருக்கு மிக வேண்டப்பட்டவரானார் மன்னர் இவருக்கு ஒரு வாளும், வெள்ளித் தாம்பாளமும் இவரின் பல தலைமுறைகள் வசதியாக வாழ தேவையான பல சொத்துக்களையும் பரிசாக தருகிறார். இவரின் பேரன் முஸ்தபாகண்ணு தான் பவுரீன் பிள்ளை பேரன் நான் தெருவில் இறங்கி நடப்பதா? நான் தொழில் செய்து பிளைப்பதா? என்ற முன் தலைமுறை பெருமை பேசுபவர். தன் மனைவி மரியம் பீவியை கறவை தீர்ந்த பசு இவளாள் தனது பாலியல் தேவைகளை பூர்த்திசெய்ய முடியவில்லை என்ற வெறுப்பை அதபு பிரம்பால் அடித்து துன்புறுத்தி சொல்கிறார். வீட்டில் சமையல் வேலைக்கு உதவியாக இருக்கும் இளம் வயது பெண் ரைஹானத்தை திருமணம் செய்ய துடிக்கிறான் குடும்ப செலவுக்கு கையில் பணம் இல்லாததால் வீட்டில் உள்ள விலைமதிப்பு அதிகம் கொண்ட ஒவ்வொரு பொருள்களையும் தனது உதவியாளர் இஸ்ராயில் மூலம் விற்பனைசெய்து காலத்தை நகர்த்திக்கொண்டிருக்க,இவர் விற்ற பொருட்கள் வீட்டில் வந்து சேர்ந்த பெருமைமிகு கதைகள் மனதை நிம்மதி இழக்க செய்கிறது. இறுதியில் முஸ்தபாகண்ணின் வாழ்க்கை என்ற காலச்சக்கரத்தின் இடப்பெயர்வு எப்படி இருந்தது என்பதே இந்த நாவல்.
முன்னோர் காலத்தில் பெண்ணடிமை - கனவனுக்கு, பெரும் பணம்படைத்தவனுக்கு, அதிகாரம் படைத்தவனுக்கு என்பது இந்தக்கதையில் உள்ள உண்மை.
-கலைச்செல்வன் செல்வராஜ்
சாய்வு நாற்காலி : என்னை கவர்ந்த சில வரிகள்,
ஆடிக்குளிர் நல்கிய இன்பமயக்க சுகத்தில் உணர்ச்சி அடங்கி, மரங்கள் புதுத்தளிர்களையும் மொட்டுக்களையும் கர்ப்பம் தரித்தன. வெயில் முகம் காட்டவே இல்லை. கருமேக காட்டிற்குள் எங்கோ மறைந்துகொண்டிருக்கும் நக்ஸலைட் சூரியன்!
வெளியில் ஜலதோஷம் பிடித்த வானத்தின் மூக்கிலிருந்து நீர் வடிந்தது.
“பாறுகாலி” - கறவை தீர்ந்த பசு. பால் பிழிந்தெடுத்த தேங்காய்ப்பீரை.(மரியம் பீவி “குட்டியேய்”)
முஸ்தபாக்கண்ணு கடந்து போன நாட்களின் பச்சை இலைப் படர்ப்புகளின் குளிர்ச்சியை அனுபவிக்க இறங்கி நடந்தார். சைனபா... சபியா... பாத்துமா... எத்தனை யெத்தனை புல்லரிப்புகள்... போதைகள்!
“சில்லற ரூபாய்க்காக இந்தக் குடும்பத்துப் பெருமையை வெலக்கு வித்துப்போட்டீளே? இனி எதெத்தான் விய்க்க மாட்டியோ?”
The interesting part of the novel was the history of his great grandfather Paureen Pillai who was helping Marthanda Varma in the early 1700s. The history comes in through bits and pieces whenever Musthapakannu sells an old antique material from the ancestral home. Otherwise, the narrator is a narcissist, sadist, pervert and murderer who always gets way from any kind of punishment.
அரபிக் கடற்கையோர 'தென்பத்தன்' எனும், திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குட்பட்ட கற்பனை கிராமத்தை களமாக கொண்டு, திருவிதாங்கூர் அரச மெய்காப்பாள வம்சத்தில் வந்த முஸ்தபாக்கண்ணு, சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு வெளிப்படுத்தும் மனவோட்டத்தை கற்பனையாக நயம்பட வட்டார வழக்கில் எழுதப்பட்ட நாவல்!
இந்திரிய சுகங்களக்கு அடிமைப்பட்டு, தம் பரம்பரை பற்றி வெட்டி பெருமை பேசி, உழைக்காமல், இருப்பதை விற்று தின்று, பெண்களை அடித்து, போகப் பொருட்களாக யோசித்து வாழும் நிலவுடைமைச் சுவர்ந்தாரான, முஸ்தபாக்கண்ணு எனும் கிழப் பருவப் பெரியவர்(!),
தனது சவ்தா மன்சில் எனும் தறவாட்டில்(வீடு), சாய்வு நாற்காலியில் அமர்ந்து தனது பழைய நினைவுகளோடும், உலர்த்துப் போகும் சல்லிசான எண்ணங்களுடனும் ஒரு நசையான வாழ்வைக் கழிக்கிறார்.
முஸ்தாபக்கண்ணு, ஒவ்வொரு பொருளை விற்கும்போதோ, அல்லது அவர் சந்திக்கும் நபர்களை பற்றி கேள்விப்படும்போதோ, அதன் பொருட்டு ஏற்படும் ஞாபகங்களை, அதன் பின்னனியிலான சரித்திரத்தை நோக்கி ஓடும் அவரது மனவோட்டம் ஒவ்வொன்றும், இந்நாவலின் அத்தியாயங்களாக பகிரப்பட்டுள்ளது.
நம்மில் அனைவரும் முஸ்தபாக்கண்ணை போன்ற மனிதர்களை, ஒருமுறையேனும் நமது வாழ்வில் சந்தித்திருப்போம்.
இக்கதையில், அவரது சாய்வு நாற்காலியின் பக்கத்தில் நின்று, இக்கதையின் அனைத்து சம்பவங்களையும் கவனித்துச் செல்லும்படியான உணர்வை தனது எழுத்துக்களின் மூலம் தருகிறார், #தோப்பில்_முஹம்மது_மீரான்.
இன���றிலிருந்து கிட்டதட்ட கால் நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட நாவல். 1997ல் சாகித்ய அகாதமி விருதை பெற்றுள்ளது.
கதையின் களமும், காலமும் கற்பனை என்றாலும், #தோப்பில்_முஹம்மது_மீரான், தனது எழுத்தின் மூலம் வாசகர்களை, அந்த இடத்திற்கே கூட்டி பயணப்பட வைக்கிறார் என்பதில் மாற்று இல்லை.
தமிழும்/அரபும் கலந்த வட்டார வழக்காக எழுதப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் வர்ணனைகள் என்பதால், வாசிப்பின் புரிதலில் எந்த தடையும் ஏற்படவில்லை.
மேலும், புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில், நாவலில் வரும் புரிபடாத சில அரபுச் சொற்களின் தமிழ் சொற்களும், ஓரு அகராதியை போல் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்நூலின் மூலம் மேலும் கவனிக்க பட வேண்டியது: #மருமக்கதாயம், இன்றும் தென்கோடி கேரள, தமிழக கிராமங்களில் உள்ள பெண்கள் வழி சொத்துரிமை வழக்கம். https://ta.m.wikipedia.org/wiki/%E0%A... அதனை எதிர்த்து, மக்கள் வழி சொத்துரிமைக்காக போராடிய புரட்சிகாரர்களை அடக்கியவரின் வழி வந்தவராக முஸ்தபாக்கண்ணை இந்நாவல் படம் பிடிக்கிறது.
நாஞ்சில் நாட்டு பழக்க வழக்கங்களையும் மருமகத்தாயம் மற்றும் முஸ்லீம் குடும்பங்களின் பெண்ணடிமைத்தனம் போன்றவற்றையும் முஸ்தபாக்கண்ணு என்ற தரவாட்டு வீட்டு காரணவர் (குடும்ப தலைவர்) வழியாக சிறப்பாக சொல்லப்பட்ட கதை .
I came to know about the Author Thoppil Mohamed Meeran on the day of his death from the FB Posts / news articles condoling his death. I was surprised / disappointed at my ignorance of him and i got hold of this book when I came to India for the holidays. I am not sure if this book will kindle your old memories / bring smile on your face like it did to me for others. I am from the same coastal belt / muslim community where the author comes from and this made me live among those characters that the author penned in this story - Its the story of a family for a period of 200 years and the author has portrayed the story in a beautiful way filled with humour / sarcasm / sadness / the reality which you will see in your day to day life. The history documented by scholars only reflect the lives of the royals / political events but we never knew the lives of the common folks. The dialect I speak now is not the one spoke by my grandparents. My kids will never knew / hear the words / phrases used by my grandparents and I am happy that I found a book which will keep it alive in the ever changing world
வட்டார மொழி இலக்கியங்கள் பெரும் உழைப்பை கோருபவை. சாய்வு நாற்காலியும் விதிவிலக்கல்ல. முதல் 100 பக்கங்கள் தட்டு தடுமாறி கடந்து விட்டால் பின் தோப்பில் கையை பிடித்து கொண்டு தென்பத்தனிலிருந்து காலப்பயணம் செய்யலாம்.
பொதுவாகவே பிறப்பின் பெருமை பேசுபவர்கள் என் பரிதாபத்துக்குரியவர்களே. ஆண்ட சாதி பெருமை பேசுபவர்கள் நெருங்கி வரும் இந்த காலத்தில் முஸ்தாபகண்ணுவின் கதை நமக்கு முக்கியமாகிறது
இந்த புத்தகத்தை வாசிக்க தனிமனித முயற்சி வேண்டும்.ஆனால் வாசித்து முடித்தோமேயானால் தமிழில் மிக முக்கிய படைப்பு ஏன் என்பது தெரிந்துவிடும் .தென்பத்தன் கிராம்ம் முஸ்தபாக்கண்ணு என்னும் சுயநலம் பிடித்த ஆண் , அதவு பிரம்பாலே அடிபட்டு நரகத்தில் வாழும் மனைவி.சாய்வுநாற்காலியை சுற்றி நகர்கிறது கதை .மிக அருமையான தமிழ் நாவல்.சிறந்த படைப்பு.