This Book speaks about the Author's experiences, trials and tribulations during his long stay in Delhi for over 50 years. The Reader is assured of the Books's readability and gripping narration on his Delhi life.
உண்மையில், கட்டுரைகளின் வழியாக Born with a Silver Spoon-ஆகத் தெரிந்த ஒருவரைத்தான் சந்திக்கச் சென்றேன். ஆனால் அப்படி ஒருவர் அந்த சாய் நகரின் Golden Nest-ல் இல்லை.
தீர்மானமான முடிவுகள் எதுவுமின்றி நாகர்கோயிலில் இருந்து அத்தான் வீட்டுக்கு இடம் பெயர்ந்த ஒரு இளைஞனையும், ஒரு பான் பீடாவைக் கொடுத்துவிட்டு ஷெனாய் பிஸ்மில்லாகானின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற ரசிகனையும், நேருவின் அலுவலக வாயிலில் காத்திருக்கும் நாடக ஒருங்கிணைப்பாளனையும், மூவாயிரம் ரூபாய்க்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருந்த நண்பனுக்காக வருந்தும் கடன்காரனையும் தான் சந்தித்தேன்.
ஒருவேளை - அமுதத்தையெல்லாம் நினைவில் அசையும் திரைக்குக் கொடுத்துவிட்டு - விஷத்தை மட்டும் நினைவுகளுக்குள் அசையும் அவருக்கான சொந்தத் திரைக்கு வைத்துக் கொண்டாரோ என்று தோன்றியது.
கசப்பின் ஒரு சில துளியையாவது பேட்டி என்ற பெயரில் கொண்டு வந்துவிடலாம் என்றுதான் தொகுப்பாசிரியனாய் நினைத்தேன். ஆனால் ’I am a blessed person!’ என்று மூச்சுக்கு முன்னூறுதடவை சொல்லும் ஒரு உயர்ந்த ஆன்மாவின் மீது ஒரு சிறு கல்லையும் எறிவதற்கு என் கைகளுக்கு வலுவில்லை.
தொகுப்பாசிரியனாய் இருப்பதைவிட பாட்டையாவின் பேராண்டியாகவே இருக்க நினைப்பவனால் - இப்படித்தானே தொகுக்க முடியும்!
அழகான ஆரவாரமற்ற நகைச்சுவை ததும்பும் வாழ்க்கைப் பதிவுகள்
One of the best collection of random autobiographical essays by a man who has lived, and continues to live life to the fullest.. Bharati Mani, (SKS Mani) is now my dear jolly good friend, though I have never met him at all. That's the power of his remarkably sharp observation and personal narrative. Don't miss this book!