தமக்கென ஒரு வழி வகுத்துக் கொண்ட எழுத்தாளர்களில் 'தேவன்' ஒருவர். கல்கிக்குப் பின்னர் திறம்படவும். தரம் குறையாமலும் ஆனந்த விகடன் பத்திரிகைக்குப் பொறுப்பேற்றுப் பலவருடங்கள் நடத்தியவர் தேவன். அன்னாரின் படைப்புகளைப் போல் எளிமை, இளமை, பண்பு, நயம் அனைத்தும் வாழ்க்கையிலும் கடைப்பிடித்தவர்.
நவீனம், கட்டுரை, சிறுகதை, சுற்றுலா இவற்றில் எதையும் அழகு படுத்தி, பட்டை தீட்டி, ஒளிவிடும் வைரத்தைப்போல் வடித்துத் தந்தவர் தேவன். தேவனின் துப்பறியும் கதைகள் தனி வழியில் தோன்றியவை; பிரசித்தமானவை.
தேவன் அல்லது ஆர். மகாதேவன் பிரபல நகைச்சுவை எழுத்தாளர். பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர். துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான படைப்பாகும்.
Since this is the first Tamil novel I have completed, I cannot say it is good or bad. But one thing is, I feel that scenes are keep on repeating and finally no use of several chapters. May be this is how a crime novel in Tamil might be but I can’t conclude. It kept me hooked until certain point of time in first book as well as in second book. After some point I lost the interest. But overall a one time readable book. But I like Devan’s way of writing and I am planning to read other Devan’s novels.