Jump to ratings and reviews
Rate this book

காதுகள்

Rate this book
எம்.வி.வி தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் ‘காதுகள்’ என்ற பெயரில் எழுதினார். இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கம் அவர்தான். மகாலிங்கத்தின் மத்திய வயதில் (36, 37) அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள்கூட அவருக்குள் கேட்டன. வெங்கட்ராமன் வாழ்க்கையில் வாய்திறந்து
அட்டகாசமாகச் சிரித்தவர் இல்லை. வசைச் சொல்லைப் பெய்தவரும் இல்லை. அப்படி நினைப்பவரும் இல்லை.

255 pages, Kindle Edition

First published January 1, 1992

34 people are currently reading
315 people want to read

About the author

M.V. Venkatram

11 books17 followers
Venkatram was born in Kumbakonam in a Sourashtra family. He obtained a B.A degree in Economics and was involved in silk Zari business. He first started publishing in the literary magazine Manikodi in the 1930s, while he was still a college student. He was influenced by Ku. Pa. Rajagopalan and was part of a literary circle that included Karichan Kunju (R. Narayanaswami), Thi. Janakiraman, Thiruloka Seetaram, Dhenuka, Thanjai Prakash, Na.Vichuvanathan, C.M.Muthu and Podhikaiverkpan. His works have been published in magazines like Kaalamohini, Grama Ooozhiyan and Sivaji. He also ran a literary magazine named Thenee briefly. He has written over two hundred short stories and novels. Nithyakanni Kathukal and Velivithee are his most noted works. He also wrote more than 60 short biographies for Palaniappa Brothers and translated over 10 books for the National Book Trust of India. In 1993, he was awarded the Sahitya Akademi Award for Tamil for novel Kathukal (lit. Ears).

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
97 (35%)
4 stars
120 (43%)
3 stars
51 (18%)
2 stars
5 (1%)
1 star
2 (<1%)
Displaying 1 - 30 of 46 reviews
Profile Image for Ashish Iyer.
865 reviews622 followers
July 18, 2020
Such a good book this was. This is why i love to experiment when it comes to reading regional books. In this one protagonist hears voices inside his head discussing his life. I especially like Raman and karuppan conversation, it was too funny. This book even won Sahitya Akademi in 1992.
Profile Image for Praveen (பிரவீண்) KR.
222 reviews33 followers
September 15, 2019
இத்தனை வருடங்களாக பல புத்தகங்களை புதினங்களாகவும் சிறு கதைகளாகவும் படித்திருந்தாலும் வித்தியாசமான ஒரு படைப்பு என்பதை அவ்வளவாக கண்டடைந்ததில்லை. அப்படி ஒரு தேடலின் பலனே இந்த காதுகள். நான் இது வரை படித்ததில் மிகவும் வித்தியாசமான கதைக்களம் கொண்டது இந்த புத்தகம்.வெங்கட்ராம் என்ற எழுத்தாளரை பற்றி அறிமுகம் இல்லாத நான் இந்த புத்தகத்தை பல நாட்கள் புறக்கணித்து வந்தேன். பிறகு சாகித்ய அகாடமி விருது பெற்ற புத்தகம் என்று கண்டு கொண்டதும் வாசித்து தான் பார்ப்போமே என்று முற்பட்டேன். அது நல்ல ஒரு முடிவும் கூட. இல்லையேல் இப்படி ஒரு கதையை தெரிந்திருக்க முடியுமா என்ன?
மாலி (எ) மகாலிங்கத்தின் கதையே இந்த காதுகள். தனது பெற்றோருக்கு ஒரே மகனாக பிறந்த மாலி கூச்ச சுபாவத்துடன் வளர்கிறான். எல்லோரையும் போலவே படித்து முடித்து வேலை செல்கிறான். அதன் பிறகு தொழில் நடந்திகின்றான். அதோடு சிறு வயதில் கல்யாணமும் நடத்தி வைக்கப்படுகிறது. செல்வ செழிப்பில் திகழும் மாலியின் நிலையில் மாற்றம் வர செல்வங்கள் இழந்து நடுத்தெருவுக்கு தள்ள படுகிறான். நாட்கள் செல்ல செல்ல அவனது காதுகளில் விசித்திரமான பல ஒலிகளை கேட்கிறது. அவனது நாசி பல வாடைகளையும் உணர்கிறது.
பல குரல்கள் முருகன் என்றும் ராமர் என்றும் காளி என்றும் சிவன் என்றும் பேசுகிறது. முருகன் அவனை நெறி தவறாமல் இருக்க சொன்னாலும் காளியின் பேச்சு அவனை பல கேட்ட செயல்களை செய்யவும் கேட்ட எண்ணங்களை நினைக்கவும் தூண்டுகிறது. காமம், கேட்ட வார்த்தைகள் மற்றும் வேறு கெட்ட சிந்தனைகள் பற்றின குரல் கேட்கையில் அவனை சுற்றி துர்நாற்றம் வீசுவதை உணர்கிறான். மாலியினுள் நடக்கும் இந்த போராட்டமும் அது அவனது இயல்பு வாழ்க்கையை எப்படி பாதிக்கின்றது என்பதுமே "காதுகள்".
நாமெல்லோரும் ஏதாவது சில தருணங்களில் நம் வாழ்க்கையில் தனியாக பேசியிருப்போம். பேசி முடித்த பிறகு சற்று வித்தியாசமாக நமக்கே சில நேரங்களில் படும். அப்படி இருக்கையில் இப்படி ஒரு அனுபவம் வர நேர்ந்தால் என்னவாகும் என்று சற்று யோசித்து பாருங்கள்! மாலியின் மனக்குழப்பத்தை தத்ரூபமாக சொல்லியிருக்கார் எம்.வீ . ஆரம்பத்தில் சில நேரங்களில் மட்டும் கேட்கும் குரல்கள் போக போக எங்கும் அவரை தொடர ஆரம்பிக்கின்றது. அந்த நேரங்களில் நிகழும் மாற்றங்கள் மற்றும் நினைவலைகள் அழகாக அமைக்க பட்டிருக்கிறது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் ஆக இருந்தாலும் இந்த கதைக்களம் நம்மை அது ஒரு கற்பனை கதை என்றே நினைக்க தூண்டுகிறது. காளி, ராமர், அவனோட குரு எல்லோரும் பாத்திரங்களாகவே படுகின்றன. கதையில் வரும் அவனது மனைவி, நண்பன், குழந்தை போன்றவர்கள் இவனது நடத்தையில் குழம்ப நம்மையும் அந்த குழப்பத்தில் தள்ளுகிறார்கள். சில நேரம் மட்டுமே வந்து போனாலும் அவர்களது உணர்வுகளையும் நமக்குள் நன்று செலுத்துகிறார் எம்.வீ.
இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள் சிலர். மனநல மருத்துவக்காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் படைப்புலகில் இதற்க்கு ஒரு முக்கிய இடம் என்றுமே இருக்க தான் செய்யும். எல்லோருக்கும் பிடித்தமான ஒரு வாசிப்பாக இது இருக்கும் என்று திட்டவட்டமாக கூற முடியாது என்றாலும் அணைத்து புத்தக பிரியர்களுக்கு கண்டிப்பாக வாசித்திருக்க வேண்டிய ஒரு புத்தகம் இது.
Profile Image for Udhayakumar Tamileelam .
87 reviews25 followers
June 5, 2021
காதுகள்.
Introvert ஆன மாலி என்கிற முதன்மை கதாப்பாத்திரத்தின் காதுகளில் ஏற்படும் விசித்திரமான சத்தங்களின் ஒட்டுமொத்த போராட்டமே இக்கதையின் கதைக்களம்.
பொதுவாக கும்பகோணத்தின் காவிரிக்கரையில் இருந்து தோன்றும் பெரும்பாலான எழுத்தாளர்களின் கதையாடல்கள் பெரும்பாலானவை அந்த ஊரின் பவுசான வாழ்க்கையும், அவர்களின் மனபோராட்டங்கள் தான் கதை கருக்கள் ஆக இருக்கும்.
எம்.வி.வியின் எழுத்துகள் மேற்கூறிய எழுத்துக்களில் இருந்து புதுமையானது.
எம்.வி.வி தன் சொந்த வாழ்வில் மத்திய வயதில் ஏற்பட்ட அனுபவங்களை கொண்டு புனைந்து உள்ள இந்நூல் Psychological,Magical Realisam மற்றும் Transgression வகையைச் சேர்ந்தது.
நான் விரும்பிப் படித்த நூல்களில் இந்நூலும் ஒன்றாக அமைந்தததில் எம்.வி.வி யின் மொழிச்செழுமைக்காகவும்,வித்தியாசமான கதைமுறைக்கும் இந்நூலை கண்டிப்பாக வாசிக்கலாம்.
Profile Image for Krishna.
60 reviews11 followers
February 27, 2016
அற்புதமான எழுத்தாற்றல் எம்.வி.வி-க்கு அதோடு கவியாற்றலும்... நாவலின் ஓரிடத்தில் நாயகன் இரவில் வெளியே உலாவப் போகிறான், அங்கு 'வெளியே நடந்த அவனை வானம் இலட்சம் கோடி பல்லை காட்டி சிரிக்கின்றது' என நட்சத்திரங்களை வானின் பற்களாக உவமையாக்குகிறார். இன்னேரர் இடத்தில் வாழ்க்கையை ஊசிமுனை தவம் என்கிறார். கவி உவமைகளுக்கு அப்பால் நாவல் முழுமைக்கும் ஓர் உலகையே சிருக்ஷ்டித்திருக்கிறார்,அதுவும் நாயகனின் உடலின் உள்ளே அவன் மனத்தைக் கொண்டே!!
Profile Image for Karthick.
363 reviews118 followers
August 22, 2020
என்றாவது உங்களுக்குள் நீங்கள் பேசிக்கொண்டிருந்திருக்கிறீர்களா? 'அது' சொல்லி (நல்லதோ/கெட்டதோ) எதையாவது செய்து இருக்கிறீர்களா? ஆம் என்றால், வாழ்த்துக்கள்! இது உங்களுக்கான புத்தகம்.

நமது எண்ணங்களுக்கு குரல் இருந்து அவை நம் காதுகளுக்கு கேட்டு கொண்டே இருந்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு வாழ்க்கையை மகாலிங்கம் (எ) மாலி என்னும் படைப்பின் மூலம் விவரிக்கிறார் ஆசிரியர்.

மாலி - கூச்ச சுபாவம், நல்ல வேலை, பிறகு தொழில். நலமான வாழ்க்கை. ஒரு கட்டத்தில் செல்வமிழந்து நடுத்தெருவுக்கு தள்ளப்படுகிறான். நாட்கள் செல்ல செல்ல அவனது காதுகளில் விசித்திரமான பல ஒலிகளை கேட்கிறது. ஆபாச சொற்கள், காமப்பேச்சுக்கள் என்று அவனை சிந்திக்கவிடாமல் வதைக்கிறது. 'முருகன்' அவனை நெறிதவறாமல் நடக்கசொன்னாலும், 'காளி' அவனை நிலைகுலைய செய்கிறது. மாலியினுள் நடக்கும் இந்த போராட்டமும் அது அவனது இயல்பு வாழ்க்கையை எப்படி பாதிக்கின்றது என்பதுமே "காதுகள்".

ஆசிரியர், மகாலிங்கம் தான்தான் என்றும், தன் 20 வருட வாழ்க்கையின் அனுபவம் தான் 'காதுகள்' என்கிறார்.

இது ஒரு அசாத்திய படைப்பு என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால், ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் மகாலிங்கத்தை போல் புறம் & அகச்சூழலை எதிர்கொள்ளும் போராட்டத்தை கடந்து வந்திருப்பான். ஒரு வேலை இந்த நாவல் அசாத்திய படைப்பு என்று கருதுகிறீர்கள் என்றால், நாம் வாழ்கின்ற வாழ்க்கையும் அசாத்தியமானது தான்!

"வாழ்க்கையை என்னை வாழவைக்கிற இந்தச் சமுதாயத்தை இங்குள்ள உயிரினங்களையும், உயிரற்ற சடப்பொருள்களையும் ���ான் நேசிக்கிறேன். இந்த மண்ணுக்கு, இந்த சூழலுக்கு, இந்த இன்பதுன்பத்துக்கு என்னை அனுப்பி வைத்தது யார் அல்லது எது என்று கண்டுபிடிக்க நான் ஓயாமல் செய்யும் முயற்சி தான் என்னுடைய இலக்கியப் படைப்பு. என்னை தேடிக் கண்டுபிடிக்கவே நான் எழுதுகிறேன் "
- எம்.வி. வெங்கட்ராம்

சாஹித்திய அகாதெமி விருது பெற்ற இந்த நாவல் ஒரு MUST READ
Profile Image for Raj Omm.
20 reviews
March 23, 2024
மாலி என்கிற மகாலிங்கத்திற்கு வாழ்கையின் ஒரு கட்டத்தில் திடீரென்று தன் காதுக்குள் பல ஒலிகள் கேட்க தொடங்குகின்றன...இறுதியில் அதனுடன் போரிட்டு ஜெய்த்தாரா? என்பது தான் கதை...

கடவுளின் பெயரை வைத்து இவ்வளவு அப்பட்டமாக, ஆபாசமாக இருக்கும் எழுத்துக்கள் கண்டு எனக்கு மிகவும் ஆச்சர்யம்... இந்த நாவல் வெளியான காலம் கண்டிப்பாக எதிர்ப்புகளும் விமர்சனங்களும் இருந்திருக்கலாம்...

ராமன், கருப்பன் இருவருக்கும் இடையில் நடக்கும் பேச்சுவார்த்தை அமோகம்!
தமிழில் இப்படிப்பட்ட "Physiological drama" நாவல்கள் எத்தனை படைக்கப்பட்டது என்பது தெரியவில்லை..

கதைக்களம் சற்று இழுவையாக தான் எனக்கு பட்டது...( இந்த நாவலை முடிப்பதற்கு இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்ட காரணமும் அதுவே)
*
கதையின் முதன்மை கதாபாத்திரம் மாலி,
எத்தனை துயரங்களை சந்தித்தாலும், மனம் தளராது வாழ்ந்து காட்டிட வேண்டும் என்று போராடுவதே இந்நாவலில் இருந்து நான் எடுத்துக்கொண்ட "take away"
*
(பி.கு.)சாகத்திய அக்காதெமி விருது பெற்ற நாவல் இது.
Profile Image for Venkatachalam.
15 reviews
December 28, 2020
கவிஞர் ரவிசுப்பிரமணியனின் குரலில் கேட்பது சுகமாக இருந்தது.
Profile Image for Dhulkarnain.
76 reviews2 followers
March 6, 2023
உடல் சார்ந்த நோய் அனுபவங்களை இலகுவாக எழுதி விடலாம்.மனம் சார்ந்த நோய்களை அது ஏற்படுத்தும் அகப் பிரச்சினைகளை வார்த்தைகளில் ஒரு நாவலாக வடிப்பது கடினம். சாகித்திய அகாடமி விருதுக்கு உண்மையிலேயே தகுதியான ஒரு நாவல்.
Profile Image for Sangamithra.
58 reviews25 followers
November 13, 2022
மகாலிங்கம் - முதன்மைக் கதாபாத்திரம் - தனது 30-களின் மத்தியில் உள்ளிருந்தும் புறமிருந்தும் கற்பனையான ஓசைகளை, குரல்களைக் கேட்கிறான். புத்தகத்தின் முதல் சில பக்கங்கள் அவனது குழந்தைப் பருவம், கல்வி, திருமணம், குடும்பம் போன்றவற்றைச் சொல்லிவிடுகிறது. பிறகு முழுக்க முழுக்க அவனது காதுகளே அவனை எப்படிப் பாடாய்ப்படுத்துகிறது என்பதைச் சொல்லிச் செல்லுகிறது.

ஆசிரியர் தனது அனுபவத்தினையே புதினமாக எழுதியுள்ளதால் இப்புத்தகத்தைத் தனது வாழ்க்கை வரலாற்று நாவல் என்று கூறுகிறார்.

கற்பனையான உருவங்கள் உருவாகின்றன. கற்பனையான குரல்கள் கேட்கின்றன. சில நேரங்களில் அர்த்தமில்லாத சத்தமாய், சில நேரங்களில் அர்த்தம் செறிந்த உரையாடல்களாய். இந்தக் கற்பனைகள் இவனிடம் பேசும் அல்லது அவற்றிற்குள்ளேயே பேசிக் கொள்ளும். இவை பெரும்பாலும் எதிர்மறையானவை, கோரமானவை. இவற்றோடு இவன் போராடிக் கொண்டே இருக்கிறான். கடைசியில் இவன் ஜெயித்தானா - அந்தக் குரல்கள் ஜெயித்தனவா என்பதே கதை.

நானும் சிலமுறை இதே போல குரல்களைக் கேட்டுள்ளேன். இதுதான் இப்புத்தகத்தை வாசிக்க முதன்மையான காரணம். கல்வி, பணி சம்பந்தமாக ஏதேனும் முக்கியமான வேலைகள், ப்ராஜெக்ட்கள் இருந்தால் அதனைச் செய்ய அதிகாலையை விட இரவைத் தான்(Night owl) தேர்ந்தெடுப்பேன். சிறுவயதிலிருந்தே எனக்கு இப்பழக்கம் உள்ளது. அதிகாலை என்னால் நிச்சயம் எழ முடியாது. ஆனால் தூக்கத்தைக் கெடுத்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் என்னால் விழித்திருக்க முடியும். இப்போதும் எழுதவோ, படிக்கவோ இரவைத் தான் தேர்ந்தெடுப்பேன். சில சமயங்களில் இடையிடையே தூங்கி வழிவதும் உண்டு. அப்படியான சமயங்களில் சில நேரங்களில் என் காதருகே சில குரல்களைக் கேட்டுள்ளேன். சில சமயங்களில் அது அர்த்தமில்லாத சத்தம் போல இருக்கும். சில நேரங்களில் அது என்னுடைய பெயரைச் சொல்லி அழைப்பதாக இருக்கும். சில வினாடி திடுக்கிட்டு விட்டு சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்து விட்டு நார்மல் ஆகிவிடுவேன். அவ்வளவுதான்.

இப்புத்தகத்தை வாசிக்கையில் ஒருவேளை இது அதீத கற்பனையுடன் எழுதப்பட்ட நூலாக இருக்குமோ என்று தோன்றியது. இணையதளத்தில் Auditory hallucination பற்றித் தேடிய போது தான் இதனைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது. எனக்கு உண்டான அனுபவத்திற்கு பெயர் Auditory hypnogogic hallucination ஆம். தூங்கப் போகும் போதோ, தூங்கி எழும் போதோ ஏதாவது சத்தங்கள் கேட்கலாம். தூக்கமின்மையால் இம்மாதிரி நடக்கிறது என்றும், இது சாதாரணமானது என்றும் அந்த இணையதளத்தில் குறிப்பிட்டு இருந்தது. Auditory hallucination பற்றி நீங்களும் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.
https://my.clevelandclinic.org/health...

அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய புதினம். குறிப்பாக நீங்கள் அதிகம் யோசிக்கக் கூடியவராக இருந்தாலோ, எதிர்மறையான கற்பனையான உலகத்தை மூளைக்குள் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டு இருந்தாலோ நிச்சயம் இப்புத்தகத்தை வாசியுங்கள்.

புத்தகத்திலிருந்து...

1) தீய குணத்துக்குக் கொஞ்சம் இடம் தந்தால் அது முழு இடத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளும்.

2)ஐம்புலன்களாலும் குழப்பப்பட்டு மருளும் மனம் - இவற்றோடு இவன் புத்தியால் போராடுகிறான். அதாவது இவன் தன்னோடு போராடிக்கொண்டு இருக்கிறான்.
244 reviews36 followers
March 6, 2024
புத்தகம்: காதுகள்
எழுத்தாளர்: எம். வி. வெங்கட்ராம்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள்: 159
நூலங்காடி: சப்னா புக் ஹவுஸ்
விலை: 162

💫 பெரும் செல்வந்தரின் ஒரே மகன் "மாலி" என்னும் மகாலிங்கம். படிக்கும் வயதிலேயே பெற்றோர் பெண் பார்த்து அவனுக்கு திருமணம் செய்து வைத்தனர். 5 செல்வங்கள். தொழில் மெல்ல சரியத் தொடங்கியது. வீட்டில் இருந்து பொருட்களும் மெல்ல மறைந்தன. மூன்று வேளை சோறு என்பது மிகப் பெரிய ஆடம்பரமாக இருந்தது, அந்தக் குடும்பத்துக்கு.

💫 மாலிக்கு தன் காதுகளில் குரல்கள் கேட்க ஆரம்பித்தன. அந்தப் பெண் குரல் தன்னை காளி என்று சொல்லிக் கொண்டது. நாட்கள் செல்ல செல்ல அந்தக் குரல்கள் மிகவும் அபத்தமாகவும், ஆபாசமாகவும் இருந்தது.

💫 தாமச சக்தியின் தொல்லையோடு இருந்த மாலிக்கு சத்துவ சக்தியின் வழி தெரிய 20 ஆண்டுகள் ஆனது. இந்தக் குரல்களின் மீது கவனம் செலுத்தாமல் தன் வேலையில் முழுக் கவனத்துடன் மாலி செயல்பட்டிருந்தால் அந்தக் குரல்கள் எப்போதோ நின்றிருக்கும் என்பது என் கருத்து.

💫 1993-இல் சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல் இது, என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை.

புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி .


சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்
Profile Image for Gowtham Ramachandran.
11 reviews6 followers
April 19, 2020
"தரித்திரத்துக்கு பசி அதிகம்" என்னை ஈர்த்த வாக்கியம். இந்த கதையில் வரும் மாலி என்கிற மஹாலிங்கத்தின் காதுகள் அவரை படுத்தும் பாடுதான் கதை. இப்புதினம் psychological fiction genre ஐ சேர்ந்தது. Auditory hallucinations (செவிவழி பிரமைகள்) என்று சொல்லக்கூடிய ஒரு மன வியாதியை கொண்ட மாலி படும் பாடு படிக்கும் வாசகர்களுக்கும் தாக்கத்தை ஏற்���டுத்தும். இதை படிக்கும் போது என்னுடைய காதுகளிலும் சிலர் பேசுவது போல் கேட்டு அச்சம்கொண்டு, பாதியோடு படிப்பதை நிறுத்தி கொண்டேன். இக்கதையில் காலி தெய்வம் தான் கெட்டவள். காளிதான் மாலி காதுகளில் ஒலி எழுப்பும் கெட்ட சக்தி. கருப்பன்,ராமசாமி, முருகசாமி இதெல்லாம் மாலியின் காதில் வசிக்கும் ஜந்துக்கள்.இக்கதையை MVV தன்னுடைய சுயசரிதை என்கிறார். நேற்று இரவே படித்து முடிக்கவேண்டியது, பயம் சூழ்ந்துகொண்டதால் இன்று காலை படித்துமுடித்தேன்.
Profile Image for Koushik Tamilmaran.
70 reviews4 followers
July 7, 2021
Have you noticed a voice that always talks with you? What if it’s not in your control, which happens a lot in adult life. A lot of problems and stress originate. And one loses a sense of direction. This novel is about that and many other things. Some of the descriptions are amazingly detailed.
Profile Image for Balu.
20 reviews11 followers
March 7, 2021
‘மூக்குத்தி அம்மன்’ படம் வெளியாகியிருந்தப்போ வீட்ல எல்லாரும் பார்த்துட்டு இருந்தாங்க. சாப்ட போன 10 நிமிஷத்துல நான் சும்மா ரெண்டு மூனு சீன்ஸ் மட்டும் பார்த்தேன். உப்மாவாட்டன் இருந்தது. ‘என்ன படம் இது? இவ்ளோ மொக்கையா இருக்கு. இதே ஆர்.ஜே.பாலாஜியும் அம்மனும் செக்ஸ் வெச்சிக்கிற மாதிரி சீன்ஸ் வெச்சிருந்தா படம் வேற லெவல்ல இருந்திருக்கும். இந்தப் படத்தையெல்லாம் என் தலைவன் ராம் கோபால் வர்மா எடுத்திருந்தா பிரிச்சு மேஞ்சிருப்பான்’னு சொன்னேன். விளையாட்டுக்கு சொல்லல; சீரியஸாவேதான் சொன்னேன். உடனே வீட்ல கொந்தளிச்சிட்டாங்க. ஏன்தான் நம்ம மனசுல தோன்றதையெல்லாம் குடும்பத்தார்கிட்ட சொல்றோமோன்னு கவலை பட்டுக்கிட்டேன். ஆனால் எனக்குத் தோன்றின அந்த எண்ணம் சில நாட்கள் கழிச்சு யோசிச்சு பார்க்கும்போது நிஜமாவே Interesting ah இருந்தது.

‘காதுகள்’ நாவல் படிக்கும்போது அவ்ளோ ஆச்சரியமா இருந்தது. தமிழின் Mainstream பெண் கடவுளான காளி பராசக்தி ஒரு சராசரி ஆளோட செக்ஸ் வெச்சிக்குற மாதிரியான Text ah படிக்கும்போது அவ்ளோ பரவசமா இருந்தது. இதுதான் Real Text Pleasure. இந்த மாதிரியான Transgressive Fiction க்கு சாகித்ய அகாடமி போன்ற National Literary award லாம் கொடுத்து கௌரவிக்கிறது வேற எந்த நாட்டிலும் சாத்தியமே இல்ல.
Profile Image for Naren.
67 reviews1 follower
Read
December 31, 2022
Mv na ~ரஷ்யாவிற்கு ஒரு தஸ்தோவ்ஸ்கி என்றால் தமிழுக்கு நான்.
Profile Image for Sivasankaran.
60 reviews9 followers
June 30, 2021
காதுகள்
எம்.வி. வெங்கட்ராம்
காலச்சுவடு பதிப்பகம்
.
.
மனிதனை உடலால் அழிப்பதற்கு பல ஆயுதங்கள், ஏன் சமயத்தில் சக மனிதர்களே கூட இருக்கத் தான் செய்கிறார்கள். எம்.வி கூறுவது போல, 'மனித சமுதாயம் குற்றம் குறைகள் நிரம்பியதாக தானிருக்கும்'.

" காதுகள் " நாவலில் மகாலிங்கத்திற்கு நடப்பதற்கு எந்த ஒரு காரணியையும் குறிப்பிட்டு சொல்லமுடியாது. பல வித கோணங்களில் நம்மை ஆராய விடும் எதனால் இவன் இப்படி ஆபாச காட்சிகளையும், வசவுகள், நடமாடும் உருவங்கள் என சிக்கி தவிக்கிறான் என்ற கேள்விக்கு ' தேடல் ' என்ற பதிலை முடிவிலியாய் கொடுத்து விடுகிறார். ஏனெனில், இவனுக்கு ஏற்படுவதோ அகச்சிக்கல்களே, அதுவும் Auditory Hallucination, schizopernia என பல வகை மனச் சிதைவுக்கு ஆளான ஒரு நல்ல கலைஞன்; எழுத்தாளன்.

நான் இறுதி பக்கங்களை நெருங்கும் போது ஒன்றை உணர நேர்ந்தது. சிறுவயதில் நாம் பார்த்த கோரச் சம்பவங்கள் அதாவது Traumatic Disorder தான் பல வகை மனச்சிதைவுக்கு ஒருவனை வழிநடத்துகிறது என கூற முடிகிறது. இதில், மகாலிங்கம் தான் சிறு வயதில், இளம் வயதில் பார்த்த தற்கொலை சம்பவங்களும் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.
அதே சமயம், மகாலிங்கம் சமூகத்தில் நன்றாக மதிக்கப்படும் கலைஞன். தெய்வ பக்தி உடையவன், முருகனை மனமுருக வேண்டி பூஜை செய்பவன். இவனை நல்ல தன்னிலையை சோதிக்கவே இது நடத்ததாகவும் பார்க்க முடிகிறது. ஆனாலும், மகாலிங்கம் தன்னிலையில் இருந்து விலகவே இல்லை, இறுதி வரை, அகமும் புறமும் பல போராட்டங்களை சந்தித்து வாழ்க்கையை நகர்த்தி வந்தான்.
இவன் கேட்கும் வசவுகள், பார்க்கும் ஆபாசங்கள், அன்றாட வாழ்க்கையில் படும் அல்லல்கள், அவமானங்கள் அத்தனையையும் படிக்கும்போது துயரமாக இல்லை. சில இடங்களில் சிரிப்பும் வந்துவிடுகிறது. பலர் சொல்வது போல, இந்நாவல் Disturbingஆக எனக்கு தெரியவில்லை. ஆனால், உள்ளே அப்படியொரு உறுத்தல் அரும்பிவிட்டது. இந்த பிரச்சினைகளுக்கிடையே, சுருக்கமாக சொன்னால், நரகத்துக்குள் நுழைய தெரிந்த அவனுக்கு விடுதலைக்கான வழியும் தெரிந்து தானே இருக்கும்.
" ஆம். தேடல் தொடங்குகிறது. திரும்பிப் பார்த்தால் ஒரே ஆச்சரியமாக இருக்கிறது. யாரும் இல்லாத இடத்தில் இல்லாத ஒன்றைத் தேடி அலைந்தேனோ என்று சில சமயம் சந்தேகம் தோன்றுகிறது. இந்த என் வாழ்க்கையின் ரகசியம் தான் என்ன?

இந்த என் வாழ்க்கை விளங்க மறுக்கும் ஒரு புதிராகவே தோன்றுகிறது. இதனை எனக்குத் தெளிவுபடுத்தும் தத்துவம் தான் என்ன?
- எம்.வி அவர்களே, இப்படி தான் சொல்லியிருக்கிறார்.

இந்த நாவலில் மகாலிங்கத்தை சுற்றி நிறைய நாடகங்கள் நடைபெறும், நடக்க கூடாதவை எல்லாம் நடக்கும். சிரிப்புக்கு பஞ்சமில்லை. அதைவிட முக்கியம், இதையெல்லாம் வாசகனாக உருவம் கொடுத்து கற்பனை செய்யும் போது இது Surrealismகான உணர்வை எளிதில் கொடுத்து விடுகிறது.

அதே போல, காம உணர்வினைப் பற்றி பல தத்துவங்கள் நாவல் முழுக்க சிதறி இருக்கிறது. அதீதம், வெறி, பேராசை என பலதரப்பட்ட மனித உணர்ச்சியைவிட எப்படி காமம் எளிதில் முன்னே நிற்கிறது என்பதை காண முடிகிறது.

பிரபஞ்சன் கூறியவை:
" தமிழ் நாவல் சரிதத்தில் இது ஒரு முக்கியமான, வாசிக்கப்பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிதர்சனமான உண்மை ".

கண்டிப்பாக வாசித்து விடுங்கள்.
#சிவசங்கரன்
Profile Image for Surendhiran Lakshmanan.
Author 1 book11 followers
April 28, 2022
ஒரு எழுத்தாளனின் காதுகளில் தொடர்ந்து கேட்கும் அமானுஷ்ய குரல்களினால் அவன் என்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்கிறான் என்பதே கதை. இது உண்மை கதை என்று எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராமன் கூறுயிருக்கிறார். அது உண்மையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கிறது.

தமிழில் இது போன்ற உளவியல் சார்ந்த புத்தகத்தை, நான் படிப்பது இதுவே முதல்முறை. சிலர் இதை மேஜிக்கல் ரியலிச வகைகளில் சேர்க்கின்றனர். சிலர் ஹாலிசினேசன் வகைகளில் சேர்க்கின்றனர். இது ஒரு மனநலம் சார்ந்த சிக்கல் என நான் புரிந்து கொள்கிறான்.

ஒரு சிறுகதை எழுதும்போது மேலோட்டமாகவும், திரைப்படத்துக்கான திரைக்கதை எழுதும் பணிகளின்போது இந்த அகச்சிக்கல் சார்ந்த ஒரு நோயை பற்றி அதிகப்படியான தகவல்களையும் தெரிந்து கொள்ள நேர்ந்தது. Schizophrenia என கூகுள் செய்து பார்த்தாலே அதன் தன்மைகளை ஓரளவு உணர்ந்து கொள்ள முடியும்.

இந்த அகச்சிக்கல் சார்ந்து, எண்ணற்ற திரைப்படங்கள் மற்ற மொழிகளில் வந்திருந்த போதிலும், முதல் முறையாக தமிழில், அதுவும் 1992-களிலியே இது மாதிரியான ஒரு அனுபவத்தை புத்தகமாக எழுதியிருப்பது ஆச்சர்யம் தான் அல்லது நான் இப்போது வரை படிக்காமல் தவறவிட்டது என்னுடைய துரதிஷ்டம் தான்.

ஆங்கிலத்தில் ’A beautiful Mind (2001)’ திரைப்படத்தை இந்த கதையின் கருவோடு பொருத்து பார்க்கலாம். அந்த திரைப்படத்தில் வரும் கதாநாயகன் உண்மை என நம்பும் நிகழ்வுகள், இங்கே வெறும் ஒலிகளாக மாலியின் காதுகளில் ஒலிக்கிறது.

மாலி கதாபாத்திரத்தின் சிந்தனைகளும், யோசனைகளும், அவனுக்கு தோன்றும் கனவுகள் ஒன்றை ஒன்று தொடர்புபடுத்தி நகர்கிறது. அவன் அதனால் சந்திக்கும் பிரச்சனைகள், உறக்கமின்மை, கொடூர சிந்தனைகள், கேவலமான வக்கிர கனவுகள் என அதன் பாதிப்பு நீண்டு கொண்டே செல்கிறது.

இறுதியில் இந்த சிக்கலிலிருந்து மாலி என்கிற மகாலிங்கம் எப்படி விடுபட்டான் அல்லது அந்த சிக்கல்களை கையாள எப்படி கற்றுக்கொண்டான் என்பதே மீதிக்கதை.

வாசிக்க ஆரம்பித்து ஒரே முயற்சியில் முடிக்கும்படியான எழுத்துநடை என்னை வெகுவாக ஈர்த்தது. புத்தகத்தை படித்து முடிக்கும்பொழ்து, இந்த கதை சார்ந்து மட்டுமில்லாமல், தத்துவம் சார்ந்து சில உண்மைகளை புரிந்து கொள்ளமுடியுமென நம்புகிறேன்.

எதோ ஒரு விதத்தில் எனக்கு பெரும் நம்பிக்கையை புகுத்திவிட்ட நாவலாக இதை உணர்கிறேன். நிச்சயம் வாசிக்கப்பட வேண்டிய நாவல்.
Profile Image for Bhuvan.
253 reviews43 followers
April 8, 2024
தமிழில் இது போன்ற நாவல்கள் எழுதப்பட்டுள்ளனவா என்பது ஒரு ஆச்சரியம் தான்.

இந்த கதாநாயகனின் மனப் போராட்டம் தான் எத்தகைய வியப்புக்குரியது.

சில சமயம் சிந்தித்துப் பார்த்தால் எல்லா மனிதர்களும் மனதிற்குள் இப்படி உழன்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

சில சமயம் ஏன் இத்தனை குழப்பங்கள் என்று தோன்றுகிறது. அதுதான் மனித இயல்பு போலும்.

இன்னும் சிறப்பான முடிவை எதிர்பார்த்து காத்திருந்தேன்.
Profile Image for Muthuhariharan. R.
10 reviews
April 5, 2023
தமிழில் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான நாவல்.....
15 reviews5 followers
July 3, 2016
நம் நினைவுகள், யோசனைகள் எல்லாம் குரலாகக் காதுக்குள் கேட்டால் எப்படியிருக்கும்? பைத்தியம் பிடிக்கப் போகிறதென்று நமக்கே தெரிந்தால் எப்டி இருக்கும்? இந்த நூலில் அப்படித் தான் மகாலிங்கத்துக்கு இருக்கிறது.

இது ஒரு 'ஹாலுயூசினேஷன்' நாவல் என்று முன்னுரையில் சொல்கிறார்கள். நூலாசிரியர் அதை அப்படித் தான் என்றும் சொல்லவில்லை, இல்லையென்றும் மறுக்கவில்லை. 20 ஆண்டுகளாக தான் அனுபவித்ததை நூலாக எழுதியிருக்கிறார். இதில் வரும் மகாலிங்கம் தான் தானென்கிறார்.

நம் மனதுக்குள் இருக்கும் நல்லெண்ணங்கள் ஒரு குருவாக அவரை வழிநடத்துகிறது. அதைத் தெய்வசக்தியாக, முருகனாக மகாலிங்கம் நினைத்துக் கொள்கிறார். காம எண்ணங்கள் தீயசக்தியாக அவரை ஆட்கொள்கின்றன. ஓயாது ஆபாசக் குரல்களில் பேசிக் கொள்கின்றன. அந்தக் கால எழுத்தாளர்களில் கடவுளை/சக்தியை பெண்ணாக ஆக்கி லா.ச.ராவின் 'ஜனனி' மாதிரி எழுத்துக்களைப் படித்த நமக்கு இவர் காமத்தை கடவுளாக்குவது ஆச்சரியமாகவும் சின்னதொரு அதிர்ச்சியாகவும் இருக்கிறது. அந்தத் தீயசக்தியைக் 'காளி' என்கிறார். முருகனை வழிபடக் கூடாது என்று காளி மிரட்டுகிறாள். காளியை காணக் கிடக்கும் சிவனைச் சின்னாபின்னமாக்குகிறாள். ராமனும் சிவனும் சேர்ந்து காளியை முருகனிடம் பிடித்துக் கொடுக்க முயல்கிறார்கள். மேற்பார்வைக்கு சில கற்பனைகள் கண்றாவியாக இருக்கின்றன. ஆனால் ஆழமான அழகியல்கள் அதிலிருக்கின்றன.

இந்தக் கதைக்கரு 'ஹாலுயூசினேஷன்' என்று பிரபஞ்சன் முன்னுரையில் சொல்கிறார். ஆனால் எனக்கு அப்படி ஒத்துக் கொள்வதில் தயக்கமிருக்கிறது. மகாலிங்கத்தின் பக்கத்து வீட்டுப் பெண் ஹிஸ்டீரியா நோயாளி. கணவனைப் பிடிக்காமல் அடிக்கடி பிறந்த வீட்டுக்கு ஓடி வந்து விடுகிறாள். இவர் மேல் ஆசை அவளுக்கு. தொடக்கத்தில் அவளை நிராகரிக்கும் மகாலிங்கம் ஒரு கணத்தில் ஏற்றுக் கொள்ளத் தலைப்படும் போது அவள் மேல் அடிக்கும் துர்வாடை ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. விலகிக் கொள்கிறார். தன் மனைவியிடம் அவளை வீட்டுக்குள் விடக் கூடாது என்று உத்தரவிடுகிறார். அன்றிலிருந்து அவள் தொல்லை அவளுக்கில்லை. ஆனால் அவள் மேல் முகிழ்த்த காமம் காளியாகி விடுகிறது. ஒரு வேளை அவளுடல் துர்நாற்றம் வீசாதிருந்தால் அவர் நிலை என்ன? காம வசப்பட்டிருக்கக் கூடும். அந்த உணர்வு தான் காளியாகி அவரைத் துரத்துகிறது. அவளிடமிருந்து விலகி நிற்க வேண்டுமென்றிருந்த புத்தி ராமனாகவும் முருகனாகவும் உருவகமாகிறது. நல்லதுக்கும் தீயதுக்கும் இடையில் ஊசலாடுகிற மனம் சிவனானது. ஹிஸ்டீரியாக்காரி மீதான காமம் தவறென்று புத்தி அதாவது முருக மனம் சொன்ன போதும், அடி மனதில் ஓரமாய் ஓர் விரும்புதல் இருக்கிறது. அது அவ்வப்போது கொடூரமாய்த் தலை காட்டுகிறது. அது அவள் மனைவியை நோயாளி ஆக்குகிறது. வறுமைக்கு வலிகோலுகிறது. ஆயினும் குடும்பத்தின் மீதிருக்கும் பாசம், ஈர்ப்பு முருகனைத் துணைக்கழைத்து நிலையைச் சரிசெய்ய முயற்சிக்கிறது. இந்தப் போராட்டம் தான் 'காதுகள்' ஆகிறது.

சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நாவல். ஆனால் லைட் ரீடர்ஸ்க்குப் பிடிக்காது. மௌனி பிடிப்பவர்களுக்கு இந்நூலும் பிடிக்கும் என்பது என் ஊகம். இந்தப் புத்தகம் பற்றி முத்துலிங்கம் ஒரு கட்டுரையில் எழுதியிருப்பார். திசைகள் தளத்தில் கூட சமீபத்தில் சிறு குறிப்பொன்று வெளியாகியிருந்தது. திசைகள் லிங்க்: http://thisaigal.in/Home/billboardview#
Profile Image for Senthilkumar.
55 reviews7 followers
September 13, 2017
மிகவும் வித்தியாசமான நடையில் வித்தியாசமாய் எழுதப்பட்ட ஒரு நாவல்
18 reviews3 followers
March 10, 2019
Unlike anything you have read before. One of the most under-rated writers. Love all his novels. Still his complete corpus is not in print.
April 5, 2021
காதுகள்- எம் வி வெங்கட்ராம்
பக்கம் :160

ஒரு வழியாக முடிச்சிட்ட என்னத்த சொல்ல இவ்வளவு நாள் ஒரு நாவலை நான் வாசிச்சதில்லை அவ்ளோ மன உளைச்சலுக்கு ஆளாக்கிடிச்சி இந்த நாவல்
எனக்கு தெரிந்து அனைவருமே இந்த நாவலை ஒரு முறையாவது படித்து விட வேண்டும் நாமே நம்மை சுயப்பரிசோதனை செய்ய ஏதுவாக இருக்கும்...
எம்.வி. இந்த நாவல் அவரோட வாழ்க்கை அனுபவம்னு சொல்றாரு.. ஆனா இது இந்த நூற்றாண்டில் இருக்கும் அனைத்து மனிதர்களின் மன உளைச்சலையும் அவர்அவருக்கே ஏற்ற உலகத்தில் வாழ்பவர்களின் அனுபவமும் இதுவேதான் இருக்கும்...அதுப்போல இந்நாவல் மகாலிங்கம் என்னும் ஒரு மனிதனின் மனம் சார்ந்த கருத்துக்களை முன் வைத்துக் கொண்டு ஒரு கருத்தை மற்றொரு கருத்து வென்றுக் கொண்டு இருக்கிறது. இந்நாவல் மேஜிக்கல் ரியலிசம் நாவல் அல்லது ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். மகாலிங்கம்,வேதகி,காமாட்சி,சுந்தரம்,
இளைய மகன், இப்படி நிஜ உலக உறவுகளின் சிக்கல்கள் வருமை கடவுள் நம்பிக்கை இவ்வாறு இருக்க... மாலியின் அக வாழ்வில் காதுகளில் காலி,கருப்பன், முருகன்,ராமன், மற்ற கோரஸ்கள் என்று மாலியை ஏதோ பித்துநிலையிலேயே வைத்திருக்கிறது...
ஒரு நோயை குணப்படுத்தும் அறிய மருந்து மற்றொரு நோய்க்கு வித்திடுவதுப்போல்
ஒரு கருத்தினால் உருவாகும் சமூக அமைப்பை மற்றொரு கருத்து குலைக்கிறது.
ஒரு கருத்து மற்றொரு கருத்தைக் கொல்லும் போது புதியதொரு கருத்து முளைவிடுகிறது.
பகுத்தறிவில் பிறந்த கருத்துக்களை வைத்துக் கொண்டு மனிதன் என்றைக்கும் சண்டையிட்டுக் கொண்டே இருப்பான்.
இவ்வாறு மகாலிங்கம் தொடர்ந்து பல குரல்களுடன் சண்டையிட்டபடியே இருக்கிறான்..இதனால் அவனுக்கு சுயம், பொருளாதாரம், குழந்தைகள், குடும்பம் அவன் அன்றாட வாழ்க்கை எல்லாம் எப்படி பாதிக்கிறது.. இவ்வாறு பல உலவியலை பேசுகிறது காதுகள்.....

என்னை பாதித்த வரிகள்

"நீங்கள் எதுக்கு பிச்சை எடுக்க வேண்டும் நாங்கள் எங்கேயாவது கேட்டு வாங்கிக் கொண்டு வந்து போடுகிறோம்.
நீங்கள் சாப்பிட்டுவிட்டு முலையில் உட்கார்ந்து படித்துக் கொண்டே இருங்கள் குடும்பம் உருப்பட்டு போகும்."

"பிரம்மை புகட்டும் எண்ணங்களை நான் என் எண்ணங்களாக ஏற்றுக் கொண்டு விட்டால் எனக்கு முழுசாக பைத்தியம் பிடித்ததாக தானே அர்த்தம்."
Profile Image for NaGa.
7 reviews3 followers
January 23, 2020
எம்.வி.வி. தனது என்பதாவது வயதில் இறக்கிறார்(1920-2000), என் தாத்தாவும் தனது என்பதாவது வயதில் இறக்கிறார்(1930-2010).

நாவலின் மூலப்பாத்திரமான மாலி என்கிற மகாலிங்கத்தின் வாழ்க்கையை தனது வாழ்க்கை என்கிறார் எம்.வி.வி., படியே அவருக்கு தன் காதுகள் துவங்கி அதனோடு இன்னபிற புலன்களும் சேர்ந்துகொண்டு அவரை முழுக்க இம்சித்து உலுக்குகின்றன, ஈறு வரை அதனால் துன்பப்படுகிறார். கஷ்டகாலம் முழுக்கவும் தனது குருவாகிய முருகன் காப்பாற்றுவார் என நினைக்கிறார், அவ்வப்போது நினைக்கவும் மறுக்கிறார். இவ்வாறு தீய சக்தி தெய்வசக்தி என்ற உருவங்கள் நேரெதிரே பல்வேறு வடிவங்கள் பூண்டு தன் மனக்கண்ணுள் நடத்தும் நாடகங்களால் அலைக்கழிக்கப்படுகிறார். என் தாத்தாவுக்கோ எந்த கவலையுமில்லை, அவரது காதுகளுக்கு கேட்கும் திறனும் குறைவு தெய்வ நம்பிக்கையும் குறைவு, நன்மையுமில்லை தீமையுமில்லை. அம்மாவாசைக்கு மட்டும் தனது தையல் மிசின் முன் துணி வெட்டும் பலகையைப்போட்டு அதன்மேல் படையல் வைத்து வணங்கிவிட்டு தாத்தாவும் அம்மாயியும் நானும் சாப்பிடுவோம்.

மகாலிங்கத்திற்கு மொத்தம் ஐந்து பிறந்த பிள்ளைகள், இரண்டு இறந்த கருக்கள். என் தாத்தவிற்கோ ஒரு குழந்தையுமில்லை, தாத்தாவும் அம்மாயியும் அக்கம்பக்கத்து வீட்டுபிள்ளைகள் ஒவ்வொன்றாய் பாசமூட்டி வளர்த்தார்கள், அவைகளுக்கும் தங்கள் வீட்டைவிட தாத்தாவீட்டில் தான் மவுசு அதிகம். ஒரு சமயத்தில் ஒரு பிள்ளைமேல்தான் பாசத்தை வைத்தார்கள், ஒரு பிள்ளை வளர்ந்து தன் வாழ்க்கையை தேடிக்கொண்டபோது இன்னொரு பிள்ளைமேல் பாசமூட்டி வைத்திருப்பார்கள், அவர்களுக்கு கடைசி பேரப்பிள்ளை நான்.

இப்படியாக நான் இந்த நாவலை உள்வாங்கிக்கொண்டேன், ஒரு புத்தகம் வாசிக்கையில் அது இன்னொரு புத்தகத்தை அறிமுகப்படுத்தாமலோ அல்லது நமது வாழ்க்கையில் கடந்த இன்னொரு நபரை நியாபகப்படுத்தாமலோ இருந்தால் அது சீர்மிகு புத்தகம் அல்லதானே? அதன்படியே எம்.வி.வி. எனது தாத்தா காலத்துக்கு அழைத்துச்சென்று என் தாத்தா வாழ்வுக்கு நேர்மாறான இன்னொரு வாழ்க்கையை காட்டியிருக்கிறார்.
Profile Image for Saranya Dhandapani.
Author 2 books165 followers
May 29, 2024
#283
Book 44 of 2024- காதுகள்
Author- எம்.வி.வெங்கட்ராம்

“ஓயாது சுழலும் பூமி அசையாது நிற்கிறது என்கிற பிரமையில்தானே உலகம் நடக்கிறது? உதயமோ அஸ்தமனமோ இல்லாத சூரியன் உதிப்பதாகவும் அஸ்தமிப்பதாகவும் பிரமை வசப்பட்டுத்தானே காலக்கணக்கு செய்கிறோம்? பிரமைதான் நமக்குப் புரிகிறது; உண்மையை யாரோ ஒரு புத்திசாலி கண்டுபிடித்து நமக்கு அறிவுறுத்த வேண்டியிருக்கிறது. பார்க்கப் போனால், இந்த வாழ்க்கையே ஒரு பிரமை தானே? இந்தப் பிரமைக்குள் எத்தனை பிரமைகள்!”

விடாமல் உங்கள் காதுக்குள் யாராவது பேசிக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? அது தான் கதை. இதில் வரும் “மகாரிங்கம்” என்ற கதாபாத்திரம் மூலம் ஆசிரியர் தன் கதையை சொல்கிறார் என்றும் வைத்துக்கொள்ளலாம், அல்லது இது ஓர் magical realism பாணியில் எழுதப்பட்ட கதை என்றும் வைத்துக் கொள்ளலாம்,அல்லது இது ஓர் ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்றும் சொல்லலாம். ஆக, கதை இது தான்.

மகாலிங்கம்-எழுத்தாளர்,எளிமையான குடும்பம்,மனைவி,பிள்ளைகள்,தனக்கு வரும் தொழிலை பார்த்துக் கொண்டும் அழகான வாழ்க்கை வாழ்கிறார். திடீரென அவர் காதில் யாரோ பேசுவது போல் தோன்றுகிறது,ஒரு குரல் பல குரலாக மாற,பல ஒலிகளாக உருவெடுத்து சதா சர்வகாலமும் நாலைந்து பேர் அவர் காதில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். காளி, காளியின் கணவன் என ஒரு பாத்திரம், ஒரு நாடகம் பார்ப்பது போல் இருக்கிறது அந்த உரையாடல்கள். நமக்கே அந்த குரல்கள் காதில் கேட்கும் அளவுக்கு அருமையான எழுத்து நடை. நமக்கே எரிச்சல் ஊட்டும் அளவிற்கு இருக்கிறது அந்த சத்தங்கள்!

கடவுள்,அறிவியலுக்கு இருக்கும் ஒரு மெல்லிய கோட்டை அழகாய் தொட்டுச் செல்கிறது இந்த புத்தகம். ஒரு சாதாரண மனிதனுக்கு வரும் நெருக்கடிகளே சமாலிக்க முடியாமல் இருக்கும் மகாலிங்கத்திற்கு காதுகள் மூலம் மேலும் நெருக்கடி, எல்லாம் சேர்ந்து அவனை தனிமையில் ஆழ்த்தி,நோயாளி ஆக்கி, செவிடனாக்கி, கிட்டத்தட்ட பைத்தியக்காரன் ஆகிவிட்டான். என்ன தான் தீர்வு என்று வரும்போது கடவுளே, அந்த முருகனே அவன் காதில் ஒரு ஒலியாகிறார். மகாலிங்கத்திற்கு கடவுள் பக்தி,குறிப்பாக முருகன் பக்தி அதிகம்! இந்த காதுகளின் ஓசையை சமாளித்து இயல்பு வாழ்க்கைக்கு அவர் திரும்புகிறாரா என்பது தான் கதை.

கதையின் பாத்திரங்கள் யதார்த்தமாகவும் நிழலாகவும் இருக்கும். அவை தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்கும் விதம் நம் மனதில் நீங்காத இடம் பிடிக்கும்.மனிதர்களின் மனசாட்சி மற்றும் உணர்வுகளின் கோர்வையைப் பற்றி கேள்விகள் எழுப்பும்! கதையை கவனமாக படித்தால் மட்டுமே இதன் முடிவின் ஆழத்தை ஒருவரால் உணர முடியும்.

இந்த புத்தகம் “சாகித்ய அகாடமி விருது” மற்றும் “தமிழ்நாடு மாநில அரசு விருது” பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது! தமிழ் இலக்கியத்தில் இது ஒரு புதுமையான முயற்சி! அனைவரும் இவரது படைப்புகளை கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.

My Rating- ⭐️⭐️⭐️⭐️⭐️
Available on- Amazon
21 reviews1 follower
March 24, 2023
தன் அப்பாவின் பிரியத்தில் வளரும் செல்லப்பிள்ளையாக மகாலிங்கம் இருக்கிறான். பள்ளிக் கூடத்திலும் நன்றாகப் படித்து நல்ல வேலைக்கும் போய் காமாட்சி எனும் பெண்ணை மனைவியாகவும் அடைகிறான்.

வேலையை விட்டுவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து சிறு தொழில் ஆரம்பிக்கிறான். பத்திரிகைகளிலும் எழுதுகிறான். அவன் தொட்டதெல்லாம் பொன்னாகிறது. பின் திடீரென அவன் காதுகளில் விநோதமான சப்தங்கள் ஒலிக்கிறது. அவை தனியாக உருக்கொண்டு காளியாகவும் கருப்பனாகவும் தெய்வங்களாகவும் பேசத் தொடங்குகிறது.

இதனால் தொழில் நட்டமாகி ஐந்து குழந்தைகளுடன் அவன் குடும்பமே வறுமையில் மூழ்கிறது‌. பின் அக்குடும்பம் மீண்டதா ஒலிகள் தீர்ந்ததா என்பதே காதுகள்.

நான் இதுவரை படித்த psychological நாவல்களிலேயே இது மிகவும் மனதைத் தொட்டதற்குக் காரணம் நோயாளியின் கோணத்தில் இருந்து கதை நகர்வது தான். Auditory hallucination, schizophrenia போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது கூட தன் நிலை உணரவே கஷ்டப்படுகிறார்கள். தொண்ணூறுகளில் பேய்தான் பேசுகிறது என அலைய விட்டிருப்பார்கள்‌.

அந்தக் காலத்திலேயே இத்தகைய கதைக்கரு உதித்தது பெரிய விஷயம். எம்.வி. வெங்கட்ராம் அவர்கள் இது தன் வாழ்வின் ஒரு பகுதி ,மனிதன் தன் தமோநிலையில் இருந்து சத்வ நிலைக்கு உயர்வதற்கான அகப்போராட்டம் என்றே குறிப்பிடுகிறார். அகாதமி விருதுக்கு நிச்சயம் தகுதியானதே
Profile Image for Aparna Singh.
59 reviews24 followers
August 30, 2020
When a talented young writer and the father of a large and growing family, ‘Mali’ begins hearing voices in his head, what happens as his life is gradually taken over by these characters that emerge from inside his ears?

MV Venkatram’s Sahitya Akademi award winning novel Kaadugal is at once a frightening look at mental illness and a carefully observed portrayal by a man, of his own descent into hell. The characters inside Mali’s head are noisy, frightening, debased and yet, funny and irreverent; at many points in the novel, Mali is watching the play enacted by them, even as he fears his descent into madness. The novel also raises the question of whether an individual can be ‘mad’, if they also observe themselves undergoing the process.

Whether viewed as a fight between rival gods who claim Mali’s allegiance, an account of mental illness, a tug between faith and rationality, or the emergence of a human being’s repressed and ugly nature - Kaadugal is a fascinating read and a must for all Tamil readers.
Profile Image for Vivek Radhakrishnan.
11 reviews1 follower
March 31, 2022
What if the battlefield of the metaphysical warfare between the good and the evil, between the sacred and the profane and between the divine and the demonic is one's own mind? In Kaathugal, MV Venkatram carves the story of Mahalingam (or Mali), a pious writer/businessman, a hypersexual husband and a hands-off father, who gets access to the battle between the antagonistic forces taking place within his mind through his own senses. Whether Mali falls prey to the manipulative traps set-up by the vile Kaali or whether he successfully remains a witness to the calculative triumph of his guru, lord Murugan forms the main plot of this novel. What makes Kaathugal stylistically special is MV Venkatram's attempt to consistently maintain the balance between two extreme moods: disheartening gloom and clownish humor. While Mali's everyday struggles to remain sane in the midst of the manifold voices inside him is excruciatingly dark, the drama that unfolds for the characters in the netherworld underneath is comical and evokes laughter. More interestingly, only during the closing lines of the novel would readers realize that it was Mali himself who has been telling his story from a third person's viewpoint all along. This depersonalized, first person's narration style also goes hand in hand with Mali's own realization (in the climax) that raising and exserting his own voice amidst the revolting voices in his ears is the only way he can help the divine defeat the demonic. MV Venkatram's Kaathugal is certainly a timeless psychological masterpiece that leaves behind unfading aural imprints of Mahalingam's voice in our souls.
Author 2 books16 followers
November 8, 2021
அதிகம் பேருக்கு தெரியாத , தெரியவேண்டிய , அரிதான தமிழ் புத்தகங்களில் ஒன்று இந்த புத்தகம் . இலக்கிய எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய வாசிப்பாளர்கள் செய்யும் மிக பெரிய துரோகம் நல்ல நூல்களை பொதுப்பார்வைக்கு கொண்டு செல்லாமல் அவைகளை இலக்கியம் என்று பெயரில் பதுக்கி வைப்பது தான் . அப்படி பதுக்கி வைத்த பொக்கிஷத்தில் ஒன்று தான் காதுகள் . மேலைநாட்டு இலக்கியத்திற்கு இணையாக கதாநாயகனின் அத்தனை உணர்வுகளையும் வெகு விளாவரியாக விளக்கி அதன் வழியே கதையை நகர்த்தி கொண்டு சென்றுள்ளார் வெங்கட்ராமன் . மரபுகளை உடைக்க எழுத்தாளர்கள் உளி கொண்டு வருவார்கள் , உளியை மறந்து வைத்துவிட்டதால் கடப்பாறைகளை கொண்டு வந்து கொத்தி எரிந்து விட்டு சென்றிருக்கிறார் . அவ்வளவு அசாத்தியமாக எல்லைகளையும் , மரபுகளையும் மீறி எழுதியிருக்கிறார் வெங்கட்ராமன் . தமிழில் , தமிழ் வாசிப்பாளர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு புத்தகம் இந்த காதுகள் .
Displaying 1 - 30 of 46 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.