Indian Readers discussion
Archive
>
Prem's Reading Log - 2020
date
newest »


1. Read 16,178 ..."
Wow

1. Read 16,178 ..."
Amazing books Prem. Wishing you more books in 2020 and a very Happy New year

Amazing books Prem. Wishing you more books in 2020 and a very Happy New year "
Thanks a lot Kru... Wish you the same :)


Little Women : Watched this movie on the last day of year 2019 & man what a movie to finish the year with. The movie details the coming of age life of Louisa May Alcott and her sisters. It is based on her classic book by the same title. Interestingly my current favorite books related website Brain Pickings has only passing reference to the author and this book under 5 Classic Children’s Books with Timeless Philosophy for Grown-Ups. The talented cast is brilliant & the movie makes me to read the book soon.

Trailer for the movie

Watched this video by the booktuber ( Pesum Puthagam | Vysali P) explaining a poem written by her. It is a Thamizh poem available in her blog. It is a quite a bold attempt to request for temples so that the free food offering can help those underprivileged children begging in front of the Temples. The poem also portrays the thinking of God in the temple as a metaphor kind. Nice read.
Few lines from the poem.
"ஆசைக்கோர் பிள்ளை இல்லை என
ஏங்கி கோரிக்கையிடுவோர்
பார்வை படும்படி தானே வைத்தேன் அவனை
என கருவறைகாரர் சரிப்பார்த்தார்..!
கோரிக்கை வைப்போரிடம் சேதி சென்று சேரவில்லை போலும்…
வருவோரும் போவோரும்
விளங்கவில்லை அவனுக்கு..
விழியில் ஈரம் படற
வீதியில் கிடந்துருள
வீணாய் சென்றது
விழிமணிகளே..!!"

My Dear Chekhov| மை டியர் செகாவ் : This short film talks about a retired govt. employee trying to tell a story written by Anton Chekhov to anyone in the city who is willing to listen for 5 mins. Unfortunately in the fast moving city, no one has the interest or time to spend 5 mins to listen to story by one of the masters of short stories. Very well made film with a sharp message. The story is by famous & my favorite author S. Ramakrishnan and directed by his son & friends. The short film is in Thamizh language.

Watched this video by the booktuber ( Pesum Puthagam | Vysali P) explaining a poem written by her. It is a Thamizh poem available in her blog. It is a quite a bold attempt to request for t..."
Arumai! Really good kavithai.
வீரம் விளைந்த மண்ணாம்..
விரதம் களையவில்லை இன்னும்..
Aariya Mayai talks about these religious practices brought by Aryans to Dravidians....interesting theory/facts.

வீரம் விளைந்த மண்ணாம்..
விரதம் களையவில்லை இன்னும்..
Aariya Mayai talks about these religious practices brought by Aryans to Dravidians....interesting theory/facts.
Exactly... Please do subscribe to her channel Pesum Puthagam in Youtube for book reviews & her blog களவாடிய கனவு… for such nice content :)
Thanks for reminding about ஆரிய மாயை: Aariya Maayai by Arignar Anna. Yet to read this book :)

The Fantastic Flying Books of Mr. Morris Lessmore
What a fantastic short film on books, reading & writing this one. I came to know about this film from S. Ramakrishnan's blog essay பறக்கும் புத்தகங்கள் which is a great read too. The protagonist gets transported to a land of flying books, who fly out of their home (library) on daily job, play the piano, dance and do other stuffs. The protagonist being a B/W character turns into colorful world after gets acquainted with the flying books through a humpty dumpty character from a book. He starts to take care of the books as a home maker by waking them up, feeding them cereal and even performing a surgical operation on an old book which is ignored and about to die. This 15 mins short film is an ode to books, libraries & reading, writing and is based on


முதல் சம்பளம் :
அடுத்த சில நாட்களுக்கு அ. முத்துலிங்கம் அவர்களின் சில சிறுகதைகள் பற்றிய வாசிப்பனுபவம் பற்றி பகிர்ந்து கொள்கிறேன். அப்பாதுரை முத்துலிங்கம் கனடாவில் வசிக்கும் ஒரு புலம்பெயர் இலங்கைத் தமிழர். முதல் சம்பளம் என்ற இந்த சிறுகதையில், பெயரில்லாத நாயகன், கனடாவில் வசிக்கிற தமிழன். அவனுக்கு சம்பளத்திற்கு ஒரு வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை. அதுவும் மூளையை அதிகம் உபயோகிக்காமல், கணக்கு எழுதாமல் , உடல் உழைப்பைக் கொண்டு வேலை செய்து சம்பாதிக்க ஆசை. அப்படிப்பட்ட நிலையில் ஒரு விபத்தில் அடிபட்ட இலங்கைத் தமிழ் பெண்ணுக்கு காப்பீடு தர வரும் முகவருக்கு மொழி பெயர்த்து சொல்லும் வேலை கிடைக்கிறது. சின்ன நாயகி என்ற வித்தியாசமான பெயர் கொண்ட பெண்ணை சந்திக்கிறார். அவருக்கு காப்பீடு கிடைத்ததா, நாயகனுக்கு ஆசைப்படி சம்பளம் கிடைத்ததா என்று நகைச்சுவை கலந்த நடையுடன் எழுதியுள்ளார். முத்துலிங்கம் அவர்களின் எழுத்தின் சிறப்பே, இது கதையா உண்மை சம்பவமா என்று கண்டறியா வண்ணம் அவர் கதை இருப்பதுதான். இதை அவரது பல கதைகளில் நான் உணர்ந்துள்ளேன். தூக்க மாத்திரையை "நித்திரை மாத்திரை" என்று எழுதிய வார்த்தை பிரயோகம் சிறப்பாகத் தெரிந்தது. சின்ன நாயகி ஏ.ஆர்.ரகுமானின் தெனாலி படத்தில் வரும் "சுவாசமே சுவாசமே" பாடல் பாடுகிறார். அதையும் மொழி பெயர்க்க வேண்டுமோ என்று நாயகன் கலக்கம் கொள்வது நல்ல நகைச்சுவையாக எழுதப்பட்டுள்ளது.
"வித்தியாசமான வலி?
வித்தியாசம் என்றால் வித்தியாசம்தான். அமெரிக்கா காசும் காசு. கனடா காசும் காசு. ஆனால் வித்தியாசம் இருக்கிறதல்லவா?" என்பது போன்ற வரிகள் மிகவும் ரசிக்கும் படி இருந்தன.
இந்த கதை, பதினைந்து வருடங்களுக்கு முன்பு நான் வாங்கிய முதல் சம்பளத்தையும், அந்த சம்பாத்தியத்தில் முதன் முதலாக வாங்கிய கைக்கடிகாரத்தையும் நினைவுக்குக் கொண்டு வந்தது. இன்று வரை அந்த கைக்கடிகாரம் உபயோகத்தில் உள்ளது என்பது கூடுதல் மகிழ்ச்சி :)

சென்னையும் நானும்-5 | ஜெயகாந்தன் :
காணொளி இணைப்பு

காணொளியில் கூறப்பட்ட ஜெயகாந்தனின் சில புத்தகங்கள்:

![சினிமாவுக்குப் போன சித்தாளு [Cinemavukku Pona Chitthaalu]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1575972785l/14989686._SY75_.jpg)
![பாரிசுக்கு போ [Paris ku Po]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1407990868l/22914898._SX50_.jpg)
![உன்னைப் போல் ஒருவன் [Unnai Pol Oruvan]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1575968975l/12768863._SY75_.jpg)
எழுத்தாளர்கள்:





சென்னையும் நானும்-6 | அசோகமித்ரன் :
காணொளி இணைப்பு


குறிப்பிடப்பட்ட புத்தகங்கள்:




குமர்ப் பிள்ளை|அ.முத்துலிங்கம்
கதை இணைப்பு
வெளிநாட்டில் நன்றாக சம்பாதித்து சொந்த ஊரானா யாழ்ப்பாணம் திரும்பும் ஒருவர் தன் சொந்த செலவில் அழிந்த அழிவு நிலையில் உள்ள கோயில்களைப் புனரமைக்கிறார். அப்பொழுது ஒரு பாழடைந்த கோவிலை தன் சொந்தமாகிக் கொண்ட நாவுக்கரசன், அந்த கோவிலை புனரமைக்க கேட்கிறார். முதலில் மறுக்கும் கதை நாயகன், கைவசம் பணம் இல்லாத பொழுதிலும் சம்மதிக்கிறார். கோவிலை பார்வையிடும் பொழுது சிறப்பு மிக்க ஸ்ரீசக்கரம் அங்கு இருப்பதைக் காண்கிறார். அப்பொழுதிலிருந்து பல வியத்தகு விடயங்கள் நடக்க தொடங்குகின்றன. பல இடங்களில் இருந்து பொருள் உதவியும் திருப்பணிக்கான மற்ற உதவிகளும் வருகின்றன. எல்லாம் சிறப்பாக நடந்து கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்து, அத்தினம் நெருங்கும் நேரத்தில் ஒரு பிரச்சனை வருகிறது. பிரச்சனை முடிந்ததா, கும்பாபிஷேகம் நடந்ததா என்பதை சுவாரஸ்யமாக எழுதியுள்ளார் முத்துலிங்கம் அவர்கள். பிரதானமாக மூன்று பாத்திரங்கள் பெயரில்லாத நாயகர் பாத்திரம், அவரது உதவியாளர் சண்முகம் மற்றும் நாவுக்கரசன். பாத்திர படைப்புகள் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. அது போக ஸ்ரீசக்கரம், திருப்பணி சம்பந்தப்பட்ட விடயங்கள் விளக்கப்பட்ட விதமும் தேடி தேடி தரப்பட்டுள்ள தரவுகளும் படிக்க படிக்க ஆர்வமூட்டுவதாக உள்ளது. கடைசி கதை முடிச்சு எதிர்பாராத விதமாகவும், தத்துவ விசாரணமாகவும் இருக்கின்றது.

காண்டாமணி Short Story told by Bava Chelladurai :
Video Link
Bava Chelladurai is an Thamizh books author but more importantly a great story teller. In his youtube channel and other places he posts videos of his story telling to a group of people. If anyone who can understand but can't read Thamizh script and want to read stories, please subscribe to his channel for quality story telling content. In this particular video he talks about a short story called Kaandamani (prayer bells) by prolific Thamizh author Janakiraman. T. The main protagonist is a mess owner is a small town, and he feeds sambar to a customer unknowingly there was a dead snake in it. To save his business and face he prays that he will make a bell (Kaandamani) no one finds out nor the person who had the food to die. But unfortunately that customer dies but everyone is convinced it is because of heart attack. Since his business is saved, he makes the bell but how the sound of it keeps haunting him forms the rest of the story. The lively characters & their description by the author and explanation by Bava is simply superb. The story is not available to read online and probably only part of some book which I need to track down.

N.S. Madhavan`s Piragu narrated by Bava Chelladurai :
Video Link
Piragu (பிறகு) is a short story written in Malayalam by author N.S.Madhavan which is translated into Thamizh by K.V. Shailaja. Bava literally reads the complete short story content as he feels each line is very important and not to be missed for its literary prowess. The story is told by Mukunthan's wife, about her sweet little family of 4 including 2 kids. Mukunthan is a very likeable husband who acts in a drama theater in his spare time, and interested in people photography and a great husband cum good father. He dies unexpectedly in a car accident and for his funeral lots of people come and there is a beautiful woman who cries uncontrollably. No one knows who she is except for Mukunthan's drama troupe member. When Mukunthan's wife get in touch with her later, she comes to know about her husband's extramarital affair with this girl. She gets jealous on the girl and starts to despise her dead husband. How these 2 women handle their relationship further, forms the rest of the story told in a touching manner by Bava and the authors. This is a long video of 53 mins but never lets down the heart wrenching flow of the story.

லூனாவை எழுப்புவது
மூலம் - ஆயிஷா காவாட்
தமிழ் மொழிபெயர்ப்பு - அ .முத்துலிங்கம்
கதை இணைப்பு
இந்த கதை அமெரிக்காவின் ஒரு பெரு நகரத்தில் உள்ள ஒரு விடுதியில் அடிபட்டு கிடக்கும் தன் ஒன்று விட்ட சகோதரியினை வீட்டுக்கு மீட்க வரும் ஒருவர் (ஆணா இல்லை பெண்ணா என்பது சரி வர புரியவில்லை) பார்வையில் விரிகின்றது. கதையின் நடை படிக்க படிக்க அவர்களின் வாழக்கையை முன் பின்னாக விளக்கிச் செல்கிறது. இது அவர்களுக்கு புதிதல்ல ஒரு வழக்கமான நிகழ்வு எனபது விளக்கப்படுகிறது. அவரகளது மத நம்பிக்கை, எங்கிருந்து புலம் பெயர்ந்துள்ளனர், குடும்பம், குடும்ப சூழல், அரசியல் நிலைப்பாடு, கனவுகள் எல்லாமும் போகிற போக்கில் ஒற்றை வரிகளில் சொல்லப்பட்டு படிப்பவரின் கற்பனையைத் தூண்டுகிறது. கதைமாந்தர்கள் இருவருக்குள்ளுமான அந்த நட்பு, சொந்தம், பரஸ்பர அன்பு அருமையாக வெளிப்பட்டுள்ளது. சில விடயங்கள்/இடங்கள்/பெயர்கள் அமெரிக்க நாட்டில் இருந்து பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியக்கூடியவை. இருந்தும் இது ஒரு தேர்ந்த மொழிபெயர்ப்பு.

ஆட்டுப்பால் புட்டு | அ .முத்துலிங்கம்
கதை இணைப்பு
இலங்கை சிலோன் என்று அழைக்கப்பட்ட காலத்தில் யாழ்ப்பாணத்தில் நடக்கும் கதை. மிக அருமையான விவரணைகள். அந்த காலத்தில் இருந்த பல சடங்குகள், உணவு பழக்கம், மனிதர்கள் அவர்களின் வாழ்க்கை முறை பற்றி விவரிக்கப்பட்டுள்ள விதம் மிக அருமை. அதிலும் தேங்காய் புட்டு, தேங்காய்ப்பால் புட்டு , மாட்டுப் பால் புட்டு, ஆட்டுப்பால் புட்டு பற்றி வார்த்தைகள் படிக்கும் போதே ஆசையைத் தூண்டுகின்றன. வலியவனுக்கும் வறியவனுக்கும் உள்ள வேறுபாடுகள் யார் பக்கமும் சாயாமல் சொல்லப்பட்டிருக்கின்றன. ரசித்துப் படிக்கலாம்.
எனக்கு பிடித்த சில வரிகள்:
* அப்பொழுதெல்லாம் ’தபால் தந்தி சேவை’ என்றுதான் சொன்னார்கள். அலுவலகம், அஞ்சல் துறை, திணைக்களம் போன்ற பெரிய வார்த்தைகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
* வீட்டிலே அவர்கள் வளர்த்த ஒரு மாடு, இரண்டு ஆடுகள், மூன்று நாய்கள், 20 கோழிகளும், வளர்க்காத எலிகள், சிலந்திகள், கரப்பான்பூச்சிகளும் அவர்களை ஓயவிடாமல் வேலை கொடுத்தன.
* ஒருமுறை அவர் வீட்டு மாடு கன்று ஈன்றுவிட்டது. ’நீங்கள் வந்த நேரம்’ என்று மனைவி. அவரைப் புகழ்ந்தார். மனைவிகள் கணவரைப் பாராட்டுவது அபூர்வமானது.
* நன்னன் - 'அது பழைய மன்னனின் பெயர்.’ ’அவன் கொடூரமானவன் அல்லவா?’ என்றார். அவன் சொன்னான் ’எந்த மன்னன்தான் கொடூரம் இல்லாதவன் என்று அம்மா சொல்வார்.’
* எட்டாம் வகுப்பு நன்னனும், பத்தாம் வகுப்பு பத்துமாவும் ஒரு குழந்தையை உண்டாக்கிவிட்டார்கள். அதற்கு பட்டப்படிப்பு ஒன்றும் தேவையில்லை.

செர்ரி மரம் | அ .முத்துலிங்கம்
கதை இணைப்பு
இது செர்ரி மரத்தை பற்றிய கதையா, தன் மூன்று தங்கைகளைப் பற்றி விவரிக்கும் அக்காவின் கதையா, அவளின் தனிமையைப் பற்றிய கதையா, அவளது தங்கைகளின் காதல்கள், வாழ்க்கை பற்றி விவரிக்கும் கதையா, அவர்களின் அப்பாவின் கதையா இப்படி பல தளங்களில் இந்தக் சிறுகதை விரிந்து செல்கிறது. செர்ரி மரம் இளவேனிற் காலத்தில் மட்டுமே பூக்கள் பூக்கும். அது போலவே இந்த கதைநாயகியின் வாழ்க்கையும் மிகச் சில நேரங்களில் மட்டுமே மலர்ந்திருப்பதாக சொல்ல வருவதாகவே எனக்குப் படிக்கிறது.
எனக்கு பிடித்த சில வரிகள்:
* ’என்ன துக்கம் அப்பா? உலகம் விதிவிலக்குகளால் நிரப்பப்பட்டிருக்கிறது என்று நீங்கள் தானே சொன்னீர்கள்.
* உலகத்து சோம்பேறிகளை வரிசைப்படுத்தினால் முதலாவது நிரலில், இரண்டாவது வரிசையில் மூன்றாவதாக நிற்பாள்.
* அவள் கழுத்து சைசும், இடை சைசும் ஏறக்குறைய ஒன்றுதான். ஒரு நல்ல போர்வீரன் வாளை சுழற்றுவதுபோல இவள் தன் வசீகரத்தை நாலாபக்கமும் சுழற்றியபடியே இருப்பாள்.
* ‘காதல் சோப்கட்டிபோல தேய்ந்து தேய்ந்து இறுதியில் ஒன்றுமே இல்லாமல் ஆகிவிடும்.’
* விளையாட்டு முடிந்த பின்னர் இன்று யார் வென்றார்கள் என்று கேட்டேன். நான்தான் என்றார். யார் தோற்றது என்றேன். அதற்கும் பதில் நான்தான் என்று சொன்னார். கிட்டத்தட்ட அவர் வாழ்க்கையைப் போல.

1. Read 16,178 ..."
Wow thats amazing stats

Thanks Jai. Now you are making me guilty as I am not reading much compared to that last year's stats :-/

Thanks Jai. Now you are making me guilty as I am not reading much compared to that last year's stats :-/"
No worries Prem, Could you check my review https://www.indiansuchak.com/book-rev...

ஒரு துளி கண்ணீர் | எஸ். ராமகிருஷ்ணன்
கதை இணைப்பு
பெரிதாக சொற்சித்திரங்கள் எதுவும் இல்லை. மிகவும் இலகுவான வார்த்தைகளில் அமைந்த கதை. ஆனால் இந்த ஒரு பக்கக் கதையில், ஓராயிரம் வலிகள். அலுவலக நண்பர் ஒருவர் வலிய அழைத்த காரணத்தினால் அவர் வீட்டுக்கு ஞாயிறு மதியம் உணவருந்த செல்லும் நாதனின் பார்வையில் கதை சொல்லப்பட்டுள்ளது. 38 வயதாகியும் மணமாகாத நாதன் அந்த வீட்டில் பார்க்கும் விடயங்களும், உணவு உண்ணும் பொழுது ஏற்படும் ஒரு சின்ன நிகழ்வு ஏற்படுத்தும் அதிர்வுகளுமே கதை. காரணங்கள் எதுவும் விளக்கப்படுவதில்லை. காரணங்கள் எதுவும் தேவையும் இல்லை என நினைக்கிறேன்.
இந்தக் கதை எனக்கு நினைவு படுத்திய விடயங்கள் பல. "தானே" மாநகரில் நண்பர்களுடன் தங்கியிருந்த போது, இரவு உணவும், வார விடுமுறைகளில் மதிய உணவும் சாப்பிடப் போகும் அந்த அம்மாவின் வீடு, இத்தனை ஆண்டுகள் வாழ்வில் என்னையும் மதித்து உணவருந்த கூப்பிட்ட நட்பு வட்டாரங்கள், ஜோத்ப்பூர் நகரத்திற்கு நண்பனின் திருமணத்திற்கு சென்ற பொழுது, எனக்கு அதிகம் பழக்கம் இல்லாத அவனது நண்பனின் வீட்டில் சாப்பிட்ட dal bhaatti (அந்த சுவைக்கு நிகரான உணவு இன்று வரை கிடைக்கவில்லை) என எத்தனை நினைவுகள். ஒரு சின்ன கதை இப்படி கிளறக்கூடிய ஞாபங்களுக்காகவே வாசிப்பு நிறைவைத் தருகிறது.

50 ஒரு துளி கண்ணீர் | எஸ். ராமகிருஷ்ணன்
கதை இணைப்பு
பெரிதாக சொற்சித்திரங்கள் எதுவும் இல்லை. மிகவும் இலகுவான வார்த்தைகளில் அமைந்த கதை. ஆனால் இந்த ஒரு பக்கக் கதையில், ..."
ஆமாம் பிரேம், எஸ்.ராவின் குறுங்கதை வரிசையை நேரம் கிடைக்கும் போது நானும் வாசித்து வருகிறேன். ஒருவரும் அதைப் பற்றி எழுதியத்தைக் காணவில்லை. அறிமுகப்படுத்த நினைத்தமைக்கு நன்றி. நாம் சிறு வயதில் வாசித்த நீதிக்கதைகள் போன்ற வடிவத்தில் வெறுமனே கதைகளை மட்டும் எளிமையாக எழுதியுள்ளதால் வாசிக்கும் போது மனதுக்கு நெருக்கமாக உள்ளது. வேலையில் ஒரு கடினமான நாளைக் கடந்த பின்பு உடலும் மனமும் சோர்வாக வெளியே வரும் போது எதிர் கொள்ளும் மெல்லிய தென்றல் போல, சிக்கலான வாசிப்பினில் மூழ்கி இருக்கும் போது இவற்றை வாசிக்கும் போது புத்துணர்வாக உள்ளது. ஆனால் எல்லாக் கதைகளுமே உண்மையிலேயே அவை தோன்றுவதை விட ஆழமானவை, மனித உளவியலை, மனிதன் வாழ்வை எதிர் கொள்ளும் விதத்தை நுட்பமாகப் பதிவு செய்கின்றன. (வாசனை ஒன்றுடன் பிடித்த நினைவை தொடர்புபடுத்தும் மனிதன் (முயல் பொம்மை - 73), கதாபாத்திரங்களுக்கு கடிதம் எழுதும் மனிதன் (கப்பல் நூலகம் - 66) மற்றும் பலர்)
பழைய பதிவுகளை மறந்து போய்விட்டேன், திரும்ப வாசிக்க வேண்டும். ஞாபகத்திலிருப்பதில் "பெயர் எழுதப்பட்ட கால்பந்து" (60வது குறுங்கதை), மிகவும் பிடித்திருந்தது. அதே போல பாஷோவின் தோழி (67), தெரிந்த கதைகளின் வேறுபட்ட தொடர்ச்சிகளான அன்னாகரீனா பொம்மை வாங்குகிறாள் (48), சிண்ட்ரெல்லாவின் நரை (69) போன்றவையும் குறிப்பிடத்தக்கவை.
வாழ்க்கையின் வேறு வேறு கட்டங்களில், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இதில் வரும் மூன்றில் இரண்டு பாத்திரங்களை ஏற்றிருக்கும் காரணத்தால் இந்தக் கதையும் எனக்குப் பிடித்திருந்தது. பழனியின் கோணத்தில் யாராவது கதையெழுதினால் பழனியையும் ஒருவேளை பிடிக்கக்கூடும். :)

50 ஒரு துளி கண்ணீர் | எஸ். ராமகிருஷ்ணன்
கதை இணைப்பு
பெரிதாக சொற்சித்திரங்கள் எதுவும் இல்லை. மிகவும் இலகுவான வார்த்தைகளில் அமைந்த கதை. ஆனால் இந்த ஒரு பக்கக் கதையில், ..."
கதைகளை மட்டும் நேரடியாக விபரிப்பதால் வழமையான தத்துவ வரிகளை எழுதாமற் போவதன் குறையை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தீர்த்துக் கொள்வதும் ரசிக்கும்படியாக உள்ளது. ("ருசி நாக்கில் படிந்தவுடன் அது நினைவாகிவிடுகிறது. நல்ல நினைவுகள் ஒரு நாளும் அழிவதேயில்லை. எத்தனை வயதானாலும் நல்ல சாப்பாட்டிற்கு ஏங்குவது அந்த நினைவால் தான். பசியைக் கடந்து செல்பவர்களின் கைகளுக்குத் தான் ருசி சாத்தியப்படும் போலும்." - கூட்டாஞ்சோறு (63), "இதோ மலை சிறியதாகிவிட்டது. எல்லாப் பெரிய பொருட்களும் ஏதோவொரு இடத்தில் சிறியதாவது தான் இயற்கை. சிறியதே அழகு. சிறிய குவளை பெரும் ஆற்றின் நீரை ஏந்திக் கொள்வதில்லையா. குவளைக்குப் பானைத் தண்ணீரும் ஒன்று தான். சுழித்தோடும் ஆறும் ஒன்று தான். நீங்கள் குவளையாக இருங்கள்." - சிறியதே அழகு (62), "புகைப்படங்கள் இந்த உலகிற்கு எதையோ சொல்கின்றன. புகைப்படத்தின் எடை என்பது அதிலிருக்கும் சந்தோஷத்தின் பொருட்டே அமைகிறது என்கிறார்கள். புகைப்படம் நம்மோடு பேசும் மொழி நாம் மட்டுமே அறிந்தது. ரகசியமானது. ஆறுதல் தரக்கூடியது. உலகம் அதைப் பொருட்படுத்துவதேயில்லை." - சாப்ளினின் கண்ணாடி (49).
மீள வாசிக்க ஒரு உந்துதலைத் தந்தமைக்கு நன்றி, மீதிக்கதைகளையும் மீள வாசிக்க வேண்டும்.

சமீபத்தில் இயற்கை எய்திய Irrfan Khan மற்றும் Nawazuddin Siddiqui நடித்த "The Lunchbox" என்னும் திரைப்படத்தின் கதையை நினைவுபடுத்தியது இந்தக் கதை. ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக காணவேண்டிய திரைப்படம். எழுதிய கதைகள் வாழ்வின் ஒரு சிறு அங்கம்தான். எத்தனையோ கதைகள் இன்னும் எழுதப்படாமலே உள்ளன அல்லவா!

சிலிர்ப்பு | தி. ஜானகிராமன்
கதை இணைப்பு
திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் வாசிப்பில் கேட்க
கதை கேட்க வாங்க | பவா செல்லதுரை அவர்கள் குரலில் கேட்க
"எல்லா வண்டிகளையும் அனுப்பிவிட்டு திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் புயல் புகுந்து விளையாடின தோப்பைப் போல, ஒரே வெளிச்சமாக ஹோவென்று வெறிச்சிட்டுக் கிடந்தது". கதை தொடங்குவது திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம். அங்கிருந்தே நம்மையும் ரயிலில் ஏற்றிக்கொண்டு, ஒரு பார்வையாளனாக வாசகரையும் துணைக்கு கூட்டிக் கொண்டு போகிறார் தி.ஜா அவர்கள். 1950-ல் ஒரு ரயில் பயணத்தில் நடக்கும் கதை இது. இன்று கூட ஒரு ரயில் பயணத்திலோ பேருந்து பயணத்திலோ இதே போல ஒரு நிகழ்வு நடக்க சாத்தியக் கூறுகள் அதிகம். சாகாவரம் பெற்ற கதை என்றால் மிகையல்ல. எக்ஸ்பிரஸ் ரயில்கள் பணக்கார வகை, பாசஞ்சர் ரயில்கள் ஏழை வகை என ரயில் ஜாதிகளைப் பற்றி ஒற்றை வரியில் விவரித்துள்ளார். அதை அப்படியே, மனிதர்களுக்கு நடை மாற்றி, சிறுவன் கூட அப்பா, மாமாவின் பொருளாதார வேறுபாட்டை பேசும் நிலைக்கு காலம் இருக்கிறது எனக் காட்டுகிறார். பெரிய குடும்பம், அதனால் ஊர் விட்டு கல்கத்தாவிற்கு வீட்டு வேலைக்கு செல்லும் 10 வயது வாத்தியார் வீட்டுப்பெண் அவளுடனும், அவளைக் கூட்டிச் செல்லும் அம்மாளுடனும் நடக்கும் உரையாடல்களுமே கதையின் பெரும் பகுதி. வாத்தியாரின் பெண் படிக்க முடியாமல் வேலைக்கு செல்வது மற்றுமொரு முரணாகவே காட்டப்பட்டுள்ளது. தஞ்சாவூர் இரயில் நிலையத்தில் வண்டி நிற்கும் போது இறங்கி சாப்பிட்டு வந்து மீண்டும் ஏறும் வரை வண்டி நிற்கிறது என்பது அந்த காலத்து வழக்கம் போல. சில மணி நேர பழக்கத்திலேயே 10 வயதுக் குழந்தை ஆறு வயது குழந்தையை தாயைப் பார்த்துக் கொள்வது போல கவனித்துக் கொள்கிறாள். "எந்தக் குழந்தையையோ பார்த்துக்கொள்ள எங்கிருந்தோ ஒரு குழந்தை போகிறது" என்று ஒரு அழுத்தமான வரி போதும், அந்தப் பரிதாபமான குழந்தையின் நிலையை விளக்க. ஒரு கவித்துவமான ஆனந்தமான முடிவை கொடுத்துள்ளார் தி.ஜா. "குழந்தை நல்ல சமத்து சார். ஷ்ரூடா இருக்கான். ஆளை எப்படி 'ஸ்டடி' பண்றான்!” என்று திடீரென்று எதிரே இருந்தவர் மதிப்புரை வழங்கினார் என்று ஒரு வரி வருகிறது. சமர்த்து மட்டும் இல்லை, குழந்தைகள் அப்பழுக்கற்ற அன்பும் பரிவும் கொண்டவர்கள் என்று உணர்த்தும் கதை. சிறந்த சிறுகதைகளின் வரிசையில் நிச்சயம் நீங்காத இடம் பெற்றுள்ள கதை. தவற விடக் கூடாத கதை.

நச்சுப் பொய்கை | சுஜாதா
இந்தக் கதையை பாரதி பாஸ்கர் அவர்கள் வாசித்து YouTube இணைய தளத்தில் கேட்டேன். ஆனால் இப்பொழுது இது அந்த தளத்தில் இல்லை.
Short Story|சிறுகதை #9:
வீடு | சுஜாதா
இந்தக் கதையை பாரதி பாஸ்கர் அவர்கள் வாசித்து YouTube இணைய தளத்தில் கேட்டேன். ஆனால் இப்பொழுது இது அந்த தளத்தில் இல்லை.
Short Story|சிறுகதை #10:
பார்வை | சுஜாதா
இந்தக் கதையை பாரதி பாஸ்கர் அவர்கள் வாசித்து YouTube இணைய தளத்தில் கேட்டேன். ஆனால் இப்பொழுது இது அந்த தளத்தில் இல்லை.

Birthday Girl | Haruki Murakami
Short Story #12:
A Shinagawa Monkey | Haruki Murakami
Short Story #13:
Confessions of a Shinagawa Monkey | Haruki Murakami

ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும் | செங்கை ஆழியானின் | #ஈழத்தவர்_கதை_கேட்போம்
சிறுகதை ஒலி வடிவம் : சங்கீதா தினேஷ் பாக்யராஜா
Short Story #15:
சீசர் | ஜெயகாந்தன்
சிறுகதை ஒலி வடிவம் : பாரதி பாஸ்கர்
கதை இணைப்பு
Short Story #16:
மரி என்கிற ஆட்டுக்குட்டி | பிரபஞ்சன்
சிறுகதை ஒலி வடிவம் : பாரதி பாஸ்கர்
கதை இணைப்பு

கடன் தீர்ந்தது | தி. ஜானகிராமன்
சிறுகதை ஒலி வடிவம் : பாரதி பாஸ்கர்
Short Story #18:
உதய படிவம் | சூடாமணி
சிறுகதை ஒலி வடிவம் : பாரதி பாஸ்கர்
Short Story #19:
முள்முடி | தி. ஜானகிராமன்
சிறுகதை ஒலி வடிவம் : பாரதி பாஸ்கர்
கதை இணைப்பு

செய்தி | தி. ஜானகிராமன்
சிறுகதை ஒலி வடிவம் : பாரதி பாஸ்கர்
கதை இணைப்பு
Short Story #21:
புளியந்துளிர் | சிவசங்கரி
சிறுகதை ஒலி வடிவம் : பாரதி பாஸ்கர்
Short Story #22:
கரை தொடும் அலைகள் | பாலகுமாரன்
சிறுகதை ஒலி வடிவம் : பாரதி பாஸ்கர்

காளிமுத்துவின் பிரஜா உரிமை | அ.செ.முருகானந்தன்
சிறுகதை ஒலி வடிவம் : திரு. நவரட்ணம் ரகுராம்
கதை இணைப்பு
Short Story #24:
ஓர் எட்டுவயதுப் பெண்குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும் | நகுலன்
கதை இணைப்பு
Short Story #25:
ஒரு ராத்தல் இறைச்சி | நகுலன்
கதை இணைப்பு
Short Story #26:
எங்கோ யாரோ யாருக்காகவோ? | ஜெயகாந்தன்
கதை கேட்க வாங்க | கதை சொல்லி: பவா செல்லதுரை
Short Story #27:
Going to meet the man | James Baldwin
கதை இணைப்பு

நினைவுப் பாதை- எழுத்தாளர் நகுலன் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன்
இணைப்பு
Posts on Books/author: 02
உலகை அன்புமயமாக்கும் கலை- தி.ஜா. நூற்றாண்டு - எழுத்தாளர் தி.ஜானகிராமனின் சிறுகதைகள் பற்றி ஆசை
இணைப்பு

ஆணுறுப்பில் விழுந்த பல்லி | விஷ்ணு வரதராஜன்
கதை இணைப்பு
Short Story|சிறுகதை #29:
மனசாட்சியின் படிக்கட்டுகள் | எஸ். ராமகிருஷ்ணன்
கதை இணைப்பு
Short Story #30:
நிழலற்றவன் | பா.ராகவன்
கதை இணைப்பு
Short Story #31:
சக்தி வைத்தியம் | தி. ஜானகிராமன்
கதை சொல்லி: பாரதி பாஸ்கர்
Short Story #32:
இரவை வாசிப்பவர்கள் | எஸ். ராமகிருஷ்ணன்
கதை இணைப்பு

"என் வாசகர் உலகம்”- எஸ்.ராமகிருஷ்ணன்:
காணொளி இணைப்பு
Films/Videos based on books/authors #8:
கதை சொல்லலின் முக்கியவம் பற்றி பவா செல்லதுரை
காணொளி இணைப்பு

ஜன்னல் | தெரிசை சிவா
கதை இணைப்பு
Short Story|சிறுகதை #34:
காப்பு | நந்தி
கண்களுக்கு அப்பால் புத்தகத்தில் கதை உள்ளது.
Short Story #35:
மிலேச்சன் | அம்பை
கதை இணைப்பு
Short Story #36:
அம்மா ஒரு கொலை செய்தாள் | அம்பை
கதை இணைப்பு
Short Story #37:
இளஞ்செழியன் ஆரம்பித்த மெஸ் | மாலன்
கதை சொல்லி: பாரதி பாஸ்கர்
Short Story #38:
விருந்தாளி | அ. முத்துலிங்கம்
கதை சொல்லி: பாரதி பாஸ்கர்
Short Story #39:
என்ன சத்தம் அந்த நேரம் (The Sound Machine) | Roald Dahl (Thamizh translation)
Short Story #40:
செவ்வாய் செப்பியவை | (MA)2THS2

அக்கினிப் பிரவேசம் | ஜெயகாந்தன்
கதை இணைப்பு
Short Story #42:
காடன் கண்டது | பிரமிள்
கதை இணைப்பு
Short Story #43:
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் | புதுமைப்பித்தன்
கதை இணைப்பு
Short Story #44:
கனகாம்பரம் | கு.ப.ரா.
கதை இணைப்பு
Short Story #45:
ராஜா வந்திருக்கிறார் | கு. அழகிரிசாமி
கதை இணைப்பு
Short Story #46:
ரத்னாபாயின் ஆங்கிலம் | சுந்தர ராமசாமி
கதை இணைப்பு
Short Story #47:
பூனைகள் இல்லாத வீடு | சந்திரா
கதை இணைப்பு
Short Story #48:
கடிதம் | திலீப்குமார்
கதை இணைப்பு
Short Story #49:
ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் | ஜெயகாந்தன்
கதை சொல்லி: பாரதி பாஸ்கர்
கதை இணைப்பு

The Legend Of The Christmas Rose | Selma Lagerlöf
Story Link
Short Story #51:
தேவமலர் | க.நா. சுப்ரமண்யம்
கதை இணைப்பு
Short Story #52:
The Ones Who Walk Away from Omelas | Ursula K. Le Guin
Story Link
* Games and stories are imitations of life, ways of playing at life, sometimes ways of learning how to live. Some of the rules may appear both cruel and arbitrary. But if you want to play the game, or live the life, you have to follow them.
* In talking about the “meaning” of a story, we need to be careful not to diminish it, impoverish it. A story can say different things to different people. It may have no definitive reading. And a reader may find a meaning in it that the writer never intended, never imagined, yet recognizes at once as valid.
Short Story #53:
Two Old Men | Leo Tolstoy
Story Link
Short Story #54:
மூடிய கண்கள் | எஸ்.ராமகிருஷ்ணன்
கதை இணைப்பு
Short Story #55:
மழைப்பயணி. | எஸ்.ராமகிருஷ்ணன்
கதை இணைப்பு

தாலி மேல சத்தியம்! | இமையம்
கதை இணைப்பு
வாசிப்பு அனுபவம்
Short Story #57
அண்ணனின் அழைப்பு | சூடாமணி
கதை சொல்லி: பாரதி பாஸ்கர்
Short Story #58
தவறுகள் குற்றங்கள் அல்ல..! | ஜெயகாந்தன்
கதை இணைப்பு-01
கதை இணைப்பு-02
கதை சொல்லி: பாரதி பாஸ்கர்
Short Story #59:
காகிதப்பறவைகள் | எஸ்.ராமகிருஷ்ணன்
கதை இணைப்பு
வாசிப்பு அனுபவம்
Short Story #60:
சிவப்பு மச்சம் | எஸ்.ராமகிருஷ்ணன்
கதை இணைப்பு
Short Story #61:
Bear | பவா செல்லத்துரை | Sithuraj Ponraj (Transl.)
கதை இணைப்பு

கார்மலி | மித்ரா அழகுவேல்
கதை இணைப்பு
Short Story #63:
பேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்? | பா.ராகவன்
கதை இணைப்பு
Short Story #64:
கரடி | பவா செல்லதுரை
கதை இணைப்பு
Short Story #65:
Of Thee I Sing: A Letter to My Daughters| Barack Obama, Loren Long

R. சோமசுந்தரத்தின் காதல் கதை | Don Ashok
Short Story #67: (Abridged Graphic Novel)
The Adventure of Abbey Grange | Vincent Goodwin
Short Story #68: (Abridged Graphic Novel)
The Adventure of the Norwood Builder | Vincent Goodwin
Books mentioned in this topic
The Adventure of the Norwood Builder (other topics)R. சோமசுந்தரத்தின் காதல் கதை [R. Somasuntharathin Kadhal Kathai] (other topics)
The Adventure of Abbey Grange (other topics)
Of Thee I Sing: A Letter to My Daughters (other topics)
தண்ணீர் [Thanneer] (other topics)
More...
Authors mentioned in this topic
Vincent Goodwin (other topics)Don Ashok (other topics)
Barack Obama (other topics)
Loren Long (other topics)
Thi. Janakiraman (other topics)
More...
1. Read 16,178 pages in 66 books
2. 16 Books written by Women authors
3. 12 photo books including one book on photography
4. 6 Comics/Graphic Novels
5. 15 Non-Fiction books excluding photo-books & biographies or life stories
6. 22 Fiction books
7. 15 Thamizh language books
Books that I have read in 2019 and left me lasting impressions for various reasons:
1. Dear World: A Syrian Girl's Story of War and Plea for Peace by Bana Alabed
2. கரைந்த நிழல்கள் by Ashokamitran (Read in a library in Houston, TX, USA)
3. Sapiens: A Brief History of Humankind by Yuval Noah Harari
4. Homo Deus: A History of Tomorrow by Yuval Noah Harari
5. Brassaï, Paris by Jean-Claude Gautrand, Brassaï (Read in a library in Pittsburg, PA, USA)
6. Annie Leibovitz: Portraits 2005-2016 by Annie Leibovitz (Read in a library in Detroit, MI, USA)
7. சிந்தா நதி by La Sa Ramamrutham (First BR from IR group with Kavitha & Girish)
8. Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage by Haruki Murakami
9. காண் என்றது இயற்கை by S.Ramakrishnan
10. Hong Kong Yesterday by Fan Ho (Read in a library In Valparaiso, IN, USA)
11. The Ongoing Moment by Geoff Dyer
12. Picturing Time: The Greatest Photographs of Raghu Rai by Raghu Rai (Bought as a gift to a friend)
13. Reasons to Stay Alive by Matt Haig
14. Man's Search for Meaning by Viktor E.Frankl
15. The Diary of a Young Girl by Anne Frank
16. Born to Run by McDougall, Christopher (Inspired my running journey)
17. Good Omens by Terry Pratchett & Neil Gaiman (Very first experience of both these writers and hope to read more of their work)
18. The Girl Who Drew Butterflies: How Maria Merian's Art Changed Science by Sidman, Joyce
19. The Old Man and the Sea by Ernest Hemingway (Read in a library in Dunedin, FL, USA)
20. The Face Of Asia by Henri Cartier-Bresson (Read in a library in ClearWater, FL, USA)