தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion

காவல் கோட்டம்
58 views
புதினம்/நாவல் > தோழமை வாசிப்பு: காவல் கோட்டம்

Comments Showing 1-15 of 15 (15 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Prem (last edited Dec 07, 2020 12:13PM) (new) - rated it 4 stars

Prem | 229 comments Mod
2021-ல் நல்ல விதமாக தொடங்க, நண்பர்கள் சிலர் காவல் கோட்டம் புத்தகத்தை ஒரே நேரத்தில் வாசிக்க முடிவு செய்துள்ளோம். "வாசிப்பு எனும் நோன்பு" என்ற பதிவில் ஜெயமோகன் கூறியுள்ள கருத்தை இங்கே பதிவு செய்கின்றேன். 2020-ல் நாங்கள்(நான்) கண்டு கொண்ட விடயம்.

"நண்பர்களுடன் சேர்ந்து வாசிப்பது மேலும் ஊக்கமூட்டுவது. ஒரு குருகுலத்தின் மாணவர்கள் சேர்ந்து கற்பதுபோலத்தான் இதுவும். இன்று குருகுலங்கள் இணையத்தால் கட்டமைக்கப்படுகின்றன என்று கொள்ளலாம்"

"வேள்பாரி" வாசித்த உந்துதலில் சு.வெங்கடேசன் அவர்களின் சாகித்ய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" புத்தகத்தை தேர்ந்தெடுத்துள்ளோம். நண்பர்கள் சேர்ந்து வாசிக்க, கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இந்த இழையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏற்கனவே வாசித்தவர்கள் உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.


Prem | 229 comments Mod
இன்று முதல் காவல் கோட்டம் புத்தகம் வாசிக்க ஆரம்பிக்க இருக்கின்றோம். விருப்பமுள்ள வாசகர்கள் வாசிக்கலாம். உங்கள் கருத்துக்களை இந்த இழையில் பகிர்ந்து கொள்ளலாம். புத்தாண்டு வாசிப்போடு இன்பத்தோடு சிறப்பாக அமைய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!


Shoba Shanmugathasan | 7 comments 2019 பிறந்தநாள் பரிசாக காவல் கோட்டம் கிடைத்தது.2020 ஜனவரி 1ம் திகதி முதல் வாசிக்கத் தொடங்கினேன். ஆரம்ப பக்கங்களில் காணப்பட்ட சில சொற்கள் விளங்காததாலும் அதிவேகமாக பல மன்னர்களின் பெயர்கள் சில பக்கங்களில் வந்ததாலும் சற்றே சலிப்பு ஏற்பட்டது. அதன் பின் தாதனூர் காவல் களவு பற்றிய கதை ஆரம்பித்த பின் ஒன்றிப்போக முடிந்தது.
தாதுவருடப் பஞ்சம் வரை சில நாட்களில் வாசித்தாலும், மீண்டும் தொடர இரண்டு மாதங்கள் எடுத்தது. எப்படியும் தமிழ்ப் புத்தாண்டிற்கு முன் வாசித்துவிட்டேன்.


message 4: by Kavitha (last edited Jan 02, 2021 02:32AM) (new) - rated it 4 stars

Kavitha Sivakumar | 9 comments அருமை ஷோபா. 35 பக்கங்கள் தான் முடித்துள்ளேன். அதற்குள் எத்தனை கதாபாத்திரங்கள்! நல்ல வேலை முதலில் வேள்பாரி படித்தது. ஆசிரியரின் எழுத்து விறுவிறு என இருந்தது. வேள்பாரியில் பல கதாபாத்திரங்கள் வந்தாலும், 3/4 பங்கு நான் அறிந்தவையே. வரலாற்று புத்தகங்களிலும் பல புதினங்களில் அறிந்த மக்களே - சேர, சோழ, பாண்டிய பெரு மன்னர்கள், பல சிறுமன்னர்கள், அந்த காலத்தில் கிரேக்க வியாபாரிகள், கபிலர் முதலிய புலவர்கள், மற்றும் பலர்.

ஆனால், இந்த புதினத்தில் முதல் 35 பக்கங்களில் வரும் கதாபாத்திரங்கள் முதல் முறையாக கேள்விப்படுகிறேன். மேலும் ஆசிரியர் கோர்வையாக கதையை கூறவில்லை. மாலிக் கபூரின் படை வீரர்கள் தென்னிந்தியாவின் ஒரு சிறு நகரத்தை சூறையாடுகிறரர்கள் என கதை தொடங்குகிறது. அடுத்த பக்கம், 60 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கர்கள் மதுரைமீது படை எடுக்கிறார்கள். மதுரை முகமதியர்கள் பயந்து தப்ப முயற்சி செய்தார்கள் என வருகிறது.

மதுரை எப்போது முகமதியர்கள் ஆதிக்கத்தில் வந்தது? சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் என்ன ஆனார்கள்? மதுரை ஒரு காலத்தில் நாயக்கர் ஆட்சியில் இருந்தது எனத்தெரியும். ஆனால், ஆசிரியர் கூறும் தெலுங்கர்கள் பெயர்கள் எனக்கு தெரியவில்லை. விக்கிப்பீடியாவின் உதவி மிகவும் தேவைப்படும் போல. எனக்கு வரலாறு பிடிக்கும் என்பதால், இப்புத்தகம் படிப்பது மகிழ்ச்சியே.

ஷோபாவின் அனுபவம் எனது வேள்பாரியின் அனுபவத்தை ஒட்டியுள்ளதால், ஒரு நல்ல எதிர்பார்ப்பும் உள்ளது, பொறுமை, பொறுமை :)


Shoba Shanmugathasan | 7 comments விளங்காத சொற்களை அறிய விஜயசாரதி (Sun TV) அவர்களை நாடியதால் கிடைத்த தகவலிது: இறுதிக்கால பாண்டிய ஆட்சியின் போது சகோதரர்களுக்கிடையே ஏற்ப்பட்ட சண்டையின் மூலம் முகமதியர்கள் நுழைந்தனர். பின்னர் ஆட்சியை கைப்பற்றினர்.
இது சரியா என்பது தெரியவில்லை.


message 6: by Girish (new) - added it

Girish (kaapipaste) | 4 comments அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மிகுந்த உற்சாகத்தோடு 2021இல் என் தமிழ் பயணத்தை தொடங்க இந்த தோழமை வாசிப்பை கையில் எடுத்தேன்.

ஆரம்ப அத்தியாயம் - தமிழ் சற்று கடினம் போல் தோன்றியது.
முதலில் கைபேசியில் ஆரம்பித்ததால் கவனிக்காமல் போனது : 996 பக்கங்கள்!
என்குடா வந்து சேர்ந்தோம் என்று எண்ணிய போது தோழி ஷோபாவின் பதிவை படித்தேன்! :D

பெங்களூரு குளிரில் வேர்க்க ஆரம்பித்து விட்டது.

பிறகென்ன - இந்த புத்தகத்தை படிக்கவேண்டும் என்றால் ஒருவரை ஒருவர் ஊக்குவிக்க தோழமை வாசிப்பை விட்டால் வேறு வழி கிடையாது என்ற ஞானோதயம் வந்தது.

ஊர்ந்து தான் செல்ல வேண்டுமென்றால் சேர்ந்து தான் செல்வோமே ..


Kavitha Sivakumar | 9 comments Shoba Shanmugathasan wrote: "2019 பிறந்தநாள் பரிசாக காவல் கோட்டம் கிடைத்தது.2020 ஜனவரி 1ம் திகதி முதல் வாசிக்கத் தொடங்கினேன். ஆரம்ப பக்கங்களில் காணப்பட்ட சில சொற்கள் விளங்காததாலும் அதிவேகமாக பல மன்னர்களின் பெயர்கள் சில பக்கங்க..."

Now I understand why you said "அதிவேகமாக பல மன்னர்களின் பெயர்கள் சில பக்கங்களில் வந்ததாலும் சற்றே சலிப்பு ஏற்பட்டது" The author just listed these Kings' names without even a little background. Finally, out of that phase.


Prem | 229 comments Mod
எல்லோர்க்கும் ஒரே போன்றதொரு கருத்து. முதல் நான்கு அத்தியாயங்கள் வாசித்து முடித்த நிலையில் கதை எங்கே போகின்றது எங்கு தொடங்கியது என்று இன்னும் விளங்கிக்கொள்ள இயலவில்லை. கங்கா என்ற பெண் கதாபாத்திரமும் விஸ்வநாதன் என்ற போர் வீரனும் மட்டும் இதுவரை பிடித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க வேண்டும்.


Kavitha Sivakumar | 9 comments https://en.wikipedia.org/wiki/Madurai....

Viswanathan start the Nayakka dynasty in Madurai. The story goes real fast from now on.

No snail pace, Girish :)


Yuvarajan Mathaiyan (yuvarajan) | 1 comments தோழமை வாசிப்பில் கலந்துகொள்ள ' காவல் கோட்டம்' இன்று வாசிக்க ஆரம்பிக்கிறேன்.


message 11: by Prem (new) - rated it 4 stars

Prem | 229 comments Mod
@Kavitha - Thanks for that reference. Interesting to know the context behind first Nayaka, Nangama, his son Viswanatha and relation with Vijayanagara empire under Krishnadevaraya.

@Yuvarajan - வாங்க வாங்க :)


message 12: by Prem (new) - rated it 4 stars

Prem | 229 comments Mod
வாசிப்பு நினைத்ததை விட மெதுவாக செல்கின்றது. நண்பர்கள் வாசிப்பில் கிடைத்த தொடர்பு கட்டுரைகள், நூல்கள் பற்றிய பதிவு #1.

ஜெயமோகன் எழுதிய கட்டுரை "மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)" - என்ற புத்தகத்தில் இருந்து நிறைய கருத்துக்களை சொல்கிறது. இக்கட்டுரை காவல் கோட்டம் வாசிப்பவர்களுக்கு துணையாக இருக்கும்.

சில குறிப்புகள்:
* மாலிக் காபூர் விட்டுச்சென்ற தளபதிகள் சிற்றரசர்களாக மாறி கொள்ளையையே ஆட்சியாகச் செய்துவந்தனர்

* அக்காலத்து அரசியல் நிலையில்லமையைப் பயன்படுத்திக் கொண்டு நிலைபெற்று வளர்ந்து மூன்று நூற்றாண்டுக்காலம் நீண்ட விஜய நகரப் பேராரசு தென்னிந்தியாவில் இந்துப்பண்பாட்டை நிலைநாட்டிய மாபெரும் சக்தியாகும்.

* புக்கரின் மகனான குமார கம்பணன் அன்று துருக்கி சுல்தானின் தளபதியான அல்லாவுதீன் சிக்கந்தர் ஆட்சியில் மதுரை சிதைந்து பாழடைந்து கிடப்பதை அறிந்து 1371ல் மதுரைமீது படையெடுத்து வந்து கைப்பற்றினார். குமார கம்பணரின் மனைவியான கங்கம்மாதேவி எழுதிய ”மதுராவிஜயம்’ என்ற சம்ஸ்கிருத காவியம் இந்நிகழ்ச்சியை வர்ணிக்கிறது

* நாகமனை வென்றுவர நாகமனின் மகன் விஸ்வநாத நாயக்கனின் தலைமையில் ஒரு படையை அனுப்பினார் ராயர். விஸ்வநாத நாயக்கர் கிருஷ்ணதேவராயருக்கு மிக அணுக்கமானவராக இருந்தார். மகன் தந்தையை வென்று சிறைப்பிடித்து கொண்டுசென்று ராயர் முன் நிறுத்தினான்.

* நெல்லை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கோயிலை அரியநாதர் அமைத்தார். அரியநாதர்தான் தென்னகத்தை 72 பாளையபப்ட்டுகளாக பிரித்து அவற்றுக்கு பாளையக்காரர்களை நியமித்தார்.

* நிலையான போரில்லாத ஒரு நீண்டகால அரசை மக்களுக்கு அளித்தார் திருமலை நாயக்கர். பொதுவாக அமைதி நிலவினாலே செல்வம் கொழிக்க ஆரம்பிக்கும் என்பதே பழைய இந்தியாவின் நிலைமையாகும். குவிந்த செல்வத்தை கோயில்களாகவும் ஏரிகளாகவும் மாற்றினார் திருமலை மன்னர்.

* தென்னாடெங்கும் இன்றுள்ள ஏரிகள் தேசத்தின் விலைமதிப்பில்லா பெரும் செல்வங்கள்– மதிப்பிட்டால் பல்லாயிரம் கோடி விலையுள்ளவை. அவை நாயக்கரின் சிருஷ்டிகளே. பல ஊர்கள் எரிகளை ஒட்டி உருவானவை. அவற்றில் பாதிப்பங்கு பேருந்து நிலையங்களாகவும் குடியிருப்புகளாகவும் தூர்வாரப்படாமலும் அழிந்துவிட்டன இன்று.

*இன்று தென் தமிழகத்தில் உள்ள முக்கியமான சாலைகள் மங்கம்மாள் போட்டவை. அவற்றை ஒட்டி உருவான புது ஊர்களே இன்றைய முக்கிய நகரங்களான சாத்தூர் சிவகாசி கோயில்பட்டி முதலியவை. இவற்றை இன்றும் கிராம மக்கள் மங்கம்மாள் சாலை என்றே சொல்கிறார்கள்– இப்போது போடப்படும் நாற்கரச் சாலையைக்கூட!

* தெலுங்கு பேசும் மக்கள் திரண்டுவந்து மதுரையை வென்று ஒருபேரரசை நிறுவி இந்நிலப்பகுதியை ஆண்டதும் இங்கேயே அவர்கள் நிலைத்ததும் பெரும் வரலாற்று நிகழ்ச்சியாகும். தமிழ்நாட்டின் வரண்டநிலங்களில் வேளாண்மை செய்யும் முறை அவர்களால் உருவாக்கப்பட்டதே.


message 13: by Prem (new) - rated it 4 stars

Prem | 229 comments Mod
நா. பார்த்தசாரதி எழுதிய ராணி மங்கம்மாள் நூல் FreeTamieBooks.com தளத்தில் இலவசமாக வாசிக்க வசதியாக, தரவிறக்க பல வடிவங்களில் கிடைக்கின்றது. நா.பா அவர்களது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன என்ற நினைக்கிறேன்.

காவல் கோட்டம் நடக்கும் காலத்திற்கு முன்பு தென்னிந்தியாவை ஆட்சி செய்த சோழர்கள், சாளுக்கியர்கள், ஹொய்சாளர்கள் அவர்களைத் தொடர்ந்து எப்படி எப்படி டெல்லி சுல்தான்கள், முகமதியர்கள் படையெடுப்பு தொடங்கியது என்பது பற்றிய வரலாற்றை சிறு குறிப்பாக ஜெயமோகன் அவர்கள் எழுதிய கட்டுரை - ஹோய்சாலர் வரலாறு ஒரு சிறு குறிப்பு

சில வரலாற்று நூல்கள் 1 – மதுரை நாடு – ஒரு ஆவணப்பதிவு (ஜே.எச்.நெல்சன்) என்ற கட்டுரையில் இந்நூல் மதுரையை ஆண்டவர்களின் வரலாற்றை, இன்றுவரை மதுரையை அறிவதற்கான முதன்மை ஆதாரத்தொகுப்பாக உள்ளது என்று ஜெமோ அறிமுகம் செய்கிறார்.

* மூன்றாம் பாகம் மதுரைபகுதியின் அரசியல் வரலாறு குறித்தது. முதல் அத்தியாயம் பண்டைய பாண்டியர்களைப் பற்றி பேச ஆரம்பிக்கிறது. இரண்டாம் அத்தியாயம் கூன்பாண்டியனுக்கு பிறகு உருவான அரசியல் நிலைமைகளைப் பற்றிய விவரணையுடன் தொடங்குகிறது. மூன்றாம் அத்தியாயம் நாயக்கர் காலத்தை விசுவநாத நாயக்கரில் இருந்து தொடங்கி விரிவாகப் பேசுகிறது. நான்காம் அத்தியாயம் மூன்றாம் விசுவநாத நாயக்கரின் ஆட்சி குறித்தது. ஐந்து ஆறு ஏழாம் அத்தியாயம் ‘மாபெரும்’ திருமலை நாயக்க மன்னனைப் பற்றியது. எட்டாம் அத்தியாயம் திருமலை மன்னரின் மறைவுக்குப்பின் 1682 வரையிலான நாயக்க ஆட்சியைப் பற்றியது. தொடர்ந்த ஒன்பது பத்து பதினொன்றாம் அத்தியாயங்களில் தன் காலம் வரையிலான மதுரைப் பகுதியின் அரசியலை நுட்பமான தகவல்களுடன் சொல்கிறார் நெல்சன்.

* நெல்சனின் நடையின் சிறப்பியல்பே சரசரவென வரும் அவரது தனிப்பட்ட அவதானிப்புகள்தான். ”போலிப்பாவனை கொண்ட பிராமணன் [Pharisaical] சட்டங்களே இல்லாத மறவன், கஞ்சத்தனமான செட்டி, சுயநலவாதியான வெள்ளாளன், மந்தமான நாயக்கன், தந்திரமாய் பதுங்கும் கள்ளன் [skulking] நிலைகொள்ளாத குறவன், கூறுகெட்ட பறையன் [licentious] ஆகியவையே கூரிய அவதானிப்பின் மூலம் தெளிவாக பிரித்தறியத்தக்க இச்சாதிகளின் உள்ளார்ந்த இயல்புகள்” [பாகம் I, பக்கம் 16] என்று அவர் எழுதிச்செல்லும்போது அதில் அன்றைய ஆதிக்கவாதியின் பார்வை தெரியும் அதே நேரத்தில் தனிப்பட்ட அவதானிப்பு மூலம் உருவாகும் செறிவான மொழியையும் காணலாம்.


message 14: by Prem (new) - rated it 4 stars

Prem | 229 comments Mod
"History of the Nayakas" என்ற புத்தகம், எழுதியவர் R. Sathyanatha Aiyar Archive தளத்தில் கிடைக்கிறது. இதுவும் மதுரையின் வரலாறை அறிந்து கொள்ள ஒரு நல்ல வரலாறு நூல் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது தவிர, மதுரையின் அரசியல் வரலாறு 1868 தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நெல்சன் அவர்களின் புத்தகமும், மதுரை சுல்தான்கள் என்ற புத்தகமும் கூட மதுரையை அதன் அரசியலை பற்றி அறிந்து கொள்ள பயன்படும் மற்ற புத்தகங்கள்.


message 15: by Raju (new)

Raju கமல் | 1 comments Happy to join this group :) I am trying to revive my tamil reading with this book. First few chapters were unsettling and I started to doubt if I can go on. Feel better after going through the discussion here and I am going to get back to what Viswanathan is up-to.


back to top