தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion

38 views
படிப்போம், பாராட்டுவோம், விமர்சிப்போம்!

Comments Showing 1-4 of 4 (4 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Prashanthini (new)

Prashanthini (Book reader & reviewer) (prashanthini-book-reviewer) | 8 comments Goodreads க்கு நான் புதியவள். நல்ல நூல்களை (குறிப்பாக தமிழ், அடுத்தபடி ஆங்கிலம்) ஆர்வத்தோடு படிப்பவள். அலசுபவள்.

இப்போது என் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டதால் ஒரு குடும்பத் தலைவியாக, படிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது. தொலைக்காட்சி பார்ப்பதில் ஆர்வமில்லை!

நான் வாங்கிப் படித்து ரசிக்கும் நூல்களைப் பற்றியும், எனக்குக வேறு விதத்தில் கிடைக்கும் நூல்களைப் பற்றியும், அமேசானில் புத்தக விமரிசனங்கள் அதிகம் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

கிண்டில் ரீடர் என்னிடம் இருப்பதால், அதிலும் அன்லிமிட்டெடில் கிடைக்கும் நூல்களை படிக்கிறேன்.

நம் போன்ற வாசகர்கள் புத்தகங்களைப் படிப்பதோடு நில்லாது, நம் பாராட்டுகள் விமர்சனங்களை நிறைய பகிரவும் வேண்டும். குறிப்பாக அமேசானில் எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் நூல் விமர்சனங்கள் அவர்கள் நூல்கள் பலருக்கும் அதிகம் சென்று அடைய உதவியாக இருக்கும் என்று கேள்விப்படுகிறேன்.

இந்தக் குழுவில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் உங்கள் நூல்களைப் பற்றி தெரிவித்தால், நான் இயன்ற வரை படித்து என் விமர்சனங்க்ளை அளிக்கப் பார்க்கிறேன். எல்லா நூல்களையும் வாங்கிப் படிக்கும் அளவுக்கு எனக்கு வசதி இல்லை; ஆனால் கிண்டில் அன்லிமிடெடில் இருந்தால் கண்டிப்பாகப் படித்துப் பார்ப்பேன்.

புத்தகங்களை அனுப்பி வைத்தாலும் படித்து விமர்சனம் அளிக்கப் பார்க்கிறேன். நன்றி!


message 2: by Prem (last edited May 02, 2023 10:42AM) (new)

Prem | 224 comments Mod
மிக்க நன்று.. நான் புத்தகங்கள் வாசிப்பதும் பெரும்பாலும் கிண்டில் வழியாகத்தான். ஜெயமோகன் அவர்களின் வெண்முரசு நாவல் தொடர் வாசித்துக் கொண்டு இருக்கின்றேன். நான்காம் பாகமான நீலம் ஆரம்பிக்க உள்ளேன். வெண்முரசு ஒரு பெருஞ்சுழலாக உள்ளிழுத்துக் கொண்டிருக்கிறது.

சி. சு. செல்லப்பா அவர்கள் தொகுத்து நடத்திய எழுத்து சிற்றிதழின் எழுத்து 61: இதழ் (ஜனவரி 1964ல் வெளிவந்தது) மே 3 வரை கிண்டிலில் இலவசமாக கிடைக்கின்றது. இணைப்பு: https://www.amazon.in/dp/B0C3WQSBLD?&.... இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இது போன்ற உரையாடல்களை தொடர முயற்சி செய்வோம். உங்களுக்கு பிடித்த எழுத்து வகை என்ன? பிடித்த எழுத்தாளர்கள் யார்?


message 3: by Prashanthini (new)

Prashanthini (Book reader & reviewer) (prashanthini-book-reviewer) | 8 comments Prem wrote: "மிக்க நன்று.. நான் புத்தகங்கள் வாசிப்பதும் பெரும்பாலும் கிண்டில் வழியாகத்தான். ஜெயமோகன் அவர்களின் வெண்முரசு நாவல் தொடர் வாசித்துக் கொண்டு இருக்கின்றேன். நான்காம் பா..."

நான் ஜெயமோகனின் ரசிகை தான்! அவரது பல கதைகளைப் படித்திருக்கிறேன். ஆனால் வெண்முரசு என்னவோ என்னை ஈர்க்கவில்லை. ரொம்பவே வளவள என்று தோன்ற்கிறது எனக்கு. அவரது காடு, யானை டாக்டர், இன்னும் பல கதைகள் அற்புதம்.

எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் பலருண்டு. சுஜாதா, தி ஜா, ஆதவன், சாண்டில்யன், லா ச ரா, ஜெயகாந்தன், மதன், சோ ராமசாமி, அம்பை, பாலகுமாரன், கல்கி இப்படிப் பலரும்.

கதையில் ஆழமும், அருமையான பாத்திரப் படைப்பும், வித்தியாசமான முடிவும், நல்ல நடையும் உள்ள எல்லா கதைகளுமே (ஜேணர் வித்தியாசமின்றி) நான் ரசிக்கிறேன்.

சமீபத்தில் தான் 'சாந்திபிகா' எனும் முதிய எழுத்தாளரைப் படித்தேன். அவரைப் பற்றி உண்மையில் கேள்விப்பட்டதே இல்லை! அவரது பல கதைகளை ஒலிவடிவில் கேட்ட பிறகு அவரது 'பாரம்பரியமான' கதைகளால் பெரிதும் ஈர்க்கப் பட்டேன். கொஞ்சம் லா ச ராவின் பாதிப்பு அவர் கதைகளில் தெரிகிறது (ஆனால் நடை வேறு விதம்).


message 4: by C.V. (last edited May 04, 2023 10:57AM) (new)

C.V. Rajan | 5 comments Prashanthini wrote: "Prem wrote: "மிக்க நன்று.. நான் புத்தகங்கள் வாசிப்பதும் பெரும்பாலும் கிண்டில் வழியாகத்தான். ஜெயமோகன் அவர்களின் வெண்முரசு நாவல் தொடர் வாசித்துக் கொண்டு இருக்கின்றேன்..."

தங்களது அன்பான பாராட்டுதல்களுக்கு என் நன்றி! எனது எழுத்துகளுக்கு, லா ச ராவின் கதைகள் ஒரு உந்துதலாக இருந்தது உண்மையே! அவர் பாணியே தனி! என்னால் அதை எட்ட முடியாது.

அன்னாரை ஒரு முறை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.


back to top