Shobasakthi's Blog
August 4, 2025
சுவர் முகம்
பாரிஸ் நகரக் காவல்துறைத் தலைமையகத்தில் அந்தச் சுவர் இருக்கிறது. சுவரோடு சேர்த்து அய்ந்து மனிதர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். ஒவ்வொருவருடைய மேலங்கியிலும் வட்டமாக இலக்கத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. மூன்றாவது இலக்கத்தின் பெயரை ‘டேவிட்’ என வைத்துக்கொள்வோம். வயது 46. கருப்பு நிறம். உயரம் 5 அடி 8 அங்குலம். தலைமுடி படிய வாரப்பட்டுள்ளது. நரையேறிய தாடி. ஒல்லியான உடல்வாகு. இலங்கையைச் சேர்ந்தவர். 2009-இல் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். டேவிட் இதற்கு முன்னரும் சிலதடவை இவ்வாறு சுவரோடு நிறுத்தப்பட்டிருக்கிறார். அவர் […]
Published on August 04, 2025 01:14
June 25, 2025
எலி வேட்டை
தேவன் கடையைச் சுத்தம் செய்து மஞ்சள் தண்ணீர் தெளித்தான். பின்பு, முதலாளியின் அழுக்குத் துணிகளைத் துவைத்துப் போட்டான். சாயங்காலமும் விடியற்காலமும் ஆகி முதலாம் நாள் ஆயிற்று. பின்பு, தேவன் முதலாளிக்கு ஒடியல் கூழ் குடிக்க ஆர்வம் உண்டான காரணத்தால் சந்தைக்குச் சென்று கலவாய் மீன் வாங்கிக் கூழ் காய்ச்சினான். சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாளாயிற்று. பின்பு, தேவன் மலையாகக் கிடந்த புகையிலைக் குவியலுக்குள் புகுந்து அடசல், சச்சு, தரவளி பிரித்தான். சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாளாயிற்று. பின்பு,தேவன் […]
Published on June 25, 2025 01:54
April 15, 2025
கண்டன அறிக்கை : உண்மைகளும் பொய்களும்
என்மீதான ஒரு கண்டன அறிக்கை நேற்று இணையத்தில் ‘அதற்கமை பெண்ணியக் குழு’ என்றொரு அமைப்பால் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தக் கண்டன அறிக்கை குறித்து எனது தரப்பைத் தெளிவுபடுத்தும் நோக்கமொன்றுக்காகவே இந்தப் பதிவை எழுதுகிறேன். எவரையும் அவதூறு செய்வதோ, குணச்சித்திரப் படுகொலை செய்வதோ, கடந்தகால உறவுகளின்போது நிகழ்ந்த தனிமனித அந்தரங்கங்களையோ, உணர்வுச் சிக்கல்களையோ, முரண்களையோ பொதுவெளியில் அறிக்கையிட்டு, கீழ்மையான கிசுகிசுப் பசி பிடித்து அலையும் சமூக வலைத்தளவாசிகளுக்கு மலிவுத் தீனி போடுவதோ எனது பதிவில் நிகழவே கூடாது என்ற கவனத்துடனும் […]
Published on April 15, 2025 09:07
March 13, 2025
எழுதும் கதை
[‘காலம்’ 61|62- பேராசிரியர் நுஃமான் சிறப்பிதழில் வெளியாகிய எனது கட்டுரை] 1997- 2024 காலப்பகுதியில் நான் எழுதிய மொத்தச் சிறுகதைகளும் தொகுப்பாக்கப்பட்டு ‘கருப்புப் பிரதிகள்’ பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது. அதற்கான இறுதிக்கட்டத் தொகுப்புப் பணிகளை இன்று இரவு சென்னையில் முடித்தேன். காலையில் இலங்கை செல்லவிருக்கிறேன். இந்த உற்சாகமான தருணத்தில், நான் எழுத வந்த கதையை வாசகத் தோழர்களிடம் பகிர்ந்துகொள்வது பொருத்தமாகயிருக்கும் என நம்புகிறேன். இலக்கியத்தின் மீதான ஈர்ப்பும் மதிப்பும் எனக்கு எந்த வயதில் ஏற்பட்டன என நிதானித்துச் சொல்ல […]
Published on March 13, 2025 23:52
March 11, 2025
தேசத்துரோகி
அரசாங்கத்தாலும், அவனது பெறாமகனாலும், காசு சேர்க்க அறைக்கு வந்துபோகும் இயக்கக்காரராலும் பல தருணங்களில் ‘தேசத்துரோகி’ என விளிக்கப்பட்ட ஸ்டான்லி இராஜேந்திரா, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அய்க்கிய தேசியக் கட்சி அரசுக்கும் ‘பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தம்’ கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து, பத்து வருடங்களுக்குப் பிறகு பிரச்சார வேலைகளுக்காகப் புலிகளின் அணியொன்று இளம்பரிதியின் தலைமையில் அவனின் கிராமத்திற்குள் உள்ளிட்டதைக் குறித்த அந்தப் பத்திரிகைச் செய்தியைத் திரும்பத் திரும்ப விசர்கொண்டு வாசித்தான். இவன், இவனது சீவிய காலத்திலேயே இப்போதுதான் முதன்முதலாகத் தனது அநாதைக் […]
Published on March 11, 2025 01:08
March 1, 2025
எனது இலக்கியம் அரசியல் சார்ந்ததுதான்
உயிர்மை பிப்ரவரி 2025 இதழில் வெளியாகிய எனது நேர்காணல். சந்திப்பு: சோ.விஜயகுமார் ஒரு நீண்ட புலம்பெயர் வாழ்வில் இருக்கிறீர்கள். இதில் ஈழத்தோடும் தமிழகத்தோடும் உங்களுக்கு இருக்கக்கூடிய இன்றைய உணர்வுகளை எப்படிக் காண்கிறீர்கள்? இலங்கையில் யுத்தம் முனைப்பாக ஆரம்பிப்பதற்கு முன்பே இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர ஆரம்பித்துவிட்டால் கூட, 1983-ஆம் ஆண்டு யுத்தம் உக்கிரமான பொழுதில்தான் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக, குடும்பங்களாக இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் அகதிகளாகச் சென்றனர். அந்தச் சூழலில்கூட எக்காரணம் கொண்டும் தாய்நாட்டை விட்டு வெளியேறுவது […]
Published on March 01, 2025 23:01
December 23, 2024
கூடி அழுத குரல்!
மூத்த ஊடகவியலாளர் பிரான்ஸிஸ் ஹாரிசன் எழுதிய மதிப்புமிகு நூலான Still Counting the Dead (தமிழில் – ஈழம்: சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் – காலச்சுவடு வெளியீடு) இப்போது மலையாளத்தில் சுனில் குமார், ஷஹர்பானு.சி.பி, அப்துல் கபீர் மூவராலும் மொழிபெயர்க்கப்பட்டு ஸம்கியயில் தீராத்த மரணங்கள் என்ற தலைப்போடு OTHER BOOKS வெளியீடாக வந்திருக்கிறது. மலையாள மொழிபெயர்ப்புக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரையின் தமிழ் வடிவம் இங்கே. முன்னுரை மொழிபெயர்ப்பு: ஏ.கெ. ரியாஸ் முகமது. இலங்கையில் நடைபெற்ற கொடிய யுத்தத்தால் […]
Published on December 23, 2024 02:45
December 19, 2024
கற்பனையே செய்யமுடியாத விஷயங்கள்தான் இலங்கையின் வரலாறாக இருக்கிறது
18.12.2024 – ஆனந்த விகடன் இதழில் வெளியாகிய எனது நேர்காணல். நேர்கண்டவர்: நா.கதிர்வேலன் இன்றைக்கும் ஷோபாசக்தி, ஈழ இலக்கியத்தின் முக்கியமான முகம். அவரைத் தவிர்த்துவிட்டு நாம் இலக்கிய வகைமைகளை யோசிக்க முடியாது. புலம்பெயர் வாழ்வின் பிரச்னைகள், இன ஒடுக்குமுறைகள் என இதயத்தைப் பிசையும் மொழி இவருடையது. நவீனத் தமிழுக்கும் ஒளிரும் கலை நம்பிக்கை ஷோபா. இப்போது நடிகராக தமிழ் மட்டுமல்லாது, ஹாலிவுட்டிலும் களைகட்டுகிறார். எந்த அணியிலும் சேராத, கூச்சலிடாத அவரது போக்கு அரிதினும் அரிது. சிறந்த கலைஞனுக்கான […]
Published on December 19, 2024 06:13
May 7, 2024
கண்ணன்.எம் அவர்களின் மேலான கவனத்திற்கு!
51-வது இலக்கியச் சந்திப்புக் கதைமலர் ‘இமிழ்’ தொகுப்புக்கு கடந்த வாரயிறுதியில் யாழ்ப்பாணத்திலும், சென்னையிலும் விமர்சனக் கூட்டங்கள் நிகழ்ந்து முடிந்திருக்கின்றன. இரண்டு கூட்டங்களிலும் உரையாற்றிய விமர்சகர்கள் அனைவருமே தொகுப்பை முழுமையாகப் படித்துவிட்டு விரிவாக உரையாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. இமிழ் தொகுக்கப்பட்ட முறை குறித்து நேர்மறையான, எதிர்மறையான இரண்டு வகை விமர்சனங்களுமே முன்வைக்கப்பட்டன. இதுவரை உலகத்தில் வெளிவந்துள்ள எல்லாத் தொகுப்புகளையும் போலவே இமிழிலும் விடுபடல்கள் உள்ளன. கதைத் தேர்வுகளைப் பொறுத்தவரை, நான் முன்பே விளக்கியிருப்பதைப் போன்று கதைகளைத் தேர்வு செய்யாமல் எழுத்தாளர்களையே […]
Published on May 07, 2024 06:31
May 5, 2024
மரச் சிற்பம்
பாரிஸ் நகரத்தில் இந்த வருடம் நிகழவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளைக் குறித்துத் தினப் பத்திரிகையிலிருந்த தலைப்புச் செய்தியை மீறியும் எடுத்த எடுப்பிலேயே இன்னொரு செய்தி எனது கண்களை இழுத்தது. கண்கள் அந்தச் செய்தியை வாசிக்கும்போது, எனக்குக் கிட்டத்தட்டச் சித்தம் கலங்கிவிட்டது என்றே சொல்லலாம். நான் அந்தச் செய்தியை நம்ப முடியாமல் மூன்று தடவைகள் திரும்பத் திரும்ப வாசித்தேன். பிரான்ஸில் இப்போது படு வேகமாக முன்னணிக்கு வந்துகொண்டிருக்கும் தேசியவாதக் கட்சியொன்றின் தலைவர்களில் ஒருவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்: “எமது தந்தையர் நாடு […]
Published on May 05, 2024 15:43
Shobasakthi's Blog
- Shobasakthi's profile
- 57 followers
Shobasakthi isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
