தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion

72 views
2020-ல் வாசிப்பு!

Comments Showing 1-16 of 16 (16 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Prem (last edited Dec 16, 2020 05:33PM) (new)

Prem | 224 comments Mod
நம்ம நண்பர் சதீஷ் இந்த 2020 ம் ஆண்டு வாசிச்ச புத்தகங்கள் பத்தி முதல் காணொலி போட்டுட்டார். நல்ல புத்தக அறிமுகங்கள் மற்றும் சிறப்பான ஒரு அலசல் - பார்க்க பகிர இணைப்பு. அதில் அவர் கூறியுள்ள சில புத்தகங்கள்

* வரம்பு மீறிய பிரதிகள் - சாரு நிவேதிதா
* காதுகள், நித்ய கன்னி - MV வெங்கட்ராம்
* கரைந்த நிழல்கள், 18வது அட்சகோடு - அசோகமித்ரன்
* இடைவெளி - சம்பத்
* பித்தப்பூ, தேவமலர், காளி - கா.நா.சு
* சௌந்தர்ய, அபிதா - லா.ச.ரா
* சங்கதி - பாமா
* River of live River of Death - Victor Mallet
* Men without Women, Strange Library - Haruki Murakami
* Two Old Men, A Letter to a Hindu - Leo Tolstoy
* Things Fall Apart - Chinua Achebe
* The House on Mango Street - Sandra Cisneros

எஸ்.ரா அவர்கள் தளத்தை பல வருடங்களுக்குப் பிறகு புது வடிவம் கொடுத்து இருக்கிறார்கள். நன்றாக இருக்கின்றது. அதில் நூலக மனிதர்கள் என்று ஒரு தொடரில் "இரண்டு பெண்கள்" என்ற பதிவில், அந்த பெண்கள் நம்ம ஊர் பொது நூலகத்தில் வாசகர்கள் வாசித்த புத்தகங்கள் பற்றி நாலு வரி எழுதி வைக்க ஒரு நோட்டு புத்தகம் போட்டு வைக்க முயற்சி செய்றாங்க. ஆரம்பத்தில வெற்றி பெற்றாலும் வழக்கம் போல அது தொடர்வதில்லை. அந்த பதிவில் இப்படி சொல்றார்.

"படித்த புத்தகங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது அவசியமானது. வாசிப்பு மேம்படுவதற்கு அது தானே சிறந்த வழி. பொதுநூலகத்திற்கு வரும் வாசகர்கள் இதற்கென ஐந்து நிமிஷங்களைச் செலவழித்தால் போதும் அது யாரோ ஒருவருக்கு நிச்சயம் பயன்படவே செய்யும்."

அது போலத்தான் இந்த குழுவும். இந்த வருடம் நீங்கள் வாசித்ததில் பிடித்த சில தமிழ் புத்தகங்கள் பற்றி சின்னதா இந்த இழையில் பகிர்ந்து கொள்ளலாமே!


message 2: by Vivek (new)

Vivek KuRa (vivkulan) | 8 comments I will share the list of books I read and liked this year here. Access to tamil books were my big issue this year as I didn't go to India. Hopefully I will read more tamil books this year via Amazon.

Here it goes.

Not necessarily in this order
1.Educated -Tara Westover
2.Hello Bastar- Rahul Pandita
3.American Buffalo- Steven Rinella ( If you are fan of the show "Meat Eaters" this is a must read)
4.Erebus-Michael Palin (Fantastic maritime adventure)
5.Notes of a Russian Sniper- Vasili Zaitsev ( Enemy at the gates fame)
6.Rape of Nanking - Iris Chang (Be warned.A very depressing book)
7.Ayeesha- Era Natarasan
8. Rise and Fall of Dinosaurs- Stephen Brusatte
9. Under the Knife- Arnold Van De Laar
10.Days with Lenin- Maxim Gorky
11. I'll be gone in the Dark- Michelle Mc Namara


message 3: by Prem (new)

Prem | 224 comments Mod
நன்றி விவேக். ஆயிஷா தவிர, இந்த ஆண்டு நீங்க வாசித்த மற்ற நல்ல தமிழ் புத்தகங்கள் பத்தியும் சொல்லுங்களேன்!


message 4: by Vivek (last edited Dec 18, 2020 05:53AM) (new)

Vivek KuRa (vivkulan) | 8 comments ராகுல் சாங்கிருத்யாயனின் "வோல்கா முதல் கங்கைவரை" (மறுவாசிப்பு)
சு.வெங்கடேசனின் "காவல் கோட்டம் "
மேலாண்மை பொன்னுசாமியின் "மானுட பிரவாகம்"
பா.பிரபாகரனின் "குமரிக்கண்டம் சுமேரியமா?"
பழனி சஹானின் "மோடி ஏன் நமக்கானவர் அல்ல"
இமானுவேல் கசகோவிச்சின் "விடிவெள்ளி" (சோவியத் படைப்பு)(மறுவாசிப்பு)

ஜோ.டி குரூஸின் "கொற்கை" ஆரம்பித்து முடிக்கமுடியவில்லை
ஜெங்கிஸ் ஐயத்மாதாவின் "முதல் ஆசிரியர்" (சோவியத் படைப்பு)(மறுவாசிப்பு)
தொ.பாவின் "பண்பாடு அசைவுகள்"
ராஜாஜியின் "ராமாயணம்"


Shoba Shanmugathasan | 7 comments 2020ல் வாசித்தவற்றில் ஞாபகமிருப்பவை/ பிடித்தவை
1. பா.ராகவன் - யதி / உணவின் வரலாறு / Globeஜாமுன்/ என் பெயர் எஸ்கோபர் / பொலிக பொலிக
2. கா.நா.சு - காளி / விலங்குப்பண்ணை / அன்பு வழி / கடல் முத்து / நளினி / பசி / காதற்கதை
3. நா. பார்த்தசாரதி- சமுதாய வீதி
4. ஓநாய் குலச்சின்னம்
5. காவல் கோட்டம்
6. பெண் ஏன் அடிமையானாள்
7. வெங்கட் நாகராஜின் பயணக் கட்டுரைகள் ( இந்தியாவிலுள்ள இடங்களை அறிந்து கொள்ள முடிந்ததால் பிடித்தது)
8. காகித மாளிகை
9. சிற்றன்னை- புதுமைப்பித்தன்
10. ரூஹ்
11. ஸ்ரீரங்கத்து தேவதைகள்- சுஜாதா
12. உப்பு வேலி
13. வங்கச்சிறுகதைகள்
14.மோகமுள்
15.The eye of Darkness - Dean Koontz (கொரோனா கைங்கர்யம்)
16. Harry Potter (Order of Phoenix & Half Blood Prince / Deathly Hallows)
17. பணக்கார தந்தை ஏழைத் தந்தை
18. அணிலாடும் முன்றில்

1984 வாசித்து முடிக்கவில்லை


message 6: by Prem (new)

Prem | 224 comments Mod
@விவேக், ஷோபா - மிக்க நன்றி. நல்ல பட்டியல். வாசிக்க நினைத்திருக்கும் புத்தகங்களும், புதிய புத்தகங்களும் அறிமுகமாகியுள்ளன.

சு. வெங்கடேசனின் காவல் கோட்டம் அடுத்த மாதம் சில நண்பர்கள் சேர்ந்து வாசிக்க ஆர்வமாக உள்ளோம்.

பா.ராகவன் அவர்களின் புத்தகங்கள் நிறைய வாசித்திருப்பது கண்டு மகிழ்ச்சி :)


message 7: by Prem (new)

Prem | 224 comments Mod
சதீஷ் 2020-ல் வாசித்த புத்தகங்கள் பற்றிய இரண்டாம் காணொலியின் இணைப்பு.

அவர் குறிப்பிட்டுள்ள புத்தகங்கள்.

பால்யகால சகி - வைக்கம் முகம்மது பஷீர்
சாய்வு நாற்காலி - தோப்பில் முஹம்மது மீரான்
கடல்புரத்தில், கம்பா நதி - வண்ணநிலவன்
காக்கைகளும் கிளிகளும் - ந.பிச்சமூர்த்தி
ஐரிஸ் - லக்ஷ்மி சரவணகுமார்
வாக்குமூலம் - லக்ஷ்மி சரவணகுமார்
ஆனந்தவிகடன் சிறுகதைகள், ஆலமரத்துயில் - லக்ஷ்மி சரவணகுமார்
குறத்தி முடுக்கு - ஜி.நாகராஜன்
நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்
இந்தி எதிர்ப்பு ஏன் - அறிஞர் அண்ணா
ஊடறுப்பு - வேல்முருகன் இளங்கோ
நஞ்சுண்டகாடு - குணா கவியழகன்
வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
Annihilation of Caste - Dr. B.R. Ambedkar
Which is worse? Slavery or Untouchability - Dr. B.R. Ambedkar
Thoughts on Linguistic States - Dr. B.R. Ambedkar
ஹிப்பி - அய்யனார் விஸ்வநாத்
சூல் - சோ.தர்மன்
கீழடியும் தமிழர் வரலாறும் - ரவிக்குமார்
தலித்துகளும் நிலமும்: பஞ்சமி நிலம் கிடைத்த வரலாறு - ரவிக்குமார்
தொடுதிரை யுகத்தில் அம்பேத்கர் - ரவிக்குமார்
Animal Farm (விலங்குப் பண்ணை) - George Orwell
The Oldman and the sea - Ernest Hemingway


message 8: by Prem (last edited Jan 06, 2021 03:28PM) (new)

Prem | 224 comments Mod
2020-ல் வாசித்த தமிழ் புனைவுகள்:
1. எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த 100 சிறந்த சிறுகதைகள்: தமிழில் சிறுகதைகளின் வீச்சு எத்தனைப் பரந்து விரிந்தது ஆழமானது என்பதை உணர வைத்த தொகுப்பு. தெரிந்த தெரியாத எழுத்தாளர்கள், கதைக்களங்கள் என்று அறிந்து கொண்ட விடயங்கள் ஏராளம்.
2. வீரயுக நாயகன் வேள் பாரி - சு.வெங்கடேசன்: பல ஆண்டுகளுக்கு பிறகு நான் வாசித்த மன்னர் காலத்து வரலாற்று புதினம். மிக அருமையான வாசிப்பனுவம். தொடராக வந்த போது வாசிக்காமல் விட்டதற்காக வருத்தப்படுகின்றேன். சங்க இலக்கிய உருவகங்கள், அகம், புறம் அறம் என்று இப்புதினம் தொடும் இடங்கள் அசாத்தியமானவை. தமிழ் மொழியின் பண்பாட்டின் மீது ஆர்வம் கொண்டவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
3. கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாரயணன் : இவை வேறுவிதமான வரலாற்றுப் புதினங்கள். கிரா அவர்களின் எழுத்திற்கு ஒரு வசீகரம் இருக்கின்றது. ஒரு கிராமம் எப்படி உருவாகிறது, வளர்கிறது, தளர்கிறது என்பதை பக்கத்தில் இருந்து அனுபவித்த உணர்வைத் தரும் நாவல்கள்.
4. கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம் : அடுத்த இரட்டை நாவல்கள். இவற்றையும் வரலாற்றுப் புதினங்கள் வரிசையில் தைரியமாக வைக்கலாம். தமிழகத்தைத் தாண்டி வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், அவர்களில் இளைஞர்களின் மனநிலை, வயதானவர்கள் மனநிலை, கடலுக்கு அப்பாலில் கொஞ்சம் காதல், பெண்களின் மனநிலை, இந்திய தேசிய இராணுவத்தின் நடவடிக்கைகள் என்று பல விடயங்களைப் புதிய பார்வையில் பார்க்க வைத்த சிறந்த நாவல்கள்.
5. வானம் வசப்படும் - பிரபஞ்சன்: சாகித்திய அகாதெமி விருது வாங்கிய நாவல். விடுதலை போராட்ட காலத்தில் புதுச்சேரி(பாண்டிச்சேரி) பற்றிய வரலாறு சில கதாபாத்திரங்கள் வழியாக மிக நுணுக்கமாக படைக்கப்பட்ட நாவல். வாசிக்க தொடங்கிய நாட்களில் கடினமாக இருந்தது. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக பிடிபட்டது.
6. தண்ணீர் - அசோகமித்திரன் : பக்கங்கள் குறைவான ஆனால் நிறைவை கொடுத்த வாசிப்பு. தண்ணீருக்கு கஷ்டப்படும் சென்னை நகரவாசிகள் மத்தியில் அன்புக்கு கஷ்டப்படும் பெண்கள் வசிக்கும் வாழக்கை பற்றிய கதை. மிகவும் உருக்கமான கதை மற்றும் எழுதாடல்.
7. தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரன் பிள்ளை (தமிழில் - சுந்தர ராமசாமி): தோட்டிகள் என்று அழைக்கப்பட்ட மனிதர்கள் படும் இன்னல்களை, அவர்கள் எவ்வளவு முயன்றாலும் முன்னேற விடாமல் வைத்திருக்கும் சமூகத்தின் கரிய உண்மையை, முகத்தில் அறைந்தார் போல கூறும் நாவல். சுந்தர ராமசாமி அவர்கள் முதன் முதலில் எழுதிய படைப்பு. பிகச்சிறந்த ஒரு மொழி பெயர்ப்பு, மொழி பெயர்ப்பு என்ற எண்ணமே வராத வகையில் எழுதப்பட்டுள்ளது.
8. ? - எஸ். பொன்னுத்துரை: ஈழ எழுத்தாளரின் 60, 70களின் அரசியல், எழுத்து சூழலைப் பற்றி பகடியாய் எழுதப்பட்டுள்ள நாவல். எழுபதுகளில் எழுதப்பட்டுள்ள நூலை வாசித்து 2100-களில் எழுதப்பட்ட ஒரு உரையை, மீண்டும் எழுபதுகளில் பதிப்பிட்டால் எப்படி இருக்கும் என்று ஒரு அறிவியல் இலக்கிய புனைவு நூல். வெடித்து சிரிக்க வைக்கும் இடங்கள் நிறைய வருகின்றன. ரசித்து வாசிக்கும்படியான எழுத்து. இவரது பிற நாவல்களை வாசிக்கும் ஆர்வம் ஏற்படுத்தும் நாவல்.
9. அலகிலா விளையாட்டு - பா.ராகவன்: நிறைவேறாத காதல், அதன் பின் வாழ்வில் மகிழ்ச்சிக்கான/நிம்மதிக்கான வித்து எது என்ற தேடல் கொண்ட பின்னணியில் நகரும் கதை. பாரா அவர்களின் எழுத்து வன்மைக்காகவே நான் மிகவும் ரசித்து வாசித்த நாவல்.
10. ரூஹ் - லக்ஷ்மி சரவணகுமார்: இந்த நாவலின் தொடக்கம் மிகவும் பிடித்திருந்தது. போக போக கதையின் திசை வேறு பாதைகளில் பயணித்தது. இதுவும் ஒரு தேடலை பற்றிய கதைதான். நேரம் கிடைக்கும்போது மீள்வாசிப்பு செய்ய வேண்டும்.
11. கல்மரம் - திலகவதி: சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவல். வீடு கட்டும் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கையை அவர்களின் உழைப்பை சுரண்டும் முதலாளிகள் பற்றிய கதைக்களம். பெண்கள் பிரதானமாக வருகிறார்கள். சென்னைத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் தொட்டுச் செல்கிறது.
12. விலங்குப் பண்ணை - ஜார்ஜ் ஆர்வெல்(தமிழில் க.நா. சுப்ரமண்யம்): ஆங்கில பதிப்பு வாசித்து விட்டு உடனே க.நா.சு அவர்களின் மொழி பெயர்ப்பை வாசித்தேன். கதையின் வீரியம் மொழி பெயர்ப்பிலும் தெரிந்தது. உழைக்கும் வர்க்கத்தின் மீது அதிகார வர்க்கம் செலுத்தும் ஆளுமை பற்றி விலங்குகளைக் கொண்டு சொல்லப்பட்ட கதை. வேறு பின்னணியில் எழுதப்பட்டிருந்தாலும் நடப்பு காலத்திற்கும் பொருந்தும் கதைக்களன்.
13. ஆயிரத்தில் இருவர், நிர்வாண நகரம், மலை மாளிகை - சுஜாதா: எப்போதெல்லாம் வாசிப்பில் மந்தம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் நான் வாசிக்கும் எழுத்தாளர் சுஜாதா. அப்படி வாசித்த கணேஷ்-வசந்த் துப்பறியும் நாவல்கள் இவை. பகடி, போகிற போக்கில் அவர் தூவி விட்டு செல்லும் அறிவியல் விடயங்கள் என்று எப்போதும் ஏமாற்றாத எழுத்து.
14. பித்தப்பூ , நளினி- க.நா. சுப்ரமண்யம்: எழுத்தாளரின் எழுத்தாளுமைக்காக வாசித்த புத்தகங்கள். என்னைப் பெரிதாகக் கவரவில்லை.


message 9: by Kavitha (last edited Dec 29, 2020 08:23PM) (new)

Kavitha Sivakumar | 9 comments 2020-இல் வாசித்த தமிழ் புத்தகங்கள். S. ராமகிருஷ்ணன், பா ராகவன், இந்திரா சௌந்தர்ராஜன் இவர்களின் எழுத்துக்கள்/படைப்புகள் வாசிப்பதில் விருப்பம் அதிகம். இந்த வருடம் நான் படிக்காத எழுத்தாளர்களின் படைப்புகளை படிப்பதில் ஆர்வம் கொண்டேன்.

1. ஆரிய மாயை -
2. தலித்துகளும் நிலமும்: பஞ்சமி நிலம் கிடைத்த வரலாறு
3. kumari kottam
4. ரூஹ்: Rooh - A Novel in Tamil
5. சஞ்சாரம்
6. கல்மரம் Kalmaram
7. உனக்காகவா நான்
8. Gayathri
9. Mayavalai: மாயவலை - சர்வதேச தீவிரவாத நெட்ஒர்க் குறித்த விரிவான ஆய்வு
10. சில அத்தியாயங்கள்: குறுநாவல்
11. சுருதி
12. Irandam Ulagappor
13. நளினி
14. கோபல்லபுரத்து மக்கள் Gopallapurathu Makkal
15. நீலக்கல் மோதிரம் Neelakkal Mothiram
16. Ontrin Niram Irandu..!
17. ஆவணிப் பொன் Aavanip Ponn
18. இருள் மறைத்த நிழல்
19. ருத்ரவீணை Rudraveenai (Part 1 & 2)
20. Rudhra Veenai - Part 3
21. 100 சிறந்த சிறுகதைகள்--ஏனோ சிறுகதைகள் அத்தனை படித்ததில்லை. ஒரு முழுமை தராதது என்ற எண்ணம். பிரேம் மற்றும் அபியுடன் சேர்ந்து தினம் ஒரு சிறுகதை படித்ததில் நிறைய தெரிந்தது கொண்டேன். அவர்கள் இருவரின் வலையகத்தில் ஆராய்ச்சி கதைகளின் பரிணாம கோணங்கள் புரிந்தது. ஆசிரியர்களின், மற்றவர்களின் கருத்துகள் மேலும் புரிதலை தந்தது.
22. வீரயுக நாயகன் வேள் பாரி 1 & 2
23. வேரில் பழுத்த பலா / Veril Pazhutha Palaa: சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல்
24. கோபல்ல கிராமம்
25. தண்ணீர் Thanneer

Besides these, I have read 118 books so far. Instead of listing them here, thought would share my reading blog in Indian Readers group. https://www.goodreads.com/topic/show/...


Shoba Shanmugathasan | 7 comments S. பொன்னுத்துரை அவர்களின் புத்தகங்கள் kindleல் உள்ளனவா?


message 11: by Girish (new)

Girish (kaapipaste) | 4 comments 2020-இல் வாசித்த தமிழ் புத்தகங்கள். Every year I started off with Tamil but never persisted till the year end. This year was a bit different - thanks primarily to Kavitha, Prem and Storytel.

First half of 2020 : When Tamil Books were about 'popular'
1. வாஷிங்டனில் திருமணம் Washingtonil Thirumanam
2. THOONDIL KAYIRU
3. சஞ்சாரம்
4. Gayathri
5. Mr. Kicha

Second Half: After I discovered Tamil Book friends and audiobooks
6. எங்கே என் கண்ணன் Yenge En Kannan
7. புத்ர
8. Vedikkai Paarpavan
9. கரைந்த நிழல்கள் Karaintha Nizhalgal
10. Amma Vanthal
11.சில நேரங்களில் சில மனிதர்கள் Sila Nerangalil Sila Manithargal
12. கோபல்ல கிராமம்
13. கர்ணனின் கதை Karnanin Kadhai
14. Oru Manithan Oru Veedu Oru Ulagam

Hope the next year would make a greated impact!


message 12: by Prem (new)

Prem | 224 comments Mod
@Shoba - “தீ” காலச்சுவடு வெளியீடு - Amazon Kindle version available here

Noolaham.org page of எஸ். பொன்னுத்துரை where link to his book "?" is forbidden but other books are available as PDFs - Link


message 13: by Karthik (new)

Karthik R | 2 comments கரிச்சான் செயல்களையும்
- especially story paradox . Migavum arumai


message 14: by Karthik (new)

Karthik R | 2 comments Kaarichaamiyum sevalakliyum


message 15: by Eswar (new)

Eswar | 1 comments புத்தாண்டு வாழ்த்துக்கள்!
படித்த புத்தகங்களின் பட்டியலுக்கு மிக்க நன்றி.


message 16: by Saravanakumar (new)

Saravanakumar S K | 15 comments நான் 2020 ஆண்டில் படித்த தமிழ் புத்தகங்கள்.

1. யாமம் Yamam - ஸ். ரா. எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர். உலக இலக்கியத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவர். எஸ். ராமகிருஷ்ணனின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக சொல்வேன் இந்த நாவலை. பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு அப்படியே நம்மை கடத்திக்கொண்டு போய்விடுகிறார்.
2. 6174 - தமிழில் உள்ள மிக சில science fiction நாவல்களில் இதுவும் ஒன்று. Science -Fiction இல் பட்டைய கிளப்பிய ஆசிரியர் கதாபாத்திரங்களில் சொதப்பி விட்டார். மற்ற படி அருமையான நாவல்.
3. தலைகீழ் விகிதங்கள் - சேரன் நடித்து சொல்ல மறந்த கதை என்று வெளிவந்த படத்தின் மூல நாவல். மிக அருமையாக நாஞ்சில் நாடன் நாவலாக எழுதியதை தங்கர் பச்சான் பின்னாளில் படமாக எடுத்துள்ளார். நாவல் படித்தபின் நான் மீண்டும் படம் பார்த்தேன்.
4.&5 பவா செல்லதுரையின் நிலம் மற்றும் எல்லா நாளும் கார்த்திகை - தமிழ் நாட்டின் தலை சிறந்த கதை சொல்லி ஏற்கனவே சொன்ன கதைகள் என்றாலும் அவை கிண்டிலில் படிக்க கிடைத்தன. புத்தகமாக படிக்கும்போது இன்னும் பல தகவல்கள் கிடைத்தன.
6. சாயாவனம் - சாகித்திய அகாடமி பரிசு பெறும் எல்லாப் புத்தகங்களும் சிறந்த புத்தகங்கள் இல்லை. அங்கு நடக்கும் அரசியலில் சில நல்ல புத்தகங்களுக்கு ஒரு வருடம் பரிசு தராமல் பின்னாளில் ஒரு குற்ற உணர்ச்சியில் அதே ஆசிரியருக்கு வேறு ஒரு மொக்கையான புத்தகத்துக்கு விருது கொடுத்துவிடுவார்கள் என்று பவா செல்லத்துரை சொல்ல கேட்டேன். அதன்படி ச. கந்தசாமியின் சிறந்த புத்தகம் விசாரணை கமிஷன் இல்லை சாயாவனம்தான் என்று அவர் சொன்னதால் இந்த புத்தகத்தை படித்தேன்.
7. அறம் Aram - ஏழாம் உலகம் படித்தபின் உண்டான அந்த கசப்புணர்வில் பல காலம் ஜெயமோகன் பக்கமே தலைவைத்து படுக்காமல் இருந்தேன். அவருடைய வணங்கான் சிறுகதையை கார்ட்டூனிஸ்ட் பாலா எங்கோ பகிர அதை படித்து வியந்து இந்த புத்தகத்தை படித்தேன். அறம் , வணங்கான், சோற்றுக்கணக்கு, நூறு நாற்காலிகள், ஓலைச்சிலுவை என்று தமிழின் சிறந்த சிறுகதைகளை ஜெயமோகன் இந்த தொகுப்பில் கொடுத்துள்ளார்.
8. மெர்குரிப் பூக்கள் Mercury Pookkal - சிறுவயதில் பாலகுமாரனை படிக்க முயன்று தொற்று போன ஞாபகம் உண்டு. எழுத்து சித்தர் இந்த நாவலில் மிக துணிச்சலாக கையாண்டு உள்ளார்.
9. A.Muthulingam Short Stories - அ.முத்துலிங்கம் சிறுகதைகள்: வம்ச விருத்தி, வடக்கு வீதி, திகடசக்கரம் - தமிழின் சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவருடைய மகாராஜாவின் ரயில்வண்டியை படித்த பின்பே அவருடைய மற்ற கதைகளை படிக்க ஆர்வம் கூடியது. இந்த தொகுப்பில் அத்தனை கதைகளும் சிறப்பானவை.
10. அரசூர் வம்சம் - தமிழில் magical realism புத்தகம் என்று படிக்க ஆரம்பித்தேன். பெரிய ஏமாற்றம் தான்.
11. அணிலாடும் முன்றில் - நா. முத்துக்குமாரின் இந்த தொகுப்பு பல உறவுகளையும் அவற்றின் மதிப்பையும் நமக்கு ஞயாபகப்படுத்தும்.

English books I read in 2020:
1. Drive: The Surprising Truth About What Motivates Us
2. Things Fall Apart
3. The Catcher in the Rye
4. Master of the Game
5. One Hundred Years of Solitude
6. The Satanic Verses
7. Waiting For A Visa: Autobiographical notes
8. The Unexpected Inheritance of Inspector Chopra

Happy New Year and Read more for this year!


back to top