இதுவரை கிட்டத்தட்ட பத்துப் பணிரெண்டு விஷ்ணுபுரம் நிகழ்வுகளுக்கு நான் போயிருக்கிறேன். மூன்று விஷ்ணுபுரம் விருது விழாக்கள். மூன்று முறை ஊட்டி காவிய முகாம். நான்கு கட்டண நிகழ்வுகள். ஒருமுறை அழைக்கப்பட்டதன் பேரில் கவிதைக்கான விருது விழாவுக்கு சென்று வந்தேன். அதாவது, மூன்று வருடங்கள். இடையே எழுத்தாளர் ஜெயமோகனை மட்டுமே முன்னிருத்திய அல்லது அவர் பேசிய வேறு எந்த நிகழ்வுகளுக்கும் விஷ்ணுபுரத்தை சார்ந்து நான் சென்று வந்ததில்லை. அதிலும் குறிப்பாக அவர் தம் நண்பர்களோடு செய்யும் பயணங்களுக்கு… ஏன்? கடந்த ஒரு வர...
Published on December 26, 2020 08:53