ஆட்டுப்பால் புட்டு
ஆட்டுப்பால்புட்டு
அ முத்துலிங்கம்
இதுவெல்லாம்நடந்ததுசிலோனில்தான்,ஸ்ரீலங்காஎன்றுபெயர்மாற்றம்செய்யமுன்னர்.அப்பொழுதெல்லாம்’தபால்தந்திசேவை’என்றுதான்சொன்னார்கள்.அலுவலகம்,அஞ்சல்துறை,திணைக்களம்போன்றபெரியவார்த்தைகள்கண்டுபிடிக்கப்படவில்லை.தினம்யாழ்தேவிகொழும்பிலிருந்துசரியாககாலை5.45க்குபுறப்பட்டுகாங்கேசன்துறைக்குஓடியது;பின்னர்அதேநாள்திரும்பியது.தபால்,தந்திசேவையில்அதிகாரியாகவேலைசெய்தசிவப்பிரகாசம்இரண்டுமாதத்திற்குஒருமுறைவெள்ளிக்கிழமைஅதிகாலையாழ்தேவியைபிடித்துபுறப்பட்டுமதியஉணவுக்குயாழ்ப்பாணம்போய்விடுவார்.பின்னர்ஞாயிறுமதியம்அங்கேயிருந்துகிளம்பிஇரவுகொழும்புதிரும்புவார்.திங்கள்காலைவழக்கம்போலகந்தோருக்குஅதிகாரம்செய்யக்கிளம்புவார்.
யாழ்ப்பாணத்தில்அவருடையமனைவிநாற்சார்வீட்டையும்,பெரியவளவையும்பரிபாலித்துக்கொண்டிருந்தார்.அவர்களுடையஒரேமகள்மணமுடித்துசிங்கப்பூர்போய்விட்டாள்.வீட்டிலேஅவர்கள்வளர்த்தஒருமாடு,இரண்டுஆடுகள்,மூன்றுநாய்கள்,20 கோழிகளும்,வளர்க்காதஎலிகள்,சிலந்திகள்,கரப்பான்பூச்சிகளும்அவர்களைஓயவிடாமல்வேலைகொடுத்தன. சிவப்பிரகாசம் அடிக்கடி வருவது மனைவியை பார்ப்பதற்கு மட்டுமல்ல, வீடு வளவுகளை பராமரிக்கவும்தான். அப்படித்தான் அவர் மனைவிகூட நினைத்தார். ஆனால் இன்னொரு ரகஸ்யக் காரணமும் இருந்தது.
யாழ்ப்பாணத்திலேதேங்காய்புட்டுபிரபலம்.தேங்காய்ப்பால்புட்டுஇன்னும்பிரபலம்.மாட்டுப்பால்புட்டையும்சிலர்விரும்பிஉண்பதுண்டு.ஆனால்சிவப்பிரகாசம்சாப்பிடுவதுஎன்றால்அதுஆட்டுப்பால்புட்டுத்தான். தேங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி இட்டு, அரிசிமாவையும், உளுத்தம்மாவையும் சரிசமமான விகிதத்தில் கலந்து குழைத்து முதலில் புட்டு அவிக்கவேண்டும். அதை இறக்கியவுடன் சூடாக்கியஆட்டுப்பாலில்கிளறிசர்க்கரைஇரண்டுகரண்டிசேர்த்துசுடச்சுடசாப்பிட்டால்அதன்ருசியேதனிஎன்பதுசிவப்பிரகாசத்தின்அபிப்பிராயம்.மனைவிக்குஒத்துவராதகருத்துஅது.ஆட்டுப்பாலில்கொழுப்புகுறைவுஆனால்புரதச்சத்துஅதிகம். அது காந்தியின் உணவு என்று வாதம் செய்வார் சிவப்பிரகாசம். யாழ்தேவியில் இறங்கி வீட்டுக்கு வந்துசேரும் நேரம் அவர் மனைவி ஆட்டுப்பால் புட்டை சுடச்சுட தயாராக வைத்திருக்கத் தவறுவதே இல்லை.
ஒருமுறைஅவர்வீட்டுமாடுகன்றுஈன்றுவிட்டது.’நீங்கள்வந்தநேரம்’என்றுமனைவி.அவரைப்புகழ்ந்தார்.மனைவிகள்கணவரைப்பாராட்டுவதுஅபூர்வமானது.சிவப்பிரகாசத்துக்குமகிழ்ச்சிதாளவில்லை.அவசரஅவசரமாககன்றைச்சுற்றிவந்தஇளங்கொடியைஉமலிலேபோட்டுக்கட்டினார்.உடனுக்குடன்அதைஆலமரத்தின்உச்சியில்தொங்கவிடவேண்டும்.அந்தஊரில்இப்படியானவேலைகளைச்செய்வதற்குஒருவன்இருந்தான்.வேலிஅடைப்பது,விறகுதறிப்பதுபோன்றவேலைகள்.அழகானவாலிபன்.அவனுடையதாய்தமிழாசிரியை.படிப்புஓடாதபடியால்அதைநிறுத்திவிட்டுஇப்படியானவேலைகளைஊருக்குள்செய்தான்.பெயர்நன்னன்.
’ஆலமரத்தின் உச்சியில் கட்டவேண்டும். அப்பதான் மாடு நிறையப் பால் கறக்கும். வேறு ஒருவருடைய உமலும் அதற்குமேல் இருக்காமல் பார்த்துக்கொள்’ என்றார். அவன் ’தெரியும் ஐயா. இந்த ஊர் முழுக்க பால் கறப்பது என்னால்தான்’ என்றுசொல்லியவாறுபோய்கட்டிவிட்டுவந்தான்.அடிக்கடி வீட்டுக்கு வந்து அவர் கொடுக்கும் வேலைகளை செய்தான். குணசாலி. குடிப்பது கிடையாது. சீட்டு விளையாடுவது இல்லை. ஒருவித கெட்ட பழக்கமும் அவனிடம் இருப்பதாகச் சொல்ல முடியாது. வேலை முடிந்ததும் காசை வாங்கிக்கொண்டு போவான். எண்ணிக்கூட பார்ப்பதில்லை.
ஒருநாள்சிவப்பிரகாசம்கேட்டார்’உனக்குஇந்தப்பெயர்யார்வைத்தது?’அவன்சொன்னான்,‘அம்மாதான்.அதுபழையமன்னனின்பெயர்.’’அவன்கொடூரமானவன்அல்லவா?’என்றார். அவன் சொன்னான் ’எந்த மன்னன்தான் கொடூரம் இல்லாதவன் என்று அம்மா சொல்வார்.’ பெயர்தான் நன்னன் என்று இருந்ததே ஒழிய அவனுடையது சாதுவான முகம். எப்பொழுதும் ஏவலை எதிர்பார்க்கும் கண்கள். நாளை என ஒன்றிருக்கே என்ற யோசனை அவனுக்கு கிடையாது. கொஞ்ச நேரம் தீவிரமாக சிந்திப்பதுபோல முகத்தை கோணலாகப் பிடித்தபடி நின்றான். பின்னர் அவர் ஆச்சரியப்படும் விதமாக ஒன்றைச் சொன்னான். ‘அரசன் என்றால் அவனுக்கு ஒரு கொடி இருக்கவேண்டும். இந்த ஊர் ஆலமரத்தை பார்த்தால் அது தெரியும். எனக்கு எத்தனை இளங்கொடிகள் தொங்குகின்றன என்று.’
ஒவ்வொருமுறையும்சிவப்பிரகாசம்வரும்போதுநன்னனுக்குஏதாவது வேலையிருக்கும். அந்த தடவை அவர் வந்தபோது ’நன்னன் மணமுடித்துவிட்டான்’ என்று மனைவி சொன்னார். அன்று பின்னேரமே அவன் மனைவியை அழைத்துக்கொண்டு அவரைப் பார்க்க வந்தான். பெண் அழகில் அவனுக்கு கொஞ்சமும் குறைந்தவள் இல்லை. கண்களைப் பார்த்தபோது துணுக்கென்று இருந்தது. இமைக்க முடியாத பாம்பின் கண்கள் போல அவை நீளமாக இருந்தன. அதில் கொஞ்சம் தந்திரமும் தெரிந்தது. அவருடைய முதல் நினைப்பு ’இவன் அப்பாவியாக இருக்கிறானே. இவளை எப்படி சமாளிக்கப் போகிறான்’ என்பதுதான். பின்னர் யோசித்தபோது இவள்தான் சரியென்று பட்டது. அப்பாவியானவனை இவள் எப்படியும் முன்னேற்றிவிடுவாள். வெற்றிலையில் காசு வைத்து மணமக்களிடம் கொடுத்து சிவப்பிரகாசம் வாழ்த்தி அனுப்பினார். அவள் முன்னே போக இவன் பின்னால் குனிந்தபடி இடது பக்கமோ வலது பக்கமோ பார்க்காமல் அவள் காலடியை மட்டுமே பார்த்து நடந்தான். மணமுடிக்க முன்னர் அவன் எப்படி நடந்தான் என்பது அவனுக்கே மறந்துவிட்டது. அவள் கொஞ்சம் உதட்டைக் குவித்தால் அவன் கிணற்றுக்குள் குதித்துவிடுவான் என்று சிவப்பிரகாசம் எண்ணினார்.
அடுத்தநாள்காலைஅவர்முட்டைக்கோப்பியைரசித்துகுடித்துக்கொண்டிருந்தபோதுநன்னன்தனியாகவந்தான்.அவனைப்பார்க்கவேறுயாரோபோலஇருந்தது.அவன்அணிந்திருந்தடெர்லின்சட்டை பொக்கற்றுக்குள் திரீரோஸஸ் சிகரெட் பக்கட் இருந்தது. தலையை ஒட்ட வாரி மேவி இழுத்திருந்தான். சுருட்டிய தினகரன் பேப்பர் கையிலே கிடந்தது. ’என்ன நன்னா? பேப்பர் எல்லாம் படிக்கிறாய் போல இருக்கு?’ என்றார். ’ஐயா, எல்லாம் பத்துமாவின் வேலை. கையிலே பேப்பர் இருந்தால் ஆட்கள் மதிப்பார்களாம்.’ ’சிகரெட்டும் பிடிப்பாயா?’ ’அதுதான் ஸ்டைல் என்று பத்துமா சொல்கிறா. அவவுடன் வெளியே போகும்போது நான் சிகரெட் பிடித்தே ஆகவேண்டும். பழகிக்கொண்டு வருகிறேன்’ என்றான்.
’இப்ப என்ன வேலை செய்கிறாய்?’ ’அதுதான் பிரச்சினை, ஐயா. என்னை வீட்டுவேலைகள்செய்யவேண்டாமாம்.இப்பநான்சைக்கிள்கடையில்தான்வேலைபழகுகிறேன்.அதுமதிப்பானவேலைஆனால்சம்பளம்குறைவு.போதியவரும்படிஇல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று பத்து சொல்கிறா,’ .அவர் வீட்டு பலாமரத்தில் ஒரே சமயத்தில் பழுத்து தொங்கிய. மூன்று பழங்களை காகங்கள் கொத்திக்கொண்டிருந்தன. சிவப்பிரகாசம் நன்னனிடம் பலாப்பழத்தை இறக்கித்தரச் சொன்னார். அவன் நிமிர்ந்து பார்த்துவிட்டு ’ஐயா, பத்துவுக்குதெரிந்தால்என்னைகொன்றுபோடுவா.நான்வாறேன்’என்றுபுறப்பட்டான்.சிவப்பிரகாசம்’நீஒருபழத்தைஎடுத்துக்கொள்.இரண்டைஎங்களுக்குதா’என்றுஆசைகாட்டினார்.அவன்அதைக்கேட்தாகவேகாட்டிக்கொள்ளவில்லை.
வழக்கமாகஞாயிறுஅன்றுகொழும்புக்குபயணமாகும்சிவப்பிரகாசம்திங்கள்மதியம்யாழ்தேவியில்திரும்புவதாகதிட்டமிட்டிருந்தார்.ஞாயிறுஇரவுஅவருடையஇரண்டுஆடுகளில்ஒன்றையாரோதிருடிவிட்டார்கள்.இரவுஆடுகத்தியதுஎன்றவிவரத்தைமனைவிகாலையில்சொல்லிஎன்னபிரயோசனம்.மூன்றுநாய்கள்இருந்தன,ஆனால்அவைஒன்றுமேகுரைக்கவில்லை.சிவப்பிரகாசம்பயணத்தைதள்ளிவைத்தார்.ஆடுகட்டியகயிறுஅவிழ்க்கப்படாமல்வெட்டப்பட்டிருந்ததால்ஆட்டையாரோகளவாடியிருப்பதுஉறுதியானது.அந்தக்கிராமத்தில்இப்படியானதிருட்டுநடப்பதில்லை.எனவேமுழுக்கிராமமும்ஆட்டைதேடியது.
ஊர்பெரியவர்,’ஆட்டைதிருடியவன்இந்தக்கிராமத்தில்விற்கமாட்டான்.அடுத்தகிராமத்திலும்விற்கமாட்டான்.இன்றுசந்தைகூடும்நாள்.ஆட்டைஅங்கேதான்விற்பான்’என்றுகூறினார்.சிவப்பிரகாசம்ஊர்பெரியவரைஅழைத்துக்கொண்டுசந்தைக்குசென்றுதேடினார்.அவர்சொன்னதுசரிதான்.அங்கேஅவருடையஆடுஏற்கனவேகைமாறப்பட்டுகசாப்புக்கடைக்குசெல்வதற்குஆயத்தமாகநின்றது.அவர்ஆட்டைக்கண்டஅதேசமயம்அதுவும்அவரைப்பார்த்தது.அதன்பழுப்புகண்கள்அவரைஅடையாளம்கண்டுவிட்டதுபோலஈரமாகமாறின.ஊர்பெரியவர்பொலீசுக்குஅறிவிக்கும்காரியத்தைசெய்தார்.
வீடுதிரும்பியபோதுமூன்றுநாய்களும்ஓடிவந்துஅவர்மேல்பாய்ந்துபுரண்டன.அவற்றின்வால்மட்டும்ஆடாமல்முழுஉடம்பும்ஆனந்தத்தில்துள்ளியதைப்பார்க்கஅவருக்குஆத்திரமாகவந்தது.திருடனைவிட்டுவிட்டுஅவர்மேல்பாய்வதற்காநாய்களைவளர்த்தார்.அவர்விட்டினுள்புகுந்துஒருவன்ஆடுதிருடியதையோசிக்கயோசிக்கஅவர்மனம்சினம்கொண்டது.அந்தஆடுவேறுகுட்டித்தாய்ச்சியாகஇருந்தது.இரண்டுஆடும்மாறிமாறிகுட்டிபோட்டுஅவருடைய்ஆட்டுப்பால்புட்டுக்குதடங்கல்வராமல்பார்த்துக்கொண்டிருந்தன.ஒருகுட்டித்தாய்ச்சிஆட்டைவெட்டிஇறைச்சியாக்குவதற்குஎத்தனைகல்மனசுவேண்டும்.
சென்றவருடத்துஇலைகள்வளவைநிறைத்துக்கிடந்தன.நன்னன்உதவிக்குவரப்போவதில்லை.மனைவிகூட்டிச்சருகுகளைக்குவித்துவிடசிவப்பிரகாசம்அள்ளிகுப்பைகிடங்கில்கொண்டுபோய்கொட்டினார்.இரண்டுதரம்கொட்டிவிட்டுமூன்றாவதுதரம்வந்தபோதுகாற்றுசுழன்றடித்தது.குப்பைசிதறமுன்னர்அள்ளிவிடலாம்என்றுஓடினார்.காற்றுவென்றுவிட்டது.அந்தநேரம்வெளியேபெரும்ஆரவாரம்கேட்டது.படலையைத்திறந்துவீட்டுக்குள்ளேசனம்வந்தது.பின்னர்ஆடுவந்தது.பின்னால் பொலீஸ்காரர் வந்தார். அவரைத் தொடர்ந்து கைகளைப் பின்புறம் கட்டிய நிலையில் நன்னனை பிடித்து இழுத்தபடி ஒருத்தன் வந்தான். ’ஐயா, என்னை விட்டுவிடுங்கள். பத்துமா சொல்லித்தான் செய்தனான்’ என்று அவன் கெஞ்சினான். அவன் ஏதோ சிங்களம் பேசியதுபோல சிவப்பிரகாசம் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றார். அப்பாவியான ஒருத்தனை சிலமாதத்திற்குள் இப்படி ஒருத்தி மாற்றிவிட்டாளே என்று நினைத்தார். ’ஆடுதான் கிடைத்துவிட்டதே. அவன் பாவம், விட்டு விடுங்கள்’ என்று அவர் வேண்டினார். பொலீஸ்காரர் மறுத்துவிட்டார். ’‘இது பொலீஸ் கேஸ் ஆகிவிட்டது. கோர்ட்டுக்கு போனால் நூறு ரூபா அபராதம் விதிப்பார்கள். அல்லது இரண்டு கிழமை சிறைத் தண்டனை கிடைக்கும்.. அதை அனுபவித்தால்தான் திருடனுக்கு புத்திவரும். நாளைக்கே கோர்ட்டுக்கு ஆட்டை கொண்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு பொலீஸ்காரர் நன்னனை இழுத்துப் போனார்.
அன்றிலிருந்துதான்சிவப்பிரகாசத்துக்குநினைத்துப்பார்த்திராதசிக்கல்ஒன்றுமுளைத்தது.வெள்ளிஅதிகாலையாழ்தேவியைபிடித்துவந்துஇரண்டுநாள்தங்கிவிட்டு கொழும்பு திரும்புகிறவர் அப்படியெல்லாம் செய்ய முடியவில்லை. ’வழக்கு இத்தனையாம் தேதி. உடனே வரவும்’ என்று மனைவி தந்தி கொடுப்பார். சிவப்பிரகாசம் அவசரமாகப் புறப்பட்டு யாழ்தேவியில் வருவார். கோர்ட்டுக்கு மாட்டு வண்டிலில் ஆட்டை ஏற்றிக்கொண்டு போவார்.. வழக்கை தள்ளி வைப்பார்கள். அவர் கொழும்புக்கு திரும்புவார். மறுபடியும் தந்தி வரும். கோர்ட்டுக்கு வருவார். வழக்கை ஒத்திவைப்பார்கள். பலதடவை இப்படி அலையவேண்டி நேர்ந்தது. .
ஒருமுறைகோர்ட்டுக்குஆட்டையும்அதனுடையஇரண்டுகுட்டிகளையும்வண்டிலில்ஏற்றிப்போனார்.வழக்கறிஞர்குட்டிகளையும்கொண்டுவரச்சொல்லிகட்டளையிட்டிருந்ததால்அப்படிச்செய்தார்.கோர்ட்டிலேபத்துமாவின்கையில்ஒருகுழந்தையிருந்தது.எட்டாம்வகுப்புநன்னனும்,பத்தாம்வகுப்புபத்துமாவும்ஒருகுழந்தையைஉண்டாக்கிவிட்டார்கள்.அதற்குபட்டப்படிப்புஒன்றும்தேவையில்லை.வழக்கைமறுபடியும்தள்ளிவைத்ததுசிவப்பிரகாசத்துக்குஆத்திரத்தைகொடுத்தது.பத்துமாமரத்திலேசாய்ந்தபடிகுழந்தையுடன்நின்றாள்.கோர்ட்டுக்குஅவசரமாகப்போனவர்கள்அவளைத்தாண்டும்போதுவேகத்தைபாதியாகக்குறைத்தார்கள்.அவள்முகம்சந்திரவெளிச்சத்தில்பார்ப்பதுபோலவெளிறிப்போய்காணப்பட்டது.அவர்களைப்பார்க்கபரிதாபமாகஇருந்தது.நன்னனிடம்’சாப்பிட்டாயா?’என்றுகேட்டார்.அவன்இல்லைஎன்றான்.பாலைவனத்துஒட்டகம்போலஅவள்தலையைஅலட்சியமாகமறுபக்கம்திருப்பினாள்.
சாப்பாட்டுக்கடையில்நன்னன்கைக்குட்டையைஎடுத்துவாங்குமேலேவிரிக்கஅவள்உட்கார்ந்தாள்.இப்பொழுதுதான்அந்தப்பெண்ணைசிவப்பிரகாசம்நேருக்குநேர்பார்த்தார்.அவள்உடம்புஅசையாமல்இருக்கஅவள்தலைமட்டும்ஒருநடனக்காரியுடையதுபோலஇரண்டுபக்கமும்அசைந்தது.அவள்ஓயாமல்பேசினாள்.வாய்க்குள்உணவுஇருக்கும்போதும்,அதைவிழுங்கியபின்னரும்,அடுத்தவாய்உணவுவாய்க்குள்போகமுன்னரும்அவள்வாயிலிருந்துவார்த்தைகள்ஒன்றுடன்ஒன்றுஒட்டியபடிநிறுத்தாமல்வெளிவந்தன.எல்லாமேகணவனுக்கானகட்டளைகள்தான்.அவன்உணவைஅள்ளிவாயில்திணித்தபடியேதலையைமட்டும்ஆட்டினான்.’பஸ்ஸுக்குகாசுஇருக்கிறதா?’என்றுகேட்டார்.அவன்இல்லைஎன்றான்.அதையும்தந்துஅவர்களைஅனுப்பிவைத்தார்.அவர்படும்அவதியிலும்பார்க்கஅந்தஇளம்தம்பதிகள்அனுபவிக்கும்துன்பத்தைபார்க்கஅவரால்முடியவில்லை.
அன்றுகோர்ட்டுகலையும்வரைகாத்திருந்தார்.அரசுவழக்கறிஞர்காரைநோக்கிச்சென்றபோதுகுறுக்கேபோய்விழுந்தார்.’நான்ஓர்அரசாங்கஉத்தியோகத்தன்.ஆட்டைத்திருட்டுக்கொடுத்ததால்கடந்த18 மாதங்களாககொழும்பிலிருந்துவழக்குக்குவருகிறேன்.ஆட்டையும்குட்டிகளையும்வழக்குநாட்களில்கொண்டுவரவேண்டும்என்பதுஉத்தரவு.ஆட்டின்விலைஅறுபதுரூபா.ஆனல்நான்செலவழித்தது600 ரூபாவுக்குமேலே.ஆட்டைதிருடியவன்தான்தண்டனைஅனுபவிக்கவேண்டும்.ஆனால்திருட்டுகொடுத்தவன்திருடனிலும்பார்க்ககூடியதண்டனைஅனுபவிப்பதுஎந்தவிதத்தில்நியாயம்.அடுத்ததடவையாவதுவழக்கைமுடித்துவையுங்கள்,ஐயா.’.வழக்கறிஞர்ஒன்றுமேபேசவில்லை.அவரைவிலத்திக்கொண்டுபோய்காரிலேஏறினார்..
வழக்குதேதிக்குஇரண்டுநாள்முன்னதாகவேசிவப்பிரகாசம் கிளம்பி யாழ்ப்பாணம் வந்து விட்டார். வீட்டு வளவு வேலைகளை முடித்துவிட்டு இரவு ஓய்வெடுத்தபோது மனைவி சொன்னார். ’இப்பவெல்லாம் மாடு முன்னைப்போல கறப்பதில்லை. பால் குறைந்துவிட்டது.’. சிவப்பிரகாசம் ஒரே வெறுப்பில் இருந்தார். ’இந்த வழக்கு என்னை அலைக்கழித்துவிட்டது. . எவ்வளவு நாட்கள் வீணாக ஓடின. எத்தனை காசு நட்டம். அல்லாவிட்டால் இன்னொரு மாடு வாங்கி விட்டிருப்பேனே’ என்றார். அடுத்தநாள் காலை . மாஜிஸ்ட்ரேட் வழக்குக்கு ஒரு நிமிடம் மட்டுமே எடுத்து போதிய சாட்சியங்கள் இல்லாதபடியால் வழக்கை தள்ளுபடி செய்வதாகச் சொன்னார். இதை 20 மாதங்களுக்கு முன்னரேயே செய்திருக்கலாம். இத்தனை அலைச்சலும் தொல்லையும் பணமும் மிச்சமாகியிருக்கும்.
தீர்ப்பானபின்னர்நன்னனில்பெரியமாற்றம்தெரிந்தது.சிவப்பிரகாசம்நம்பமுடியாமல்தலையைபின்னுக்கு இழுத்து மறுபடியும் பார்த்தார். அவன் கண்களில் வெளிச்சம் நடனமாடியது. அரும்பு மீசை. திரிரோஸஸ் சிகரெட் சட்டைபொக்கற்றுக்குள்தெரிந்தது.கையிலேதினகரன்பேப்பரைச்சுருட்டிவைத்தபடிசிரித்துக்கொண்டேகோர்ட்டுக்குவெளியேவந்தான்.பத்துமாஎங்கிருந்தோவந்துஅவன்கையைடெர்லின்சட்டைமுடிந்தஇடத்தில்பிடித்துஇழுத்தாள்.சிவப்பிரகாசத்துக்குஅவர்களைப்பார்க்கசந்தோசமாகவிருந்தது.விடுதலையுணர்வுஎல்லோருக்கும்பொதுதானே.
பத்துமாஒருகுழந்தையைதூக்கஓடுவதுபோலகுனிந்தபடிஅவரைநோக்கிஓடிவந்தாள்.காலிலேவிழுந்துநன்றிசொல்லப்போகிறாள்எனஅவர்நினைத்தார்.அவள்குனிந்துமண்ணைவாரிஎடுத்துவீசி’நாசமாய்ப்போக’என்றுதிட்டினாள்.’உன்ஆடுநாசமாய்ப்போக.உன்மாடுநாசமாய்ப்போக.உன்குடிவிளங்காது.இல்லாதவன்என்னசெய்வான்?இருக்கிறவனிடத்திலேதானேஎடுக்கவேணும்.இதையும்பெரியவழக்குஎன்றுகொழும்பிலேஇருந்துவந்துநடத்தினாயே.ஆலமரத்துஇளங்கொடியைஎப்பவோஅறுத்துக்கீழேவீசியாச்சுது.அதுபோலநீயும்அறுந்துபோவாய்.உன்அழிவுகாலம்இன்றுதான்ஆரம்பம்.நீபுழுத்துச்சாவாய்’என்றுவைதுவிட்டுநடந்தாள்.திடீரென்றுஒருவசவுவிடுபட்டுவிட்டதைநினைத்துதிரும்பிவந்தவள்.அவர்புழுதியிலேகுளித்துநின்றதைப்பார்த்துமனதைமாற்றி ஒன்றுமே பேசாமல் சென்றாள்.
சிவப்பிரகாசம்திகைத்துப்போய்நின்றார்.அவர்மேசையில்விரல்களால்சுழற்றும்3 டெலிபோன்கள்இருக்கும்.நாலுபேர்வாசலில்எந்தநேரமும்அவர்கையொப்பத்துக்காககாத்திருப்பார்கள்.மந்திரிஅவருக்குகைகொடுத்திருக்கிறார்.இருபதுவயதைதொடாதஇந்தப்பெண்ணின்வாயிலிருந்துவந்தவசவுகளைஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தார். வண்டில்காரன் ஆட்டையும்குட்டிகளையும்வண்டிலிலேஏற்றிதயாராகவிருந்தான்.அவன்நடந்ததைபார்த்தாகக்காட்டவில்லை.அடுத்தநாள்ஊரிலேகதைபரவும்.இரண்டுநாளில்கொழும்புக்கும்போய்விடும்.தலைப்புழுதியைகைவிரல்களினால்தட்டியபடிஆட்டைப்பார்த்தார்.அதுதன்பழுப்புக்கண்களால்அவரையேஉற்றுநோக்கியது.முழுக்கதையையும்அறிந்தஅந்தஜீவன்ஒன்றுதான்அவருடையஒரேசாட்சி.வண்டிலில்ஏறிஉட்கார்ந்தபோதுஅவர்மனைவிஆட்டுப்பால்புட்டுடன்காத்திருப்பதாகச்சொன்னதுநினைவுக்குவந்தது.
END
.
A. Muttulingam's Blog
- A. Muttulingam's profile
- 43 followers
