நவீன் சங்குநிழலின் தனிமை – A Revenge Story நிழலின் தனி...
நவீன் சங்கு
நிழலின் தனிமை – A Revenge Story
நிழலின் தனிமை தேவிபாரதியின் முதல் நாவல்.
வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் வாழ்பவன், திடீரென மேற்கொள்ளும் பழிவாங்கும் செயலின் மனநிலையை பேசும் நாவல் இது.
மற்ற பழிவாங்கும் கதை போல் இல்லாமல், வாழ்வின் ஆடி அடங்கும் வயதான நாற்பதுகளில் 30 வருடங்கள் முன்பு சாரதாவை சீரழித்த கருணாகரனை சந்திக்க நேர்கிறான்.புதை குழியில் மக்கி போன,12 வயதில் கையில் அரிவாளுடன் சூழுரைத்த தனது பழிவாங்கும் வேதாள எண்ணம் தலையில் ஏறி ஆட்கொள்கிறது.பழிவாங்கும் செயலின் முதற்படியாக மிரட்டல் கடிதம் எழுதிகிறான் ,பின்பு கருணாகரன் வீட்டிற்குள் நுழைகிறான்.
பல சமயங்களில் வாய்ப்பு கிடைத்தும் உக்கிரமான தனது பழி எண்ணத்தை மீட்க முடியாமல் ,பிரக்ஞை இல்லாமல் உறைந்து விடுகிறான்.
அதற்கு காரணமாக நான் பார்ப்பது அடிப்படையிலே அவன் தாழ்த்தப்பட்டவன் , எதிரக்கும் (Defence) குணம் இல்லாதவன்,அன்பானவன்(அவனுக்கும் குருவிக்குமான இரகசிய அன்பு).
அவனுடைய அதிகபட்ச எதிர்ப்பு கடிதம் எழுதியது, தனக்கும் சுலேவுக்குமான உறவை வெளிபடுத்தியது அதுவும் அடி வாங்கிய பிறகு.
சாதிய சமூகத்தில் திருமணம்
எவ்வளவு முக்கிய அங்கமாக உள்ளது என்பதை சுலேவின் கனவர் குடும்பம் மூலம் புரிந்து கொள்ளலாம்.
சுகந்திக்கும் நாயகனுக்குமான உறவு,அதை பொருட்படுதாத அவள் கனவரின் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை.
Revenge story பற்றி நினைக்கையில் சில நாட்கள் முன்பு பார்த்த ‘I SAW THE DEVIL’ கொரியா திரைபடம் ஞயாபகம் வருகிறது . திரைபட நிபுணர்கள் சொல்லும் காணக்கிடைக்காத அரிதான உலக சினிமா அல்ல IMDB ல் Top 10 best Korean movies என தேடினாலே கிடைக்கும் .
அதில் காரணமே இல்லாமல் தனது மனைவியை கொன்ற serial killer மிருகத்தை பழிவாங்கும் நாயகன் தனது குடும்பம் , அடையாளம் , வாழ்க்கை எல்லாத்தையும் இழுந்து கிட்டத்தட்ட அவனும் மிருகமாகிறான் .
அப்படி இல்லாமல் நிழலின் தனிமையில் கருணாகரன் தனது பாவத்திற்காக அவன் மட்டும் இல்லாமல் அவன் குடும்பமும் சீரழிந்து போவதாக ஆசிரியர் காட்டுகிறார்.
சாரதா கடைசியில் அப்படி சொல்ல காரணம், நோயுற்ற மனிதனின் மரண படுக்கை முன்பு மனித வாழ்க்கையின் ஆசை ,வெறி, பழிதீர்ப்பு எல்லாமே அர்த்தம் இல்லாமல் போகிவிடுகிறது போல்.
தேவிபாரதி எனது விருப்பதிற்குரிய எழுத்தாளர் ஆகிவிட்டார்.
Advertisements
நன்றி-நவீன் சங்கு
Devibharathi's Blog
- Devibharathi's profile
- 18 followers
