இரும்பு மனிதன் எனப் பொருள்படும் ‘யக்கடயா’ என்ற பெயரால் என்னை ஒருகாலத்தில் இராணுவத்தில் அழைத்தார்கள் என்பதைத் தவிர, என்னைக் குறித்த தனிநபர் தகவல்களை நான் உங்களிடம் சொல்லப் போவதில்லை. இலங்கை வரலாற்றிலேயே நெடுங்காலம் தலைமறைவாக வாழும் மனிதன் நான்தான். முப்பத்து மூன்று வருடங்கள் மறைந்து வாழ்கிறேன். இப்போது நான் வசிக்கும் நாடு இலங்கைக்குத் தெற்குத் திசையில் உள்ளது என்பதோடு என்னுடைய அறிமுகத்தை நிறுத்திக்கொள்கிறேன். நான் வசிக்கும் கடற்கரையோர சிறு நகரத்தில் வருடம் முழுவதுமே வெயில் உண்டு. மிகப் […]
Published on November 09, 2023 01:30