டிராகன் - தமிழ் சினிமா


நிஜம்போலவும், அடுத்த நிமிடத்தில் காத்திருக்கும் ஆச்சரியங்களைக் கொண்டது வாழ்க்கை எனவும்சிலர் ’டிராகன்’ சினிமாவைப் பாராட்டி எழுதுவதை பார்க்கும்போது எரிச்சல்தான் வருகிறது.  

லவ்டுடே போல டிராகனும் 2கே கிட்ஸுக்கான படம் என்று வகைப்படுத்துவதும், டிரெண்ட் செய்வதும்ஒரு  விளம்பர யுத்தியாக மட்டும் தெரியவில்லை.ஆபத்தின் அறிகுறியாகவும் படுகிறது.  

ஒருவேளைதற்கொலை செய்ய முனையும் அந்த மாணவனைப் பற்றி ராகவன் அறிய நேராமல் போயிருந்தால் என்னவாகிஇருக்கும்.? அப்படி என்ன தவறு செய்துவிட்டதாய் ராகவனின் கல்லூரிக் காதலிக்கு குற்றஉணர்ச்சி வருகிறது? என நியாயமான கேள்விகளாய் கேட்க ஆரம்பித்தால் – பிரின்ஸ்பாலாய் வரும்மிஸ்கின் சொல்வது போல அஸ்திவாரம் இல்லாமல் அடுக்கப்பட்ட கதை என்பது புலனாகும்.  

படிப்புதான்வாழ்க்கை என ப்ளஸ் டூ வரைக்கும் இருந்தவன் ஒரு பெண்ணால் பாதை மாறுகிறான்.  எல்லா பாடங்களிலும் அரியர்ஸாய் குவித்து  கெத்தாய் ஒரு பெண்ணின் மனதில் இடம் பிடித்து காலேஜைவிட்டு வெளியேறுகிறான். வேலைக்குப் போவதாய் வீட்டை ஏமாற்றி சிகரெட், மது, காதல் எனமிதந்து கொண்டு இருந்தவனை தரையில் இறக்கிவிட்டு காதலி பிரிகிறாள். காதலி முன்பு வாழ்ந்துகாட்ட மோசடி செய்து டிகிரி வாங்கி ஐ.டி கம்பெனியில் மாதம் மூன்று லட்சம் சம்பாதிக்கிறான்.பெரும் தொழிலதிபரின் மகளுக்கு நிச்சயம் ஆகிறது. போலி டிகிரியை தெரிந்து கொண்ட காலேஜ்பிரின்ஸ்பால் அவனை மீண்டும் காலேஜில் சேர்ந்து முந்தைய அரியர்ஸை கிளியர் செய்யுமாறு,செய்த பாவத்துக்கு பரிகாரம் செய்ய வழி சொல்கிறார். காதலியே அவனுக்கு லெக்சரராக வந்துகாதலனை ஏமாற்றிய தனது முந்தைய பாவத்தை கிளியர் செய்ய அவனுக்கு உதவுகிறாள். அப்படியும்அவனால் முடியாமல் மீண்டும் மோசடி செய்கிறான். பரீட்சை பேப்பர் மாற்றப்பட்டு அவனால்ஒருவன் தற்கொலைக்குத் துணிகிறான். குற்றவுணர்ச்சி வாட்ட எல்லோர் முன்பும் தான் செய்தகுற்றங்களை ஒப்புக் கொள்கிறான். ’முன்னேற ஆசைப்பட்டது உண்மை. இன்னொருன் வாழ்க்கையைகெடுத்து விட்டு அல்ல” என்ற பஞ்ச் வசனம் பார்வையாளர்களை நெகிழ வைக்கிறது.  

இரண்டுமணி நேரம் 20 நிமிடங்கள் குப்பையாய் கொட்டிவிட்டு, கடைசி 15 நிமிடங்கள் அந்த குப்பைகளைஒதுக்கி அல்லது ஒளித்து வைத்து ’சுத்தமே சுகம்’ என நீதி சொல்லி முடித்திருக்கிறார்கள்.  

அறமற்ற,தார்மீக நெறியற்ற, மனிதாபிமானமற்ற, தன்னைச் சுற்றி இருப்பவர்கள் மீது அன்பும் மரியாதையுமற்றஅருவருப்பான அலட்சியமான ஒருவனது நடவடிக்கைகளை  எந்நேரமும் காட்டி இயல்பாக்கி விட்டு, திடீரென உதயமாகும்ஞானத்தை அற்புதம் போலக் காட்டுகிறார்கள். குப்பையை கொட்டியதற்கும் மக்கள் குதூகலிக்கிறார்கள்.சுத்தம் செய்வதையும் மக்கள் கொண்டாடுகிறார்கள்.  

சின்னபட்ஜெட்டில் உருவான ஒரு குட்டி டிராகன். 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2025 05:55
No comments have been added yet.