சரஸ்வதி நதி- இருந்த நதியா அல்லது இலக்கிய நதியா?
(இது அவசரமாக எழுதப்பட்ட கட்டுரை. இன்னும் தகவல்கள் கிடைத்த பிறகு விரிவாக எழுதுகிறேன்.)
சரஸ்வதி நதியைப் பற்றி இதுவரை நமக்குத் தெரிந்திருப்பவற்றின் சுருக்கம்.
மூன்று வேதங்களும் இதைப் பற்றிப் பேசுகின்றன. மிகப் பெரிய நதியாக குறிக்கின்றன. ரிக் வேதத்தின் நதி வணக்கப்பாடலில் (நதி ஸ்துதி சூக்தம்) அது யமுனைக்கும் சட்லெஜ் நதிக்கும் (ஷுதுத்ரி) இடைப்பட்ட்தாக அறியப்படுகிறது. ஆனால் பின் வந்த பிராமணங்கள் அதை வற்றி வருவதாக அடையாளம் காட்டுகின்றன. மகாபாரதமும் அவ்வாறே சொல்கிறது. மனுஸ்மிருதியும் வசிஷ்ட தர்ம சூத்திரமும் அது மறைந்த பகுதிக்குக் கிழக்கேதான் ஆரியவர்த்தம் இருக்கிறது என்று சொல்கின்றன. அறிவியல் ஆய்வுகள் யமுனைக்கும் சட்லெஜுக்கும் இடையே ஒரு பெரிய நதி (காகர் – ஹக்ரா) இருந்து வற்றிப் போனதாகச் சொல்லுகின்றன. ஹரப்பா நாகரிகத்தின் பெரும்பாலான இடங்கள் இந்நதிகளின் கரைகளில்தான் அமைந்திருக்கின்றன.ஆனால் இந்த நதியின் தண்ணீர் பெருகிச் சென்ற காலம் இன்றைக்கு 9000 ஆண்டுகளிலிருந்து 4500 ஆண்டுகளுக்கு முன்னால்.எனவே இந்நதி ரிக்வேதம் எழுதப்படுவதற்கு குறைந்த்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வற்றியிருக்க வேண்டும். இதுவே ஹரப்பன் நாகரிகத்தின் மறைவிற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.என் நெருங்கிய நண்பர், மறைந்த டாக்டர் ராஜேஷ் கோச்சர் ( புகழ்பெற்ற –வானவியல்-இயற்பியல் அறிஞர்) சரஸ்வதி நதியை ஆப்கனிஸ்தானில் ஓடும் ஹெல்மந்த் நதியோடு அடையாளப்படுத்துகிறார். வேதகால மக்கள் கிழக்கே குடியேறத் துவங்கிய போது அவர்கள் பார்த்த பெரிய நதிகளை சரஸ்வதியோடு இணைக்கிறார்கள் என்கிறார். இது அவர் சொல்வது: In my book The Vedic People I have suggested that the naditama river Sarasvati of the old Rigvedic mandalas is to be identified with river Helmand in south Afghanistan. Drishadvati and Apaya are among its major tributaries, while Ganga and Yamuna are small streams near their origin. While describing Sarasvati, the older parts of the Rigveda use the term sindhu in the generic sense of a river, as in sindhu-mata ( the mother of rivers) and sapta-saindhava (the land of the seven rivers. Moving eastwards, when the Vedic people came across the Indus, it was mightier than any river they had seen before; so they named it The River. Moving further east, they temporarily called Ghaggar Sarsavati, noting that it loses its way in the sands. Remarkably, in the Rigveda (3.33), Satluj joins Beas and is thus already a part of the Indus system. When the Vedic people move further eastward, they come across two new rivers which they name Yamuna and Ganga. Recalling the reference in the tenth mandala, they associate Sarasvati with these two rivers and make it invisible.இந்தப் பின்புலத்தில் இப்போது நடக்கும் அகழ்வாராய்ச்சியைப் பார்க்கலாம். மதுராவிலிருந்து (இன்றுஅதற்கருகே யமுனை ஓடுகிறது) 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பஹாஜ் என்ற கிராமத்தில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 23 மீட்டர் அடி ஆழத்தில் வற்றிய நதி ஒன்றின் தடம் கிடைத்திருக்கிறது.(paleo channel). இது சரஸ்வதியாக இருக்கலாம் என்று சில அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதினாலும், இது யமுனை நதியின் தடமாகவும் இருந்திருக்கலாம். யமுனையின் ஓட்டம் திசை மாறிக் கொண்டே இருக்கிறது என்பதும் உண்மை. அப்படியே இது வேறு நதியாக இருந்தாலும் அதை வேதத்தில் சொல்லியிருக்கும் சரஸ்வதியோடு இணைக்க வலுவான ஆதாரங்கள் தேவை.இவ்வகழ்வாராய்வில் பிராமி எழுத்துகள் பொறித்த முத்திரைகள் கிடைத்திருக்கின்றன.அதன் காலம் இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதற்கும் வலுவான ஆதாரங்கள் தேவை. ஒன்றிரண்டு முத்திரைகளை வைத்துக் கொண்டு எந்த முடிவிற்கும் வந்து விட முடியாது.
Published on June 29, 2025 22:07
No comments have been added yet.
P.A. Krishnan's Blog
- P.A. Krishnan's profile
- 17 followers
P.A. Krishnan isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
