P.A. Krishnan's Blog

August 28, 2025

June 29, 2025

சரஸ்வதி நதி-  இருந்த நதியா அல்லது இலக்கிய நதியா?

(இது அவசரமாக எழுதப்பட்ட கட்டுரை. இன்னும் தகவல்கள் கிடைத்த பிறகு விரிவாக எழுதுகிறேன்.)

சரஸ்வதி நதியைப் பற்றி இதுவரை நமக்குத் தெரிந்திருப்பவற்றின் சுருக்கம்.

மூன்று வேதங்களும் இதைப் பற்றிப் பேசுகின்றன. மிகப் பெரிய நதியாக குறிக்கின்றன. ரிக் வேதத்தின் நதி வணக்கப்பாடலில் (நதி ஸ்துதி சூக்தம்) அது  யமுனைக்கும் சட்லெஜ் நதிக்கும் (ஷுதுத்ரி) இடைப்பட்ட்தாக அறியப்படுகிறது. ஆனால் பின் வந்த பிராமணங்கள் அதை வற்றி வருவதாக அடையாளம் காட்டுகின்றன.  மகாபாரதமும் அவ்வாறே சொல்கிறது. மனுஸ்மிருதியும் வசிஷ்ட தர்ம சூத்திரமும் அது மறைந்த பகுதிக்குக் கிழக்கேதான் ஆரியவர்த்தம் இருக்கிறது என்று சொல்கின்றன. அறிவியல் ஆய்வுகள் யமுனைக்கும் சட்லெஜுக்கும் இடையே  ஒரு பெரிய நதி (காகர் – ஹக்ரா) இருந்து வற்றிப் போனதாகச் சொல்லுகின்றன. ஹரப்பா நாகரிகத்தின் பெரும்பாலான இடங்கள் இந்நதிகளின் கரைகளில்தான் அமைந்திருக்கின்றன.ஆனால் இந்த நதியின் தண்ணீர் பெருகிச் சென்ற காலம் இன்றைக்கு 9000 ஆண்டுகளிலிருந்து 4500 ஆண்டுகளுக்கு முன்னால்.எனவே இந்நதி ரிக்வேதம் எழுதப்படுவதற்கு குறைந்த்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வற்றியிருக்க வேண்டும். இதுவே ஹரப்பன் நாகரிகத்தின் மறைவிற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.என் நெருங்கிய நண்பர், மறைந்த டாக்டர் ராஜேஷ் கோச்சர் ( புகழ்பெற்ற –வானவியல்-இயற்பியல் அறிஞர்) சரஸ்வதி நதியை ஆப்கனிஸ்தானில் ஓடும் ஹெல்மந்த் நதியோடு அடையாளப்படுத்துகிறார். வேதகால மக்கள் கிழக்கே குடியேறத் துவங்கிய போது அவர்கள் பார்த்த பெரிய நதிகளை சரஸ்வதியோடு இணைக்கிறார்கள் என்கிறார். இது அவர் சொல்வது: In my book  The Vedic People I have suggested that the naditama river Sarasvati of the old Rigvedic mandalas is to  be identified with river Helmand in south Afghanistan. Drishadvati and Apaya are among its major tributaries, while Ganga and Yamuna are small streams near their origin.  While describing Sarasvati, the older parts of the Rigveda use the term sindhu in the generic sense of a river, as in sindhu-mata ( the mother of rivers) and sapta-saindhava (the land of the seven rivers. Moving eastwards, when the Vedic people came across the Indus, it was mightier than any river they had seen before; so they named it The River. Moving further east, they temporarily called Ghaggar  Sarsavati, noting that it loses its way in the sands. Remarkably, in the Rigveda (3.33), Satluj joins Beas and is thus  already a part of the Indus system. When the Vedic people move further eastward, they come across two new rivers which they name Yamuna and Ganga. Recalling the reference in the tenth mandala, they associate Sarasvati with these two rivers and  make it invisible.இந்தப் பின்புலத்தில் இப்போது நடக்கும் அகழ்வாராய்ச்சியைப் பார்க்கலாம். மதுராவிலிருந்து (இன்றுஅதற்கருகே யமுனை ஓடுகிறது) 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பஹாஜ் என்ற கிராமத்தில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 23 மீட்டர் அடி ஆழத்தில் வற்றிய நதி ஒன்றின் தடம்  கிடைத்திருக்கிறது.(paleo channel). இது சரஸ்வதியாக இருக்கலாம் என்று சில அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதினாலும், இது யமுனை நதியின் தடமாகவும் இருந்திருக்கலாம். யமுனையின் ஓட்டம் திசை மாறிக் கொண்டே இருக்கிறது என்பதும் உண்மை. அப்படியே இது வேறு நதியாக இருந்தாலும் அதை வேதத்தில் சொல்லியிருக்கும் சரஸ்வதியோடு இணைக்க வலுவான ஆதாரங்கள் தேவை.இவ்வகழ்வாராய்வில் பிராமி எழுத்துகள் பொறித்த  முத்திரைகள் கிடைத்திருக்கின்றன.அதன் காலம் இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.  இதற்கும் வலுவான ஆதாரங்கள் தேவை.  ஒன்றிரண்டு முத்திரைகளை வைத்துக் கொண்டு எந்த முடிவிற்கும் வந்து விட முடியாது. 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 29, 2025 22:07

June 22, 2025

பட்டினப்பாலையின் காலம்

பெரியாழ்வாராலும் திருமங்கை மன்னனாலும் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட கோவில் திருச்சி மாவட்டத்தில் இருக்கும் திருவெள்ளறைக் கோவில். பெருமாள் செந்தாமரைக் கண்ணன். தாயார் பங்கயச் செல்வி.

இக்கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மனின் ஐந்தாம் ஆண்டில் (கி.பி 805) தொடங்கி மூன்றாம் நந்திவர்மன் சோழர்கள், விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள் என பல காலகட்டங்களில் செயல்பட்டதை அங்கிருக்கும் கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.

இக்கோயிலின் இரண்டாம் நுழைவாயிலில் மதுரையை சேர்ந்த சுந்தரபாண்டியன் காலத்தில் (கி.பி 1216) பொறிக்கப்பெற்ற கல்வெட்டில் காவேரி நாட்டை  அவன் எப்படி தனதாக்கி கொண்டான் என்பதை விளக்கும் பாடல இது:,

வெறியார் தவளத் தொடை செயமாறன் வெகுண்டதொன்றும்

அறியாத செம்பியன் காவேரி நாட்டிலரமியத்துப்

பறியாத தூணிலை கண்ணன் செல்பட்டினப் பாலைக்கன்று

நெறியால் விருந்தூண் பதினாறு மேயங்கு நின்றானே!

சுந்தரபாண்டியன் சோழ நாட்டை கைப்பற்றிய போது அங்கிருந்த எல்லா மண்டபங்களை இடித்து தள்ளினான். அவன் அழிக்காமல் விட்டது  இக்கோவிலில் இருக்கும் 16 தூண்களை உடைய மண்டபத்தை. ஏனென்றால் அம்மண்டபம் சோழ மன்னன் கரிகாலனை பாடியமைக்காக பட்டினப்பாலை பாடிய உருத்திரக்கண்ணருக்கு பரிசாக அளிக்கப்பட்டது என்பதால்.

இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. தமிழ் நாட்டில் கல்லால் ஆகிய மண்டபங்கள் கட்டப்பட்டது மகேந்திரவர்மன் காலத்திற்குப் பின்னர்தான். அதற்கு முன்னால் கட்டப்பட்டவை செங்கற்களால் ஆனவை.  மகேந்திரவர்மனின் காலம் பொது ஆண்டு 600லிருந்து 630 வரை. எனவே உருத்திரங்கண்ணனாருக்கு இம்மண்டபம் பரிசாக அளிக்கப்பட்ட காலம் இதற்குப் பின்னதாகத்தன் இருக்க வேண்டும். அக்கால கட்டத்தில் கரிகால் சோழன் எங்கிருந்து வந்தான்?  இதே இடத்தில் செங்கல் கட்டிடம் இருந்திருக்கலாம். அதன் இடத்தில் கல் மண்டபம் எழுப்பப் பட்டாலும் கரிகாலனின் கொடை நினைவு கூறப் பெற்றிருக்கலாம். இது வெறும் ஊகம்தான். பட்டினப்பாலையில் கரிகாலனின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அது திருமாவளவன் என்ற பெயரைத்தான் சொல்கிறது. இவனே கரிகாலன் என்று சொல்லியவர் நச்சினார்க்கினியர். உரை ஆசிரியர். எனவே இது இன்னொரு மன்னனைக் குறித்துப் பாடப்பட்டிருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. திரு ரா. ராகவையங்கார் தன்னுடைய பட்டினப்பாலைப் பதிப்பில் திருமாவளவன் என்ற பெயர் கரிகால் சோழனுடையது என்பதற்கு பல ஆதாரங்களைக் கொடுக்கிறார். ஆனால் அவை அனைத்தும் பிற்காலத்தியவை.  எனவே உருத்திரங்கண்ணனார் பாடிய அரசன் வேறு ஒருவனாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இது போன்ற புதிர்களுக்குப் பதில் தேடுவது தமிழ் வரலாற்று அறிஞர்களின் கடமை. பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களின் காலம் என்ன என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்பதுதான் உண்மை. வசதிக்கேற்ப கி மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி எட்டாம் நூற்றாண்டு வரை சங்க இலக்கியத்தின் காலத்தை அறுதியிடும் அறிஞர்கள் இருக்கிறார்கள்.  இது போன்ற சர்ச்சைக்குரிய ஆதாரங்களை வைத்துக் கொண்டு கீழடி  சங்ககாலத்தைச் சேர்ந்தது என்று சொன்னால் கீழடியின் காலத்தை மிகவும் பின்னுக்குத் தள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். சங்க இலக்கியத்தில் நகரத்தைப் பற்றி விரிவாகப் பேசும் மதுரைக் காஞ்சியும் கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 22, 2025 22:44

May 1, 2025

Gandhi’s reaction to the Butchery of Hindus -a rejoinder to Aravindan

Let me say this first. I am aware of the boundless regard Aravindan has for me. This is true of many other persons who joined him malign me. Thus, there is nothing personal in these debates. Of course, there are a few other buffoons and nitwits who have used his post to take potshots at me. I hold them in utter contempt. Now, about my Brahmin birth. Aravindan has separately written to me and said that his intent was not to hurt me. I believe him and hence I would let that matter rest. I know this will be extremely disappointing to Periyarist Nazis and other Brahmin-hating – and Aravindan-hating – nuts, but I can’t help it. However, if Aravindan wants to continue the discussion on these lines and give a few minutes of amusement to these weirdoes, I am ready for it.  

I have been a lifelong fighter on the side of Secularism – especially the Nehruvian brand of secularism. Most of the persons, including Aravindan, were not even born when I started my journey. It is therefore natural for me to get irritated when some of these persons who have newly found secularism try to teach me how to couch my secularism in an acceptable language. If this irritation is mistaken for arrogance, as has been done by some dimwits, I can’t help it. One Ambedkar-worshipping worthy has made a snide remark that a lifelong reading of Gandhi doesn’t make one Gandhian. I have never claimed myself to be a Gandhian. I am a lifelong student of Marx, Gandhi, and Nehru. That is all. In any case, I would remind this worthy of what Ambedkar had to say about Muslims in his famous book on Pakistan. What he wrote doesn’t diminish his secular credentials.

What did I exactly write that made these self-appointed guardians of secularism to bristle and pounce on me? It is just one word, – Hindu. This was what I wrote: My heart goes out to the Hindu families who have lost their dear ones. If I had not added the word ‘Hindu,’ all hell would not have broken loose. The guardians’ contention was that I had dirtied secularism beyond dry-cleaning by adding the word ‘Hindu.’ I was going through what I wrote on the 22nd of April, and these words that I wrote struck me: “Defend Democracy! Defend Secularism! Defend our Supreme Court.” I was also taking on the Hindutva fanatics. I didn’t watch the television that day and got to know of the attack in Pahalgam pretty late at night on that day or the next morning. If I remember rightly, it was DNA’s headlines that caught my attention. It screamed “Hindus Killed in Pahalgam Terror Attack.” I was not then aware that a Muslim was also killed in that attack, and my reaction was spontaneous. I never imagined that it would be nitpicked by self appointed guardians of secularism who had not had a single word of sympathy, until then, for the victims. Their convoluted reasoning was that my mentioning the word ‘Hindu’ would bring the entire Muslim community to disrepute. Now, there have been many attacks by terrorists in the past. This attack is different for a single reason. The terrorists sought out and identified Hindus and trained their guns on them. Yes, terrorism doesn’t have a religion. Yes, terrorists don’t represent Islam. But the victims were butchered because the terrorists identified them to be Hindus. A Nepali was killed. They also killed a Muslim who tried to help the tourists. It is the height of dishonesty to claim that they were killed because they were Indians. Even left-leaning media doesn’t claim that. For instance, in an interview for Frontline, Nirupama Subramaniam clearly says that the terrorists pulled out the tourists after ascertaining their religious identity and shot them execution-style.

Now to Gandhi.

Gandhi’s reaction to mutual butchery in the years 1946 and 1947 was, without doubt, one of anguish. But he never tried to hide the religious identity of the perpetrators. This is what he said in Noakhali in November 1946:

I have heard nothing but condemnation of these acts from Shaheed Suhrawardy [the Chief Minister of Bengal] downwards since I have come here. Words of condemnation may tickle your ears, but they are no consolation to the unfortunate women whose houses have been laid desolate or who have been abducted, forcibly converted, and forcibly married. What a shame for Hindus, what a disgrace for Islam!

This is what he said at his prayer meeting on September 12, 1947:

Let us know our own dharma. In the light of our dharma, I would tell the people that our greatest duty is to see that the Hindus do not act in frenzy, nor the Sikhs indulge in acts of madness… I appeal to the Muslims that they should open-heartedly declare that they belong to India and are loyal to the Union. If they are true to God and wish to live in the Indian Union, they just cannot be enemies of the Hindus. And I want the Muslims here to tell the Muslims in Pakistan who have become the enemies of the Hindus, not to go mad: ‘If you are going to indulge in such madness, we cannot co-operate with you. We will remain faithful to the Union, and salute the tricolour.’

Will these faux guardians accuse Gandhi of suspecting the loyalty of Indian Muslims?

There were instances in the 1920s when Muslims sought out Hindus and butchered them. The Moplah Rebellion of 1921 in Malabar, Kerala, began as an anti-British and anti-landlord uprising by Mappila (Moplah) Muslims but escalated into communal violence targeting Hindus, resulting in significant loss of life and property. Estimates vary, but official figures suggest around 2,339 rebels and sympathizers were killed, with unofficial claims of up to 10,000 deaths, alongside hundreds of Hindus killed, forcibly converted, or displaced. Mahatma Gandhi’s response to the Moplah violence was complex, reflecting his commitment to Hindu-Muslim unity, his support for the Khilafat movement, and his non-violent principles. He appealed to the Hindus to forgive the Mappilas for what they did in ‘ignorance’.

But Gandhi’s reaction to the Kohat massacre of Hindus and Sikhs in September 1924 was different. In fact, Gandhi said this even before the Kohat massacre:

Though the majority of the Mussalmans of India and the Hindus belong to the same stock, the religious environment has made them different… Though, in my opinion, non-violence has a predominant place in the Koran, the thirteen hundred years of imperialistic expansion has made the Mussalmans fighters as a body. They are therefore aggressive. Bullying is the natural excrescence of an aggressive spirit. The Hindu has an age-old civilisation. He is essentially non-violent. (Young India, June 5, 1924)

On the Kohat butchery, he was forthright in condemning the Muslims:

On the 10th, the Muslim fury knew no bounds. Destruction of life and property, in which the Constabulary freely partook, which was witnessed by the officials and which they could have prevented, was general. (Young India, September 25, 1924) Some of the Khilafat volunteers, who were expected to protect the Hindus, neglected their duty, and not only joined in the loot but also took part in the previous incitement. (Young India, September 25, 1924)

On September 18, 1924, Gandhi started a 21-day fast at Mohammad Ali’s residence. This is what he said:

The recent events in Kohat have overwhelmed me with grief… Hindu-Muslim unity has received a rude shock. I have no desire to live if I cannot see Hindus and Mussalmans living as brothers. I undertake this fast as a penance for my failure and as a prayer to God to purify the hearts of both communities.

This is what he said on February 26, 1925, in a letter written to Motilal Nehru:

I have discovered a wide gulf between Shaukat Ali and myself… He believes the riots were provoked by a Hindu poem derogatory to Islam, while I am convinced the conversions of Hindus and the general atmosphere of intolerance were the chief causes. It was as if I found a snake under my quilt.

How would Gandhi have reacted to the butchery of Pahalgam? He would have visited the place. He would have tried to heal the wounds. He would have undertaken a fast to emphasize Hindu-Muslim unity. But he would not have shown cowardice in hiding the fact that those who were butchered were overwhelmingly Hindus and that they were butchered solely because of their Hindu identity. Gandhi was never a coward.

                                                                                                                                                                          Ar

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2025 21:46

March 30, 2025

If Gandhi had not been around…

Let us assume that God did not choose to send Gandhi to India and sour the Hindutva dream. Let us assume that a strong Hindu leader took charge and rekindled the dormant spirit of the Kshatriyas.

What would have happened?

Democracy was not an option, because, as per the immutable definition of the Hindutva guys, Muslims were too uncivilized and barbaric to adopt a pristine idea like democracy. The Hindutva leaders of that era, too, were not too fond of democracy, but that is a different point. The Muslims would not chosen to live under an overtly dominant Hindu government. Consequently, there would, in all probability, have been a civil war, mostly fought in Punjab, UP, Bihar, Bengal, Central Provinces, NWFP, Sind, and in parts of Bombay and Assam.

The Muslims in India then comprised 25% of the population, and the civil war would have been horrendously murderous.

India then had 11 provinces. They were Bengal, Bombay, Madras, United Provinces, Punjab, Bihar, Assam, Central Provinces and Berar, Orissa, NWFP, and Sind.

Let us assume that the Hindutva leadership had managed to either evict or subdue the Muslims where they were minorities. The Muslim-majority provinces would, in any case, not have been subdued. Punjab, Bengal, NWFP, and Sind would have either chosen to remain separate, or a partition of Bengal and Punjab would have happened, as it really did in 1947.

Let us not forget the princely states.

The major princely states in India then were Hyderabad, Mysore, Jammu and Kashmir, Gwalior, Indore, Travancore, Bhopal, Jaipur, Jodhpur, Baroda, Patiala, and Udaipur. None of these states would have joined the rump India, as it would not have given them any advantage. In fact, Travancore, Baroda, and Mysore were very efficiently run, and they would not have liked to join the mess. Hyderabad would certainly have remained separate. So would have Kashmir. Dravida Nadu would not have emerged, but a separate Tamil Nadu would have materialized.

There would not have been any Akhand Bharat. There would certainly have been a dozen or more Hindu and Muslim states constantly warring with each other.

Let me say this loudly and clearly.

The cementing forces of 20th-century British India were the Indian National Congress and Mahatma Gandhi. The Congress appealed to a broad spectrum of the Indian upper and middle classes, while Gandhi brought the Congress’s message to the masses. He constantly spoke to them about not only Hindu-Muslim unity but also unity among Hindus. He was unique in that he urged the Hindu upper castes to embrace basic human values—a stance that was, of course, anathema to some Hindus.

The Hindutva proponents certainly didn’t deserve him, but India most certainly did.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2025 10:01

March 29, 2025

Did Gandhi blunt the Revolutionary movements in India?

Hindutva fanatics like Mr. Sai Deepak never tire of repeating that Gandhi blunted the ‘Kshatriya’ spirit of the Hindus. His logic seems to be that if Gandhi had not been around, India would have won its independence through revolution. He also regrets the fact that India – that is, the Hindus – did not spill enough blood.

What does history say?

In the 19th century, the biggest uprising against the British took place in 1857. Mr. Sai Deepak dismisses it as a failed attempt to restore Muslim rule. But who fought side by side with the British to defeat Bahadur Shah and the sepoys? The Rajputs! Notably, prominent Rajput states like Jaipur, Udaipur, Jodhpur, and Bikaner provided assistance to the British in the form of troops, supplies, and logistical support during the war. The Maratha states like the Scindias of Gwalior and the Holkars of Indore also largely remained loyal to the British, as they had been beneficiaries of British support and preferred to maintain their privileges.

I am not even talking about the Sikhs, who had fought a fierce war against the British just eight years earlier, but still chose to side with them in 1857.

What were the other revolutionary movements against the British in the 19th century?
The Southern Rebellion in the early years of the century, the Santhal Rebellion, the Kuka Rebellion, Uyyalawada Narasimha Reddy’s rebellion, and the Bhumiji Revolt were all minor affairs that didn’t even scratch the surface of imperialism.

In the 20th century, the Jugantar and Anushilan Samiti engaged in bombings, assassinations, and armed robberies, particularly after the 1905 partition of Bengal. In the south, Vanchinathan assassinated Ashe. Then there was the Ghaddar Movement.

All these activities took place before Gandhi’s emergence as a central figure. The revolutionary activities that occurred after Gandhi took the lead were spearheaded by the Hindustan Socialist Republican Association, led by Bhagat Singh, and the Chittagong Armoury Raid by Surya Sen. Neither of these had any connection to Hindutva politics, and both had a strong communist overtone.

This leaves the Indian National Army.

Hindutva fanatics conveniently forget that Subhas Chandra Bose was the first to call Gandhi the Father of the Nation, and his “Delhi Chalo” call was dedicated to him. Bose most certainly did not want to establish a Hindu Raj. Forty percent of his army comprised Muslims.

Now, how many soldiers fought in the Indian National Army in the Imphal and Kohima campaigns led by the Japanese imperial forces? Around 20,000. On the other hand, the Indian Army during the Second World War had 2.5 million soldiers. About 1.5 million of them were Hindus, a majority belonging to the so-called ‘Kshatriya’ (martial) races of the Hindus. More than 85000 soldiers shed blood for the British rather than freedom. At least 40000 of them must be Kshatriyas. Add to this about 75000 soldiers died in the First World War, the picture is complete.

This is the story of the revolutionary activities of India. It is pure canard to claim that Gandhi blunted them. In fact, the ‘Kshatriya’ classes blunted the revolution by joining the British.

Here’s a delicious irony.

Two Tamil Brahmins were closely associated with Savarkar during his India House days in London. One was V.V.S. Iyer. The other was an Iyengar, T.S.S. Rajan. Both became ardent Gandhians when Gandhi offered an alternative model! I am sure Sai Deepak has heard their names.

If one really wants to understand how a revolutionary movement evolves, one has to read the modern history of China.

When the Communists were massacred in Shanghai by Chiang Kai-shek’s forces in 1927, the Chinese Communist Party had around 60,000 members. More than 10,000 were killed. Mao Zedong abandoned the urban centers and retreated to rural strongholds. Initially, he had fewer than 1,000 followers. After years of solid work and the establishment of the Jiangxi Soviet, his Red Army grew to about 100,000 soldiers.

It was decimated by Chiang’s extermination campaigns, and at the end of the Long March, Mao had only around 10,000 followers left. In 1937, his Eighth Route Army was formed to counter Japanese aggression. It had about 30,000 troops. By 1945, when the Japanese were defeated, it had become a hardened force of 600,000 soldiers. This was the army that defeated the Kuomintang forces during the Chinese Civil War.

To cut a long story short, armed revolution succeeded in China because its people wanted it. A Gandhian revolution happened in India because Indians wanted it. The ‘Kshatriyas’ were largely with the British. And yes, the forefathers of the Hindutva fanatics were with them too.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2025 09:24

March 19, 2025

அரசியல் குழியில் அகழ்வாராய்ச்சி

காலச்சுவடு மார்ச் 2025ல் வெளிவந்த கட்டுரை:

அகழ்வாய்வும் அரசியலும்

அகழ்வாய்வு என்றும் அறிவியலோடு நெருக்கமாக இருக்க வேண்டும். அரசியலில் இருந்து எத்தனை தொலைவில் இருக்க முடியுமோ அத்தனை தொலைவில் இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் அகழ்வாய்வும் தொல்லியல் துறைகளும் அறிவியலை விட்டு வெகு தூரம் சென்று விட்டன என அண்மைக்கால நிகழ்வுகள் சில நினைக்க வைக்கின்றன. அவை அரசியலை இறுக்கமாக அணைத்துச் செயல்படுகின்றன. முன்முடிவுகளோடு அகழ்வாய்வுகள் அணுகப்படுகின்றன. முழுமையான நோக்கு இல்லாமல் தேவையானவற்றை மட்டும் உருவி எடுத்து, அவற்றை வைத்துக் கொண்டு தங்களுக்குத் தோதான தரவுகளை முன் வைத்து அவற்றின் மூலம் முன்முடிவுகளை நிறுவும் வேலைகள்தான் இங்கு நடக்கின்றன.

தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை இந்த ஆண்டு “இரும்பின் தொன்மை – தமிழ் நாட்டில் அண்மைக்கால கதிரியக்கக் கணக்கீடுகள்” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. அகழ்வாய்வு ஆராய்ச்சிப் பதிவுகள் அடங்கிய புத்தகம் அரசியல் வெளியீடு போல அமைச்சர்களின் ஆசி பெற்று வருவது இந்தியாவில் மட்டும் நடைபெறும் அதிசயம். சில அகழ்வாய்வாளர்களும் புத்தகத்திற்கு பட்டும் படாமலும் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆரியர்கள் வரவு என்பதே பொய், அவர்கள் இந்தியாவிலேயே இருந்தவர்கள் என்ற முன்முடிவை நிறுவ வட இந்தியாவில் நடத்தப்படும் விந்தை நிகழ்வுகளுக்கு ஈடாக தமிழகத்திலும் நடைபெறுகிறது. இங்கு தமிழன் உலக நாகரிகத்தின், இந்திய நாகரிகத்தின் முன்னோடிகளில் முதல்வன் என்ற முன்முடிவை நிறுவ என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை அனைத்தும் செய்யப்படுகின்றன.

இரும்புக்காலம் என்றால் என்ன?

இரும்பின் தொன்மை என்ற தலைப்பு சரியானதாகத் தோன்றவில்லை. இரும்பு 150 கோடி ஆண்டுகள் தொன்மையானது. பூமியின் மையத்தில் இருப்பதே சுமார் 85 சதவீதம் இரும்புதான். புத்தகம் பேசுவது இரும்புக் கருவிகளின் தொன்மையைப் பற்றி. துல்லியமாகச் சொல்லப்போனால் மனிதன் இரும்பை மற்றப் பொருட்களிலிருந்து பிரித்தெடுத்த காலத்தின் தொன்மையைப் பற்றி. அதை முதலில் செய்தது தமிழன்தான் என்று நிறுவ வாய்ப்பு இருக்கிறது என்பதைச் சொல்லும் புத்தகம் இது. ஆனால் அப்படி வாய்ப்பு இருக்கிறது என்று சொல்ல புத்தகம் கொடுக்கும் தரவுகள் சரியானவையா என்பதைப் பார்க்க வேண்டும்.

அவற்றைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், நம் முன்னோர்கள் வாழ்ந்த காலம் எவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றிய தெளிவு வேண்டும். அது முக்கியமாக மூன்று காலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதலாவது கற்காலம், இரண்டாவது வெண்கலக்காலம். மூன்றாவது இரும்புக் காலம். இவற்றிற்குள் உட்பிரிவுகள் இருக்கின்றன. உதாரணமாக கற்காலம் பழைய கற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது.  (Paleolithic, Mesolithic, Neolithic). இதே போல கற்காலத்திற்கும் வெண்கலக் காலத்திற்கும் இடையே இருந்த காலம் செம்பு (chalcolithic) காலம் என்று அழைக்கப்படுகின்றது.

இப்பிரிவுகளுக்கான காரணம் எளிமையானது. கற்காலத்தில் மனிதன் கல்லைக் கருவியாகப் பயன்படுத்தத் துவங்கினான். அக்கருவிகளில் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட கருவிகளின் வடிவங்கள் மாறத் துவங்கின. அவற்றின் திறன்கள் வலுப்படத் துவங்கின. நெருப்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் துவங்கிய மனிதன் அதை வைத்து மண்ணில் கிடைக்கும் உலோகங்களை உருக்கி அவற்றைப் பிரித்தெடுக்கக் கற்றுக் கொண்டான்.  செம்பை உருக்குவதற்குத் தேவையான வெப்பம் 1100 C. முதலில் செம்பை உருக்கிய அவன், அதையும் தகரத்தையும் (உருக்கத் தேவையான வெப்பம் 232 C) சேர்த்து வெண்கலத்தை உருவாக்கக் கற்றுக் கொண்டான். இரும்புத் தாது கணிசமாகக் கிடைத்தாலும் அதை உருக்க அதிக வெப்பம் (1280 C) தேவையாக இருந்தது. அதற்கான தொழில் நுட்பம் அன்றைய மனிதனிடம் இல்லை.

 இப்பிரிவுகள் ஒன்றன் பின் ஒன்றாக உலகம் முழுவதும் ஒரே சமயத்தில் வந்தன என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இது நம் வசதிக்காக, நாம் வரலாற்றைப் புரிந்து கொள்வதற்காக, அமைக்கப்பட்ட பிரிவு. அவ்வளவுதான்.  உதாரணமாக வெண்கலக் காலம் என்ற ஒன்று தமிழகத்தில் இருந்ததே இல்லை. கற்காலத்திலிருந்து நாம் இரும்புக்காலத்திற்கு வந்து விட்டோம்.

இந்தப் பின்புலத்தில் நாம் இரும்புக் காலத்தைப் பார்ப்போம்.

இரும்புக்காலம் என்றால் என்ன? இரும்பை வைத்து மனிதன் ஆயுதங்களையும், விவசாயத்திற்குத் தேவையான கருவிகளையும் பரவலாக பயன்படுத்தத் துவங்கிய காலம். இது வரலாற்றிற்கு முந்தைய காலம். அதாவது மனிதன் எழுத்தறிவு அதிகம் பெற்றிராத காலம். வரலாற்றுப் பதிவுகள் இல்லாத காலம். விதி விலக்குகளும் இருக்கின்றன.. உதாரணமாக எகிப்து நாட்டில் இரும்பு வருவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே எழுத்து முறை இருந்தது. வரலாறு பதியப்பட்டு வந்தது.

இந்தியா ஒரு விதி விலக்காக இருக்கலாம். சிந்துச் சமவெளி நாகரிகத்தில் கிடைத்திருக்கும் வரிவடிவங்கள் எழுத்துகள்தாம் என்பது நிறுவப்பட்டால்,  அதுவும் வரலாற்றுக் காலத்திற்குள் வரலாம். வரலாற்றுக் காலம் என்பதும்  இடத்திற்கு இடம் மாறுபட்டிருந்தது என்பதை விளக்கத் தேவையில்லை.

 ஒரு இடத்தில் இரும்புக்காலம் பிறந்தது என்று சொல்ல வேண்டுமானால் இரும்பைப் பரவலாக அங்கிருந்த மனிதன் பயன்படுத்தத் துவங்கிய காலமாக அது இருக்க வேண்டும்.  இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் ஆயுதங்களின் துணையோடு அண்டையில் இருக்கும் பகுதிகள் மீது படையெடுக்கத் துவங்கிய காலத்தையும், விவசாயத்தின் மூலம் உணவு உற்பத்தித் திறனைப் பெருக்கி மேலும் உபரி வருமானத்தை உண்டாக்கத் துவங்கிய காலத்தையு்ம், அதனால் மக்கள் தொகை பெருகிய காலத்தையுமே இரும்புக் காலம் என்று அழைக்க முடியும். முக்கியமாக விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரும்புக்கருவிகள் வெண்கலக் கருவிகளை விட அதிகம் திறனுடையவையாக இருந்தன. அதிகம் தாக்குப் பிடித்தன. மனிதகுலத்தின் தொழில் நுட்பத் திறன் வெகுவாக அதிகரித்தது.

இரும்புக்காலத்திற்கு முன் இரும்பு

இரும்புக்காலம் வந்தபிறகுதான் மனிதன் இரும்பை பயன்படுத்தத் துவங்கினான் என்று ஆய்வுகள் சொல்லவில்லை. மாறாக இரும்புக்காலத்திற்கு முன்னாலேயே மனிதன் இரும்பைப் பயன்படுத்திக்   கொண்டிருந்தான் என்று சொல்கின்றன. ஆப்பிரிக்காவில் இரும்பு தயாரிப்பது இன்றைக்கு 5600 ஆண்டுகளுக்கு முன் துவங்கி விட்டது என்று புகழ் பெற்ற Science  பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை சொல்கிறது. (இக்கட்டுரையைப் பற்றி பின்னால் விவாதிக்க இருக்கிறேன்.) எனவே இரும்பு ஒரு இடத்தில் பயன்படுத்தப்பட்டது என்பதை மட்டும் வைத்துக் கொண்டு அது இரும்புக்காலத்தின் துவக்கம் என்று சொல்லிவிட முடியாது. அதனால் விவசாயம் வலுபெற்றதா? மற்ற இடங்களுக்கு இரும்பு தயாரிக்கும் முறை பரவியதா? மக்கள் தொகை அதிகரித்ததா போன்ற பல விவரங்கள் தெரிந்தால்தான் அவ்வாறு நாம் சொல்ல முடியும்.

இரும்பின் காலம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

சிவகளையிலும் மற்றைய இடங்களிலும் கிடைத்த இரும்பின் காலம் அதே குழியில் கிடைத்த கரித்துண்டின் காலத்தை வைத்துக் கணக்கிடப்பட்டிருக்கிறது. அதாவது இரும்பும் அதுவும் ஒரே இடத்தில் கிடைத்ததால் அவை இரண்டும் ஒரே காலத்தியது என்று ஊகம் செய்யலாம் என்று அகழ்வாய்வாளர்கள் கருதுகிறார்கள். இவ்வாறு செய்ய முடியுமா, அறிவியல்பூர்வமாக அத்தகைய கணிப்பு ஒப்புக்கொள்ள முடியுமா போன்ற கேள்விகளுக்குப் பதில்களைத் தேடுவதற்கு முன்னால் அகழ்வாய்வு குறித்த சில விவரங்களையும் விதிகளையும்  புரிந்து கொள்வது அவசியம்.

மண்ணடுக்கு – Stratigraphy

ஓர் இடம் மண்மூடிப் போகும் போது, மண்ணுக்கு அடியில் இருக்கும் பொருள்கள் எந்த இடத்தில் புதையும் போது இருந்தனவோ அதே இடத்தில் அப்ப்படியே இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன – நில அதிர்வு, வெள்ளம் , மனிதர்களே அங்கு தோண்டிப்பார்த்து திரும்ப மூடுவது போன்ற நிகழ்வுகள் ஏற்படாத வரை.  ஒரே இடத்தில் மனிதன் பல தலைமுறைகள் வாழ்ந்திருக்கலாம். அது நடக்கும்போது அவனது வாழ்விடம் முந்தையர் வாழ்ந்த இடத்தில் மேல் இருக்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன. வாழும் இடத்தில் மண்ணில் மாற்ற ஏற்பட்டாலும் அதன் அடியில் புதைந்து இருப்பவற்றில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. இது தொடர்ந்து நடக்கும் போது பல அடுக்குகள் ஏற்படுகின்றன. இதை அகழ்வாய்வாளர்கள் மண்ணடுக்குகள் (Stratigraphy) என்று அழைக்கிறார்கள்

மண்ணடுக்கு விதிகள்

அதாவது ஒரு இடத்தில் காலப்போக்கில் மண், மணல், பாறை, பாகுபட்ட பொருட்கள் ஆகியவை அடுக்குகளாக தேங்குகின்றன. ஒவ்வொரு அடுக்கும் (stratum) ஒரு குறிப்பிட்ட காலத்தினை குறிக்கும். பழைய அடுக்குகள் கீழே இருக்கும்.  புதியவை மேலே இருக்கும். எனவே மண்ணடுக்குகளில் தொல்பொருடகள் கீழுள்ள மண்ணடுக்குகளில் காணப்படும் எனில் அவை காலத்தால் முற்பட்டவை. நடு அடுக்குகளில் கிடைக்கும் தொல்பொருட்கள்  கீழடுக்களில் கிடைக்கும் பொருட்களுக்கு காலத்தால் பிறபட்டவை.. மேலுள்ள மண்ணடுக்களில் கிடைப்பவை காலத்தால் கீழுள்ள அடுக்குகளில் கிடைத்தவற்றிற்குப் பிற்பட்டவை. இது Law of Superposition (மேற்கிடை நிலை விதி?) என்று அழைக்கப்படுகிறது. இதைத்தவிர இன்னொரு விதியும் இருக்கிறது: எந்த மண்ணடுக்கின் காலமும்  அதில் கிடைக்கும் மிகவும் பிற்பட்ட காலத்திய தொல்பொருளை விட முன்னதாக இருக்காது.  அதாவது ஒரு மண்ணடுக்கில் 18ம் நூற்றாண்டுப் பொருள் கிடைத்தால் அந்த அடுக்கு 17ம் நூற்றாண்டில் ஏற்பட்டிருக்க முடியாது என்று இந்த விதி சொல்கிறது. இதை இன்னும் தெளிவாகச் சொல்கிறேன். ஒரு இடத்தில் சோழர்கள் கால படிமம் ஒன்றும் பால்பாயிண்ட் பேனா ஒன்றும் கிடைத்தால் அந்த இடத்தின் காலம் சோழர் காலப் படிமத்தியது அல்ல. பால்பாயிண்ட் பேனாவின் காலத்தியது என்பதுதான். இன்னொன்றும் சொல்ல வேண்டும் சோழர் காலப்படிமமும் பால்பாயிண்ட் பேனாவும் ஒரே அடுக்கில் கிடைத்தன் என்பதினால் பால் பாயிண்ட் பேனா சோழர் காலத்திலேயே இருந்தது என்று சொல்ல முடியாது.  இனி இரும்பும் கரித்துண்டும் ஒரே இடத்தில் கிடைத்தால் கரித்துண்டின் காலமும் இரும்பின் காலமும் ஒன்றுதான் என்று சொல்ல முடியுமா என்ற கேள்விக்கு வருவோம். இது கரித்துண்டு எங்கே இருந்தது என்பதைப் பொருத்திருக்கிறது. தோண்டும்போது ஒரு அடுப்பும் கரித்துண்டுகளும் இரும்புப் பாத்திரங்களும் கிடைத்தால் இரும்புப்பாத்திரமும் கரித்துண்டுகளும் ஒரே காலத்தியதாக இருக்கும் என்று ஊகம் செய்யலாம். இது போன்ற இல்லாத பட்சத்தில் கரித்துண்டின் காலத்தை இரும்பின் மீது ஏற்றுவது சரியாக இருக்காது. ஒரு இடத்தில் கரித்துண்டு இருப்பது பல காரணங்கள் இருக்கலாம். அது அங்கே இரும்புப் பொருட்கள் புதைபடும் முன்னால் இருந்திருக்கலாம். வேறு எங்கோ கிடைத்த கரியை/ காட்டுத்தீயால் உருவான கரியை மனிதன் அங்கு கொண்டு வந்திருக்கலாம். இது போன்று பல காரணங்கள் இருக்கலாம். மேலும் ஒரு அடுக்கில் சிதைவுற்றதின் அடையாளங்கள் இருந்தால் (அதாவது புதைந்திருந்த இடத்தை மனிதன் திரும்பத் தோண்டியிருக்கலாம். இடம் நாளடையில் மறுபடியும் புதைந்து போய் இருக்கலாம்) அங்கு கிடைக்கும் பொருட்களின் வயது ஒரே காலத்தியதாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

இனி புத்தகத்திற்கு வருவோம்

புத்தகம் என்ன சொல்கிறது?

“இரும்பின் தொன்மை” புத்தகம் என்ன சொல்கிறது?

தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பிட்ட சில இரும்பு ஆலைகளைப் பற்றிப் பேசி விட்டு அவை கி.மு ஐந்தாம் நூற்றாண்டிற்கு முந்தையதாக இருக்கலாம் என்கிறது. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் புத்தகம் பேசும் காலத்தைய -அதாவது இன்றைக்கு சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த- எந்த இரும்பு ஆலையும் மாங்காடு, கீழ்நமண்டி, மயிலாடும் பாறை, ஆதிச்சநல்லூர், சிவகளை போன்ற இடங்களில் கண்டுபிடிக்கவில்லை என்பதுதான். தமிழ் நாட்டில் எந்த இடத்திலும் அக்காலகட்டத்தின் இரும்பு ஆலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.(ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 4000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஆலை கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இது உள்ளூர் மக்கள் தோண்டி அவர்களாகவே அறிவித்தது. எந்தச் சான்றுகளையும் கொடுக்கவில்லை.)

மாங்காடு முதலிய இடங்களில் எல்லாம் இரும்புப் பொருட்கள் ஈமக்குழிகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இக்குழிகளில் கிடைத்த கரித்துண்டுகளின் காலத்தைக் கணக்கிட்டு அதன் காலமும் இரும்பின் காலமும் ஒன்றுதான் என்று சொல்லப்படுகிறது. ஈமக்குழிகள் என்பவை மனிதர்கள் மீண்டும் மீண்டும் வரும் இடம். எனவே அவற்றில் இருக்கும் எல்லாப் பொருட்களும் சமகாலத்தியவையாக இருக்கலாம் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது.

மாங்காடு, கீழ்நமண்டி மற்றும் மயிலாடும் பாறை

மாங்காட்டில் சிதைவுற்ற கல் பதுக்கையிலிருந்து கிடைத்த வாளின் காலம் கி.மு. 1510 என்று சொல்கிறது. இது சிதைவுற்ற பதுக்கையிலிருந்து எடுக்கப்பட்டது என்று புத்தகமே சொல்வதால்  இதை எவ்வாறு கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை. இங்கு முக்கியமாக இன்னொன்றும் சொல்ல வேண்டும். மாங்காட்டில் எடுத்துக் கொண்ட மாதிரி இரும்பு. கரித்துண்டு அல்ல.  இதே போன்று சேலம் மாவட்டத்தில் தெலுங்கனூர் என்ற இடத்தில் கிடைத்த வாளின் காலம் கணிக்கப்பட்டது. இங்கு பிடிக்கு ஒரு காலமும் (1425-1233 கி.மு.) வாளுக்கு ஒரு காலமும் (2900 -2627 கி.மு.)கிடைத்தது இரண்டிற்கு இடையே வித்தியாசம் சுமார் 1500 வருடங்கள்!

 கீழ்நமண்டியில் கிடைத்த இரும்புப் பொருட்களில் காலம் கி.மு 1692 என்று புத்தகம் சொல்கிறது. இங்கு மாதிரியாகக் கொடுக்கப்பட்டது கரித்துண்டு. அது ஈமப்பேழைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த கல்வட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது. அது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பதைப் பற்றிய தகவல் இல்லாமல் அதன் வயதை இரும்பிற்கு ஏற்றுவது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றவில்லை.

மயிலாடும் பாறை அகழ்வாய்வுகளைப் பற்றி தமிழ் நாடு அரசு இன்னொரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது: அது சொல்வது இது:¨ வாழ்விடம் மற்றும் ஈமத்தளத்தில் முதன்முதலில் 2003-ஆம் ஆண்டு  தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்  கா.ராஜன் அவர்களால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்அகழாய்வில்  வெளிக்கொணரப்பட்டநம்பிக்கை  அளிக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில், முறையான அகழாய்வுப் பணிகள் 2021-ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டது.  அகழாய்வுத் தளத்தில் நான்காம் பகுதியில் இடப்பட்ட அகழாய்வுக்குழிகளிலிருந்து  பெறப்பட்ட மாதிரிகளின் வழி முக்கியமான இரண்டு AMS காலக்கணிப்புகள்  பெறப்பட்டுள்ளன.  இவ்விரண்டு மாதிரிகளும் முறையே 104 செ.மீ  மற்றும்  130 செ.மீ  ஆழத்தில் இருந்து பெறப்பட்டுள்ளன.  இவற்றின் சராசரி  மைய அளவீட்டுக்காலம் (Mid-range calibrated dates) முறையே கி.மு 1615 மற்றும் கி.மு 2172 ஆகும்.

புத்தகத்தில் இரும்புப் பொருட்கள் எங்கே இருந்தன என்ற தகவல் கொடுக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் வாழ்விடப் பகுதிக்கும் ஈமப்பகுதிக்கும் இடையே இருந்த தொடர்பு பற்றியும் வாழ்விடப் பொருட்களின் காலம் பற்றியும் ;புத்தகம் ஏதும் தெளிவாகக் குறிப்பிடவில்லை.

ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை

ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வுகள் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் நிகழ்ந்தன. பின்னர் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்தன. இங்கு இந்தியத் தொல்லியல் துறையும் தமிழ் நாடு தொல்லியியல் துறையும் iஅகழ்வாய்வுகள் நடத்தின. இதில் இந்தியத் தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் நெல் தானிய மாதிரிகள் காலக்கணக்கீட்டிற்கு அனுப்பப்பட்டன. கிடைத்த காலம் கி.மு.650 -840. இதே ஆதிச்ச நல்லூரில் தமிழ் நாடு தொல்லியல் துறை நடத்திய அகழ்வாய்வில் வாழ்விடப் பகுதியில் மேற்கொண்ட காலக்கணக்கீடில் கரித்துண்டின் காலம் கி.மு 2613 என்று அறியப்படுகிறது. இங்கும் இரும்பிற்கும் கரித்துண்டிற்கும் இடையே இருக்கும் தொடர்பு தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

இனி சிவகளைக்கு வருவோம். சிவகளைப் பறம்பில் மொத்தம் 17 அகழ்வாய்வுக் குழிகள் (10×10 மீட்டர்) தோண்டப்பட்டன. அகழ்வாய்வுக் குழியின் இவற்றில் முக்கியமான குழிகள் A 2 பகுதி II மற்றும் III. A 2 பகுதியில் மூன்றாவது தாழி இறுக்கமாக இருந்தது. அதில் இருந்த நெல்மணியும் இரும்பாலான பொருட்களும் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கி.மு 1155.  

மற்ற தாழிகளில் மண் ஊடுருவி இருந்தன. இவற்றின் உள்ளிலும் வெளியிலும் இரும்புப் பொருட்கள் கிடைத்தன. இக்குழிகளில் கிடைத்த கரி மாதிரிகளின் காலம் கி,மு. 2953 முதல் 3345 வரை.

இனி புத்தகம் சொல்பவற்றை ஆராய்வோம்.

அரிசி மணிகளின் காலத்தையும் கரித்துண்டுகளின் காலத்தையும் இரும்புப் பொருட்களுக்கு மாற்றி இருக்கிறது என்பதைத் தவிர ,கிடைத்த  பொருட்களின் கால வேறுபாடு 2000 ஆண்டுகளுக்கும் மேல். அதுவும் ஒரே பத்திற்கு பத்து மீட்டர் பகுதியில் கிடைத்த பொருட்களின் காலவேறுபாடு.  புத்தகம் என்ன சொல்ல வருகிறது? இரண்டாயிரம் வருடங்களாக அதிகமாக எந்த மாற்றமும் இல்லாமல் வளர்ச்சியும் இல்லாமல் ஒரே மாதிரியான வாழ்க்கையை மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்களா? ஒரு அகழ்வாய்வாளர் என்னிடம் பேசிக் கொண்டிருந்த போது 2000 ஆண்டுகள் கோலி விளையாடிக் கொண்டிருந்தார்களா என்று கேட்டார். இந்த இடங்களில் விவசாயம் எவ்வாறு நடந்தது, அவற்றில் பயன்படுத்தப்பட்ட இரும்புப் பொருட்கள் என்ன என்பது பற்றிய எந்தத் தகவலையும் புத்தகம் தெரிவிக்கவில்லை. மேலும் இரும்புப் பொருட்கள் இரண்டாயிரம் ஆண்டுகளில் மாற்றமே இல்லாமல்  இருந்தனவா? ஒரே மாதிரியான இரும்புப் பொருட்களை மக்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தார்களா? இவற்றைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.இனி காலத்திற்கு வருவோம். இதை நான் கீழடி பற்றிய விவாதத்தில் சொன்னேன். இக்கட்டுரையின் முற்பகுதியின் சொன்னேன். இ்ங்கும் சொல்கிறேன்.. இவர்கள் கொடுத்திருக்கும் காலம் மண்ணடுக்குகளில் கிடைத்த கரித்துண்டுகளின் காலம். இரும்பின் காலம் அல்ல. சிவகளையில் வேறு சிக்கல்களும் இருக்கின்றன. மூடி இறுக்கமாக இருக்கும் தாழியில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலமும் வெளியில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலமும் இவர்கள் கூற்றுப்படியே வெவ்வேறாக இருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டு வித்தியாசம். புத்தகம் இம்மண்ணடுக்குகளில் கிடைத்த வேறு பொருட்களைப் பற்றியோ அவற்றின் காலங்களைப் பற்றியோ குறிப்பிடவில்லை.கொடுமணலைத் தவிர வேறு எந்த இடங்களிலும் இரும்பை உருக்கும் உலைகள் கிடைக்கவில்லை. இரும்பு இருப்பதை வைத்து அங்கே இரும்பு உருக்கும் உலைகள் இருந்திருக்கலாம் என்ற ஊகம்தான் செய்ய முடிகிறது. அதே இடத்தில் வெண்கலப் பொருட்களும் கிடைத்திருக்கின்றன. அவை இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்று புத்தகம் சொல்கிறது. வெண்கலப் பொருட்களை இறக்குமதி செய்யக்கூடிய திறன் படைத்தவர்கள்  இரும்பு தயாரிக்கும் உத்தியை மற்றவர்களுக்குத் தந்திருக்க மாட்டார்களா? அப்படித் தந்திருந்தால் இரும்பு குறைந்தது தென்னிந்தியா முழுவதும் பரவலாக இருந்திருக்காதா? இரும்பின் பயன்பாடு இவர்கள் கூறும் காலக்கட்டத்தில் பரவலாக இருந்ததாக எந்தச் சான்றும் இல்லை.இரும்பு தயாரிப்பது எளிதல்ல.  அதற்குக் கரி (charcoal) தேவை. கரி தயாரிப்பதற்கு மக்கள் தேவை. இவ்வாறு மக்களைத் திரட்டி வேலை செய்ய வைக்க அமைப்பு தேவை.  பெருமளவு மக்களின் வாழ்வு முறையை மாற்றும் அளவிற்கு இரும்பு தயாரிக்க பேரமைப்பு தேவை. அது போன்ற பேரமைப்பு இவர்கள் சொல்லும் காலத்தில் இருந்திருப்பதற்கான எந்தத் தடையங்களும் நமக்குக் கிடைக்கவில்லை.தமிழ் நாட்டில்  நெல் சாகுபடி பரவலாக 3000 ஆண்டுகளுக்கு உள்ளாகத்தான் துவங்கியது. அதே போன்று நகரங்களோ, பெரிய கட்டிடங்களோ, இயற்கையை வெகுவாக மனிதன் மாற்றியிருக்கும் தடையங்களோ நம்மிடம் ஏதும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இல்லை.புத்தகம் இன்னொரு முக்கியமான தகவலைக் கொடுக்கிறது. அதை ஆசிரியர்கள் குறிப்பிடாமல் விட்டது வியப்பை அளிக்கிறது.  நெல்மணிகளின் காலம் ஆதிச்சநல்லூரிலும் கணக்கிடப்பட்டது. சிவகளையிலும் கணக்கிடப்பட்டது. சிவகளை ஆதிச்சநல்லூரில் இருந்து 15 கிலோமீட்டரில் இருக்கிறது. ஆதிச்ச நல்லூரில் கிடைத்த நெல்மணிகளின் காலங்கள் மூன்று இடங்களில் கணக்கிடப்பட்டன. அவை  கி.மு. 1052, 1257 மற்றும் 1384. சிவகளையில் கிடைத்த நெல்மணிகளின் காலம் கி.மு.1155. நெல்மணிகள் கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்தில் இருப்பதும் கரித்துண்டுகளின் கால வித்தியாசம் ஆயிரக்கணக்கில் இருப்பதும் எதைக் காட்டுகிறது? கரித்துண்டின் காலத்தை வைத்து எதையும் கணிப்பது சரியாக இருக்காது என்பதைத்தானே? அதுவும் ஒரே இடத்தில் அருகருகே இருக்கும் தாழிகளுக்கு இடையே இவ்வளவு வித்தியாசம் இருக்குமானால் அதை வலுவான சான்றாக ஏற்றுக் கொள்ள முடியுமா?புத்தககம் தரும் மற்றொரு வியப்பான தகவல் ஒரே குழியில் இருக்கும் இரண்டு தாழிகளுக்கு இடையே இருக்கும் கால வித்தியாசம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல்! அதாவது ஒரே குழியில் இரண்டாயிரம் ஆண்டுகள் புதைப்பது நடந்து கொண்டிருந்தது என்பது நம்பக் கூடியதாகவா இருக்கிறது? அதுவும் அங்கு இருக்கும் தாழிகளுக்கு அதிகச் சேதம் இல்லாமல்?

8. எனக்குத் தெரிந்து ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் அக்காலத்திய செங்கல் கிடைத்ததாகத் தெரியவில்லை. இரும்பை உருக்கும் தொழில் நுட்பத்தை விட செங்கல் செய்யும் தொழில் நுட்பம் கடினமானது அல்ல. வெட்பமும் இரும்பை உருக்குவதை விட அதிகம் தேவையில்லை. செங்கல் என்ற சொல்லே தமிழில் மிகப் பின்னால் வருகிறது. சங்க இலக்கியத்தில் கூட செங்கல் என்ற சொல் இடம் பெறவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ‘இஷ்டிகா’ என்ற வடமொழிச்சொல்லின் தமிழ் வடிவமான இட்டிகை என்ற சொல்லே அகநானூற்றில் பயன்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால் உலகில் மற்றைய இடங்களில் செங்கல் கி.மு 3500 ஆண்டு காலத்திலேயே பயன்படுத்தப்படத் துவங்கி விட்டது. சிந்துச் சமவெளி நாகரிகத்திலும் செங்கல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.  ஆனால் தென்னிந்தியாவில் செங்கல் கி.மு மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகே பரவலாகக் கிடைக்கத் துவங்குகிறது. எனவே  இரும்பைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு செங்கல் செய்யும் முறை ஏன் தெரியவில்லை என்ற கேள்வி எழுகிறது. அதுவும் இரும்பை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உலகில் மற்ற இடங்களில் பயன்படுத்துவதற்கு முன்னால் பயன்படுத்திய மக்களுக்கு செங்கல் பற்றிய தொழில் நுட்பம் தெரியவில்லை என்று கூற முடியுமா? அதுவும் வெண்கலப் பொருட்களை இறக்குமதி செய்து கொண்டிருந்த ஆதிச்சநல்லூர் மக்களுக்கு செங்கலைப் பற்றி ஏன் தெரியவில்லை?

ஆப்பிரிக்க உதாரணம்

இந்த ‘கரித்துண்டு’  விவகாரத்தை நான் மட்டும்தான் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். Science கட்டுரையைக் குறித்து முன்னே குறிப்பிட்டிருந்தேன். அது சொல்பவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

Several French and Belgian archaeologists have pointed to evidence from sites in Niger, Rwanda, and Burundi suggesting that Africans invented ironworking independently as early as 3600 B.C.E. Their analyses were strongly criticized by prominent researchers in the United States, who argued that the early radiocarbon dates likely came from wood older than the iron artifacts. In reviewing the debate in a 2005 paper in the journal History in Africa, independent scholar Stanley Alpern suggested that Francophone researchers had fallen under the influence of African nationalism and pride, which blinded them to problems in their data.

அதாவது பிரெஞ்சு மற்றும் பெல்ஜியன் தொல்லியல் வல்லுனர்கள் நைஜர், ருவாண்டா, புருண்டி போன்ற இடங்களில் ஆய்வு செய்து ஆப்பிரிக்கர்கள் கி.மு 3600 காலகட்டத்திலேயே இரும்பைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் என்று சொன்ன கூற்று கடுமையான விமரிசனத்திற்கு உள்ளானது.  இவர்கள் காலவரையறை செய்வது என்று சொல்வது மரத்தின் (கரித்துண்டின்) அடிப்படையிலே தவிர இரும்பு பொருட்களின் அடிப்படையில் அல்ல என்ற சர்ச்சை எழுந்தது என்று கட்டுரை சொல்கிறது. மேலும் இது போன்று காலத்தை முன் தள்ளுவது ஆப்பிரிக்க தேசியத்தை முன்னிறுத்தத்தான் என்றும் புள்ளி விவரங்களில் இருக்கும் சிக்கல்களைக் காணும் பார்வை ஆய்வாளர்களுக்கு இல்லை என்றும் அது சொல்கிறது.

கட்டுரை மேலும் சொல்கிறது.

Zangato began excavations at the site after a violent storm struck in 1992, sweeping away part of the capping sediments and exposing a layer of metallic objects, potsherds, and stone tools. Zangato and his team spent nine field seasons at the site, opening more than 800 square meters. They recovered 339 stone artifacts and a host of evidence for ironsmithing: a blacksmith’s forge, consisting of a clay-lined furnace, stone anvil, and part of a ceramic pot that likely held water for cooling or possibly tempering red-hot iron. They also found charcoal storage pits, 1450 pieces of slag, 181 pieces of iron bloom, and 280 small iron lumps and objects, including two needles.

சங்காடொ என்பவர் ஆய்வு செய்து முழு இரும்பு ஆலைகளையே கண்டுபிடித்தார். இரும்பை உருவாக்கியிருப்பதற்கு தேவையான ஆதாரங்களை அளித்தார். நம்மைப் போலவே அவர்களும் கரித்துண்டு மாதிரிகளை (ஏழு மாதிரிகள்) காலக்கணக்கீடு செய்தனர். கி.மு. 1612 முதல் கி.மு.3490 வரை.

மற்றைய ஆய்வாளர்கள் இரும்பு உருக்காலை இருந்திருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் இதையும் சொல்கிறார்கள்.

 “Although it seems that the seven oldest radiocarbon dates form a coherent group, they are all coming from a few square meters in a very disturbed

archaeological site.”…“They are closely bounded by pits and structures well

dated to around 2000 B.P. and later.” This means that later ironworkers could have dug into ground laced with charcoal from an earlier occupation or forest fire, giving dates that are far too old. To push back the dates convincingly, say critics, the team needs to publish more detailed stratigraphic data and charcoal studies. They also need several consistent lines of chronological evidence,

such as thermoluminescence (TL) dates on clay furnaces, accelerator mass spectrometre (AMS) dates on short-lived plant remains, and indirect dates from sequences of ceramic tiles.

மிகச் சிறிய இடத்தில் சிதைவுற்ற பகுதிகளில், கிடைத்தவற்றை வைத்துக் கொண்டு அறுதியான முடிவிற்கு வர முடியாது என்கிறார்கள். கரித்துண்டுகள் முன்னால் இருந்தவர்கள் பயன்படுத்தியதாக இருந்திருக்கலாம் அல்லது காட்டுத்தீயின் எச்சமாக இருந்திருக்கலாம் என்கிறார்கள். இன்னும் ஆதாரங்கள் வேண்டும் என்கிறார்கள்! இன்று வரை உலகளவில் இந்த காலக் கணக்கீட்டை கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.

முடிவாக,

இரும்புக் காலம் என்பது இரும்பு பரவலாக பயன்படுத்தப் பிறகுதான் துவங்குகிறது. சில இரும்புப் பொருள்கள் ஒரு இடத்தில் கிடைத்தன என்ற தகவலை வைத்துக் கொண்டு இரும்புக்காலமே அங்கிருந்துதான் துவங்குகிறது என்று சொல்வது அறிவியல் கூற்றாக ஆகாது.கீழடி வியாதி பெருகிப் பரவியிருக்கிறது என்பதை இப்புத்தகம் காட்டுகிறது. கரித்துண்டின் காலத்தை இரும்பின் மீது வலுக்கட்டாயமாக ஏற்றுவது அறிவியலோடு பொருந்தாது.சிவகளையில் ஒரே இடத்தில் மூடி சரியாக இருக்கும் தாழியில் கிடைத்த கரித்துண்டின் காலத்திற்கும் வெளியில் மண் மூடிக் கிடந்த தாழிகளில் கிடைத்த கரித்துண்டுகளின் காலங்களுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு இரும்பின் காலத்தைக் கணக்கிட்டு அதுதான் துல்லியமானது என்று சொல்வது சரியாகாது.

தமிழன் 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பைப் பயன்படுத்தத் துவங்கி விட்டான் என்று சொல்வதற்கு இன்னும் வலுவான ஆதாரங்கள் வேண்டும்.

பி ஏ கிருஷ்ணன்.

உதவி செய்த புத்தகங்கள்

இரும்பின் தொன்மை – தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, 2025

மயிலாடும் பாறை – தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, 2022

Excavations ar Adichchanallur, Archaeological Survey of India, 2020

SCIENCE, VOLUME 323, 9 January, 209

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 19, 2025 10:30

January 28, 2025

தமிழகத்தின் இரும்புக் காலம் – அறிவியலா அரசியலா

திராவிட இயக்கத்தினர் இப்போதெல்லாம் context பற்றிப் பேசத் துவங்கி விட்டார்கள். அதாவது பெரியாரைப் பற்றி பேசும்போது context முக்கியம் என்கிறார்கள். நான் முழுவதும் உடன்படுகிறேன். அதை எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறேன்.

பெரியாருக்கே context தேவை என்றால் அறிவியலுக்கும் அகழ்வாராய்ச்சிக்கு அது நிச்சயம் தேவை. முக்கியமாக கரித்துண்டின் காலத்தை கண்டுபிடிக்கும் பொருள் மீது ஏற்றுவதற்குத் தேவை. கீழடிக் கரித்துண்டிற்கும் இது பொருந்தும். சிவகளை போன்ற இடங்களில் கிடைத்த கரித்துண்டுகளுக்கும் பொருந்தும்.

கீழடியில் கரித்துண்டு கிடைத்த உயரம் வேறு, ஓடு இருந்த உயரம் வேறு.

சிவகளையில் மண்சரிந்து இருந்த இடத்தில் கிடைத்த கரித்துண்டை வைத்துக் கொண்டு இரும்பின் காலத்தைக் கணக்கிடுவது அறிவியலுக்குப் பொருந்தாது. இரும்பு உலைகள் கிடைத்து, அவற்றின் காலம் கணக்கிடப்பட்டால் ஒழிய், தமிழகத்தில்தான் முதன்முதலில் இரும்பு கண்டுபிடிக்கபட்டது என்ற கூற்று அறிவியலால் ஏற்றுக் கொள்ளப்படாது. அறிவியல் கறாரானது. இது திராவிட அரசிற்கும் அதற்கு குடை பிடிப்பவர்களுக்கும் புரியாமல் இருப்பது வருந்தத் தக்கது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2025 11:22

January 24, 2025

இரும்பின் தொன்மை – முழுமை பெறாத புத்தகம்

(குறிப்பு: இது அவசரமாக எழுதப்பட்டது. இதை விரிவாக்கி எழுதுவேன். நிச்சயம் ஒரு வரி கூட விடாமல் படியுங்கள்)

இரும்பின் தொன்மை என்ற பெயரே சரியில்லை. இரும்பு 150 கோடி ஆண்டுகள் தொன்மையானது. பூமியின் மையத்தில் இருப்பதே சுமார் 85 சதவீதம் இரும்புதான். புத்தகம் பேசுவது இரும்புக் கருவிகளின் தொன்மையைப் பற்றி. துல்லியமாகச் சொல்லப்போனால் தமிழன் இரும்பை மண்ணிலிருந்து பிரித்தெடுத்த காலத்தின் தொன்மையைப் பற்றி.

இப்புத்தகத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், நம் முன்னோர்கள் வாழ்ந்த காலம் எவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றிய தெளிவு வேண்டும். அது முக்கியமாக மூன்று காலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதலாவது கற்காலம், இரண்டாவது வெங்கலக்காலம். மூன்றாவது இரும்புக் காலம். இவற்றிற்குள் உட்பிரிவுகள் இருக்கின்றன. உதாரணமாக கற்காலம் பழைய கற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது.  (Paleolithic, Mesolithic, Neolithic. இதே போல கற்காலத்திற்கும் வெண்கலக் காலத்திற்கும் இடையே இருந்த காலம் செம்பு (chalcolithic) காலம் என்று அழைக்கப்படுகின்றது.

இப்படிப் பிரிப்பதற்குக் காரணம் எளிமையானது. கற்காலத்தில் மனிதன் கல்லைக் கருவியாகப் பயன்படுத்தத் துவங்கினான். அக்கருவிகளில் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட கருவிகளின் வடிவங்கள் மாறத் துவங்கின. அவற்றின் திறன்கள் வலுப்படத் துவங்கின. நெருப்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் துவங்கிய மனிதன் அதை வைத்து மண்ணில் கிடைக்கும் உலோகங்களை  உருக்கி அவற்றைப் பிரித்தெடுக்கக் கற்றுக் கொண்டான்.  செம்பை உருக்குவதற்குத் தேவையான உஷ்ணம் 1100 C. முதலில் செம்பை உருக்கிய அவன், அதையும் தகரத்தையும் (உருக்கத் தேவையான உஷ்ணம் 232 C)  சேர்த்து வெண்கலத்தை உருவாக்கக் கற்றுக் கொண்டான். இரும்புத் தாது கணிசமாகக் கிடைத்தாலும் அதை உருக்க அதிக உஷ்ணம் (1280 C) தேவையாக இருந்தது. அதற்குத் தேவையான தொழில் நுட்பம் பல நூற்றாண்டுகள் மனிதனிடம் இல்லை.

இங்கே முக்கியமாக ஒரு விஷயத்தை நான்  சொல்ல வேண்டும். இப்பிரிவுகள் ஒன்றன் பின் ஒன்றாக உலகம் முழுவதும் அந்தந்த காலகட்டங்களில் வந்தன என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இது நம் வசதிக்காக, நாம் வரலாற்றைப் புரிந்து கொள்வதற்காக, அமைக்கப்பட்ட பிரிவு. அவ்வளவுதான்.  உதாரணமாக வெண்கலக் காலம் என்ற ஒன்று தமிழகத்தில் இருந்ததே இல்லை. கற்காலத்திலிருந்து நாம் இரும்புக்காலத்திற்கு வந்து விட்டோம். நம் இரும்புக் காலமும் சீனத்தின் இரும்புக் காலமும் ஒன்றல்ல.

இந்தப் பின்புலத்தில் நாம் இரும்புக் காலத்தைப் பார்ப்போம்.

இரும்புக்காலம் என்றால் என்ன? இரும்பை வைத்து மனிதன் ஆயுதங்களையும், விவசாயத்திற்குத் தேவையான கருவிகளையும் பரவலாக பயன்படுத்தத் துவங்கிய காலம். (இது வரலாற்றிற்கு முந்தைய காலம். அதாவது மனிதன் எழுத்தறிவு அதிகம் பெற்றிராத காலம் – சில விதி விலக்குகளைத் தவிர. இந்தியா ஒரு விதி விலக்கு. இங்கே இரும்புக்காலம் வரலாற்றுக் காலத்திற்குள் வருகிறது. இதுவும் இடத்திற்கு இடம் மாறுபட்டிருந்தது என்பதை விளக்கத் தேவையில்லை.) இதில் முக்கியமான சொல் ‘பரவலாக’. அதாவது மனிதன் ஆயுதங்களை வைத்து இன்னொரு இடத்தின் மீது படையெடுக்கத் துவங்கிய காலத்தையும், விவசாயத்தின் மூலம் உணவு உற்பத்தித் திறனைப் பெருக்கி மேலும் உபரி வருமானத்தை உண்டாக்கத் துவங்கிய காலத்தையுமே நாம் இரும்புக் காலம் என்று அழைக்கிறோம். விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரும்புக்கருவிகள் வெண்கலக் கருவிகளை விட அதிகம் திறனுடையவையாக இருந்தன. அதிகம் தாக்குப் பிடித்தன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மனிதகுலத்தின் தொழில் நுட்பத் திறன் வெகுவாக அதிகரித்த காலம்.

இரும்புக்காலத்திற்கு முன்னாலேயே மனிதன் இரும்பை உபயோகித்துக் கொண்டிருந்தான். இது தமிழ் நாட்டில் மட்டும், இந்தியாவில் மட்டும் நடக்கவில்லை. ஆப்பிரிக்காவில் இரும்பு தயாரிப்பது இன்றைக்கு 5600 ஆண்டுகளுக்கு முன் துவங்கி விட்டது என்று புகழ் பெற்ற Science  பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை சொல்கிறது. (இக்கட்டுரையைப் பற்றி பின்னால் விவாதிக்க இருக்கிறேன்.) எனவே இரும்பு ஒரு இடத்தில் பயன்படுத்தப்பட்டது என்பதை மட்டும் வைத்துக் கொண்டு அது இரும்புக்காலத்தின் துவக்கம் என்று திரு ஸ்டாலின் சொல்வது போலச் சொல்லிவிட முடியாது. அதனால் விவசாயம் வலுபெற்றதா? மற்ற இடங்களுக்கு இரும்பைத் தயாரிக்கும் முறை பரவியதா? போன்ற விவரங்கள் தெரிந்தால்தான் அவ்வாறு நாம் சொல்ல முடியும்.  “இரும்பின் தொன்மை” புத்தகம் அவ்வாறு சொல்லவில்லை.  

“இரும்பின் தொன்மை” புத்தகம் என்ன சொல்கிறது?

இந்தியாவில் இரும்பு உலைகள் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தன என்று சொல்கிறது. குறிப்பாக கொடுமணல் கிடைத்த இரும்பு உருக்கும் உலையைப் பற்றிச் சொல்லி விட்டு அது போன்ற தொல்லியல்தளங்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டவையாக இருக்கலாம் என்று சொல்கிறது.மாங்காட்டில் கிடைத்த வாளின் காலம் கி.மு. 1510 என்று சொல்கிறது.மயிலாடும் பாறையில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலம் கி.மு 2172ஆதிச்ச நல்லூரில் கிடைத்த (மண்ணடுக்கு 4)இரும்புப் பொருட்களின் சராசரிக் காலம் கி.மு 2522.சிவகளையில் கிடைத்த பொருட்களைக் குறித்து புத்தகம் சொல்வது இது: மூன்று தாழிகள் கிடைத்தன. அதில் மூடி இறுக்கமாக இருந்த தாழியிலிருந்து நெல்மணிகளும் இரும்பாலான பொருட்களும் கிடைத்தன. சேகரிக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கி.மு 1155. மற்ற தாழிகளில் மண் ஊடுருவி இருந்தது. இவற்றின் உள்ளிலும் வெளியிலும் இரும்புப் பொருட்கள் கிடைத்தன. இக்குழிகளில் கிடைத்த கரி மாதிரிகளின் காலம் கி,மு. 3345.தெலுங்கனூரில் கிடைத்த வாளின் பிடியின் காலம் 2900-2727. மறுபகுதியின் காலம் 1422-1233.

இனி புத்தகம் சொல்பவற்றை ஆராய்வோம்.

கிடைத்த இரும்புப் பொருட்களின் கால வேறுபாடு புத்தகத்தின் கூற்றுப்படியே 2500 ஆண்டுகளுக்கும் மேல். அதுவும் சிவகளையில் கிடைத்த இரும்புப் பொருட்களின் கால வேறுபாடு 2000 ஆண்டுகளுக்கும் மேல். அதாவது 2்000 வருடங்களாக அதிகமாக எந்த மாற்றமும் இல்லாமல் வளர்ச்சியும் இல்லாமல் ஒரே மாதிரியான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்களா? ஒரு அகழ்வாய்வாளர் என்னிடம் பேசிக் கொண்டிருந்த போது 2500 ஆண்டுகள் கோலி விளையாடிக் கொண்டிருந்தார்களா என்று கேட்டார். இந்த இடங்களில் விவசாயம் எவ்வாறு நடந்தது அவற்றில் பயன்படுத்தப்பட்ட இரும்புப் பொருட்கள் என்ன என்பது பற்றிய எந்தத் தகவலையும் புத்தகம் தெரிவிக்கவில்லை.இனி காலத்திற்கு வருவோம். இதை நான் கீழடி பற்றிய விவாதத்தில் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன். இவர்கள் கொடுத்திருக்கும் காலம் மண்ணடுக்குகளில் கிடைத்த கரித்துண்டின் காலம். இரும்பின் காலம் அல்ல.  அகழ்வாராய்வின் அடிப்படை விதி ஒரு மண்ணடுக்கின் காலம் அதில் கிடைக்கின்ற காலத்தில் மிகவும் பிற்பட்ட பொருளில் காலம் என்று தெளிவாகக் கூறுகிறது. அதாவது ஒரு மண்ணடுக்கில் 15ம் நூற்றாண்டின் பொருள் கிடைத்தால் அதன் காலம் 15ம் நூற்றாண்டு என்றுதான் கொள்ள வேண்டும். அதில் கி மு இரண்டாம் நூற்றாண்டின் பொருள் ஒன்றும் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  அதே அடுக்கில் காலம் அறுதியிடப்படாத பொருளுக்கு கி மு இரண்டாம் நூற்றாண்டு என்று கால வரையறை செய்ய முடியாது. அதாவது கரித்துண்டின் காலத்தை அப்படியே இரும்பிற்கு ஏற்ற முடியாது. சிவகளையில் வேறு சிக்கல்களும் இருக்கின்றன. மூடி இறுக்கமாக இருக்கும் தாழியில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலமும் வெளியில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலமும் இவர்கள் கூற்றுப்படியே வெவ்வேறாக இருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டு வித்தியாசம். புத்தகம் இம்மண்ணடுக்குகளில் கிடைத்த வேறு பொருட்களைப் பற்றியோ அதன் காலத்தைப் பற்றியோ குறிப்பிடவில்லை.இவர்களே கத்தியின் பிடிக்குக் காலம் ஒன்று மற்ற பகுதிக்கு ஒன்று என்று சொல்கிறார்கள்! அதாவது பிடி செய்து  1500 ஆண்டுகளுக்கு பிறகு வாள் செய்யப்பட்டு பிடியோடு பொருத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்! எல்லா நம்பிக்கைகளையும் ஆய்வுக்கூட அறிக்கை மீது வைத்தால் முடிவுகள் இது போன்று வேடிக்கையாகத்தான் இருக்கும்.கொடுமணலைத் தவிர வேறு எந்த இடங்களிலும் இரும்பை உருக்கும் உலைகள் கிடைக்கவில்லை. இரும்பு இருப்பதை வைத்து அங்கே இரும்பு உருக்கும் உலைகள் இருந்திருக்கலாம் என்ற ஊகம்தான் செய்ய முடிகிறது. அதே இடத்தில் வெண்கலப் பொருட்களும் கிடைத்திருக்கின்றன. அவை இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்று புத்தகம் சொல்கிறது. வெண்கலப் பொருட்களை இறக்குமதி செய்யக்கூடிய திறன் படைத்தவர்கள்  இரும்பு தயாரிக்கும் உத்தியை மற்றவர்களுக்குத் தந்திருக்க மாட்டார்களா? அப்படித் தந்திருந்தால் இரும்பு குறைந்தது தென்னிந்தியா முழுவதும் பரவலாக இருந்திருக்காதா? இரும்பின் பயன்பாடு இவர்கள் கூறும் காலக்கட்டத்தில் பரவலாக இருந்ததாக எந்தச் சான்றும் இல்லை.இரும்பு தயாரிப்பது எளிதல்ல.  அதற்குக் கரி (charcoal) தேவை. கரி தயாரிப்பதற்கு மக்கள் தேவை. இவ்வாறு மக்களைத் திரட்டி வேலை செய்ய வைக்க அமைப்பு தேவை.  பெருமளவு மக்களின் வாழ்வு முறையை மாற்றும் அளவிற்கு இரும்பு தயாரிக்க பேரமைப்பு தேவை. அது போன்ற பேரமைப்பு இவர்கள் சொல்லும் காலத்தில் இருந்திருப்பதற்கான எந்தத் தடையங்களும் நமக்குக் கிடைக்கவில்லை.தமிழ் நாட்டில்  நெல் சாகுபடி பரவலாக 3000 ஆண்டுகளுக்கு உள்ளாகத்தான் துவங்கியது. அதே போன்று நகரங்களோ, பெரிய கட்டிடங்களோ, இயற்கையை வெகுவாக மனிதன் மாற்றியிருக்கும் தடையங்களோ நம்மிடம் ஏதும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இல்லை. கீழடி நிச்சயம் நகர நாகரிகம் இல்லை.

இந்த ‘கரித்துண்டு’  விவகாரத்தை நான் மட்டும்தான் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். Science கட்டுரையைக் குறித்து முன்னே குறிப்பிட்டிருந்தேன். அது சொல்பவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

Several French and Belgian archaeologists have pointed to evidence from sites in Niger, Rwanda, and Burundi suggesting that Africans invented ironworking independently as early as 3600 B.C.E. Their analyses were strongly criticized by prominent researchers in the United States, who argued that the early radiocarbon dates likely came from wood older than the iron artefacts. In reviewing the debate in a 2005 paper in the journal History in Africa, independent scholar Stanley Alpern suggested that Francophone researchers had fallen under the influence of African nationalism and pride, which blinded them to problems in their data.

அதாவது கி.மு 3600 என்று சொல்வது மரத்தின் (கரித்துண்டின்!) அடிப்படையில் இரும்புப் பொருட்களின் அடிப்படையில் அல்ல என்ற சர்ச்சை எழுந்தது என்று கட்டுரை சொல்கிறது. மேலும் இது போன்று காலத்தை முன் தள்ளுவது ஆப்பிரிக்க தேசியத்தை முன்னிறுத்த்தான் என்றும் புள்ளி விவரங்களில் இருக்கும் சிக்கல்களைக் காணும் பார்வை ஆய்வாளர்களுக்கு இல்லை என்றும் அது சொல்கிறது!

சுருக்கமாக,

இரும்புக் காலம் என்பது இரும்பு பரவலாக பயன்படுத்தப் பிறகுதான் துவங்குகிறது. சில இரும்புப் பொருள்கள் ஒரு இடத்தில் கிடைத்தன என்ற தகவலை வைத்துக் கொண்டு இரும்புக்காலமே அங்கிருந்துதான் துவங்குகிறது என்று சொல்வது அறிவியல் கூற்றாக ஆகாது.கீழடி வியாதி பெருகிப் பரவியிருக்கிறது என்பதை இப்புத்தகம் காட்டுகிறது. கரித்துண்டின் காலத்தை இரும்பின் மீது ஏற்றுவது அறிவியலோடு பொருந்தாது.சிவகளையில் ஒரே இடத்தில் மூடி சரியாக இருக்கும் தாழியில் கிடைத்த கரித்துண்டின் காலத்திற்கும் வெளியில் மண் மூடிக் கிடந்த தாழிகளில் கிடைத்த கரித்துண்டுகளின் காலங்களுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு இரும்பின் காலத்தைக் கணக்கிடுவது சரியாகாது.ஒரே கத்தியில் பிடிக்கு ஒரு காலம் மற்ற பகுதிக்கு இன்னொரு காலம் என்ற முடிவு வந்தது ஒரு பொருளின் காலத்தை ஆய்வுக் கூட முடிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றைய சான்றுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வரையறை செய்வது சரியாகாது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 24, 2025 15:33

December 26, 2024

வாஜ்பாய் – எந்தப் பாதையில் செல்வது?

கண்ணியம் நாற்சந்தியில் காணாமல் போனது

மலிந்தவர் மதிப்பு மிக்கவர்களை மறித்து வைத்திருக்கிறார்கள்.

கடைசி ஒரு முறை நான் முன்னால் செல்லட்டுமா?

அல்லது

காட்சியிலிருந்தே விலகிக் கொள்ளட்டுமா?

எந்தப்பாதையில் செல்வது?

வாஜ்பாய் எழுதிய கவிதையில் சில வரிகள்

இரண்டு பிம்பங்கள்

வாஜ்பாய் (1924-2018) நிறைவாழ்வு வாழ்ந்தவர்.  இளவயதிலிருந்தே அரசியலில் தீவிரமாகப் பங்கு பெற்றவர். ஆனால் தன் அரசியல் வாழ்க்கையின் கடைசி நாள் வரை அவருக்கு எந்தப் பாதையில் செல்வது என்பது பற்றிய குழப்பம் இருந்தது. அவரைப் பற்றி மற்றவர்களுக்கும் குழப்பம் இருந்தது. பாஜகவினர் மத்தியில் அவருக்கு மிகுந்த மதிப்பு இருந்தது உண்மை என்றாலும் “மோதி பதவி விலக வேண்டும்” என்று அவர் 2002ல் குஜராத் கலவரங்கள் நடந்தபோது சொன்னதை பல இந்துத்துவர்களால் மன்னிக்கவே முடியவில்லை.  நேரு மீது அவருக்கு இருந்த மரியாதை மதவாதிகளுக்கு மிகுந்த கோபத்தை வரவழைதது. “ஆர் எஸ் எஸ் என் ஆத்மா” என்று அவர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவ்வியக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் மீது அவருக்கு அதிகம் பிடிப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டது. “மதவாத அரசியலை மையத்திற்குக் கொண்டு வருவதில் மிகப் பெரிய பங்கு வகித்தவர்” என்று இடதுசாரிகள் சொன்னார்கள். ஆனால் பால்ராஜ் மதோக் போன்ற தீவிர இந்துத்துவவாதிகள் “வாஜ்பாய் போன்ற கம்யூனிஸ்டு ஊடுருவிகளால்தான் ஜனசங்கம் (பாஜகவின் முந்தைய பெயர்) சீரழந்தது” என்று குற்றம் சாட்டினார்கள்.  நாட்டிற்காக திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர் என்று அவர் புகழப்பட்டார். ஆனால்ராஜ்குமாரி கௌல் என்ற திருமணமானவரோடு அவருக்கு உறவு இருந்தது. உறவில் பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது.

சுதந்திரத்திற்கு முன்

வாஜ்பாய் ஆக்ராவிற்கு அருகே உள்ள படேஷ்வர் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். மத்தியவர்க்கத்திற்கு சிறிது கீழான பொருளாதார நிலைமை. தந்தை பள்ளி ஆசிரியராக குவாலியர் நகரில் பணியாற்றிக் கொண்டிருந்தார். 1939ம் ஆண்டில் தனது 15ம் வயதில் சுயம்சேவகராக ஆர் எஸ் எஸ்ஸுடன் தன்னை இணைத்துக் கொண்டார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் அவர் கலந்து கொண்டதைப் பற்றி பல கட்டுக்கதைகள் உலவுகின்றன. அவர் குவாலியரில் நடந்த ஊர்வலத்தில் பங்கு பெற்றது உண்மை. ஆனால் படேஷ்வரில் கூட்டத்தில் இருந்ததற்காகக் கைதாகி மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து வெளியில் வந்தார்.  1947ல் வெள்ளையனே வெளியேறு இயக்கமே நேர விரயம் என்று கூறத் துவங்கி விட்டார். இளைஞராக இருந்த போது காந்தியைப் பற்றி அன்றைய சுயம்சேவகர்களைப் போலவே கடுமையாக எதிர்வினை ஆற்றினார். “காந்தி ஆப்கானிஸ்தானை இந்தியா மீது படையெடுக்க அழைத்தார்” என்ற அவதூறைக் கூசாமல் சொன்னார். ஆனால் காந்தியின் மறைவிற்குப் பின் அவர் இருந்த இயக்கமே வேறுவிதமாகப் பாடத் துவங்கி விட்டது. அவரும் பாட்டை மாற்றிக் கொண்டார்.

நேருவின் காலம்

வாஜ்பாய் ஜனசங்கத்தின் தலைவரான சியாம் பிரசாத் முகர்ஜியின் உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார். அவருடைய மறைவிற்கு நேருவும் மறைமுகக் காரணம் என்று எழுதியிருக்கிறார். 1957ல் நாடளுமன்ற உறுப்பினராக அவர் பேசிய முதல் பேச்சிலும் நேருவின் கொள்கைகளை வலுவாக விமரிசனம் செய்தார். நேரு அவருடைய பேச்சு வல்லமையை மதித்தார் என்பது உண்மை. ஆனால் அவர் வருங்காலத்தில் பிரதமராக வருவார் என்று நேரு சொன்னர் என்ற பரப்புரை முழுவதும் பொய். 1962ல் சீனாவுடன் நடந்த போர் காரணமாக நேரு மீது பாய முழு வாய்ப்புக் கிடைத்த போதும் அவருடைய தலைமையை ஏற்றுக் கொள்ள வாஜ்பாய் தயங்கவில்லை.”இந்தியா முழுவதும் நேருவின் பின் நிற்கிறது” என்று அறிக்கை விடுத்தார். நேரு மீது அவர் பெருமதிப்பு வைத்திருந்தார் என்பதும் உண்மை.

இந்திரா காந்தி காலம்

பங்களாதேஷ் விடுதலைப் போரில் வெற்றி பெற்றதற்காக

அவரை வாஜ்பாய் அன்னை துர்க்கை என்று அழைத்தார் என்ற கூற்று முழுக் கற்பனை. நேரு இறந்தவுடனேயே வலதுசாரி சக்திகள் தங்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்து விட்டன என்பதைக் கணக்கிட்டுச் செயல்படத் துவங்கின. ஆனால் மக்களிடம் செல்ல வேண்டுமானால் முதலாளித்துவத்திற்கு முழுவதும் சாதகமாக இயங்குவதாகக் காட்டிக் கொள்ள முடியாது என்ற தெளிவு வாஜ்பாய்க்கு இருந்தது. எனவே வங்கிகளைத் தேசியமயமாக்கல் போன்ற கொள்கைகளை அவர் ஆதரித்தார்.

பிரதமர் வாஜ்பாய்

மூன்று முறை பிரதமராக இருந்த வாஜ்பாய் கூட்டணி தருமத்தைப் பற்றிப் பேசினாலும் கட்சி உறுப்பினர்களிடம் உரையாற்றும் போது மிகத் தெளிவாக ‘நமக்கு கூட்டணி என்பது ஒரு மைல்கல்தான் இலக்கு அல்ல’ என்று சொன்னார். கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று பதவிக்கு வரும் போது, மூன்று இலக்குகளை நிச்சயம் அடையும் என்றார் – அயோத்தியில் கோவில் கட்டப்படும் அரசியல் சட்டம் 370 திரும்பப் பெறப்படும் மற்றும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்ற மூன்று இலக்குகள். அயோத்தியைப் பொருத்தவரை, பாபர் மசூதி இடிப்பட்ட போது  அது தன் வாழ்க்கையில் மிகவும் சோகமான நாள் என்று அவர் கூறினாலும், கோவில் அங்குதான் கட்டப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

வாஜ்பாய்க்கு இதைத் தவிர மூன்று முக்கியமான இலக்குகளும் இருந்தன. முதலாவது அணு ஆயுத சோதனை. அவர் ஆட்சி காலத்தில்தான் இந்தியா அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாகச் செய்தது. அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் (அன்று ரஷ்யாவும் அமெரிக்கா பக்கத்தில் இருந்தது) பல தடைகளைக் கொண்டு வந்தாலும் வாஜ்பாய் நிலைமையைச் சாமர்த்தியமாகச் சமாளித்தார். ஆனால் இந்தியா பயங்கரவாதத்தைச் சமாளிக்கத் திணறியது.  இரண்டாவது இலக்கு பாகிஸ்தானுடன் உறவுகளை மேம்படுத்திக் கொள்வது. பாகிஸ்தானுக்கு பேருந்தில் பயணம் செய்து  அந்நாட்டுப் பிரதமர் நவாப் ஷரீஃபைச் சந்தித்தார்.  இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே லாகூர் ஒப்பந்தம் கையெழுத்தானது. மூன்றாவது இலக்கு காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பது. அங்குள்ள மக்களுக்குத் தேவை ‘காஷ்மீரியம், மனிதத்தன்மை, உண்மையான மக்களாட்சி’ என்று சொன்னார் அவர். நான் 2017ல் காஷ்மீர் சென்றிருந்த போது அங்குள்ள மக்கள் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் எங்களுக்கு மத்திய அரசின் மீது நம்பிக்கை இருந்தது என்றார்கள்.

பாகிஸ்தானோடு நல்லுறவு என்ற பாதையில் பெருங்கற்கள் கார்கில் போர் நடந்த போது விழுந்தன. பாகிஸ்தான் முதுகில் குத்துவதை ஒரு கலையாக ஆக்கி விட்டது என்று இந்தியாவில் பெரும்பாலானவர்கள் நினைத்தனர். முஷரஃப் ஆக்ரா வந்து இந்தியாவோடு ஒப்பந்தம் செய்ய முயன்றாலும் அம்முயற்சி தோல்வியில் முடிந்தது. செப்டம்பர் 11 2001ல் பின் லாடன் அமெரிக்கா மீது நடத்திய தாக்குதலில் பயங்கரவாதம் மனிதகுலத்தின் முதல் எதிரி என்ற உண்மை மேற்கத்திய நாடுகளுக்குப் பிடிபடத் துவங்கியது. இருந்தாலும், பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதச் செயல்களை விட்டுக் கொடுக்கத் தயராக இல்லை. 13 டிசம்பர் 2001 அன்று நாடாளுமன்றம் தாக்கப்பட்ட போது என் அலுவலக அறை நாடாளுமன்றத்திற்கு மிக அருகில் இருந்ததால் துப்பாக்கி சுடுவதின் ஒலிகள் துல்லியமாகக் கேட்டன. உலகம் முழுவதும் அதன் எதிரொலிகள் கேட்டதால் இந்தியா பயங்கரவாதத்தால் எதிர்கொள்ளும் பிரச்சினை உலக நாடுகளுக்குப் புரியத் துவங்கியது.

வாஜ்பாய் ஆட்சி காலத்தில்தான் ஒரிசாவில் ஸ்டேன்ஸ் குடும்பத்தோடு கொலை செய்யப்பட்டார்.  அவர் ஆட்சியில் இருந்த போதுதான் 2002ல் குஜராத் படுகொலைகள் நிகழ்ந்தன. வாஜ்பாய் மோதியைப் பற்றி பேசியதைச் செயலில் காட்டியிருந்தால் இந்திய வரலாறு வேறுவிதமாக ஆகியிருக்கும்.

நல்ல நண்பர்

வாஜ்பாய் பழகுவதற்கு மிகவும் இனியவர் என்று அவருடன் நட்பில் இருந்தவர்கள் பலர் சொல்லியிருக்கிறார்கள். உதாரணமாக கேரள முதல்வராக இருந்த இ. கே. நயினார் வாஜ்பாய் தலைமையில் மலப்புரம் மாவட்டத்தில் குடும்பஸ்ரீ திட்டத்தைத் திறந்து வைக்கச் செய்தார். பத்திரிகைகள் கம்யூனிஸ்டான நயினார் பாஜக பிரதமரை இஸ்லாமியப் பெரும்பான்மை மாவட்டமான மலப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கு பெற வைத்ததை பேரதிசயமாகக் கருதின. அவர் கருணாநிதியோடு கூட நட்போடு இருந்தார். அவருக்குப் பல பிரச்சினைகளைக் கொடுத்த ஒரே நண்பர் ஜெயலலிதாவாகத்தான் இருக்க முடியும்.

நகைச்சுவையுணர்வு

வாஜ்பாய் சிரிக்கச் சிரிக்கப் பேசுவதில் வல்லவர். ஒரு முறை ஜகஜீவன் ராம் ரயில்வே அமைச்சராக இருந்தபோது விபத்துகள் அதிகமாக நடைபெறுவதைக் குறிப்பிட்டு வாஜ்பாய் பேசினார். “மக்கள் ரயில் செல்லும் போதெல்லாம் தங்கள் “ஜீவன்” (உயிர்) “ஜகத்தை” ( உலகத்தை) விட்டு போய் விடுமோ என்ற பயத்தில் ராம் ராம் என்று ராமநாமத்தை சொல்லாமல் பயணம் செய்வதில்லை. எனவே அமைச்சரின் பெயர் தினமும் கோடிக்கணக்கான பேர்களால் நினைவு கூரப்படுகிறது” என்று அவர் பேசியதைக் கேட்டு ஜகஜீவன் ராமிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

முடிவாக

வாஜ்பாய்க்கு தன் கவிதைகளைப் பற்றி உயரிய எண்ணம் இருந்தது. ‘நான் அரசியலுக்கு வந்தது இந்திக் கவிதை உலகிற்கு நஷ்டம் என்று பலர் கருதுகிறார்கள்’ என்று அவரே சொல்லியிருக்கிறார். ஆனால் எனக்குத் தெரிந்த ஹிந்திக் கவிஞர்கள் பலர் அதை விடப் பெரிய லாபம் இந்திக் கவிதைக்கு இல்லை என்று கருதுகிறார்கள். அவருடைய அரசியலைப் பற்றியும் இப்படியே சொல்லலாம். மோதியின் இன்றைய அரசியலோடு ஒப்பிடும் போது வாஜ்பாய் காலம் பொற்காலம் என்று கருதுவர்களை விட அவருடைய காலம் இன்றைய அரசியலுக்கு ஓர் ஒத்திகை என்று கருதுபவர்களே அதிகம் இருப்பார்கள்.

பி ஏ கிருஷ்ணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2024 08:50

P.A. Krishnan's Blog

P.A. Krishnan
P.A. Krishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow P.A. Krishnan's blog with rss.