Devibharathi's Blog

July 29, 2022

குமாரந நந்தன் கட்டுரை

 

                        தேவிபாரதியின் நீர்வழிப் படூம்\

                                                                                                           காவிய சாயல் கொள்ளும் விளிம்பு நிலை வாழ்வியல்

 

தேவிபாரதியின் புதிய நாவல் நீர்வழிப்படூம் வாழ்க்கையின் எதார்த்தத்தை மிக நெருக்கமாக பதிவு செய்திருக்கிறது. வாழ்க்கை என்றால் காரு மாமா என்ற ஒரு நபரின் அவரின் உறவினர்களின் வாழ்க்கையை மட்டும் நான் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. கொங்கு மண்டலத்தில் வாழும் ஆண்ட சாதியினரை அண்டி வாழும் சாதியினரின் வாழ்வியலை இந்நாவலில் வரைந்து காட்டியிருக்கிறார் தேவிபாரதி.\

இந்த வாழ்க்கை என்பது இதுபோன்ற கிராமங்களில் இயல்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் ஏன் எதற்கு என்ற கேள்வி இல்லை. ஆன்மீகம் தேடல் போன்ற தளங்கள் திறக்கப்படவில்லை அல்லது அப்படியான தளங்களுக்கு அங்கே இயக்கமே இல்லை. சடங்குகள் சம்பிரதாயங்கள் என்பது மிகப் பெரிய கட்டுமானம் அதை ஏன் என்று கேள்வி கேட்பது அல்லது தேவையில்லை என்று உதறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்தக் கட்டுமானங்கள் தான் அவர்களின் துயரையும் மகிழ்ச்சியையும் தீர்மானிக்கின்றன.

கதை நாயகனின் தாய் மாமாவான காரு மாமா தன் வீட்டில் தனியாக இறந்து கிடக்கிறார் என்பதில் இருந்து துவங்குகிறது நாவல்.

பின் அந்த துயரம் சடங்கு சம்பிரதாயங்களின் வழியாக கடலாக பெருகிச் செல்கிறது. இழவு வீட்டில் ஒப்பாரி பாடுவது எல்லா தமிழ் நிலங்களுக்கும் உரியது என்றாலும் கொங்கு மண்டலத்தில் அதன் சக்தி தனித்துவமானது. அப்படியான ஒப்பாரிப் பாடலுடன் நடக்கும் அந்த இறுதிக் காரியத்தைன் அத்தனை பரிமானங்களையும் அதன் சக்தியோடு எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார் தேவிபாரதி. இழவு காணச் செல்லும் பெண்களின் உடை அழகு படுத்தியிருக்கும் விதம், (எனக்குத் தெரிந்து கொண்டைதான் போட்டிருப்பார்கள்). தலைக்கு முக்காடு பரிதவிப்பான அந்த நடை என எதையும் விட்டுவிடாமல் அந்த நடப்பின் சகலங்களையும் எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார்.. அதைப் படித்தபின் இரண்டு நாட்களாக அந்த நினைவில் கனத்துக் கிடந்துவிட்டு பின்புதான் தொடர்ந்து நாவலை வாசிக்கத் துவங்கினேன்.

சிறு வயதில் மைக் செட்களில் ஒலிக்கும் ஒப்பாரிப்பாடல்கள் அது தரும் துயரமும் மனச் சோர்வும் நினைவுக்கு வந்தன. இவர்கள் எப்படித் துயரப்படுவதென தெரியாத மனதை பெரும் துயரத்தில் ஆழ்த்தி ஆழ்த்தி அதை முழுவதுமாக உள்வாங்கவிட்டு பின் அதிலிருந்து நம்மை மீட்டெடுக்கிறார்களோ என நினைத்துக் கொண்டேன்.

அவர்களின் சகோதர பாசம் நல்ல தங்காள், சின்னண்ணன் பெரிய அண்ணனின் சகோதரி தாமரை பெரிய நாச்சி மற்றும் பாசமலர் சிவாஜி சாவித்ரியின் பாசத்திற்கு சற்றும் குறைந்ததல்ல.

\அதனால் தான் முத்து அண்ணன்மார்களின் சடலத்தைக் கண்டு தங்காயி பாடும் ஒப்பாரிப் பாடலைப் பாடுகிறார். அப்போது அவர் ஒரு துயரத்தின் மாபெரும் சக்தியாகவே மாறிப் போகிறார். அவர் தலையில் குடம் குடமாய் தண்ணீர் ஊற்றித்தான் இயல்பு நிலைக்கு கொண்டு வர முடிகிறது. இதனிடையே விரிகிறது அண்ணன் மார் கதையை பாடும் லிங்க நாவிதனின் சித்திரம்.

அவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அல்லது தாங்கள் வாழும் வாழ்க்கையைத் தவிர வேறு ஒன்றையும் கற்பனை செய்வதும் இல்லை கனவு காணுவதும் இல்லை. இதுதான் வாழ்க்கை இதை சிக்கல் இல்லாமல் வாழ்ந்து தீர்த்துவிட்டால் போதும் என்ற மனப்பாங்கினர். நாவல் நெடுகிலும் அந்த மனப்பாங்கின் இயக்கமே அந்த சட்டகத்தை மீறாமல் பொங்கிப் பிரவகிக்கிறது.

இதுதான் அவர்கள் உலகம். யோசித்துப் பார்த்தால் ஒவ்வொருவரும் இதுபோல தனக்கான அல்லது தங்களுக்கான உலகத்தில் மட்டுமேதான் வாழகிறார்களோ  என்ற சிந்தனையும் எழுகிறது.

அவர்களின் அண்ணன் தங்கைப் பாசத்தின் குறியீடாக விளங்குகிறது பாசமலர் திரைப்படம். முத்துவுக்கு அந்தப் படம் அத்தனை உயிர். அந்தப் படமும் அது தொடர்பான நிகழ்வுகளும் என ஒரு அத்தியாயமே விரிகிறது. இதுவும் கூட ஒரு படத்தின் ஒரு குடும்பத்தின் கதையாக எனக்குத் தெரியவில்லை. அந்தக் காலகட்டத்தில் நம் சமூகமே அப்படித்தான் இருந்தது. எம்ஜிஆர் என்ற பிம்பத்தின் மீது மக்கள் கொண்டிருந்த மயக்கம் இன்று கேட்பதற்கு வேடிக்கையாகவும் நம்ப முடியாததாகவும் இருக்கும் அல்லவா?

பிள்ளைகளுடன் ஊருக்கு வரும் முத்து தன் வாழ்க்கைப் பாடுகளை நினைத்து ஒரு நிமிடத்தில் குழந்தைகளுடன் கிணற்றில் விழ முடிவு செய்து விடுகிறாள். அந்த வாழக்கைப் பாடுகள் அப்படித்தான் இருக்கின்றன. மரணித்துவிட அச்சமாக இருக்கிறது எனவே வாழ்கிறோம் என்பதாகத்தான் அது இருக்கிறது. அந்த சமயத்தில் அந்தக் குழந்தைகளின் அலறலும் அங்கே காரு மாமாவின் பிரசன்னமும் என நல்ல தங்காளின் வாழ்க்கைக்கு சற்றும் குறைவில்லாத வாழ்க்கையைத்தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நகரத்தில் வாழ்ந்தாலும் முத்துவின் கணவர் ஒரு ஆசிரியராய் இருந்தாலும் அவர்களை வறுமை ஆட்டிப் படைக்கிறது. பிள்ளைகள் இருவரும் சாயப்பட்டறைக்கு வேலைக்கு செல்கிறார்கள். அந்த நச்சு அந்த நெடிக்கு நடுவே அந்தக் குழந்தைகள் வாழ்க்கையை தொடர்ந்து வாழ்கிறார்கள். \

நம்பிக்கை கொள்வதற்கு ஏதும் இல்லை என்ற நிலையில் அவர்கள் சயனைடை சேமித்து வைத்திருக்கிறார்கள் எந்த நிமிடமும் அதைத் தின்று உயிரைவிட்டுவிட அவர்கள் தயாராய் இருக்கிறார்கள்

பூமியின் மீது இந்த வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது. நம் மக்கள் தங்கள் வாழ்க்கையை இப்படியாக ஏன் வகுத்துக் கொண்டார்கள் இதற்கு அவர்களின் அறியாமைதான் காரணமா அல்லது சமூக அமைப்பா என மன உளைச்சல் தரும் கேள்விகளை உயிர்ப்பித்தவாறு மேலே மேலே செல்கிறது நாவல்.

இதில் இன்னொரு விஷயம் எனக்கு முக்கியமாகப் படுகிறது. குடிநாவிதரின் குடும்பக் கதை என்றாலும் அதில் ஆதிக்க சாதியினரின் சாதிக் கொடுமை பற்றிய பதிவு எங்கேயும் இல்லை. இதை எப்படி எடுத்துக் கொள்வது என எனக்குத் தெரியவில்லை. இந்த நாவலைப் படிக்கும்போது கொங்கு மண்டல கிராமங்களில் சாதிப் பிரச்னையோ அல்லது அதன் வக்கிரங்களோ இல்லை என்பது போன்ற சித்திரத்துடன் இருப்பது சரியா என எனக்குத் தெரியவில்லை.

ஒருவேளை தேவிபாரதி சாதியப் பிரச்னைகளை கண்டுகொள்வது என்ற நிலையில் இருந்து கடந்து போயிருக்கலாம் அதற்காக அதை சொல்லாமல் விடுவது ஒருதிட்டமிடல் போல இருக்கிறதே என்றே நான் யோசிக்கிறேன். தெரியவில்லை எல்லா இடத்திலும் சாதிப் பிரச்னையை சொல்ல வேண்டும் என்ற என் வாசக எதிர்பார்ப்பையும் நான் சந்தேகப்படவே செய்கிறேன்.

இந்த வாழ்க்கை இப்படித்தான் என்றாலும் இது ஒரு காவியத் தன்மை உடையது என்பதே நாவலின் அடிநாதமாக விளங்குகிறது. அதனாலேயே தங்காயியும் நல்ல தங்காளும் எங்கோ எப்போதோ வாழ்ந்த ஒருவராக இல்லாமல் அவர்களின் கூடவே வாழ்பவர்களாக இருக்கிறார்கள். \

இந்த அடிநாதத்தை நாவலின் கடைசி அத்தியாயம் விஸ்தாரமாக காட்டிவிடுகிறது. காரு மாமாவின் எட்டாம் நாள் காரியத்திற்காக அங்கே ஒன்று கூடும் உறவினர்கள் அங்கிருக்கும் தாயக் கட்டையை எடுத்து தாயம் விளையாடத் துவங்குகிறார்கள். (நாவலில் இதற்கு முன்பே கிராமங்களில் தாய விளையாட்டு எவ்வளவு கொண்டாட்டமானது என்பது சொல்லப்பட்டிருக்கிறது)\

தாய விளையாட்டில் உள் மனச் சிடுக்குகள் மனதின் ஆதி உணர்வுகள் விழித்தெழுகின்றன. அது விளையாட்டுதானே என்பது மறந்து போகிகறது. உறவே என்றாலும் பெருகும் வன்மத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை. \

கடைசியில் இப்படிக் கேட்கிறாள் ராசம்மா அத்தை ரெண்டு போட்டா என்ன தருவே? அதற்கு முத்து ஒரு கணம் திகைத்து பின் நீ எதைக் கேட்டாலும் தருவேன் என்கிறாள். ராசம்மா தயங்கிக் கொண்டே இருக்கிறார். அப்போது முத்து  நீ ஒரு ரெண்டப் போட்டு இந்த ஆட்டத்த ஜெயிச்சிக் குடு நா எம் பையனுக்கு ஈஸ்வரியக் கட்டி வச்சி எம்பட மருமவளாக்கிக்கிறேன் என்கிறார்..

இது ஒரு சாதாரண காட்சியாகத் தோன்றலாம். ஒருவேளை இதுபோன்ற ஒரு நாவலில் ஒரு செயற்கையான காட்சியாசக் கூட சிலருக்குத் தோன்றலாம். ஆனால் என் மனதில் மகாபாரதத்தின் சூதாட்டக் காட்சி விரிகிறது. அந்த சூதாட்டத்திற்கு சற்றும் குறைவில்லாதது இந்த சூதாட்டம். அந்த இதிகாச கதா பாத்திரங்களின் வாழ்க்கைக்கு சற்றும் குறைவில்லாததும் கூட இந்த வாழ்க்கையும். வாழ்க்கையில் உயர்வில்லை குறையும் இல்லை வாழ்க்கை என்றால் அது வாழ்க்கைதான் எல்லோருக்கும் அது ஒன்றுதான் என்று நிறுவி விடுகிறார் தேவிபாரதி.

காரு மாமாவின் வாழ்வு சகோதரிகள் மீது அவர் கொண்ட பாசம், சகோதரிகள் அவர் மீது கொண்ட பாசம். ராசம்மா பிள்ளைகளுடன் பிரிந்து சென்றதன் துயரம் அவள் கூட்டிச் சென்ற தன் மீது பேரன்பு கொண்ட பிள்ளைகளை பைத்தியமாய்த் தேடியும் கடைசி வரை கண்டுபிடிக்க முடியாத சோகம் எல்லாமே அதன் பின் ஒரு காவியத்தின் சாயலைக் கொண்டுவிடுகின்றன. .


குமாரநந்தன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 29, 2022 16:02

May 17, 2022

லாவண்யா சுந்தர்ராஜன் கட்டுரை

 

லாவன்யாசுந்தர்ராஜன்

 

கட்டுரை

தேவிபாரதி படைப்புலகில் பாலியல் கட்டமைப்புகள்:

 

பாலியல் கட்டமைப்புகள் என்பது என் சிற்றறிவுக்கு எட்டியவரை பாலினம்(Sex as Gender), பாலுணர்வு(Sex as feeling), பாலியல்(Sexuality) என்று மூன்று வரையறைக்குள் அடக்கிவிடலாம் என்று தோன்றுகிறது. பாலினம் என்ற வரைமுறையில் ஆண், பெண், ஆணும் பெணும் அல்லாத மூன்றாம் பாலினம் என்ற வகைமைக்குள் அடக்கிவிட முடியும். பாலுணர்வு அந்த மூன்று பாலினரும் அவர்களுக்குரிய பிரித்தியோக குணாதியங்களை வெளிப்படும் எல்லாம் உணர்வுகளையும் குறிப்பிட்டு பேச வேண்டிய மிக விரிவான தளம். வெறும் உடல் ஊடல் சித்தரிப்புகளை மட்டும் பேசுவதல்ல இந்த வகைமை. உதாரணத்துக்கு எதிர்பாலினத்தின் மீதான எந்த விதமான ஈர்ப்பையும் உரையாடலையும் மட்டுமல்லது அவ்வறவுகளுகிடையே நிகழும் வெறுப்பு, கயமைத்தனம், அதன் பொருட்டு விளையும் நோய்மை கூறுகள் என்ற எல்லா உணர்வுகளையும் இந்த வகைமைக்குள் அடக்கலாம் என்பது எனது எண்ணம். மூன்றாம் பிரிவான பாலியல் என்ற தலைப்புக்குள் பேச வேண்டிய விஷயங்கள் ஓரிரு வரிகளுக்கு அடங்கி விட முடியுமா என்பது எனது தீராத சந்தேகம். ஒரு புனிதத் தன்மையுடனான விளக்கமென்றால் "இனப்பெருக்கத்திற்கு தேவைப்படும் எல்லா விதமான செயல்பாடுகள்" என்பதும் அதற்கு உபப்பட்டியலாக பாலினம், பாலுணர்வு இன்னபிற விஷயங்கள் அமைகிறது என்று தோராயமாக சொல்லி வைக்கலாம். ஆக ஆண், பெண் இவர்களை பாலினம், பாலுணர்வு சார்ந்து ஒரு படைப்பு என்னவெல்லாம் பேசுகிறதோ அது அனைத்தும் பாலியல் கட்டமைப்புக்குள் பேசலாம் புரிந்து கொண்டு இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஆண் பெண் உடல் சார்ந்த பதிவுகள். ஆண் பெண் இடையே நிகழும் உறவு, அதன் புதிர் தன்மை, அவ்வுறவுகளில் சித்தரிப்புகள், அவை தரும் பல்வேறு அனுபவ பதிவுகள், சமூகம், சூழல் ஆண் பெண் உறவிற்கு அமைத்திருக்கும் கட்டுபாடு, கற்பித்து வைத்திருக்கும் ஒழுங்கு முறைகள், பாலியல் சித்திரிப்புகள் என்ற பல விஷயங்களை பட்டியலிட்டபடி தேவிபாரதியின் படைப்புகளை படிக்கத் தொடங்கினேன். அதில் எனக்கு புலப்பட்ட சில  விஷயங்கள், அவர் படைப்புகளில் சமூக சூழல் மற்றம் ஜாதி கட்டமைப்பு பாலியல் கட்டமைப்புகளின் ஒழுங்கநெறிகளை தீர்மானிப்பவையாக திகழ்கின்றன.பெரும்பாலான இடங்களில் அச்சித்தரிப்புகள் சமூக, ஜாதியீய கட்டமைப்புகளை மறைமுகமாக சாடியும் அல்லது கட்டுபட்டும் நிற்கும் பதிவுகளாகவும் இருக்கின்றன.

அவர் படைப்புலகில் பாலியல் அத்துமீறல்கள், ஒடுக்குமுறைகள் பதிவாகி இருக்கின்றன. உறவின் சிக்கல்களும், பாலியல் சார்ந்த உளவியல் பிரச்சனைகளும் பல பிரதிகளில் பேசபடுகிறது. பெண் பாலினம் ஆண் பாலினினத்திலும் தாழ்ந்ததாவளாகவே தேவிபாரதியின் பெரும்பாலான படைப்புகளில் சித்தரிக்கபடுகிறாள்.  

 

இயன்ற அளவு தேவிபாரதியின் படைப்புகளை கால வரிசையின் அடிப்படையில் அணுகி அப்படைப்புகளில் சித்தரிக்கப்பட்டுள்ள பாலியல் காட்சிகள், அவை பூடகமாக உணர்த்திச் செல்லும் விஷயங்களை பதிவு செய்ய திட்டமிட்டுருந்தேன். அதன்படி அவரது சிறுகதைகளில் தொடங்கி பின்னர் குறுநாவல்களையும் இறுதியாக நாவல்களையும் பற்றி எழுதுவது சரியான வரிசையாக இருக்கலாம். ஆயினும் சில பொதுவான விஷயங்களும் பூடமாய் சொல்லப்பட்ட விஷயங்களும்(உதாரணத்துக்கு பெண் உடலை சித்தரவரை செய்யும் காட்சிகள் சில சிறுகதைகளிலும், ஒரு குறுநாவலிலும் மேலும் ஒரு நாவலிலும் பதிவாகி இருக்கிறது. அதே போல சமூக, ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் ஆண் பெண் உறவுகளுக்குள் ஏற்படுத்தும் சிக்கல்கள் அனேகமாக அவரது பெரும்பாலான படைப்புலகில் இடம் பெற்றிருக்கின்றன) இவற்றை தனித்தனியே பதிவு செய்திருக்கிறேன். 

 

ஆண் மன உளவியலுள் பாலுறவு என்பது பெண்ணுடலை வெல்வதற்கு என்றும், அந்த வெற்றியை நிர்ணயிப்பது அவ்வுறவின் பரவசநிலையில் வெளிப்படும் வார்த்தைகள் தீர்மானிக்கின்றன என்றும் பதிவு செய்கிறது தேவிபாரதியின் சிறுகதை ஒன்று, அந்த வார்த்தைகளில் குறிப்பாக ஒரு அன்னிய ஆண்மகனை பற்றிய குறிப்புகளை பூடமாக உணர்ந்து கொள்ளும் ஆண் மனம், தன்னுடைய தோல்விக்கு காரணமானவனை பலி கொள்ளவும் துணிகிறது. தன்னுடைய மனைவியை பழி வாக்கவும், பயங்கொள்ள செய்யவும் மேற்கொள்ளும் தன் உடலை சிதைத்துக் கொள்ளும் மன நோய்மையை "தாஸ் என்பவனும் தாஸ் என்பவனும்" என்ற சிறுகதை பதிவு செய்கிறது. தாஸ் என்ற ஒவியனிடம் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டேன் என்று சொல்லிவிட்டு போக விழையும் கதை சொல்லி, தான் வருமுன்னரே தாஸ் அங்கிருந்து ஓடிவிட்டான் என்று பதிவு செய்வதன் மூலம் நுட்பமாய் தன்னுடைய கதாநாயத்துவத்தை முன்னிருத்த விழைகிறான் கதைசொல்லி. .

 

"சிகரெட் துண்டுகளும் சில உள்ளாடைகளும்" சிறுகதை பேசுவது இன்னொரு விதமான நோய்மை. இந்த கதையின் மையப் பொருளாக ஒரு வரியில் கதையின் கருவை சொல்வதென்றால், பெண்ணுடலை தன்னுடமையாக நினைக்கும் ஆண் மனச் சிக்கல். அந்த சிக்கல் ஒரு மனபிறழ்வு போல இந்த கதையில் பதிவாகிறது. மனைவியை தன்னுடையாக கருதி, அந்த உரிமை கோராலின் உட்சபட்சமாக அவளை சந்தேகிக்கும் ஆண் மனம் அவள் மீது சொல்லும் குற்றசாட்டுகளுக்கு ஆதாரங்களை தேடியபடியே அல்லது கிடைக்கும் எல்லாவற்றையும் ஆதாரமாக தீவிரமாக நம்பும், வாசகர்களை நம்ப வைத்து கதை மாந்தர் அனைவரையும் சந்தேகிக்க வைக்கும் ஒரு யுத்தி இந்த கதையில் இடம் பெற்றிருக்கிறது. இந்த கதையின் கதை சொல்லி தாஸ். முன்னர் சொன்ன கதையில் பூடாகமாய் உளவும் தாஸ் என்ற ஒவியன் தானே இந்த கதையின் கதை சொல்லி என்ற சந்தேகம் கூட எனக்கு எழுகிறது. 

 

வீடென்ப சிறுகதையில் சொல்லப்பட்ட பாழடைந்த அப்பராயன் வீடு ஒரு நுட்பமான குறியீடு. அவ்வீடு பாழடையக் காரணமானது வீட்டின் ரீப்பர் பழுதடைந்தது என்பதும் அதனை நீண்ட நாள் கவனிக்காமல் போனதும் என்பதும் குறிப்பது வீட்டை மட்டுமல்ல என்று ஆழ்ந்த வாசிப்பில் புரிந்து கொள்ளவியலும். அந்த வீட்டை பழுதடைந்த தன்னுடலோடு கதை சொல்லி ஒப்பீடுவது அந்த சிறுகதைக்கான ஆதாரம் என்று நினைக்கிறேன். அதனை தன்னுடலுடன் மட்டுமின்றி, மனைவியின் உடலுடனும் அவள் உடல் கிளர்த்தும் வாசனைகளுடனும் எளிதாக ஒப்பிட்டு பார்க்கலாம். முதலிரவில் மனைவியுடனான உடல் செயர்க்கை தாழம்பூ வாசனையை கிளர்ந்த்தியதாக பதிவு செய்யும் கதை சொல்லி பின்னர் அதே உறவு துர்நாற்றம் நிறைந்ததாக மாறி போவதாகவும் பதிவு செய்கிறார். அப்படி துர்நாற்றம் பரப்பும் உடலுறவுக்கு காரணமாய் தன்னுடல் பிறருடன் கொண்ட பொருந்தா காமம் என்று சொல்கிறார் கதை சொல்லி. ஆனால் கதை சொல்லி தன் வரிகளில் சொல்லாமலே உணர்த்தும் விஷயங்கள் ஆண் மனதில் நிகழும் பொது புத்தியே பதிவு செய்கிறது. முன்னம் தாழம்பூ வாசனையை கிளர்த்தியவள், கதை சொல்லி சிறைசாலையிலிருந்து பதினான்கு ஆண்டுகள் கழித்து வரும் போது, அவள் உடலிலிருந்து அழுகிய மாம்பழ வாசனை பரவுவதாக பதிவு செய்கிறார். அதற்கு காரணமாய் தன் மனைவியின் தொழில் அழுகிய மாம்பழங்களை விற்பது என்ற நேரடி பொருளை மட்டும் உணரமல், அவர் நுட்பமாக பதிவு செய்திருக்கும் ஒரிரு காட்சிகளால் , வாசகங்களால் அவள் ஒழுக்கம் மற்றும் தொழில் சார்ந்த கற்பனைகளை வாசகர் மனதிற்குள் நிகழ்த்துகிறார். ரீப்பர் பழதடைந்த வீடு போல, காலமும், வரைமுறையற்ற காமமும் இருவரின் உடலையும் பாழாக்கி விட்டதாக உணரலாம். உடல் நறுமணத்தை பற்றிய பதிவுகள் இந்த கதையில் இருப்பதை போலவே நட்ராஜ் மஹராஜ் கதையில் கதை சொல்லியின் மனைவியின் உடன் தவுட்டு மணம் வீசுவதாகவும்,(தி ஜா வின மாப்பிள்ளை தோழன் கதையிலும் உடன் கற்றாழை மணமும் தவிட்டு மணமும் வீசுவதாக ஒரு பதிவிருக்கிறது) கதை சொல்லி அழகான பெண்கள் என்று உணரும் ஒரு சிலர் மேல் சொல்லில் சொல்ல முடியாத நறுமணம் வீசுவதாகவும் பதிவு செய்து இருப்பார்.

 

பலி சிறுகதையில் வரும் சித்திரவதை காட்சி மற்றொரு வகையான ஆண் மன உளவியல் சிக்கல்.  ஒடுக்கப்பட்ட ஜாதியில் இருந்து வரும் ஆண் மகன் தன்னை அடிமைபடுத்திய உயிர் ஜாதி பெண் உடலை சித்திரவதைக்கு உள்ளாக்கி பலி தீர்ப்பதாக சித்தரிக்கபட்ட கதையிலும் ஆண் மனசிக்கலை தாண்டிய உளவியல் செயல்படுகிறது. தன்னை மலம் அல்ல செய்த ஜாதியை சார்ந்தவள் என்பதற்காக இயலாதவளிடம், அதிகாரமற்றவளுமான ஒரு வேசியை பழி தீர்க்கும் உளவியல் சிக்கல், ஆண்ட ஜாதி அடிமை ஜாதியினரை செய்து பார்த்த சித்தரவதைகளுக்கு சற்றும் குறைந்தல்ல. யாரோ செய்த தவறுக்கு யாரையோ பழி தீர்க்கும் இந்த சிக்கலை எந்த விதத்திலும் நியாயபடுத்திவிட முடியவில்லை. "அழிவு" என்ற சிறுகதையில் இன்னதென்று தெளிவே இல்லாத காரணத்திற்காக தன் மனைவி அகல்யா தன்னை கொன்று விடுவாள் என்று கற்பனையாய் பீதியுறும் கணவன் ஒரு மனநோயாளி போல சித்தரிக்கபடுகிறான். அந்த கணவனும் அவன் நண்பனும் பேசிக் கொள்ளும் ஒரு பதிவாக "ஒரு கணவனுக்கு தன் மனைவியை கொல்ல எத்தனை காரணங்களுண்டோ அத்தனை காரணங்கள் மனைவிக்கு கணவன் மேலுண்டு" என்பதை என்னால் எளிதாக கடந்து போக இயலவில்லை. அகல்யாவுக்கு கௌதமன் இழைத்த அநீதிக்கு என்று புராண கதையோடு தொடர்புடையதாக இந்த கதையை பார்த்தாலும் யார் தவறுக்கோ யாரையோ பலி தீர்ப்பது ஒருவித உளவியல் சிக்கலன்றி வேறு என்னவென்று யோசிப்பது.

 

சமூக கட்டமைப்பை பூடமாக பேசும் பிரதி "கரும்பு வெள்ளை கடவுள்" என்ற குறுநாவல். இந்த குறுநாவலில் முதலிலிருந்து கடைசிவரை நாவலின் ஒரு பாத்திரமாகவே வரும் வெள்ளியங்கரிப் புதூரை சேர்ந்த சுப்பரமணியக் கவுண்டர் என்னும் பக்தரொருவரால் கட்டி வைக்கப்பட்ட இளைப்பாறு மண்டபம் ஒரு சாதீய சமூக கட்டமைப்பு பாலியல் ஒழுக்கமுறைமைகளை நாவலில் பறைசாற்றும் அடையாள சின்னம். முதல் பத்தியிலேயே அறிமுகம் ஆகுமிந்த அழகு ததும்பும் கிரைனைட் கல்மண்டபம் இளைப்பாற மட்டும் கட்டபடவில்லை. தன்னுடைய வேண்டுதலை ஏற்று, தன்னுடைய ஒரே மகள் தன்னுடன் ஒன்பதாவது வரை டெம்போ டிரைவருடன் ஓடி போயிருந்திருப்பதற்கான  சாத்தியத்தை தடுத்து நிறுத்தியதற்கான நன்றியறிதலாக   முருகனுக்கு கட்டி வைத்திருந்த அற்புத மண்டபமென்று ஒரு குறிப்பு அடுத்த சில பத்திகளில் பின்னே வருகிறது. நுட்பமாக கவனித்தால் இயல்பாய் தன்னுடன் பயின்ற ஒருவன் மீது நாட்டம் கொண்டு, ஏதோ ஒரு விதத்தில் அவன் பால் ஈர்க்கப்பட்டு, தன்னுடைய பாலியல் உணர்வுகளால் உத்தப்பட்ட ஒரு பெண் அவள் விரும்பத்திற்கு இணங்க களவு மணம் செய்ய இருந்தது சமூக காவலர்கள் தடுத்து நிறுத்தி அந்த செய்கையை புனைவில் வரும் முருகன் மேல் பழிபோட்டு, அதற்கான வெற்றியின் சின்னமாக அடையாளமாக  குளிர்ந்த தரை கொண்ட அந்த கல்மண்டபம் திகழ்கிறது. அது பின்னர் பரதேசிகளின் கூடமாகவும், சில பாலியல் நிகழ்வுகளுக்கு சாட்சியாகவும், சில அசாதாரண மரணங்கள் நிகழ்த்தும் இடமாகவும், கருப்பு வெள்ளை கடவுள் முடிவாக இறுதியாக குடியமர்ந்து அந்த மண்டபம் அழியும் விதமாக நகர்கிறது நாவல்.

 

இதே சாதீய சமூக கட்டமைப்பு மற்றொரு கதையிலும் "பரமனின் பட்டுப் பாவாடை உடுத்திய நான்காவது மகள்" வருகிறது. நாவிதன் மகள், ஆனாலும் வெள்ளைத் தோலும் புத்தி கூர்மையும் கொண்டவள். பச்சை நிற பட்டுபாவாடையை மிகவும் விரும்பு உடுப்பவள். தோலின் நிறம், அறிவுக் கூர்மை, நவ நாகரிக உடையணிதல் இவையாவும் ஒரு குறியீடு போலவும் சமூகத்தின் கீழ்த்தட்டு மக்களுக்கு பொருத்தமற்றது என்பது போலும், அப்படி வளரும் பெண் பாலியல் ஒழுங்க கட்டுமாடுகளை மீறுபவர்களாக அல்லது அவள் பரமனின் பிற மகள்களை போலல்லாது தானே தன் மணவாளனை தேரிந்தெடுப்பாள், உயர் ஜாதி பையனோடு தன்னுடைய வீட்டாரின் பலமான கண்காணிப்பை தாண்டியும் ஓடிப்போவாள், சில காலத்திற்கு பிறகு பெரிய நகரில் தனியாக பெரிய நகரில் என்ன ஆனாளோ என்று பைத்தியகாரன் போல் தனது தந்தையை தேடவிடுவாள். இந்த நாவலில்  "கவுண்டனா பெறந்து போயும் போயும் ஒரு நவுசத்திய இழுத்துகிட்டு போயிருக்கறேம் பாரு"  என்ற வரிகள் வருகின்றன, அதன் பின்னர் கதை மாந்தர் பேசும் எல்லாமே அடிமை சாதியின் மீது ஆண்ட சாதியினர் குறிப்பாக அடிமை சாதி பெண் உடல் மீது அவர்களுக்கு இருக்கும் அதிகாரத்தை சித்தரப்பதாக வருகிறது. 

 

பஷீரின் கதையொன்றில் நாயர் பெண்கள் ஜாபர் அணியாமல் திறந்த மார்புடன் நம்பூரியின் இல்லத்திற்கு செல்வதை சித்தரிக்கும் காட்சியை நினைவுபடும் பதிவுகள் தேவிபாரதியின் படைப்புலக பிரதிகளிலும் வந்திருக்கின்றன. பலி என்ற சிறுகதையில் தலித் இளைஞன் பிரமண வேசியிடம் தன்னுடைய மூதாதையர் மேலாடை அணியாது அவளுடைய மூதாதையர் முன் நின்றதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஜாதி ஏற்றதாழ்வுகள் மட்டுமல்லாது அதிகாரத்திற்கு உட்பட்டோர் பெண்ணுடல் மீது நடத்தும் அத்துமீறல்களையும் அதனை அடிமைபடுத்தும் காட்சிகளும் தேவிபாரதியின்  படைப்புலகில் பதிவாகி இருக்கிறது, "கருப்பு வெள்ளை கடவுள்" குறுநாவலின் வரும் இன்ஸ்பெக்கர் கொடூரன் என்பதை சித்தரிக்க தேவிபாரதிக்கு கிடைப்பது சித்தரவதைக்கு உள்ளாக்கப்படும் இருபத்தி ஏழு வயதே நிரம்பிய, பள்ளி ஆசிரியின் உடல். அத்தனை சித்திரவதையையும் தாங்கிக் கொண்டு உயிர் பிரியும் நேரத்தில் அந்த பெண்ணில் இதழ்களில் அருப்பும் புன்னகையைக் கூட தாள முடியாத ஆண்ணின் உளவியலை சித்தரிக்கும் அந்த சித்தரவதை காட்சி குறுநாவலுக்கு எந்த விதத்தில் வலு சேர்க்கிறது என்பது எனக்கு இன்னும் விளங்காத புதிர். அந்த பெண்ணுக்கும் கதைக்கும் இருக்கும் ஒரே இணைப்பாக என்னால் பார்க்க முடிந்த விஷயம் அவள் வீட்டிலிருந்து பரிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் கிடைத்த காமராஜரின் கருப்பு வெள்ளை புகைப்படம். அந்த புகைப்படத்தை கூட இறுதியில் பொக்கரைன் இயந்திரம் நொருக்கித் தள்ளிவிட்டு போவதாக இறுதியில் ஒரு பதிவு வரும். கல்விக் கண் தந்த கடவுளென்று போற்றபடும் காமராஜரின் புகைப்படத்திற்கே அந்த மரியாதை தான் என்ற நுட்ப சித்தரிப்பை உள்ளடக்கிய பதிவு மேலும் அந்த இன்ஸ்பெக்கடரின் கொடூர குணத்தை மறுபதிவு செய்வதற்கும் உதவும் பதிவாகவும் அதனை காணலாம்.

 

 அதே போலவே நிழலின் தனிமை நாவலின் வரும் சாரதாவுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமை. அதுவே கதை சொல்லி அந்த கதை சொல்ல ஆரம்பிக்கும் ஆதார நிகழ்வாய், பல இடங்களில் கதை சொல்லியே பதிவது போல "பழி வாங்கும் இந்த கதை" அந்த நிகழ்விருந்தாலும், அது ஒரு சினிமாத்தனம் நிறைந்தது போல இருக்கும் நுட்பமான பதிவு. ஆண்ட ஜாதியினரோ, பணம் படைத்தவராக இருக்கும் அதிகாரம் படைத்தவர் தனக்கு அடிமைப்பட்டவரிடமோ, பணம் வாங்கிக் கொண்டு தன் அதிகாரத்திற்கு உட்பட்டவரோ இருக்கும் பட்சம் அவர்களின் வீட்டு பெண்களில் உடலை தனது உடைமையாக அதன் மீது ஏதோ ஒரு விதத்தில் தன் அதிகாரத்தை நிலைத்தும் பிரதியாக இந்த நிகழ்வும் வந்து போகிறது. ஒரு ஆணை கொடூரன் என்று நிறுவ, அவன் பழிவாங்கப்பட வேண்டியவன் என்று தீர்க்கமான முடிவுக்கு முடிவுக்கு வர அவன் மேல் வன்மம் கொள்ளச் செய்ய பெண் உடல் அவமானப்பட வேண்டி இருப்பதையே தேவிபாரதியின் "கருப்பு வெள்ளை கடவுள்" குறுநாவலில் வரும் பெண் உடல் மீது நடத்தப்படும் சித்திரவதையும், "நிழலின் தனிமை" நாவலின் வரும் சாரதாவுக்கு நடந்ததாக சித்திரக்கப்படும் வன்கொடுமையும். மஹாபாரத கதையை வெறும் அறியணை உரிமை போராட்டக்கதையாக சித்தரித்திருந்தால் அது மாபெரும் தாக்கத்தை உண்டாக்கி இருக்க முடியாது. மஹாபாரத போர் தர்மம் தனை சூது கவ்வும் என்ற நியாயத்தை வலுவாக நிலைநாட்டி இருக்க முடியாது திரௌபதி நடு சபையில் மானபங்கபடுத்தபடுவது பின்னர் நிகழவிருக்கும் மஹாபாரத போரில் துச்சாதானும் துரியோதனும் அழிக்கபட என்பதை நியாயபடுத்தவே. இந்த தொழில்நுட்பத்தையே, தேவிபாரதியும் பயன்படுத்தி இருக்கிறார். 

  

பலி கதையை நாடகமாக மாற்ற முயலும் அ. ராமசாமியின் விலகல் தத்துவம் என்ற குறுநாவலில் நிலவும் பாலியல் புனை சித்தரப்பு அதே நாவலில் சொல்லபடும் கலக மனநிலையுடைய. பலி கதையில் வரும் பிரமண வேசி பாத்திரத்தில் ஒரு தலித்தாகவும், தலித் இளைஞனாக பன்றியை தின்று வளர்ந்த வாய் உருவாக்கிய எச்சில் என்று அவள் வாயில் துப்பும், அவள் உடலை பழி கொள்ளும் வரும் பாத்திரமாக ஒரு பிரமண இளைஞனாகவும் சித்தரிக்கப்படுகிறது. மேடையில் மூர்க்கமான புணர்வதாகவும், சிகரெட்லாம் சூடுவதாக சித்தரிக்கப்படும் காட்சிகள் நிஜமாகவே நடந்தெரியதாக முடிகிறது நாவல். இங்கே சித்தரவதைக்கு உள்ளானது பிராமண இளைஞனின் உடல், பிரமண இளைஞனை சிகரெட்டால் சுட்டது பெண் வேடமணிந்த தலித் இளைஞன் இவ்விடத்தில் பெண் உடலையும் தாண்டி அடிமை ஜாதி என்ற அழுத்தமான பதிவையும் அவர் உளசிக்கலைகளையும் சித்தரிக்கிறார் தேவிபாரதி. இதற்கும் பிராமண வேசியாக வேடம் தரிக்கும் இளைஞன் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் மகன். அவன் தம் முன்னோர் யாரென்று கூட அறியாது வேறு மாநிலத்தில் வளர்க்கபடுபவன். பின்னரும் இவ்வாறாக காட்சி மாறுவது நமது சமூக அமைப்பின் மீது படைபாளி கொண்டிருக்கும் வெறுப்பான மனநிலையை தான் சுட்டுகிறது.

 

களவொழுக்கத்தில் ஈடுபடும் தமது மனைவிரை கண்டிக்கவோ தண்டிக்கவோ விழையாத அல்லது முடியாத ஆனாலும் அவர்களின் ரகசிய காதலை அறிந்து கொள்ளும் ஆவலில் மணல்வெளியின் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் அலைந்து திரியும் "கழைக்கூத்தாடியின் இசை" குறுநாவலில் மிஸ்டர் எக்ஸ் போன்ற கதை மாந்தரின் உளவியல் சிக்கலையும் தேவிபாரதியில் பாலியல் சித்தரிப்புகளின் ஒரு பிரதியாகவே பார்க்க முடிகிறது.  இதே போன்ற இன்னொரு கதாபாத்திரம் நிழலின் தனிமை நாவலில் வரும் பழம் துணி விற்பவன். சுகந்தியின் கணவராக வரும் இவர், தன்னுடைய மனைவி இன்னொருவரிடம் நெருக்கி பழகுவதை(அவள் நிர்வாணமாய் இன்னொருவருடன் படுத்திருப்பதை கூட) கண்டும் காணமல் இருக்கிறார். பழந்துணி விற்பதிலிருந்து கட்பீஸ் கடை வைக்க கதை சொல்லி உதவுவதாக சித்தரிக்கபடுகிறது. அதை தவிர வேறு பெரிய காரணங்கள் எதுவும் தெளிவாக பதியப்படவில்லை. சுகந்திக்கும் அவள் கணவனுக்கும் பாலியல் விஷயத்தில் பிரச்சனை இருப்பதாகவும் அழுத்தமான பதிவில்லை. வெறும் பொருளாதார ஆதயங்களுக்காக ஒரு இந்திய கணவன் தன் மனைவியை கண்டும் காணாது இருப்பாரா என்பது என் பெண் மனதுக்கு மட்டும் அகப்படும் சந்தேகமாக இருக்கலாம். சுகந்தியின் கணவனை அவர் செய்யும் தொழிலோடு ஒப்பிட்டு பழந்துணி வியாபாரி என்றும் பின்னர் அவரை கட்பீஸ் கடைக்காரன் என்று குறிப்பிடுவதில் சுகந்தி கதைசொல்லியோடு அறிமுகமாகும் போது இருப்பதற்கும் பின்னர் அவள் புறத்தோற்றம் நவீனமாக உயர்ந்திருப்பதை குறிப்பிடும் நுட்ப பதிவுகளாக பார்த்து வியக்க வைக்கின்றன. பழந்துணியும், கட்பீஸ் என்ற வார்த்தை பிரயோகங்கள் சுகந்தியை குறிப்பவையாக என்னால் உணர முடிகிறது.

 

வேணு கானம் இசைக்க நீலமேக வண்ண சியாமள  உபயோகபடுத்தும் புல்லாங்குழல் பல பெண்களை, ஆண்களை மயங்கி மாயம் செய்தாக பல பதிவுகளை இதிகாச புராண காவியங்களில் பார்க்கிறோம். அதே புல்லாங்குழலை புலம்பி அழுவது போலும் இசைக்க முடியும், கேட்பவர் அனைவரையும் கண்ணீர் விட செய்ய முடியும். அப்படியே தேவிபாரதி சித்தரிக்கும் உடல் கூடல்கள். இவர் சித்திரிக்கும் காமம், பெண் உடல் கொண்டாட்டத்திற்குரியதாக இல்லை. அது ஏதேனும் ஒரு காரிய நிமித்தமே நடைபெறுகிறது. தனிமையின் நிழல் நாவலில் கதை சொல்லிக்கு சுலோச்சனாவோடு நடக்கும் உடல் சேர்க்கை எல்லாமே கதைசொல்லி, அந்த கதையில் வரும் கருணாகரன் என்ற கதாபாத்திரம் சாரதாவுக்கு நடத்திய பாலியல் கொடுமைக்கு பழிவாங்கும் கருவியாக பயன்படுத்துகிறார். அதே நாவலின் சுகந்தியுடனான அவரது உறவும் ஏதோ ஒரு ஆதாயத்தின் பொருட்டே நகர்கிறது. சுகந்திக்கும் அவள் கணவருக்கும் அது பொருளாதார மேம்பாடாக இருக்கிறது. கதை சொல்லிக்கு அது தன்னுடைய பழி வாங்கும் படலம் பொருட்டு தன்னால் ஏமாற்றப்பட்ட முன்னாள் காதலியை மறக்கவும் அதிலிருந்து மீண்டு மறுவாழ்வை பேண காரணியாக இருக்கிறது.

 

நிழலின் தனிமை நாவலில் "காலம்" மிக முக்கியமான உணர்வின் நகர்வுகளும் அதனால் தேவிபாரதி சித்திரிக்கும் மனித உணர்வுகளை தீர்மானிக்கும் கருவியாக இருக்கிறது. அது அவர் நிர்மாணிக்கும் பாலியல் கட்டமைப்புகளையும் கூட காலம் மாற்றுகிறது. கதை சொல்லியின் நிகழ்காலத்திலிருந்து சற்றேரக்குறைய முப்பதைந்தாண்டுகளுக்கு முன்னர் வரும் கருணாகரன், சாரதாவுக்கு நிகழ்ந்தும் வன்கொடுமைக்கு கிட்டத்தட்ட நிகரான சிக்கல்களை கதைசொல்லி சுலோச்சனாவுக்கும், சுகந்திக்கும் செய்கிறான். தன்னை பல இடங்களில் கருணாகரனின் பிரதியாக நினைத்து குற்ற உணர்வுக்கு உள்ளாகிறான். நாவலின் முக்கியமான ஒரு இடத்தில் "உங்க பெரு கருணாகரனா?" என்று ஒரு கந்துவட்டிகாரன் கேட்கும் போது கதை சொல்லிக்கு ஏற்படும் அதே அளவிளான அதிர்ச்சி படிப்பவர்களுக்கும் ஏற்படுவது தேவிபாரதியின் நாவலுக்கு கிடைத்த வெற்றி. கருணகாரன் என்ற பெயரை அந்த நாவலின் ஆழமான கெட்ட வார்த்தை போலவும் பாலியல் குறியீடு போலவும் பழி தீர்க்க பட வேண்டியவன் என்பது போலவும் உபயோகபடுத்தி இருக்கிறார் நாவலாசிரியர். நாவலின் இறுதியில் சாரதா "இவன் அவன் இல்லை, அவனோட சாயலில் இருக்கறதால நீயும் ஏமாந்துட்டன்னு" என்பது மிக நுட்பமான பதிவு. காலமே மட்டும் இந்த மாறுபட்ட நிகழ்வுகளுக்கு காரணமாகிறது 

 

மேலும் மிகவும் அதிர்ச்சியுட்ட கூட இன்னொரு பதிவு நிழலின் தனிமை நாவலில் வின்சென்ட் என்று கதைசொல்லியின் நண்பனுக்கு, கதை சொல்லியின் சகோதரி வன்கொடுமைக்கு ஆளான விஷயத்தை, கதை சொல்லி ரகசிய பரிமாறலாகவும், தன்னை ஆற்றுபடுத்தி கொள்ளவும் பகிரப்படும் வார்த்தைகளையும் கருணாகரனை தன் கொன்று பழி தீர்க்க இருப்பதாக சூளுரைப்பதையும் பார்த்து அவனுக்கு ஆறுதல் தேறுதல் சொல்லும் அதே நேரம் அவன் சுயமைதுவம் செய்து கொள்வதையும் சேர்த்து பதிவு செய்து நம்மை அதிரவிடுகிறார் நாவலாசிரியர்.

 

நிழலின் தனிமை நாவலில் கதை சொல்லிக்கு சுலோசனா, சுகந்தி இருவரிடத்திலும் காதலற்ற காமம் இருக்கிறது.  தமக்கைக்கு நடந்த வன்கொடுமை பழி தீர்க்க என்று சுலோசனாவோடு ஆரம்பித்த உணர்வு பின்னர் காதலாக அவர் அறியாமலேயே கனிகிறது. அதே போலவே சுகந்தி பிறன்மனை என்ற உணர்வு கதைசொல்லியின் மன ஆழங்களில் இருக்கும் போதும், அவளுடைய அன்யோன்யம் அவளை தன்னுடையவளாக மாற்றிக் கொள்ள வேண்டுமென்று நினைக்க வைக்கிறது. அவள் மேல் காதல் வருகிறது. ஆனால் மீண்டும் சுலோசனாவை பற்றி அவன் கேள்வியுறும் விஷயங்கள் சுகந்தியிடமிருந்து விலக செய்கிறது, சுகந்தியிடமிருந்து விலகியும் விலக முடியாமலும் ஊசலாடும் உறவு சுகந்தியின் கணவன் மேல் அவள் காட்டும் பரிவில் நிரந்தரமாக பிரிந்து பரிதவிக்கும் அல்லது ஆசுவசிக்கும் உணர்வாக மேலோட்டமாக பதியும் பிரதியில், ஊருக்கு ஓரிரு நாள் சென்று பின்னர் அலுவலத்தில் தன்னை யாரும் வந்து விசாரித்தார்களா என்றும் ஒருவேளை சுகந்தி வந்திருப்பாளோ என்ற உள்மன பிரதியை  பதிவு செய்யும் போது மிக நுட்பமாக கதைசொல்லி சுகந்தி மீது கொண்டிருக்கும் நுண்ணார்வம் பூடமாக பதிவாகிறது. சுகந்தியிடமிருந்து விலகி ஓடுவது சுலோசனாவின் மீது அவனுக்கு இருக்கும் பரிவு தான். தனக்கும் சுலோவுக்கும் இருந்த உறவை சுலோசனாவின் மாமியார் மற்றும் அவள் வீட்டு உறவினர் தொடர் அவமானம் செய்யும் போது உணர்வின்வயப்பட்டு வெளிபடுத்தி அவளுக்கு வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்திய குற்றஉணர்வுமே சுலோச்சனா மீதான பரிவுக்கு காரணமாகும். ஆக சுலோசனாவை பழிவாங்க என்று ஏற்படுத்திக் கொண்ட உறவு பின்னர் அவள் மேல் பரிவு காட்ட காரணமாக ஆகிறது. ஆயினும் அந்த பரிவை அங்கீகாரம் பெற முடியாத அவநிலைக்கு கதை சொல்லி தள்ளபடுவதும், சுலோசனா அவளை பின்னர் முன்னிலையில் அதிகாரம் செய்வதும், செய்யும் உதவிகளுக்கு பணம் கொடுத்து அவனை அவமானப்படுத்துவதும் பரிதாபத்திற்குரியதும், சுலோசனாவின் பார்வையில்(வாசக பிரதியில்) மிகவும் நியாமானதாகவும் சித்தரிக்கபடுகிறது. 

 

"நிழிலின் தனிமை" நாவலில் பழி வாங்க துடிக்கும் கதை சொல்லி எல்லா இடத்திலும் தோல்வியடைந்தவனாக தன் கதையை, தன் பாலியல் இச்சைகளை தன்னிஷ்டபட நகர்த்த முடியாதவனாகவே பதிவாகிறான். பழந்துணி வியாபாரி, கட் பீஸ் கடையை முதலாளி ஆன பின்னர் தன் மனைவியை தக்க வைத்துக் கொள்ள சின்ன இருமலால் எல்லா உரிமைகளையும் மீட்டு எடுத்துவிட முடிகிறது. முதல் முறை அன்பென்று ஏமாற்றப்பட்டவள் மறுபடி நிஜமான பரிவோடு காதலோடு கதை சொல்லி அணுகி தரும் ஒரு முத்தம் அவளை தன் கணவனோடு யாருமே எதிர்பார்க்காத வகையில் சமாதானம் செய்து கொள்ள துரத்துகிறது. கதை சொல்லி என்றென்றைக்குமான தனிமையில் தள்ளப்படுகிறான். சுமார் நான்பாதாண்டு காலம் தனக்குள் எரிந்து கொண்டிருந்த பழி என்ற தீயும் "இவன் அவனில்லை" என்று சாரதா கூறும் ஒரு வார்த்தையில் நாராசமாக அழிந்து போகிறது.

 

நட்ராஜ் மஹாராஜ் நாவலில் பெண் , ஆண் பாலினம் சார்ந்த நுட்பமான பதிவொன்று வருகிறது. டிசி பதிவு செய்யும் பதிவேட்டில் மாணவர்களில் விபரங்களை நீல வண்ண மையிலும் மாணவிகளில் விபரங்களை சிவப்பு வண்ண மையிலும் எழுதுவதாக வரும் பதிவது. பார்வைக்கு இது பார்த்ததும் பாலினத்தை அடையாளபடுத்த ஏற்படுத்தப்பட்ட நிற வேறுபாடாக மட்டும் எனக்கு தோன்றவில்லை. தேவிபாரதியின் அடிமனத்தில் ஆழமாய் பதிந்திருக்கும் கலக மனநிலையை இது பறை சாற்றுகிறது. சிவப்பு என்பது கலகம், புரட்சியை குறிக்கும். மேலும் அறிவுசார் துறைகளில் பிழைகளை அடிக்குறியிட சிவப்பு நிறம் பயன்படுத்தப்படும். பாலியல் தொழிலை குறிக்கும் நிறமும் சிவப்பு. ஒருவர் ஜாதியை சொல்லி அழைத்தாலே குற்றமாகும் இந்த சூழலில், ஒரு பாலினத்தையே வேறு நிறத்தில் பதிவு செய்ய துணியும் தேவிபாரதியில் எழுத்தை என்ன சொல்லி வியப்பது அல்லது சாடுவதென்று எனக்கு தெரியவில்லை. இப்படி கூட இட்டுகட்டி பேச முடியுமா என்று என்னை நானே வியக்கிறேன். ஆம் சிவப்பு என்ற நிறத்தை பெண்ணுக்கு குறீயீடாக பயன்படுத்தியது தேவிபாரதி படைப்புலக கலகம் என்று சுட்டிக்காட்ட விழைகிறேன். 

 

நட்ராஜ் மஹராஜ் நாவலில் நாவலாசிரியர் பெண்களுக்கு பெயரிடும் முறையிலும் பாலினம் மற்றும் பாலுணர்வு சார்ந்த குறியீடுகளை பிரதி முழுக்க காணமுடியும். குறிப்பேட்டில் சிவப்பு நிறத்தில் மாணவிகளின் பெயர்கள் எழுதப்படும் போது ச என்ற பெயருடைய பெண்ணின் பெயரை சா என்று பிழையோடு எழுதி முடிக்கும் கதை சொல்லி அது மிகவும் ஆபாசமான பொருள் படுவதாகவும் பதிவு செய்தது மேம்போக்கான பதிவாக என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. பெண்களை பொது புத்தியோடு ஒரு எழுத்து பிழையில் ஆபாசமாக சித்தரித்துவிட முடியும் என்ற ஆண் மன உளவியல் சிக்கலாய் இதை பார்க்கிறேன். மேலும் பேராசிரியர் பூவின் உதவியாளராய் அவருடன் வரும் பெண்ணுக்கு ஸ் என்று பெயரிடுவதிலும் இந்த நுட்ப பரிகாசத்தை என்னால் உணர முடிந்தது. Sex என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது வரும் ஒலியையும், S என்று தமிழில் தட்டச்சினால் ஸ் என்று வரும் அமைப்பையும் நினைவூட்டும் பரிகாசம் அது என்று நான் நினைக்கிறேன்.

 

தேவிபாரதியின் படைப்புலகில் வரும் பாலியல் சித்தரிப்புகள், கண நேர பிசகுகள் போல் சித்தரிக்கப்படுகின்றன. ஒரு பெண் தன் வாழ்க்கையை பகிர, ஒருவடனும் ஓடிப்போக வேண்டும் என்று தீர்மானிக்க சில மணித்துளிகள் போதுமானதாக இருக்கிறது. அதற்கு ஒரு பாம்பே மிட்டாய் விற்பவன் பொற்கொல்லன் போல் மிகுந்த கலைநுட்பத்தோடு செய்துத் தரும் மிட்டாய் கை கடிகாரம் போதுமானதாக இருக்கிறது. ஆனால் அது சமூக காவலர்களால் பரப்பட்ட கட்டுகதையோ என்று நினைப்பதற்கு நாற்பத்து ஐந்து நாள் கழித்து நடக்கும் விழாவில் மீண்டும் கேட்டும் பாம்பே மிட்டாய்ய்ய்ய் என்ற குரல் போதுமானதாக இருக்கிறது. ஒரு கூட்ட நெரிசலில் யாருக்கு தெரிந்து விட போகிறது என்று பெண்ணுடல் மீது ஆண் தனது பாலியல் இச்சையால் உத்தப்பட்டு நடத்து அத்துமீறலகள் பதிவாகிறது. இதில் அந்த பெண்ணுக்கும் உடன்பாடிருக்கிறது அவளும் களிபுறுகிறாள், யாரும் அறிந்துவிட மாட்டார் என்ற பரிபூரண சுந்தரமே இந்த கண நேர பிசகுகளுக்கு காரணம் என்று பதிவு செய்கிறார் நாவலாசிரியர். இது வாசககளில் உள்ள கிடங்கில் தேங்கி கிடக்கும் கசடுகளை அசைத்து பார்ப்பது. ஜன நெரிசலில் யாரோ ஒருவன் யாரோ ஒருத்தியை உரசியோ, அழுத்தியோ பார்ப்பதால் என்ன பேரின்பம் கிடைத்திட கூடும். தேவிபாரதியின் பதிவின் இரு பாலினரும் இந்த பிசகுக்கு துணை போகின்றார். இருவருமே யாருக்கும் தெரியாமல் இதனால் களிப்புறுகின்றனர்.  ஒழுக்க மனம் ஏற்கமறுக்கும் நிதர்சன பதிவு. அதே போல பெருவேடன் காளிங்க நடராஜின் படங்களும் பேனர்களும் அவரின் பட்டத்து மஹாராணியின் படங்களையும் கண்ணுறும் நட்ராஜ் மஹாராஜ் அந்த சித்திரங்களில் வரையப்பட்ட பெண்ணை அதே கதையில் வரும் ஸ் என்ற பெண்ணோடு ஒப்பிட்டு உருவ ஒற்றுமை வேற்றுமைகளை பதிவு செய்து கொண்டே வரும் போது அந்த பெண்ணின் அங்க வளைவுகளை தன்னை அறியாது ரகசியமாக ரசிக்கிறான்  காளிங்க மஹாராஜ் தனது கொள்ளு பாட்டன் என்றால் அவரது பட்டது மஹாராணியான அந்த படத்திலிருப்பது தனது கொள்ளுபாட்டி என்று ஒழுங்க நியதிகளை நினைவுற்று, அந்த புகைப்படத்தை பாலியல் கண்ணோட்டத்தோடு பார்த்தது தவறு என்று குற்ற உணர்வும் கொள்கிறான். தன்னுடைய கொள்ளு பாட்டியின் பேனரின் வரையப்பட்டிருக்கும் பெண் அவயங்களை அவன் மூன்று முறை பார்க்கும் போது வெவ்வேறு ஆடவர் மூவர் அதனை தடவிக் கொண்டிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் ஆளாகிறான். நமது சமூக கட்டமைப்பில் பாலின

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 17, 2022 22:12

May 14, 2022

தாமரையில் வந்த கட்டுரை

 

 நிரம்பித் தழும்பும் நதி

                                                                                                     - மதன் ராமலிங்கம் .

 

    சிறுகதை, நாவல் என்ற வடிவங்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் அடித்தட்டு மக்களின் வேதனைகளையும் சக மனிதர்களினால் சுரண்டப்படும் அவலங்களையும் பதிவு செய்தே வந்திருக்கிறது. ஆங்கில இலக்கியம் பயின்ற முதல் தலைமுறை எழுத்தாளர்களால் அவைப் பொதுமொழியில் எழுதப்பட்டு ,எண்பதுகளில் வட்டார வழக்கில் எழுதும் படைப்பாளிகளால் தங்கள் மண்ணின் அசலான மனிதர்கள், அந்த பிராந்தியத்தின் தொன்மங்கள்,அவலங்கள் எழுதப்பட்டன .தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தலித் இலக்கியம் என்ற வகைமை புதிய திறப்பை எற்படுத்தியது. மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களையும், சாதி மேலாதிக்கத்தின் அடக்குமுறைகளையும் எழுதும் சுதந்திரத்தைப் படைப்பாளிகளுக்கு வழங்கியது. மேல்சாதியின மக்களை அண்டிவாழும், அவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை ஊழியம் செய்துதங்களின் வாழ்வை அவர்களுக்காகவே அற்பணித்த சமூகங்களிலிருந்து எழுத வந்த படைப்பாளிகள் மூலம் பல சாதிகளின் பிரச்சனைகளையும் அவர்கள் வாழ்வின் சுக துக்கங்களையும் இரத்தமும் சதையுமாக உணர முடிகிறது. அந்த வகையில் எழுத்தாளர் தேவிபாரதி தன் எழுத்தின் துவக்கம் முதலே கொங்கு வட்டாரத்தில் நிலவுடமைச் சமூகத்திற்கு குடிநாவிதர்களாக ஊழியம் செய்யும் எளிய மனிதர்கள் குறித்து தொடர்ச்சியாகப் பதிவு செய்தே வந்திருக்கிறார். இந்த "நீர்வழிப் படூஉம்" நாவலும் குடிநாவிதர்களின் வாழ்க்கையை பதிவு செய்கிறது.

இந்த நாவல் குறித்து பேசுவதற்கு முன் தமிழ் புனைவுப் பரப்பில் நாவிதர் சமூகம் குறித்து வெளி வந்த படைப்புகள் எவை என்பதைப் பார்த்தால் சிறுகதைகளில் புதுமைப்பித்தன் எழுதிய ‘நாசகாரக் கும்பல்’ கதையில், தன் சொல்லுக்கு கட்டுப்படாத மருத்துவன் மருதப்பனை அடித்து உதைத்து ஊரைவிட்டு வெளியேற்றுகிறார் சிதம்பரம் பிள்ளை. சாபமிட்டுப் போகும் மருதப்பன் பின்னர் முஸ்லீம் சமுதாயத்துக்கு மாறிவிட்டதாகக் கதை முடியும். இந்தக் கதை நாவிதர்கள் மருத்துவர்களாகவும் பணி செய்ததைப் பதிவு செய்கிறது. முத்துநாகுவின் ‘சுளுந்தீ’ நாவலும் இதே கருத்தை வழியுறுத்துகிறது. வரலாற்றில் எந்த இடத்திலும் பதிவு செய்யப்படாத நாவிதர்களின் வாழ்வையும், அவர்கள் சார்ந்திருந்த மருத்துவத்தையும் "சுளுந்தீ"விரிவாகச் சொன்ன நாவல்களில் முக்கியமானது..

 

வண்ணநிலவனின் ‘மயான காண்டம்’ சிறுகதையில் மயானத்தில் பிணம் எறிக்கும் பண்டிதன் செல்லையாவின் வறுமையையும், அவனின் பாடுகளையும் சொல்கிறது. இந்தக் கதை கிராமங்களில் பிணத்தை எறிக்க, புதைக்க, மயானச் சாங்கியங்களைச் செய்பவர்களாகவும் நாவிதர்கள் இருந்தார்கள் என்கிற சித்திரத்தைத் தருகிறது. எஸ். ராமகிருஷ்ணனின் ‘ மினர்வா சலூன் ‘ சிறுகதையில் ரங்கூனில் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உதவும் வகையில் இந்திய தேசிய ராணுவம் கட்டமைப்பதில் அணுக்கமாக இருந்த கருப்பையா எனும் நாவிதனைப் பற்றிச் சொல்கிறது.

கொங்கு வட்டாரத்தின் படைப்பாளிகளான ஆர்.சண்முக சுந்தரம், பெருமாள் முருகன், என்.ஸ்ரீராம், எம்.கோபாலகிருஷ்ணன், வாமு.கோமு தொடங்கி குணா கந்தசாமி, கே.என்.செந்தில் முதலானவர்களின் சிறுகதைகளில் கதைமாந்தர்களாக நாவிதர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள் .சிறுகதைகள் எழுதப்பட்டஅளவிற்கு நாவல்கள் அதிகம் வரவில்லை .தேவிபாரதியின் "நிழலின்தனிமை", முத்துநாகுவின் "சுளுந்தீ’’ என சில நாவல்கள் தான் நினைவுக்கு வருகிறது.

மீபத்தில் வெளிவந்த தேவிபாரதியின் ‘நீர்வழிப்படூஉம்’’ ’நாவல் கொங்குப் பகுதி கிராமம் ஒன்றில் வேளாளர்களை அண்டி வாழ்ந்த ஒரு நாவிதர் குடும்பத்தின் வாழ்க்கையைச் சொல்கிறது. குடிமகன், மருத்துவன் என்ற பெயர்களில் அழைக்கப்படும் அச்சமூகத்தினர் பிற்படுத்தப்பட்ட மக்கள் அனுபவித்த சாதிய அடக்குமுறைகளுக்கு உள்ளாகி இருக்க்க்கூடும். ஆனால்  நாவலின் ஒரு பகுதியில் கூடஅத்தகைய சம்பவங்களோ காட்சிகளோ இடம்பெறவே இல்லை. இது நாவலின் மிக சிறப்பான அம்சம். குறை கூறுவதும் மற்றவர்களின் மீது பழி போடுவதும் வன்மத்தைத் தான் வளர்க்குமே தவிர இணக்கத்தை உருவாக்காது என்பதை நாவலாசிரியர் உணர்ந்திருப்பதால் கதைமாந்தருக்குள் இருக்கும் இரக்கத்தையும் அன்பின் தருணங்களையுமே பேச விழைகிறார்.

கொங்குப் பகுதியில் பாடப்படும் அண்ணன்மார் கதைப்பாடல் அண்ணன் தங்கையின் அன்பைப் பேசும் தொன்மம். இந்த நாவலில் அது நேரடியாகவும், மறைமுகமாகவும் இடம் பெற்றிருக்கிறது. இறப்பு வீடுகளில் பாடப்படும் ஒப்பாரி ,தங்களின் துயர்வுறும் சமயங்களில் அண்ணன்மார் கதைப் பாடலில் நல்லதங்களின் துயர் நிறைந்த வாழ்வை தங்களின் வாழ்வோடு ஒப்பீடு செய்வதையும் காணமுடிகிறது. பின்னாளில்" பாசமலர்" போன்ற திரைப்படங்களை, அதில் இடம் பெறும் காட்சிகளை முன்னுதாரணமாக அம்மக்கள் கொண்டிருப்பதையும் நாவல் சில இடங்களில் பதிவு செய்கிறது. இது சமூகத்தின் வளர்ச்சியாகப் பார்க்கலாம்.

காருமாமா என்ற குடிநாவிதனின் மரணத்தில் துவங்கும் நாவல் அவரின் தனிமை நிரம்பிய வீழ்ச்சியுற்ற வாழ்வின் துயரங்களைப் பேசுகிறது. தன்னைவிட்டுச் சென்ற மனைவியை தேடித்திரியும் காருமாமா பழனியில் சில நாவிதர்களால் சந்தேகத்தின் பேரில் அடித்து உதைக்கப்பட்டு பின் அவர்களால் கப்பாற்றப்படும் போதும், நோய்வாய்ப்பட்டு பெருநகரத்தின் புறநகர்பகுதியில் வாழும் தங்கையின் வீட்டில் தஞ்சம் அடையும் போதும், அங்கிருக்கும் ஒரு சலூன் கடைக்காரனால் துறத்தப்பட்டுபின்  காருமாமாவின் நிலையைத் தெரிந்துகொண்டு அவருக்கு சிகை அலங்காரம் செய்வது போன்ற காட்சிகளின் ஊடாக அவர்களின் துயர வாழ்வையும் அதில் கசியும் அன்பையும் சொல்லும் இடங்கள் நாவலில் உட்சமான இடங்களாகச் சொல்லலாம்.

 

உலகமயமாக்கப்பட்ட, நவீன வாழ்வில் வழக்கொழிந்துபோன வட்டார வழக்கு பேச்சு மொழியை, கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த வழங்குச் சொற்களை நுட்பமாக பயன்படுத்தியது நாவலை வாசிக்கும் போது அந்த காலகட்டத்திற்கு இட்டுச்செல்கிறது.

தேவிபாரதியின் முந்தைய நாவலான ‘நிழலின்தனிமை’யில் ஆதிக்கசாதி ஆண் ஒருவனால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட நாவிதப் பெண்ணின் பழிவாங்கும் அறைகூவலாகவும், அதற்கு தன்அண்ணன்கருவியாவதும். அவரின் அக, புறச்சிக்கல்களை மிக நேர்த்தியான மொழிநடையில் சொல்லியிருப்பார். முதல் நாவலில் பழிவாங்கத் துடிக்கும் கதைமாந்தர்கள் மூன்றாம் நாவலில் மிகப்பெரிய துரோகத்தை மன்னிக்கவும் ஏற்றுக் கொள்ளவும் அன்பு செலுத்தவும் செய்கிறார்கள் என்பதை வாசிக்கும் போது இது வெறும் கதைமாந்தர்களின் மனமுதிர்ச்சி மட்டுமல்ல இதை எழுதிய தேவிபாரதியின் படைப்பு சார்ந்த வளர்ச்சி என்பதாகவே பார்க்கிறேன்.

எல்லோராலும் கைவிடப்பட்ட  காருமாமா தான் நாவலின் மையம் என்ற போதிலும் இதில் வரும் பெண்களே முதன்மையானவர்கள். கதைசொல்லியின் மூன்று பெரியம்மாக்கள், அம்மா, அத்தை, அக்காள், தங்கை, முறைப்பெண்கள் என்று இந்த நாவல் வரும் பெண்கள் ஆண்களைச் சார்ந்து வாழ்ந்தாலும் சரியோ தவறோ எல்லா முடிவுகளையும் தாங்களாகவே எடுக்கும் சுதந்திரத்தோடு இருக்கிறார்கள்.

தன் படைப்பின் வழியாக ஒவ்வொரு எழுத்தாளரும் தங்கள் வாழும் சமூகம் சார்ந்த படைப்புகளை கொடுத்திருக்கிறார்கள். அவைகளால் அச்சமூகத்தின் வாழ்வியலைத் தெரிந்து கொள்ளமுடிகிறது. அந்தவகையில் தேவிபாரதியின் இந்த நாவல் தன் மொழி ஆளுமையால், சக மனிதர்கள் மீதான அன்பால் நிரம்பித் தழும்பி ஓடும் நதியாக எந்த தடையும் இல்லாமல் பாய்ந்து செல்கிறது.


நன்றி

தாமரை 

நவம்பர் -2020

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2022 01:36

May 13, 2022

பாத்துமாவிம் ஆடுபஷீரின் நாற்க்காலிபஷீரின் வீட்டில் 




பாத்துமாவிம் ஆடு





பஷீரின் நாற்க்காலி


பஷீரின் வீட்டில்


 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2022 18:51

தீராநதியில் வந்த பிரபஞ்சனிடன கட்டுரை


 உயிர் எழுத்தும் உடல் எழுத்தும்

பிரபஞ்சன்-தீராநதி  மார்ச் 2013


கண்டுபிடித்தசொற்களால் கண்டுபிடிக்கும் உலகம்

 

 

             பிருகஸ்பதிதேவர்களின்குரு. அறிவின் சிகரம் என்று கருதப்பட்டவன். ஆனால், ஞானத்தின் பள்ளத்தாக்கில் தனித்து விடப்பட்ட மிருகம் போல உழன்றவன். சாயப்பட்டறைக் கழிவுகளால் கெட்டுப்போன தமிழ் நதிகளைப் போல அவன் அகம் கெட்டுக் கிடந்தது. தன் துர்க்குண வழி காதலாலும் துர்ச்செயல் முன்னுதாரணங்களாலும் தேவர்களை அகங்கார இருட்டுக் குழிகளுக்குள் தள்ளிக் கொண்டிருந்தான்.

இந்தப்பிருகஸ்பதிதன் அண்ணன் மனைவி மம்தாவின்மேல் காமப்பட்டான். மம்தா அதைப்புறக்கணித்தாள். அவள் அவனை ஏற்றுக்கொள்ள ஒருப்படவில்லை. அண்ணன் ஊரில் இல்லாதபோது தன் தீச்சுவாலைகளால் மம்தாவைச் சுற்றி வளைக்கப் போனான். அவள் கடுமையாக மறுத்தாள். தன்னிடம் அவனுக்கு இடம் இல்லை என்றாள்.தான் கர்ப்பிணியாக இருந்த உடல் நலம் குன்றிய மம்தாவின்மேல் அவன் ஆக்கிரமித்தான். படுக்கை அறைக்குள் பிரவேசிக்கும் நச்சுப் பாம்பைப் போல அவன் அவளுக்குள் உடைத்து உள்நுழைந்தான். மம்தாவின் கர்ப்பத்துக்குள் இருந்த சிசு பிருகஸ்பதியின் விந்தைத் தன் காலால் உதைத்துத் தடுத்தது. விலக்கியது. அவன் சீற்றப்படம் எடுத்து கர்ப்பக் குழந்தையின் கண்கள் குருடாகும்படி சபித்தான். அக்குழந்தை குருடாகி வாழ்நாள் முழுக்க அந்தகாரத்துக்குள் கிடந்து உழன்றான். பிருகஸ்பதியின் குழந்தையைக் காட்டில் விடச்சென்ற  மம்தாவைக்கடவுளின்குரல் தடுத்து நிறுத்தியது. “மூதி அந்தக் குழந்தையைப் புறக்கணிக்காதே” என்று மம்தாவைத் திட்டுகிறார் கடவுள். ஆனால் ஒரு பெண்ணை, அவள் விருப்பத்துக்கு எதிராக, மறுப்பை அலட்சியம் செய்து பாலியல் வன்முறையாளனான பிருகஸ்பதியைக் கடவுள் செல்லம் கொஞ்சிக்கொண்டிருந்தார். தேவகுரு என்ற பதவியில் வைக்கப்பட்டிருந்தான், அவன். பிருகஸ்பதி மேல் எந்த விமர்சனமும் இல்லை…

வேதகாலத்துமம்தா முதல் , இன்றைய  டில்லிமாணவி…வரை, பெண்கள் இறைச்சிக்கடைக் கழிவுகள்தான். எந்த நாயும் அதைத் தின்னலாம் என்பதுதான் நிலவரம். இதன் அர்த்தம் ஆண்களின் வெளி நீன்னமறப் பரந்து பெண்களுக்குப் பதுங்கு குழிகளையே வாசஸ்தலமாக்கிவிட்டிருக்கிறது. இதன் அர்த்தம் ஆண்குறிகள் நீண்டு நீண்டு ஒரு சாட்டையாக வளர்ந்து பெண்களைப் பொட்டலமாக்கிக் கட்டிவிட்டிருக்கிறது. ஏதுமற்ற ஒரு பிச்சைக்காரன்கூட மனைவியை அடிக்க முடியும். ஏனெனில்  அவன்ஆண்.

அதிகாரம்பெண்களின்உடலை மதி/இரவு உணவாக வறுத்துச் சமைத்து மேசை மேல் வைத்து உண்கிறது. சமூகப் பொருளாதார அதிகாரம் தவிர்த்து வெறும் ஆண் என்கிற அதிகாரம் மட்டுமே ஒருவனுக்குப் பெண்ணைப் பாலியல் கொடுமை செய்யப் போதுமானதாக இருக்கிறது

.தேவிபாரதியின் நிழலின்தனிமை என்கிற அவரது முதல் நாவல் மிகவும் காத்திரமான விதத்தில் இந்த ஆண் என்கிற கருணாகரன் என்பவனைப் பற்றியும் அவனால் கந்தைத் துணியாகக் கிழிக்கப்பட்ட சாரதா பற்றியும் விசாரணை செய்கிறது. சம்பவத்தை அறிந்த அந்த இடத்திலிருந்த அந்தப் பன்னிரண்டு வயதுச் சிறுவனிடமிருந்த அரிவாளைக் கருணாகரன் பிடுங்கிக்கொண்டபோது அந்தச் சிறுவன் சூளுரைக்கிறான்.

“என்னைக்கிருந்தாலும் ஒரு நா உன்னக் கண்டதுண்டமா வெட்டிக்கொல்லாம உடமாட்டெ, பழிக்குப் பழி வாங்குவன்டா” இந்தக் சூளுரையைச் செய்த அந்தச் சிறுவனின் சுமார் முப்பதாண்டுகளுக்குப் பிறகு அவனது 42ஆவது வயதில் நாவல் தொடங்குகிறது. ஆக முப்பது ஆண்டுகள் வளர்த்தெடுக்கப்பட்ட வன்மத்தின் சரித்திரம் எப்படிக் கிளைவெட்டிக்கொண்டு மூலநதியிலிருந்து பிரிந்து தன் பயணத்தைத் தொடங்குகிறது என்பது நாவலாக விரிகிறது. நாவல் என்பது கதை அல்ல என்பதை நாம் அறிவோம். ஒரு சொட்டு ரத்தம் காகிதத்தில் சிந்திப் பரவுவது போல வன்மம் என்கிற தீக்கங்கும் அதை உள்ளங்கையில் ஏந்துகிற மனிதர்களைப் பற்றிய விஸ்தரிப்பே நாவலாக வளர்கிறது. உள்ளங்கையில் ஏந்திய தீக்கங்கு சதையைப் பொசுக்குவது, சதை கருகுவது என்பன நிகழ்ச்சிச் சித்தரிப்பாக வளர்கின்றன.

முப்பதுஆண்டுகளுக்குப்பிறகு அவன் முன் அந்தச் சூளுரைத்த சிறுவனும் இப்போது நாற்பத்திரண்டு வயது இளைஞனுமான அவன் முன் ஒரு கெட்ட ஆவியைப் போல தோன்றுகிறான் கருணாகரன். அதன்பின் அவனை வேட்டை நாய்களான ஞாபகங்கள் தங்கள் கூர்ப்பற்களால் கவ்வுகின்றன. வன்முறை நிகழ்த்தியவன் அக்கிளையை விட்டு வேறு கிளைக்குத் தாவிச் சென்றுவிடுகிறான். வன்முறைக்குள்ளானவர்கள் வன்முறை நிகழ்ந்த அக்கணங்களுக்குள் மறுபிரவேசம் செய்கிறார்கள். நினைவு இதயத்தைக் கிழித்துக்கொண்டு ரத்தம் பீறிட வலியை அனுபவிக்கிறார்கள். நினைவுகள் கடந்தகால நகங்களால் கீறப்படுகின்றன மீண்டும் ஒருமுறை, பலமுறை பரிதாபத்துக்குரிய அவர்கள் முன்னொரு காலத்தில் வெட்டப்பட்ட நச்சுப்பொய்கையில் குதிக்கிறார்கள். வெந்து வெந்து அவர்கள் அந்தக் கொடு வென்நீர்க்குளத்தில் மூழ்கியெடுக்கப்படுகிறார்கள். வன்முறையின், குறிப்பாகப் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையின் விகசித்துக்கொண்டே இருக்கும் விபரீதம் அதுதான். கொடுமையாளன் பிறிதொரு கொலை செய்யக் கிளம்பிவிடுகிறான். கொலை செய்யப்பட்டவள் மீண்டும் மீண்டும் கொலைசெய்யப் படுகிறாள்.

முப்பதுவருஷத்துக்குமுன் கொடுமை செய்த அவனை முதல் பார்வையிலேயே அவன் அடையாளம் கண்டுகொள்கிறான். வன்முறைக்கு உள்ளானவனின் சகோதரன், பன்னிரண்டு வயதில் பழிக்குப் பழி வாங்கச் சூளுரைத்தவன் ஒரு குமாஸ்தாவாகவும் வன்முறையாளன் அதிகாரம் மிகுந்த பொருளாதாரத்தில் வெற்றி பெற்றதோடு அரசியலில் மிகுந்த செல்வாக்கு மிக்கவனாகவும் இருக்கிறான். ஏதோ ஒரு அர்த்தத்தில் ஆண்டானும் அடிமையும் சந்திக்கிறார்கள் என்று பெரிய வட்டமாகச் சொல்லக்கூடும். தலைமை ஆசிரியரும் மற்றும் ஆசிரியர்கள், குமாஸ்தாக்கள் அந்தக் கருணாகரன் முன் தொழுதபடி நிற்கிறார்கள். ஆசிரியர்களின் குறைகள் முதலான அவர்களது முறையீடுகளைப் பரிவுடனும் பெருமிதத்துடனும் கேட்டுக்கொண்டிருந்தான். “அடுத்த வாரம் மெட்ராஸ் போறெ, மினிஸ்டர்கிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன், ‘அதுக்கென்ன மாப்ள நம்ம ஸ்கூலுக்குச் செய்யாம வேற ஆருக்குச் செய்யப் போறம்னாரு, செய்வாரு…கிளார்க் ஜாயின் பண்ணியாச்சா? போனவாரமே பில் அப் பண்ணிப்புடறம்னாரே டிஈஓ” என்கிறான் கருணாகரன்.

புதுசாஜாயின் பண்ண கிளார்க் சூளுரைத்த 12 வயதுச் சிறுவனும் பின்னர் வளர்ந்த இப்போதைய 42 வயது இளைஞனும்தான். கொல்லப்பட வேண்டியவன் எனக் கருதப்படும் கருணாகரன்தான். அதிகார மற்றும் செல்வாக்கின் பிரமுகர் ஆன தொனியில் கிளார்க் பற்றி விசாரிக்கிறான். ஆக, அந்த இரண்டு எதிரிகளும் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். இப்போது நாளங்களில் ஓடிக்கொண்டிருக்கும் ரத்தம் வெளியேற ஒரு சரியான சூழல் ஏற்பட்டுவிட்டது.

பிரச்னைஎன்னவெனில்வன்முறைக்குள்ளானநபர் தன் எதிரியை இனம் கண்டுவிட்டான். ஆனால் வன்முறையாளனுக்கோ தான் ஒரு கத்தியின் முனைக்கு நேராக நிறுத்தப்பட்டிருப்பது தெரியவில்லை. அதுமட்டுமல்ல தன் வன்முறையையே மறந்துவிட்டிருந்தான். ஏற்கனவே வெடித்து எழுந்த எரிமலை இப்போதைக்கு அடங்கியது போல வன்முறைக்குள்ளான மனிதனோ ஸ்தம்பித்து, திகைத்து, என்ன செய்வது என்கிற பிரமையில் விதிர் விதிர்க்கிறான். இதுதான் சாத்தியம். அடுத்தபடியாக சிதைக்கப்பட்ட பெண்ணிடம் போதிய உஷ்ணத்தோடு தகவல் பரிமாறப்படுகிறது என்றாலும் என்ன?

உறையிலிருந்து நீக்கப்பட்டகத்தி பாயப்போகிறது என்று நீங்கள் நம்பலாம். ஆனால் அது அப்படியாக நடப்பதில்லை. ‘நிழலின் தனிமை’  அப்படியானநாவல் இல்லை. அதாவது வெறும் கதை இல்லை. நாவல் என்று சொல்லத் தகும் முக்கியமான இலக்கணத்தோடு இயங்குவது இந்த நாவல். மனித முரண் உணர்ச்சி செயல்படும் விவரத்தில் நம் கவனத்தைக் குவிக்கிறார் தேவிபாரதி.

‘வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது’ என்று பலப்பல காலமாக அகிம்சாளர்கள், அருளாளர்கள், பண்பாட்டுக் காவலர்கள் பேசுவதை நானும் கேட்டிருக்கிறேன். எனக்கு இதில் சந்தேகம் இருக்கிறது. மறுகன்னத்திலும் அறையும் வன்களாளர்களுக்கு மன்னிப்பின் மொழி தெரியுமா? தெரியாது. அவர்களது மொழியில் பேசி அவர்களைப் புரியச் செய்வது எவ்வளவு தப்பாகும்?

நாவலில்அந்த வன்முறைக்கு இப்போதைய இந்த வன்முறை நிகழ்த்தப்படுகிறதா என்றால் இல்லை. முடியவில்லை என்பதுதான் விஷயம். பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் தங்களது ஆயுதங்களை ஏந்தவும் பிரயோகிக்கவும் அசக்தர்களாகிறார்கள் என்பதுதான் நாவலின் முக்கியச் செய்தி.

முதலாளிகள், அரசியல்வாதிகள், காவல்துறையாளர்கள், நிழல் உலகப் பிரமுகர்களாகிய நாளைய ஆட்சியாளர்கள், அதிகாரவர்க்கம் என்கிற சகல அதிகாரங்களையும் தங்கள் ஜோபியில் வைத்துக்கொண்டிருக்கும் அந்தச் சிறு பகுதியினருக்கு எதிராகப் பாதிக்கப்பட்டவர்கள் வார்த்தைகளைக்கொண்டு எதிர்க்குரல் எழுப்ப முடிவதில்லை. ஏனெனில் வார்த்தைகள் கொண்டு இயல்வதாகிய ஊடகங்களை மக்கள் எதிரிகளே வைத்திருக்கிறார்கள். அதாவது உரிமை பூண்டிருக்கிறார்கள். சட்டப் பாதுகாப்பு போன்ற வார்த்தைகளை நீங்கள் உபயோகிப்பீர்கள் என்றால் உலகம் உங்களை தமாஷ்காரராகவே மதிக்கும்.

நாவலில்இதுதான், இந்த எதார்த்தம்தான் நிகழ்கிறது. 12 வயதில் ‘உன்னை வெட்டுவன்டா’ என்று வன்முறையாளனிடம் அறைகூவல் விடுத்தவன் அவன் கீழே முப்பதாண்டுகளுக்குப் பிறகு ஒரு குமாஸ்தாகவும் உதவியாளனாகவுமே வாழ நிர்பந்திக்கப்படுகிறான் என்பதே காலத்தின் குரூரம்.

பழிவாங்கப்படவேண்டிய அந்தக் கருணாகரனைக் காலம் வேறுவகையில் பழிவாங்குகிறது. பாவத்தின் சம்பளம் என்ற பெயரில், என்ன வகையில் தரப்படுகிறது என்பதைப் பாவிகள்கூட அறியமுடிவதில்லை என்பது கசப்பான உண்மை. பாவம் எல்லாக் காலத்திலும் கூலிதரும் என்று உத்திரவாதமாகச் சொல்ல முடியுமா என்றால் முடியாதுதான். கூலியைச் சம்மந்தப்பட்ட நபர்கள் பெறுகிறபோது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கருணாகரன்கூலி பெற்றதை ஒரு மூன்றாம் நபர் மூலம் தேவிபாரதி மூன்றாம் மனிதரின் பார்வையின் மூலம் சொல்கிறார். தான் காரணமில்லாமல் ஏதோ ஒரு சூழலின் விகாரமாக ஏற்பட்ட ஒரு நிகழ்வை, இருக்க வேண்டிய ரௌத்திரமும் இன்றி பட்டுக்கொள்ளாமல் தூர நின்று இப்படிச் சொல்வது நாவலைக் காவியத் தளத்துக்கு இட்டுச் செல்கிறது. அந்தப் பகுதியைத் தருகிறேன். ஈரோடு மாவட்டத்துக் கிராமம் ஒன்றின் பேச்சு மொழியில் தேவிபாரதியின் வசனத்தைத் தந்திருக்கிறேன். நாவலில் சில இடங்களில் மட்டுமே பேச்சு மொழி பரவி வருகிறது. பெரும்பாலும் ஆசிரியரே அவரது எழுத்து மொழியில் பேசி இருக்கிறார். மிகவும் செறிவான உரைநடையில் தேவையற்ற சொற்கள் காணக்கிடைக்காத செட்டான மிகச் சில அண்மை நாவல்களில் இது ஒன்று.

….இரண்டு வருடங்களுக்குப் பிறகு நான் கருணாகரனின் நாவிதனைச் சந்தித்தேன். என்னைக் கண்டவுடன் ஓடிவந்து கைகளைப் பற்றிக்கொண்டான்.

திடீரெனமனதை நிரப்பத் தொடங்கியிருந்த பழைய நினைவுகளின் சுமை தாளாமல் அவனை அழைத்துக்கொண்டு சற்றுத் தொலைவிலிருந்த ஹோட்டலுக்குச் சென்றேன்.  நடந்துகொண்டிருந்தபோதே கருணாகரனைப் பற்றிப் பேசத் தொடங்கியிருந்தான்.

“சொல்லாமக்கொள்ளாமப் போயிட்டீங்களே, கவண்டருகோட எதாவது மனஸ்தாபமுங்களா? …ஒண்ணுமில்லாமப் போயிட்டாங்க சார், மனசுட்டுட்டாங்கொ,  சின்னக்கவண்டருக்குவேற ஆயுள் (தண்டனை) உறுதியாயிருச்சுங்களா, அந்தக் கவலையே அவுங்களக் கெடைல தள்ளிப்புடுச்சு. சொத்துப்பத்தெல்லா மாயமாப் போச்சு. வக்கீலுக்குக் குடுத்தாங்களா, டாக்டருக்குக் குடுத்தாங்களான்னு தெரீலீங்க சார்.

நெறையாக்கடனிருக்குமாட்டஇருக்குது, காரு, கீரு, வண்டி, கிண்டி அல்லாத்தையும் குடுத்துட்டாங்கொ, இப்ப ஒண்ணுமே இல்லீங்க சார், ஒரு டீவியெஸ் பிப்டி நிக்குது, பாவம்ங்க சார் நாள எண்ணிக்கிட்டிருக்கறாங்கொ. ..

இந்தப்பதிவின் மூலம் தேவிபாரதி ஒரு முக்கியத் தத்துவ விசாரத்தைக் கடந்து செல்கிறார். பாவம், அதைச் செய்தவனை ஏதோ ஒரு வகையில் இந்தப் பிறவியிலோ அல்லது அடுத்த பிறவியிலோ பயனை ஈனும் என்கிற சித்தாந்தத்தில் அநேகமான (கடவுளை மறுத்தனை, வினைப் பயன் கொள்கிற) இந்தியச் சமய மரவுகளும் சிந்தனை மரபுகளும் ஒன்றியே நிற்கின்றன. கோவலன் வெட்டுண்டு செத்ததற்கும் முன் ஜென்மப் பயன் என்று கூடச் சொல்லிவிட முடிகிறது. பாவம் புண்ணியம் தொடர்பான விஷயங்களில் தல்ஸ்தோய்க்கும் தஸ்த்தயேவ்ஸ்கிக்கும் பெரும் விசாரங்கள் இருந்தன என்பதை அவர்களது படைப்புப் பேசிகொண்டே இருக்கிறது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணோ சபதம் செய்த அந்த இளைஞனோ ஆற்ற வேண்டிய பழியைக் காலம் அவர்கள் சார்பாக ஆற்றிவிடுகிறது. அந்தப் பெண்ணுடனும் அந்த இளைஞனுடனும் பயணம் செய்த வாசகர்களுக்கும் எனக்கும் ஆசுவாசம் தருகிறது. காலம் எல்லோர்க்கும் பழி தீர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறதா என்றால் இல்லை. சிலருக்குக் காலம் தன் கடமையை நிறைவேற்றுகிறது.

அகங்காரம், அதிகாரம், ஆணவம் என்பவற்றின் முன் நிறுத்தி வைக்கப்படுகிறது. துர்பலமான மனிதம். அந்த அகண்டாகாரம், எதையும் சீரழிக்கத் துடிக்கிறது. செய்தும் முடிக்கிறது. ஆயுதங்களுக்குள் சிக்கிக்கொண்ட நிராயுதபாணியம் பகையை, பகை முடிப்பை நெஞ்சுக்குள் வைத்து மூடி மறைத்துக்கொள்கிறது. பகை, பழி, அனைத்தையும் மீறி மனிதக் கருணை ஒன்றே மேலெழுகிறது.  இதுதான்முக்கியம். இதுவே இந்த நாவல் நமக்குத் தரும் அனுபவம்.

சாதாரணமாகச்சொற்களுக்குள்அடங்காத தாபங்கள், ரௌத்திர விகாசங்கள், உள்ளுக்குள்ளே சுருண்டு சுருண்டு புதையும் கானல் வெறிகள் என்று இருளின் திசைகள் எங்கும் சுழன்று சுற்றித் திரிந்து, அவ்வுணர்ச்சிகளை வார்த்தைகளில் கொண்டுவந்தது தேவிபாரதியின் கலை வெற்றி. இது அசாதரணமானது. தமிழ் நாவல் பரப்பில் இது முக்கியமான படைப்பு.

உலகம்ஒன்றல்ல, இரண்டு. , இரண்டும் வேறுவேறு உலகங்கள். இரண்டு உலகங்களுக்கும் வேறு வேறு இயற்கையும் இயல்புகளும் ஸ்பாவங்களும் இருக்கின்றன.  பகல்உலகம் என்றும் இரவுலகம் என்றும் சௌகர்யத்துக்காகப் பிரிக்கலாம்.  பகலைஞானலோகம்இரவை அஞ்ஞான லோகம் என்றோ கூறிவருவது சரி இல்லை. இரண்டிலும் இரண்டும் உண்டு. நாமும் நம்மில் பலரும் இருள் உலகவாசிகளேயாவோம். நமக்கு இந்த உலகுக்கான வார்த்தைகள், எண்ணங்கள், செயல்கள் எல்லாமும் பிரிதொரு உலகத்தில் உருவாகி வழங்கப்படுகிறது. இதுவே இருள் உலகின் துரதிருஷ்டம். உண்மையில் இருள் உலகவாசிகளின் வார்த்தைகள் பறித்துச் செல்லப்பட்டவை. களவாடிகொண்டு சென்றவர்களே களவுகொடுத்தவர்க்கும் வார்த்தை தானம் செய்கிற நிலையே எல்லாத் துறைகளிலும்.

எழுதுபவர்க்கு இதுபெரிய சவால். இருள் உலகவாசிகளின், நிழல் உலகின் வார்த்தைகள் கண்டுபிடித்தே எழுதப்பட வேண்டும். எந்த அகர முதலியும் இந்த வார்த்தைகளைக் கொண்டிருக்கவில்லை.  தேவிபாரதிஅந்த வார்த்தைகளைக் கண்டுபிடித்து எழுத வேண்டியிருக்கிறது. அவர் அதைத் திறம்படச் செய்திருக்கிறார். அதற்கு இந்த நாவல் சாட்சி.

 நன்றி  பிரபஞ்சன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2022 17:40

 நவீன் சங்குநிழலின் தனிமை –A Revenge Story நிழலின் தனிமை ...

 நவீன் சங்கு

நிழலின் தனிமை  –A Revenge Story

 

நிழலின் தனிமை தேவிபாரதியின் முதல் நாவல்.

வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் வாழ்பவன், திடீரென மேற்கொள்ளும் பழிவாங்கும் செயலின் மனநிலையை  பேசும் நாவல் இது.

மற்ற பழிவாங்கும் கதை போல் இல்லாமல், வாழ்வின் ஆடி அடங்கும் வயதான நாற்பதுகளில் 30 வருடங்கள் முன்பு சாரதாவை சீரழித்த கருணாகரனை சந்திக்க நேர்கிறான்.புதை குழியில் மக்கி போன,12 வயதில் கையில் அரிவாளுடன் சூழுரைத்த தனது பழிவாங்கும் வேதாள எண்ணம் தலையில் ஏறி ஆட்கொள்கிறது.பழிவாங்கும் செயலின் முதற்படியாக மிரட்டல் கடிதம் எழுதிகிறான் ,பின்பு கருணாகரன் வீட்டிற்குள் நுழைகிறான்.

பல சமயங்களில் வாய்ப்பு கிடைத்தும் உக்கிரமான தனது பழி எண்ணத்தை மீட்க முடியாமல் ,பிரக்ஞை இல்லாமல் உறைந்து விடுகிறான்.

அதற்கு காரணமாக நான் பார்ப்பது அடிப்படையிலே அவன் தாழ்த்தப்பட்டவன் , எதிரக்கும் (Defence) குணம் இல்லாதவன்,அன்பானவன்(அவனுக்கும் குருவிக்குமான இரகசிய அன்பு).

அவனுடைய அதிகபட்ச எதிர்ப்பு கடிதம் எழுதியது, தனக்கும் சுலேவுக்குமான உறவை வெளிபடுத்தியது அதுவும் அடி வாங்கிய பிறகு.

சாதிய சமூகத்தில் திருமணம்

எவ்வளவு முக்கிய அங்கமாக உள்ளது என்பதை சுலேவின் கனவர் குடும்பம் மூலம் புரிந்து கொள்ளலாம்.

சுகந்திக்கும் நாயகனுக்குமான உறவு,அதை பொருட்படுதாத அவள் கனவரின் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை.

Revenge  story பற்றி நினைக்கையில் சில நாட்கள் முன்பு பார்த்த   ‘I SAW THE DEVIL’ கொரியா திரைபடம் ஞயாபகம் வருகிறது . திரைபட நிபுணர்கள் சொல்லும் காணக்கிடைக்காத அரிதான உலக சினிமா அல்ல IMDB ல் Top 10 bestKorean movies என தேடினாலே கிடைக்கும் .

அதில் காரணமே இல்லாமல் தனது மனைவியை கொன்ற serial killer மிருகத்தை பழிவாங்கும் நாயகன் தனது குடும்பம் , அடையாளம் , வாழ்க்கை எல்லாத்தையும் இழுந்து கிட்டத்தட்ட அவனும் மிருகமாகிறான் .

அப்படி இல்லாமல் நிழலின் தனிமையில்  கருணாகரன் தனது பாவத்திற்காக அவன் மட்டும் இல்லாமல் அவன் குடும்பமும் சீரழிந்து போவதாக ஆசிரியர் காட்டுகிறார்.

சாரதா கடைசியில் அப்படி சொல்ல காரணம், நோயுற்ற மனிதனின் மரண படுக்கை முன்பு மனித வாழ்க்கையின் ஆசை ,வெறி, பழிதீர்ப்பு எல்லாமே அர்த்தம் இல்லாமல் போகிவிடுகிறது போல்.

தேவிபாரதி எனது விருப்பதிற்குரிய எழுத்தாளர் ஆகிவிட்டார்.

Advertisements

நன்றி-நவீன் சங்கு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2022 09:04

 நவீன் சங்குநிழலின் தனிமை – A Revenge Story   நிழலின் தனி...

 நவீன் சங்கு

நிழலின் தனிமை  – A Revenge Story

 

நிழலின் தனிமை தேவிபாரதியின் முதல் நாவல்.

வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் வாழ்பவன், திடீரென மேற்கொள்ளும் பழிவாங்கும் செயலின் மனநிலையை  பேசும் நாவல் இது.

மற்ற பழிவாங்கும் கதை போல் இல்லாமல், வாழ்வின் ஆடி அடங்கும் வயதான நாற்பதுகளில் 30 வருடங்கள் முன்பு சாரதாவை சீரழித்த கருணாகரனை சந்திக்க நேர்கிறான்.புதை குழியில் மக்கி போன,12 வயதில் கையில் அரிவாளுடன் சூழுரைத்த தனது பழிவாங்கும் வேதாள எண்ணம் தலையில் ஏறி ஆட்கொள்கிறது.பழிவாங்கும் செயலின் முதற்படியாக மிரட்டல் கடிதம் எழுதிகிறான் ,பின்பு கருணாகரன் வீட்டிற்குள் நுழைகிறான்.

பல சமயங்களில் வாய்ப்பு கிடைத்தும் உக்கிரமான தனது பழி எண்ணத்தை மீட்க முடியாமல் ,பிரக்ஞை இல்லாமல் உறைந்து விடுகிறான்.

அதற்கு காரணமாக நான் பார்ப்பது அடிப்படையிலே அவன் தாழ்த்தப்பட்டவன் , எதிரக்கும் (Defence) குணம் இல்லாதவன்,அன்பானவன்(அவனுக்கும் குருவிக்குமான இரகசிய அன்பு).

அவனுடைய அதிகபட்ச எதிர்ப்பு கடிதம் எழுதியது, தனக்கும் சுலேவுக்குமான உறவை வெளிபடுத்தியது அதுவும் அடி வாங்கிய பிறகு.

சாதிய சமூகத்தில் திருமணம்

எவ்வளவு முக்கிய அங்கமாக உள்ளது என்பதை சுலேவின் கனவர் குடும்பம் மூலம் புரிந்து கொள்ளலாம்.

சுகந்திக்கும் நாயகனுக்குமான உறவு,அதை பொருட்படுதாத அவள் கனவரின் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை.

Revenge  story பற்றி நினைக்கையில் சில நாட்கள் முன்பு பார்த்த   ‘I SAW THE DEVIL’ கொரியா திரைபடம் ஞயாபகம் வருகிறது . திரைபட நிபுணர்கள் சொல்லும் காணக்கிடைக்காத அரிதான உலக சினிமா அல்ல IMDB ல் Top 10 best Korean movies என தேடினாலே கிடைக்கும் .

அதில் காரணமே இல்லாமல் தனது மனைவியை கொன்ற serial killer மிருகத்தை பழிவாங்கும் நாயகன் தனது குடும்பம் , அடையாளம் , வாழ்க்கை எல்லாத்தையும் இழுந்து கிட்டத்தட்ட அவனும் மிருகமாகிறான் .

அப்படி இல்லாமல் நிழலின் தனிமையில்  கருணாகரன் தனது பாவத்திற்காக அவன் மட்டும் இல்லாமல் அவன் குடும்பமும் சீரழிந்து போவதாக ஆசிரியர் காட்டுகிறார்.

சாரதா கடைசியில் அப்படி சொல்ல காரணம், நோயுற்ற மனிதனின் மரண படுக்கை முன்பு மனித வாழ்க்கையின் ஆசை ,வெறி, பழிதீர்ப்பு எல்லாமே அர்த்தம் இல்லாமல் போகிவிடுகிறது போல்.

தேவிபாரதி எனது விருப்பதிற்குரிய எழுத்தாளர் ஆகிவிட்டார்.

Advertisements

நன்றி-நவீன் சங்கு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2022 09:04

 AshokMy Thoughtshttps://samratashok.wordpress.com/நிழலின...

 

Ashok

My Thoughts

https://samratashok.wordpress.com/

நிழலின் தனிமை  

நிழலின் தனிமை

தேவிபாரதியின் நிழலின் தனிமை பழியை சொல்லும் கதை. நவீனத்துவ நாவல்களின் அம்சம் கொண்ட இது தனி மனிதனின் அகத்தை பேசும் நாவல்.
நாவலின் கதை சொல்லி தன சிறுவயது காலத்தில் தன அக்காவை பாலியல் பலாத்காரம் செய்த கருணாகரன் என்றும் இன்றைய பெரும் பிரமுகரை சந்தித்ததில் இருந்து கதையை தொடங்குகிறார். கதை சொல்லி ஒரு கிராமத்து பள்ளியில் கிளார்க்காக பணிக்கு சேருகிறான். அந்த ஊரின் பெரும் பிரமுகர் இன்றைய கருணாகரன்.அன்றைய கந்து வட்டிக்காரனான கருணாகரன் இன்று ஒரு கொடை வள்ளல். பலருக்கும் பல உதவிகளை செய்யும் வள்ளல்.

அந்த சம்பவத்தின் வடுக்கள் கதை சொல்லியின் ஆழ் மனதில் பதிந்த ஒன்று,அந்த சம்பவத்தால் அவர்கள் குடும்பம் அந்த ஊரை விட்டு வெளியேறிவிடுகிறது . 30 ஆண்டுகளுக்குபிறகு கருணாகரனை பார்தத்தை தன் அக்காவிடம் சொல்கிறான்.
அக்கா அவனை கொன்று பழிதீர்க்கும் படி அவனிடம் கூறுகிறாள். கருணாகரனை ஒன்னும் செய்ய முடியாத நிலையில் ஒரு கிளார்க்காக வேலை செய்யும் கதை சொல்லி.ஒரு கட்டத்தில் அவன் கருணாகரனுக்கு மிகவும் நெருக்க மாணவனாக ஆகிறான்.அத் துடன் அவன் மகளுக்கும். கருணாகரனின் மகள் அவன் மேல் காதல் வயப் படுகிறாள். இவனால் அவள் காதலை மறுக்க முடியவில்லை, ஒரு ஆற்றாமையின் இரவில் அவன் தன் வஞ்சத்தாலும் வெறுப்பாலும் அவலுடன் உணர்வு கொள்கிறான். கருணாகரனை ஒன்னும் செய்ய முடியாத தன்னுடைய கோழை தனைத்தை இதை கொண்டு ஈடு செய்து கொள்கிறான். தன் வஞ்சத்தின் பழியை கருணாகரனின் மகளிடம் வெளிப்படுத்தும் விதத்தில் அவன் முதல் வீழ்ச்சி தொடங்குகிறது. சிறுமியை போல அவன் மேல் காதல் கொள்ளும் அவள் அவனின் நிஜ முகம் கண்டு மனம் உடைந்த போகிறாள். அவள் கதைசொல்லியின் கீழ்மை கண்டு கொள்ளும் இடத்தில் சொல்லும் வரிகள் ‘நீயும் மற்றவர்களை போலத்தானே தாங்க்ஸ் பா’.

ஒரு புறம் கருணாகரனின் வாழ்க்கை ஒரு சம்பவத்தால் முற்றிலுமாக மாறி விடுகிறது.கதை சொல்லி எதுவும் செய்யாமலே கருணாகரனின் குடும்பம் சீர் அழிந்து பொய் விடுகிறது.அள்ளல் பட்டு ஆறாத கண்ணீர் அவன் குடும்பத்தை அவன் செல்வத்தை அழிக்கிறது. மறுபுறம் கதை சொல்லியின் அகம் படிப்படியாய் நஞ்சு நிறைந்த ஒன்றாய் உருமாறிவிடுகிறது.

கருணாகரனின் மகள் வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்கிறாள்.
கதை சொல்லியால் எதுவும் செய்ய முடியவில்லை, அவன் தன்னுடைய பிறப்பு சூழலால் மிகவும் தாழ்மை உணர்வு கொண்டவனாக உணர்கிறான். தன் சூழலில்
நிகழும் அணைத்து சம்பவங்களையும் அவனால் எதையும் செய்ய முடியாதவனாய் ஒரு கையறு நிலையை உணர்கிறான்.
நாவலின் முடிவில் கதை சொல்லி ஒருவிதத்தில் கருணாகரனை போல் மாறி உள்ளான். அவன் சகோதரி மரண தருவாயில் இருக்கும் கருணாகரனை பார்த்து விட்டு அவள் இவன் வேறு ஒருவன் என்று சொல்கிறாள். கதை சொல்லியின் வாழ்க்கை முற்றிலும் பொருள் இழந்த இடத்தில் முடிகிறது.

இந்நாவளை வாசிக்கும் தோறும் நமக்கும் தோன்றும் கேள்வி தீமைக்கு எதிராக நாம் செய்ய கூடியது தான் என்ன.இந்நாவலின் கதை சொல்லி கொள்ளும் வீழ்ச்சி நமக்கு ஒரு பெரிய எச்சரிக்கையை விடுக்கிறது. ஏனென்றால் அவன் தொடங்கும் விதம் என்னவோ ஒரு பழி தீர்க்கும் இடத்தில் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அந்த பழி பின் சென்று, அவன் தீய்மையில் திளைக்க செயகிறான்.பல நூறு பாவனைகள் மூலமாக தன்னை முடிவில்லாமல் நியாய படுத்தி கொள்கிறான்.

அவனால் எச்செயலையும் துளியும் குற்ற உணர்வு கொள்ளாமல் செய்ய முடிகிறது.அதன் தொடக்கமாக இருந்த இடம் அவன் அக்கா பாலியல் வன்முறை நிகழ்ந்த  அன்று அவன் அதை தன நண்பனிடம் விவரிக்கிறான். அதை கேட்ட அந்த நண்பன் தனிமையில் சுய-மைதுனம் செய்து கொள்கிறான். கதை சொல்லி ஏன் இதை இந்த நண்பனிடம் சொல்கிறான். ஆணின் காமம் கொள்ளும் கீழ்மைக்கு எல்லையே இல்லை.
பிறகு கருணாகரனின் மகளின் புணரும் தருணத்தில் அவளுடைய முலைகளை பற்றி அவளை துன்புறுத்துகிறான். அவன் அக்காவின் குருதி படிந்த முலைகள் அவன் நினைவுக்கு வருகிறது.ஏதோ ஒரு விதத்தில் அவன் அகத்தின் ஆழம் கருணாகரனை உரு மாறி நடித்து கொள்கிறது. அவன் கீழ்மையில் கொள்ளும் நிறைவு இதனால் போலத் தான்.ஒரு சில நேரங்களின் தீய்மையே ஒரு தனி இருப்பாக அவன் வாழ்வை இட்டு செல்கிறது. மனிதனின் ஆழத்தின் சில கதவுகளை அவன் தெரியாமலும் திறந்து கொள்ள கூடாது.அதை கடந்தவன் எதையும் செய்யு கூடியவனாகிறான்.

Posted onJanuary15, 2019CategoriesBooksLeavea commenton நிழலின் தனிமை 

 

நிழலின் தனிமை  

நிழலின் தனிமை

தேவிபாரதியின் நிழலின் தனிமை பழியை சொல்லும் கதை. நவீனத்துவ நாவல்களின் அம்சம் கொண்ட இது தனி மனிதனின் அகத்தை பேசும் நாவல்.
நாவலின் கதை சொல்லி தன சிறுவயது காலத்தில் தன அக்காவை பாலியல் பலாத்காரம் செய்த கருணாகரன் என்றும் இன்றைய பெரும் பிரமுகரை சந்தித்ததில் இருந்து கதையை தொடங்குகிறார். கதை சொல்லி ஒரு கிராமத்து பள்ளியில் கிளார்க்காக பணிக்கு சேருகிறான். அந்த ஊரின் பெரும் பிரமுகர் இன்றைய கருணாகரன்.அன்றைய கந்து வட்டிக்காரனான கருணாகரன் இன்று ஒரு கொடை வள்ளல். பலருக்கும் பல உதவிகளை செய்யும் வள்ளல்.

அந்த சம்பவத்தின் வடுக்கள் கதை சொல்லியின் ஆழ் மனதில் பதிந்த ஒன்று,அந்த சம்பவத்தால் அவர்கள் குடும்பம் அந்த ஊரை விட்டு வெளியேறிவிடுகிறது . 30 ஆண்டுகளுக்குபிறகு கருணாகரனை பார்தத்தை தன் அக்காவிடம் சொல்கிறான்.
அக்கா அவனை கொன்று பழிதீர்க்கும் படி அவனிடம் கூறுகிறாள். கருணாகரனை ஒன்னும் செய்ய முடியாத நிலையில் ஒரு கிளார்க்காக வேலை செய்யும் கதை சொல்லி.ஒரு கட்டத்தில் அவன் கருணாகரனுக்கு மிகவும் நெருக்க மாணவனாக ஆகிறான்.அத் துடன் அவன் மகளுக்கும். கருணாகரனின் மகள் அவன் மேல் காதல் வயப் படுகிறாள். இவனால் அவள் காதலை மறுக்க முடியவில்லை, ஒரு ஆற்றாமையின் இரவில் அவன் தன் வஞ்சத்தாலும் வெறுப்பாலும் அவலுடன் உணர்வு கொள்கிறான். கருணாகரனை ஒன்னும் செய்ய முடியாத தன்னுடைய கோழை தனைத்தை இதை கொண்டு ஈடு செய்து கொள்கிறான். தன் வஞ்சத்தின் பழியை கருணாகரனின் மகளிடம் வெளிப்படுத்தும் விதத்தில் அவன் முதல் வீழ்ச்சி தொடங்குகிறது. சிறுமியை போல அவன் மேல் காதல் கொள்ளும் அவள் அவனின் நிஜ முகம் கண்டு மனம் உடைந்த போகிறாள். அவள் கதைசொல்லியின் கீழ்மை கண்டு கொள்ளும் இடத்தில் சொல்லும் வரிகள் ‘நீயும் மற்றவர்களை போலத்தானே தாங்க்ஸ் பா’.

ஒரு புறம் கருணாகரனின் வாழ்க்கை ஒரு சம்பவத்தால் முற்றிலுமாக மாறி விடுகிறது.கதை சொல்லி எதுவும் செய்யாமலே கருணாகரனின் குடும்பம் சீர் அழிந்து பொய் விடுகிறது.அள்ளல் பட்டு ஆறாத கண்ணீர் அவன் குடும்பத்தை அவன் செல்வத்தை அழிக்கிறது. மறுபுறம் கதை சொல்லியின் அகம் படிப்படியாய் நஞ்சு நிறைந்த ஒன்றாய் உருமாறிவிடுகிறது.

கருணாகரனின் மகள் வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்கிறாள்.
கதை சொல்லியால் எதுவும் செய்ய முடியவில்லை, அவன் தன்னுடைய பிறப்பு சூழலால் மிகவும் தாழ்மை உணர்வு கொண்டவனாக உணர்கிறான். தன் சூழலில்
நிகழும் அணைத்து சம்பவங்களையும் அவனால் எதையும் செய்ய முடியாதவனாய் ஒரு கையறு நிலையை உணர்கிறான்.
நாவலின் முடிவில் கதை சொல்லி ஒருவிதத்தில் கருணாகரனை போல் மாறி உள்ளான். அவன் சகோதரி மரண தருவாயில் இருக்கும் கருணாகரனை பார்த்து விட்டு அவள் இவன் வேறு ஒருவன் என்று சொல்கிறாள். கதை சொல்லியின் வாழ்க்கை முற்றிலும் பொருள் இழந்த இடத்தில் முடிகிறது.

இந்நாவளை வாசிக்கும் தோறும் நமக்கும் தோன்றும் கேள்வி தீமைக்கு எதிராக நாம் செய்ய கூடியது தான் என்ன.இந்நாவலின் கதை சொல்லி கொள்ளும் வீழ்ச்சி நமக்கு ஒரு பெரிய எச்சரிக்கையை விடுக்கிறது. ஏனென்றால் அவன் தொடங்கும் விதம் என்னவோ ஒரு பழி தீர்க்கும் இடத்தில் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அந்த பழி பின் சென்று, அவன் தீய்மையில் திளைக்க செயகிறான்.பல நூறு பாவனைகள் மூலமாக தன்னை முடிவில்லாமல் நியாய படுத்தி கொள்கிறான்.

அவனால் எச்செயலையும் துளியும் குற்ற உணர்வு கொள்ளாமல் செய்ய முடிகிறது.அதன் தொடக்கமாக இருந்த இடம் அவன் அக்கா பாலியல் வன்முறை நிகழ்ந்த  அன்று அவன் அதை தன நண்பனிடம் விவரிக்கிறான். அதை கேட்ட அந்த நண்பன் தனிமையில் சுய-மைதுனம் செய்து கொள்கிறான். கதை சொல்லி ஏன் இதை இந்த நண்பனிடம் சொல்கிறான். ஆணின் காமம் கொள்ளும் கீழ்மைக்கு எல்லையே இல்லை.
பிறகு கருணாகரனின் மகளின் புணரும் தருணத்தில் அவளுடைய முலைகளை பற்றி அவளை துன்புறுத்துகிறான். அவன் அக்காவின் குருதி படிந்த முலைகள் அவன் நினைவுக்கு வருகிறது.ஏதோ ஒரு விதத்தில் அவன் அகத்தின் ஆழம் கருணாகரனை உரு மாறி நடித்து கொள்கிறது. அவன் கீழ்மையில் கொள்ளும் நிறைவு இதனால் போலத் தான்.ஒரு சில நேரங்களின் தீய்மையே ஒரு தனி இருப்பாக அவன் வாழ்வை இட்டு செல்கிறது. மனிதனின் ஆழத்தின் சில கதவுகளை அவன் தெரியாமலும் திறந்து கொள்ள கூடாது.அதை கடந்தவன் எதையும் செய்யு கூடியவனாகிறான்.

Posted onJanuary15, 2019CategoriesBooksLeavea commenton நிழலின் தனிமை 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2022 09:01

 AshokMy Thoughts https://samratashok.wordpress.com/நிழ...

 

Ashok

My Thoughts

https://samratashok.wordpress.com/

நிழலின் தனிமை  

நிழலின் தனிமை

தேவிபாரதியின் நிழலின் தனிமை பழியை சொல்லும் கதை. நவீனத்துவ நாவல்களின் அம்சம் கொண்ட இது தனி மனிதனின் அகத்தை பேசும் நாவல்.
நாவலின் கதை சொல்லி தன சிறுவயது காலத்தில் தன அக்காவை பாலியல் பலாத்காரம் செய்த கருணாகரன் என்றும் இன்றைய பெரும் பிரமுகரை சந்தித்ததில் இருந்து கதையை தொடங்குகிறார். கதை சொல்லி ஒரு கிராமத்து பள்ளியில் கிளார்க்காக பணிக்கு சேருகிறான். அந்த ஊரின் பெரும் பிரமுகர் இன்றைய கருணாகரன். அன்றைய கந்து வட்டிக்காரனான கருணாகரன் இன்று ஒரு கொடை வள்ளல். பலருக்கும் பல உதவிகளை செய்யும் வள்ளல்.

அந்த சம்பவத்தின் வடுக்கள் கதை சொல்லியின் ஆழ் மனதில் பதிந்த ஒன்று, அந்த சம்பவத்தால் அவர்கள் குடும்பம் அந்த ஊரை விட்டு வெளியேறிவிடுகிறது . 30 ஆண்டுகளுக்குபிறகு கருணாகரனை பார்தத்தை தன் அக்காவிடம் சொல்கிறான்.
அக்கா அவனை கொன்று பழிதீர்க்கும் படி அவனிடம் கூறுகிறாள். கருணாகரனை ஒன்னும் செய்ய முடியாத நிலையில் ஒரு கிளார்க்காக வேலை செய்யும் கதை சொல்லி. ஒரு கட்டத்தில் அவன் கருணாகரனுக்கு மிகவும் நெருக்க மாணவனாக ஆகிறான். அத் துடன் அவன் மகளுக்கும். கருணாகரனின் மகள் அவன் மேல் காதல் வயப் படுகிறாள். இவனால் அவள் காதலை மறுக்க முடியவில்லை, ஒரு ஆற்றாமையின் இரவில் அவன் தன் வஞ்சத்தாலும் வெறுப்பாலும் அவலுடன் உணர்வு கொள்கிறான். கருணாகரனை ஒன்னும் செய்ய முடியாத தன்னுடைய கோழை தனைத்தை இதை கொண்டு ஈடு செய்து கொள்கிறான். தன் வஞ்சத்தின் பழியை கருணாகரனின் மகளிடம் வெளிப்படுத்தும் விதத்தில் அவன் முதல் வீழ்ச்சி தொடங்குகிறது. சிறுமியை போல அவன் மேல் காதல் கொள்ளும் அவள் அவனின் நிஜ முகம் கண்டு மனம் உடைந்த போகிறாள். அவள் கதைசொல்லியின் கீழ்மை கண்டு கொள்ளும் இடத்தில் சொல்லும் வரிகள் ‘நீயும் மற்றவர்களை போலத்தானே தாங்க்ஸ் பா’.

ஒரு புறம் கருணாகரனின் வாழ்க்கை ஒரு சம்பவத்தால் முற்றிலுமாக மாறி விடுகிறது. கதை சொல்லி எதுவும் செய்யாமலே கருணாகரனின் குடும்பம் சீர் அழிந்து பொய் விடுகிறது. அள்ளல் பட்டு ஆறாத கண்ணீர் அவன் குடும்பத்தை அவன் செல்வத்தை அழிக்கிறது. மறுபுறம் கதை சொல்லியின் அகம் படிப்படியாய் நஞ்சு நிறைந்த ஒன்றாய் உருமாறிவிடுகிறது.

கருணாகரனின் மகள் வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்கிறாள்.
கதை சொல்லியால் எதுவும் செய்ய முடியவில்லை, அவன் தன்னுடைய பிறப்பு சூழலால் மிகவும் தாழ்மை உணர்வு கொண்டவனாக உணர்கிறான். தன் சூழலில்
நிகழும் அணைத்து சம்பவங்களையும் அவனால் எதையும் செய்ய முடியாதவனாய் ஒரு கையறு நிலையை உணர்கிறான்.
நாவலின் முடிவில் கதை சொல்லி ஒருவிதத்தில் கருணாகரனை போல் மாறி உள்ளான். அவன் சகோதரி மரண தருவாயில் இருக்கும் கருணாகரனை பார்த்து விட்டு அவள் இவன் வேறு ஒருவன் என்று சொல்கிறாள். கதை சொல்லியின் வாழ்க்கை முற்றிலும் பொருள் இழந்த இடத்தில் முடிகிறது.

இந்நாவளை வாசிக்கும் தோறும் நமக்கும் தோன்றும் கேள்வி தீமைக்கு எதிராக நாம் செய்ய கூடியது தான் என்ன. இந்நாவலின் கதை சொல்லி கொள்ளும் வீழ்ச்சி நமக்கு ஒரு பெரிய எச்சரிக்கையை விடுக்கிறது. ஏனென்றால் அவன் தொடங்கும் விதம் என்னவோ ஒரு பழி தீர்க்கும் இடத்தில் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அந்த பழி பின் சென்று, அவன் தீய்மையில் திளைக்க செயகிறான்.பல நூறு பாவனைகள் மூலமாக தன்னை முடிவில்லாமல் நியாய படுத்தி கொள்கிறான்.

அவனால் எச்செயலையும் துளியும் குற்ற உணர்வு கொள்ளாமல் செய்ய முடிகிறது. அதன் தொடக்கமாக இருந்த இடம் அவன் அக்கா பாலியல் வன்முறை நிகழ்ந்த  அன்று அவன் அதை தன நண்பனிடம் விவரிக்கிறான். அதை கேட்ட அந்த நண்பன் தனிமையில் சுய-மைதுனம் செய்து கொள்கிறான். கதை சொல்லி ஏன் இதை இந்த நண்பனிடம் சொல்கிறான். ஆணின் காமம் கொள்ளும் கீழ்மைக்கு எல்லையே இல்லை.
பிறகு கருணாகரனின் மகளின் புணரும் தருணத்தில் அவளுடைய முலைகளை பற்றி அவளை துன்புறுத்துகிறான். அவன் அக்காவின் குருதி படிந்த முலைகள் அவன் நினைவுக்கு வருகிறது. ஏதோ ஒரு விதத்தில் அவன் அகத்தின் ஆழம் கருணாகரனை உரு மாறி நடித்து கொள்கிறது. அவன் கீழ்மையில் கொள்ளும் நிறைவு இதனால் போலத் தான். ஒரு சில நேரங்களின் தீய்மையே ஒரு தனி இருப்பாக அவன் வாழ்வை இட்டு செல்கிறது. மனிதனின் ஆழத்தின் சில கதவுகளை அவன் தெரியாமலும் திறந்து கொள்ள கூடாது. அதை கடந்தவன் எதையும் செய்யு கூடியவனாகிறான்.

Posted onJanuary 15, 2019CategoriesBooksLeave a commenton நிழலின் தனிமை 

 

நிழலின் தனிமை  

நிழலின் தனிமை

தேவிபாரதியின் நிழலின் தனிமை பழியை சொல்லும் கதை. நவீனத்துவ நாவல்களின் அம்சம் கொண்ட இது தனி மனிதனின் அகத்தை பேசும் நாவல்.
நாவலின் கதை சொல்லி தன சிறுவயது காலத்தில் தன அக்காவை பாலியல் பலாத்காரம் செய்த கருணாகரன் என்றும் இன்றைய பெரும் பிரமுகரை சந்தித்ததில் இருந்து கதையை தொடங்குகிறார். கதை சொல்லி ஒரு கிராமத்து பள்ளியில் கிளார்க்காக பணிக்கு சேருகிறான். அந்த ஊரின் பெரும் பிரமுகர் இன்றைய கருணாகரன். அன்றைய கந்து வட்டிக்காரனான கருணாகரன் இன்று ஒரு கொடை வள்ளல். பலருக்கும் பல உதவிகளை செய்யும் வள்ளல்.

அந்த சம்பவத்தின் வடுக்கள் கதை சொல்லியின் ஆழ் மனதில் பதிந்த ஒன்று, அந்த சம்பவத்தால் அவர்கள் குடும்பம் அந்த ஊரை விட்டு வெளியேறிவிடுகிறது . 30 ஆண்டுகளுக்குபிறகு கருணாகரனை பார்தத்தை தன் அக்காவிடம் சொல்கிறான்.
அக்கா அவனை கொன்று பழிதீர்க்கும் படி அவனிடம் கூறுகிறாள். கருணாகரனை ஒன்னும் செய்ய முடியாத நிலையில் ஒரு கிளார்க்காக வேலை செய்யும் கதை சொல்லி. ஒரு கட்டத்தில் அவன் கருணாகரனுக்கு மிகவும் நெருக்க மாணவனாக ஆகிறான். அத் துடன் அவன் மகளுக்கும். கருணாகரனின் மகள் அவன் மேல் காதல் வயப் படுகிறாள். இவனால் அவள் காதலை மறுக்க முடியவில்லை, ஒரு ஆற்றாமையின் இரவில் அவன் தன் வஞ்சத்தாலும் வெறுப்பாலும் அவலுடன் உணர்வு கொள்கிறான். கருணாகரனை ஒன்னும் செய்ய முடியாத தன்னுடைய கோழை தனைத்தை இதை கொண்டு ஈடு செய்து கொள்கிறான். தன் வஞ்சத்தின் பழியை கருணாகரனின் மகளிடம் வெளிப்படுத்தும் விதத்தில் அவன் முதல் வீழ்ச்சி தொடங்குகிறது. சிறுமியை போல அவன் மேல் காதல் கொள்ளும் அவள் அவனின் நிஜ முகம் கண்டு மனம் உடைந்த போகிறாள். அவள் கதைசொல்லியின் கீழ்மை கண்டு கொள்ளும் இடத்தில் சொல்லும் வரிகள் ‘நீயும் மற்றவர்களை போலத்தானே தாங்க்ஸ் பா’.

ஒரு புறம் கருணாகரனின் வாழ்க்கை ஒரு சம்பவத்தால் முற்றிலுமாக மாறி விடுகிறது. கதை சொல்லி எதுவும் செய்யாமலே கருணாகரனின் குடும்பம் சீர் அழிந்து பொய் விடுகிறது. அள்ளல் பட்டு ஆறாத கண்ணீர் அவன் குடும்பத்தை அவன் செல்வத்தை அழிக்கிறது. மறுபுறம் கதை சொல்லியின் அகம் படிப்படியாய் நஞ்சு நிறைந்த ஒன்றாய் உருமாறிவிடுகிறது.

கருணாகரனின் மகள் வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்கிறாள்.
கதை சொல்லியால் எதுவும் செய்ய முடியவில்லை, அவன் தன்னுடைய பிறப்பு சூழலால் மிகவும் தாழ்மை உணர்வு கொண்டவனாக உணர்கிறான். தன் சூழலில்
நிகழும் அணைத்து சம்பவங்களையும் அவனால் எதையும் செய்ய முடியாதவனாய் ஒரு கையறு நிலையை உணர்கிறான்.
நாவலின் முடிவில் கதை சொல்லி ஒருவிதத்தில் கருணாகரனை போல் மாறி உள்ளான். அவன் சகோதரி மரண தருவாயில் இருக்கும் கருணாகரனை பார்த்து விட்டு அவள் இவன் வேறு ஒருவன் என்று சொல்கிறாள். கதை சொல்லியின் வாழ்க்கை முற்றிலும் பொருள் இழந்த இடத்தில் முடிகிறது.

இந்நாவளை வாசிக்கும் தோறும் நமக்கும் தோன்றும் கேள்வி தீமைக்கு எதிராக நாம் செய்ய கூடியது தான் என்ன. இந்நாவலின் கதை சொல்லி கொள்ளும் வீழ்ச்சி நமக்கு ஒரு பெரிய எச்சரிக்கையை விடுக்கிறது. ஏனென்றால் அவன் தொடங்கும் விதம் என்னவோ ஒரு பழி தீர்க்கும் இடத்தில் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அந்த பழி பின் சென்று, அவன் தீய்மையில் திளைக்க செயகிறான்.பல நூறு பாவனைகள் மூலமாக தன்னை முடிவில்லாமல் நியாய படுத்தி கொள்கிறான்.

அவனால் எச்செயலையும் துளியும் குற்ற உணர்வு கொள்ளாமல் செய்ய முடிகிறது. அதன் தொடக்கமாக இருந்த இடம் அவன் அக்கா பாலியல் வன்முறை நிகழ்ந்த  அன்று அவன் அதை தன நண்பனிடம் விவரிக்கிறான். அதை கேட்ட அந்த நண்பன் தனிமையில் சுய-மைதுனம் செய்து கொள்கிறான். கதை சொல்லி ஏன் இதை இந்த நண்பனிடம் சொல்கிறான். ஆணின் காமம் கொள்ளும் கீழ்மைக்கு எல்லையே இல்லை.
பிறகு கருணாகரனின் மகளின் புணரும் தருணத்தில் அவளுடைய முலைகளை பற்றி அவளை துன்புறுத்துகிறான். அவன் அக்காவின் குருதி படிந்த முலைகள் அவன் நினைவுக்கு வருகிறது. ஏதோ ஒரு விதத்தில் அவன் அகத்தின் ஆழம் கருணாகரனை உரு மாறி நடித்து கொள்கிறது. அவன் கீழ்மையில் கொள்ளும் நிறைவு இதனால் போலத் தான். ஒரு சில நேரங்களின் தீய்மையே ஒரு தனி இருப்பாக அவன் வாழ்வை இட்டு செல்கிறது. மனிதனின் ஆழத்தின் சில கதவுகளை அவன் தெரியாமலும் திறந்து கொள்ள கூடாது. அதை கடந்தவன் எதையும் செய்யு கூடியவனாகிறான்.

Posted onJanuary 15, 2019CategoriesBooksLeave a commenton நிழலின் தனிமை 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2022 09:01

May 11, 2022

அகவன்மங்களின் வார்த்தை உருவம் - சிறுகதைகள்

 

அகவன்மங்களின் வார்த்தை உருவம்

கிருஷ்ண மூர்த்தி 

தேவிபாரதியை நாவல் வெளியீட்டிற்கு அழைக்க வேண்டும் என்னும்முடிவினை எடுத்திருந்த நேரம். கோவைக்கு அருகில் தான் அவரும்இருக்கிறார் என்பதை அறிந்ததால் நேரிலேயே சந்திக்க முடிவும்செய்திருந்தேன். வெள்ளக்கோயில் ஊருக்குள்ளே சின்னதான குறைந்தவீடுகள் கொண்ட கருவேல மரங்கள் சூழ்ந்திருக்க அழகான தனிமை நிறைந்தஇல்லம். அவர் மட்டுமே நூல்களுடன் தாமசிக்கிறார். எங்கும் காகிதங்களின்மணம். இடையே அமர்ந்து கொண்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.என்னைப் பற்றியும் அவரைப் பற்றியும் இலக்கியம் பற்றியும் பின்எழுத்துகளின் பின்னே இருக்கக்கூடிய வாழ்க்கைப் பற்றியும் சென்றதுபேச்சுகள். இதையெல்லாவற்றையும் அவரின் எழுத்துகளில்அத்தருணத்திலேயே எதிர்நோக்கினேன்.



முதலாய் வாசித்த நூல் பிறகொரு இரவு. இக்கதைகளை வாசிக்கஆரம்பிக்கும் போதே அவர் என்னுடன் பேசிக் கொண்டிருந்த போது கூறியவிஷயங்கள் நினைவோடையாய் வந்து சென்றது. அவருக்கு குறுநாவல்கள்அல்லது நெடுங்கதைகள் என்னும் வடிவமே அதிகமாக பிடித்திருக்கிறதுஎன்றார். அதற்கான காரணம் எழுத்தாளன் எல்லாவித சோதனைமுயற்சிகளையும் அதில் செய்யலாம். நீண்டு போயின் நாவலாகும்குறைந்தால் சிறுகதையாகும். குறுநாவல் எழுத்தாளனுக்கான comfort zoneஎன்பதாக கூறினார். இந்த கூற்றுடன் அதிகம் ஒத்துப் போவேன். க.நா.சுவும்தன் அசுரகணம் நாவலில் குறுநாவல்களுக்கான விஷயமொன்றைஎழுதியிருப்பார். நூறுபக்கங்களில் சொல்ல முடியாத யாதொருவிஷயத்தையும் பெரிய நாவல்கள் சொல்லிவிடப்போவதில்லை என.தேவிபாரதி கூறியதைப் போலவே சோதனை முயற்சிகளை தன்குறுநாவல்களில் நிகழ்த்தியே இருக்கிறார்.

 

பிறகொரு இரவு தொகுப்பில் நான்கு நெடுங்கதைகள் இருக்கின்றன – ஊழி,சிகரெட்டுகளும் உள்ளாடைகளும், பிறகொரு இரவு, ஒளிக்கு பிறகுஇருளுக்கு அப்பால். இந்நான்கில் முதல் கதை மட்டும் எனக்குபிடிக்கவில்லை. ஊழியில் அவர் கையாண்டிருக்கும் மொழி நடை அதன் கருஅளவில் என்னை சுத்தமாக ஈர்க்கவில்லை. சிறுகதைக்கே உண்டானகருவை வைத்து இவ்வளவு நீளத்தில் ஒரு கதை தேவையா என்னும்அடிப்படை கேள்வியே எனக்குள் தோன்றியது. முழுதும் படிக்க வைக்கஉதவியது அதன் மொழி தான். மணிமேகலையின் கதைநீட்சியாக அல்லதுஅங்கமாக இந்நெடுங்கதை நீள்கிறது. துறவறத்தையே மேற்கொள்ளும்ஒருத்தியினுள் உருவாகும் மெல்லிய கோடான காதல் வயப்படுதல் எப்படிவெளிப்படும் ? பரத்தைக்கு பிறந்த மகளை துறவு பூண்டாலெனினும்ராஜவம்சத்தினர் அதை எப்படி ஏற்றுக் கொள்வர் என்பதைகதையாக்கியிருக்கிறார்.

 

இத்தொகுப்பில் இதைத் தவிர எல்லா கதைகளும் பிடித்திருந்தன. பிறகொருஇரவை கடைசியாக கூற நினைக்கிறேன். சிகரெட்டுகளும் உள்ளாடைகளும்என்னும் கதையில் அவர் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் முறையைகையாண்டிருக்கிறார். கதையில் மூன்றே கதாபாத்திரங்கள் தான். மூவரும்ஒருவர் மாற்றி ஒருவர் பேசிக் கொள்கிறார்கள். எல்லாமே நாயகனின்சந்தேகத்தில் வந்து முடிவடைகிறது. சந்தேகம் ஆணின் இயல்பு.சந்தேகங்கள் எதனால் முளைக்கின்றன ? காதலும் பொஸெஸிவ்னெஸும்எப்படி பிணைந்திருக்கின்றன ? காமம் அதனுள் சென்று சேருமா என்பதைமிக அழகான தர்க்கங்களால் நிறைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல மனிதமனிம் எண்ணற்ற பழிவாங்குதலை அனுதினமும் எதிர்பார்த்துகாத்திருக்கிறது. சுற்றத்தை சொந்தத்தை கூடவே இருக்கும் மனிதர்களைபழிவாங்க வேண்டும் என்று ஏங்குகிறார்கள். பழிவாங்குதல்கள் தன்னையேஅழிப்பதாகத்தான் பெரும்பாலும் அமைகிறது. இருந்தாலும் கிடைக்கும்ஆசுவாசத்தை மாற்றவியலாது தான். இந்த இன்பத்தை நோக்கி தான்மனிதன் நகர்ந்து கொண்டிருக்கிறான். அதற்காக கதையில் சிகரெட்டையும்புணர்தலையும் தேவிபாரதி பின்வருமாறு துவந்துவம் ஆக்கியிருக்கிறார்.

 

பேரின்பத்திற்கு பெண்சிற்றின்பத்திற்கு சிகரெட்

 

ஒளிக்கும் பிறகும் இருளுக்கு அப்பால் நெடுங்கதை பல கதைசொல்லல்நுட்பங்களை கைகொண்டிருக்கின்றன. கொலையொன்று நிகழ்கிறது.கள்ளக்காதலனின் துணை கொண்டு கணவனை கொலை செய்கிறாள்.ஆட்களைக் கூட்டிக் கொண்டு உடனே வருகிறேன் என்று முத்தமிட்டுகிளம்புகிறான் கள்ளக்காதலன். அவன் வரும் வரை என்ன என்ன நிகழ்கிறதுஎன்பதாக கதை நகர்கிறது. இதில் அவரது நுட்பம் எப்படியெல்லாம்இருக்கிறது எனில் கதை நிகழும் இடங்களில் காலம் பின்னோக்கி நகர்கிறது.பின்னோக்கி நகரும் போது நாம் கடந்த காலத்திற்கு செல்கிறோம். இந்தசின்னதான அம்சத்தின் மூலம் எதிர்காலம் என்னும் பதம் எப்படிஇல்லாமலாகிறது எனபதை மிக அழகாக விவரிக்கிறார். ஆனால் இந்தஅம்சம் கதையில் முதன்மையாக இருப்பதில்லை. காலத்தில் அவர்எண்ணற்ற சாத்தியப்பாடுகளுடன் இயங்கினாலும் கதை நிகழும் இடமேமுதன்மையாக படுகிறது. இது தான் எழுத்தாளனின் touch. முழுக்க கற்பனைசக்தியை முன்வைத்து உழைத்து அதை முதன்மைப் பொருளாக வைக்காமல்இருப்பது. காமம் கட்டற்ற பிரவாகமாக இக்கதையில் செல்கிறது.

 

பிறகொரு இரவு. காந்தியின் சுயசரிதையை நான் வாசித்ததில்லை.வைத்திருக்கிறேன். ஆனால் காந்தி பற்றி அவ்வப்போது வாசிக்கும் சிலகதைகளை கடந்து வந்திருக்கிறேன். அதில் பிடித்தது எஸ்.ரா எழுதியகாந்தியோடு பேசுவேன் என்னும் சிறுகதை. அசோகமித்திரனுடன் சமீபமாகபேசிக் கொண்டிருக்கும் போது கூட தேவிபாரதி என்றவுடன் இக்கதையையேமுன்னெடுப்பாக கூறினார். என் இலக்கிய நண்பர்கள் எல்லோருமேஇக்கதையை பிரதானப்படுத்தினார்கள். அவர்கள் எல்லோரும் சொன்னவிஷயம் அவர் காந்திய வச்சி ஒரு கத எழுதியிருப்பார் என்று. எனக்கு அப்படிதோன்றவில்லை.

 

காந்தி கதையின் பாத்திரம். அதன் மூலம் அவர் கணக்கிலடங்கா பேர்களின்கதைகளை கூறியிருக்கிறார். இக்கதை எல்லா நாடுகளிலும் நிகழ்ந்திருக்கவாய்ப்பிருக்கிறது. எல்லா பெருந்தலைவர்களின் வாழ்விலும்வாழ்வினாலும் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அவர்கள் சமூகத்திற்காகநல்லதான கோட்பாட்டை வழங்குகிறார்கள். நயவஞ்சகர்களின்பேராசையாலும் புகழாலும் அவர்களைப் போல எண்ணற்ற போலிகள்உருவாகிறார்கள். போலிகள் நிறைய உருவாகும் போது நிஜத்தைகண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உண்டாகிறது. உண்மையான மனிதனேதன்னை போலிகளுக்கிடையில் சுயதர்க்கம் செய்ய நேர்ந்தால் அது எதுசார்ந்ததாக இருக்கக்கூடும் ? எப்படி நிஜத்தை நிஜமென்றுபோலிகளுக்கிடையில் நிரூபிப்பது ? நிரூபனம் தேவையா ? தேவையெனில்யாருக்கு ? என்பதை தான் இக்கதை காந்தியின் உருவத்தில் பேசுகிறது.

 

இக்கதையை கடைசியாக சொல்ல முனைந்ததன் காரணம் சமீபத்தில்வெளிவந்த அடவி இதழை வாசிக்க நேர்ந்தது. அதில் தேவிபாரதி கறுப்புவெள்ளைக் கடவுள் என்னும் நெடுங்கதையை எழுதியிருக்கிறார்.மண்டபத்தின் வாயிலில் ஒரு சடலம் கிடக்கிறது. அதை ஒரு பரதேசிபார்க்கிறான். அது காமராஜர். இந்த சடலத்தை சுற்றி காமராஜரின்வாழ்க்கையை லேசாக அங்கங்கு சொல்லி, இந்த சொற்பதமே தவறு.வாழ்க்கையை அவர் சொல்லவில்லை. மாறாக மனிதர்களின் மனதில் காமராஜர் ஏற்படுத்திய உணர்ச்சி பிரவாகங்களை சொல்லி கதையைநகர்த்துகிறார். நிறைய பேர் கதையில் இடம்பெறுகிறார்கள். வன்முறைகள்,மனதினுள்ளே குடி கொண்டே இருக்கும் வன்மங்கள் என எல்லாமும்கதையினூடாக அரங்கேறுகிறது. அத்தியாயங்களாக கதை குரூரமானத்வனியுடன் சென்று கொண்டிருக்கிறது. அப்போது ஒரு அத்தியாயம்இவர்களெல்லாம் நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்னும் பதத்தைவைத்து அதுவரை சென்ற கதையின் போக்கை மிக லாவகமாக வாசகனின்புரிதலுக்கு சவால் விடக்கூடியதும் அல்லாத வகையில் மாற்றுகிறார்.

 

இந்தக் குறிப்பிட்ட கதையை மெடா ஃபிக்‌ஷன் என்று மட்டும் சொல்லாமல்பின்நவீனத்துவம் என்றும் வகைப்படுத்த விரும்புகிறேன். காரணம்யதார்த்தமாக நிகழ்கிறது என்னும் தொனியில் சொல்லப்பட்ட கதை சிலஉண்மைகளை கதையின் கருவாக நிருவ முயல்கிறது. அதே நாடகம் எனவரும் போது அங்கே அவ்வளவு நம்பகத்தன்மை தேவையற்றதாகமாறுகிறது. கதையின் வீரியம் மெலிதாகிறது. ஆனாலும் மொழியின் மூலம்கதையை மிக அழகாக நகர்த்தியிருக்கிறார். உண்மை எப்போதும்உபதேசத்தின் வழியே அடையப்பெறுவது அல்ல. மாறாக தேடியேஅடைவது. அனுபவம் சார்ந்தது. இக்கதையின் போக்கும் அப்படியானதொன்றே.

 

எல்லா மனிதர்களினுள்ளும் ஆழமாக புதையுண்டிருக்கும் வன்மங்களை,உறவு சார் எதிர்வினைகளை எப்படியேனும் இவரது பாத்திரங்கள் ஆற்றிக்கொள்கின்றன. அதற்கான சிறந்த சான்றாக இந்த நூல் உதவுகிறது.

•••

நன்றி 

    

கிருஷ்ண மூர்த்தி 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 11, 2022 00:43

Devibharathi's Blog

Devibharathi
Devibharathi isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Devibharathi's blog with rss.